1.OMR விடைத்தாட்களை தேர்வர்களுக்கு
விநியோகிக்கும்போது, பெயர் மற்றும்
பதிவெண் சரியாக அச்சிடப்பட்டுள்ளதா என்பதை தேர்வர்கள் உறுதி செய்து கொள்ள அறிவுறுத்த வேண்டும்.
2OMR விடைத்தாட்களை
சேதப்படுத்தாமல் பயன்படுத்த வேண்டுமென தேர்வர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.
3.OMR தாளில்
வட்டங்களில் Shade செய்யப்பட
வேண்டிய பகுதிகளை நிழலிட கருப்பு நிற மை பந்து முனை பேனாவினை (Ball point pen) மட்டுமே பயன்படுத்த வேண்டுமென தேர்வர்களுக்கு
அறிவுறுத்தவேண்டும்.
4.மாற்று OMR விடைத்தாள் பெறும் தேர்வர் தனது பெயர், பதிவெண், தேர்வு மைய எண் மற்றும் பெயரை தெளிவாக தலைப்பெழுத்துக்களில் எழுத
வேண்டும். பின்னர் பதிவெண்ணையும் இதர விவரங்களையும் உரிய கட்டங்களில் ளுhயனந செய்ய அறிவுறுத்த வேண்டும்.
5.Barcoding முறைப்படி OMR விடைத்தாட்கள் அச்சிடப்பட்டு அனுப்பப்பட்டுள்ளதால், வருகைப் படிவத்தில் (Attendance
sheet) கூடுதலாக
ஒரு கையொப்பத்தினை தேர்வரிடமிருந்து பெற
வேண்டும்.
6.OMR விடைத்தாளில் Question paper Sl.No சரியாக பூர்த்தி செய்துள்ளாரா எனவும், கேள்வித் தாள் வகை (No. of dashes) மற்றும் பயிற்று மொழி (Medium) குறிப்பிடப்பட்டுள்ளதை சரிபார்த்து அறைக்
கண்காணிப்பாளர்கள் உரிய இடத்தில் தமது
பெயரை தெளிவாக எழுதி கையொப்பமிட வேண்டும்.
7.தேர்வர்கள்
மற்றும் அறைக் கண்காணிப்பாளர்கள் OMR தாளில் தேதியுடன் கூடிய கையெழுத்தை (Signature with date) அதற்குரிய கட்டத்தில் ( Box ) உள்ளேயே
இட வேண்டும். கட்டத்திற்கு வெளியே கையெழுத்து மற்றும் தேதியினை எக்காரணம்
கொண்டும் நீட்டிக்கக் கூடாது.
8.வருகை புரியாத
தேர்வர்களின்OMR
விடைத்தாட்களில் அறைக்
கண்காணிப்பாளர்கள் Signature of the Candidate with date என்ற
கட்டத்தில் ABSENT எனக் குறிப்பிட்டு உரிய இடத்தில் கையொப்பமிட வேண்டும்.