news

முதுகலை ஆசிரியர்க்காக போராடக்கூடிய ஒரே அமைப்பு TNHSPGTA ***** நமது சங்கத்தின் உறுப்பினர் ஆகுங்கள் ******சங்க செயல் பாடுகளை தெரிந்துகொள்ள மேல்நிலைக்குரல் படியுங்கள் ******தங்கள் பள்ளி நிகழ்வுகளை அமைப்போடு பகிர்ந்துகொள்ளுங்கள்*****அனைத்து முதுகலை ஆசிரியர்களின் பங்களிப்பே அமைப்பு வளர்ச்சிக்கு உதவும்

Wednesday 2 March 2016

பிளஸ்2 விடைத்தாள் திருத்தும் பணி- விடைத்தாள் ஒன்றுக்கு ரூ.20/- வழங்க தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழகம் (TNHSPGTA) கோரிக்கை

பிளஸ்2 விடைத்தாள் திருத்தும் பணி- விடைத்தாள் ஒன்றுக்கு ரூ.20/- வழங்க தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழகம் (TNHSPGTA) கோரிக்கை
பிளஸ்2 பொதுத்தேர்வு பணிக்கு உழைப்பூதியம் உயர்த்தித் தர   வேண்டும் என தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழகம்  மாநிலத்தலைவர் மணிவாசகன் அவர்கள் கோரிக்கை  மாவட்டம் தோறும் ஆர்ப்பாட்டம்

      
 மேல்நிலைக் கல்வியில்  +2  அரசுப் பொதுத்தேர்வில் சுமார் 60 லட்சம் விடைத்தாட்கள் ஆண்டுதோறும் திருத்தப்படுகின்றன.
மாணவர்கள் இத்தேர்வில் பெறும் மதிப்பெண்களே அவர்களது எதிர்காலத்தை முடிவு செய்யும் முக்கிய காரணியாக அமைவதால் ஆசிரியர்கள் மிக மிக கவனமாக ஒரு விடைத்தாளுக்கு சுமார் 20 முதல் 25 நிமிடங்கள் செலவிட்டு, மாணவருக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாதவாறு கவனமாக விடைத்தாட்களை திருத்தி வருகிறார்கள்.  ஒரு நாளைக்கு 16 முதல் 20 விடைத்தாட்கள் வரை மிக கவனத்துடன் 8 முதல் 10மணி நேரம் இவ்விடைத்தாட்களைக் திருத்துகிறார்கள். இவ் விடைத்தாட்கள் திருத்தும் மையங்களில் முதுகலை ஆசிரியர்கள் படும் இன்னல்கள் சொல்லி மாளாது.  அனால், தேர்வுத் துறையோ ஒரு விடைத்தாளுக்கு உழைப்பூதியமாக ரூ 7.50 மட்டுமே வழங்குகிறது.
                நடுவண் அரசுப் பள்ளிகளில் +2 விடைத்தாள் திருத்த, விடைத்தாள் ஒன்றுக்கு ரூ 15/- வழங்கப்படுவதோடு போக்குவரத்துப் படியாக முதல் வகுப்பு கட்டணமும் வழங்கப்படுகிறது.
                நமது அருகில் உள்ள கர்நாடக மாநிலத்தில்  விடைத்தாள் ஒன்றுக்கு ரூ 15/- வழங்கப்படுவதோடு உள்ளூர் ஆசிரியர்களுக்கு தினப்படியாக ரூ 125/-ம் வெளியூரிலிருந்து வரும் ஆசிரியர்களுக்கு அவரவர் அடிப்படை ஊதியத்திற்கு ஏற்றார்போல் தினப்படியாக ரூ 350 முதல் 800 வரை   வழங்கப்படுகிறது. எட்டு நாட்களில் அனைத்து விடைத்தாட்களும் திருத்தும் பணியும் முடிவதோடு (திங்கள் முதல் அடுத்த திங்கள் வரை ) ஒவ்வொரு ஆசிரியரும் ரூ 800 முதல் ரூ 900 வரை உழைப்பூதியமாக ஏழு பணி நாட்களில் பெறுகிறார்கள்.
              அருகில் உள்ள ஆந்திரபிரதேச மாநிலத்தில்  விடைத்தாள் ஒன்றுக்கு ரூ 15/- வழங்கப்படுவதோடு உள்ளூர் ஆசிரியர்களுக்கு ரூ 100/-ம் வெளியூர் ஆசிரியர்களுக்கு தினப்படியாக ரூ 220/-ம் வழங்கப்படுகிறது.
            
இந்த உழைப்பூதியத்தை ஒரு தாளுக்கு ரூ 20/- என  உயர்த்தி தரக்கோரி கடந்த ஐந்து ஆண்டுகளாக கோரிக்கை வைக்கப்பட்டும் தேர்வுத்துறை செவிசாய்க்கவில்லை.
                கடந்த பிப்ரவரி 2015ல்   தேர்வுத்துறை இயக்குனருடன் நடந்த பேச்சு வார்த்தையில் மீண்டும் விடைத்தாள் உழைப்பூதியம் ரூ20/- என உயர்த்தவும் ஏனைய  தேர்வு பணி சார்ந்த உழைப்பூதியங்கள் இரு மடங்கு ஆக்கவும் கோரிக்கைள் வைக்கப்பட்டன,
          
  எமது அமைப்போடு பேச்சு வார்த்தை நடத்தப்பட்டதன் அடிப்படையில் பிப்ரவரி 2015ல் அரசு தேர்வுகள் துறையால் உயர்த்தப்பட்ட உழைப்பூதியங்களுக்கான பரிந்துரை தமிழக அரசின் நிதித்துறைக்கு அனுப்பப் பட்டது. ஆனால் ஒரு ஆண்டு கடந்தும் இந்த  உயர்த்தப்பட்ட உழைப்பூதியத்திற்கான எந்த வித அரசாணையும் வெளியிடப்படவில்லை.
எனவே கீழ்க்கண்டவாறு உழைப்பூதியத்தை தமிழக அரசு உயர்த்தி வழங்க கோரிக்கை வைத்தனர்.
1.தலைமை/கூடுதல் தலைமை கண்காணிப்பாளருக்கு  நாள் ஒன்றுக்கு ரூ. 200/-ம்
2. துறை/கூடுதல் துறை அலுவலருக்கு  ரூ. 200/-ம்
3. வினாத்தாள் கட்டு காப்பாளருக்கு ரூ.160/-ம்
4. அறை கண்காணிப்பாளருக்கு ரூ.160/-ம்
5. பறக்கும் படை உறுப்பினருக்கு ரூ.200/-ம்
6. விடைத்தாள் திருத்த தாள் ஒன்றுக்கு ரூ.20/-ம்
7. விடைத்தாள் திருத்த நாளொன்றுக்கு  தினப்படி ரூ.360/-ம்
8. வழித்தட அலுவலர் ரூ.300/-ம்

மாற்றி அமைக்கப்படவேண்டும்