news

முதுகலை ஆசிரியர்க்காக போராடக்கூடிய ஒரே அமைப்பு TNHSPGTA ***** நமது சங்கத்தின் உறுப்பினர் ஆகுங்கள் ******சங்க செயல் பாடுகளை தெரிந்துகொள்ள மேல்நிலைக்குரல் படியுங்கள் ******தங்கள் பள்ளி நிகழ்வுகளை அமைப்போடு பகிர்ந்துகொள்ளுங்கள்*****அனைத்து முதுகலை ஆசிரியர்களின் பங்களிப்பே அமைப்பு வளர்ச்சிக்கு உதவும்

Wednesday 31 May 2017

மதுரை மாவட்டம், வெள்ளலூர் அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலையசிரியரும் நமதமைப்பின் பொறுப்பாளருமான திரு.யூஜின் மாணிக்கராஜ் அவர்களின் பணி நிறைவை சிறப்பித்தல்



மதுரை மாவட்டம் வெள்ளலூர்   அரசுப்பள்ளியில் முதுகலை ஆசிரியராக பணிபுரியும்  திரு. யூஜின்  மாணிக்கராஜ்  அவர்கள் இன்றோடு (31.5.17) பணிநிறைவு பெறுகிறார் . நமதமைப்பின் மீது  அவர்  கொண்ட ஈடுபாடும் , மதுரை மாவட்ட  பள்ளிக்கல்வித்துறை  சார்ந்து   அவர் செய்த பணிகளும்  மறக்கமுடியாதவை .  நமதமைப்பின்  சார்பில்  மாநில பொதுச்செயலாளர் திரு. பிரபாகரன் அவர்கள்  பாராட்டி சிறப்பித்தபோது எடுத்த படம். அவருடைய  வாழ்நாள்  முழுவதும்  நல்ல உடல்நலமுடன்  வாழ  அமைப்பின் சார்பில் வாழ்த்துகிறோம் .

அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குனர் திருமதி.பூஜா குல்கர்னி மாற்றம்

அனைவருக்கும் கல்வி இயக்க  மாநில திட்ட இயக்குனர் திருமதி.பூஜா குல்கர்னி  மாற்றம். புதிய மாநில திட்ட இயக்குனராக பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.நந்தகுமார்.இ.ஆ.ப., அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார்.

Friday 26 May 2017

கோடை விடுமுறைக்கு பின் ஜூன் 7ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளி கல்வி துறை தெரிவித்துள்ளது.


      கோடை விடுமுறைக்கு பின், திட்டமிட்டபடி ஜூன் 7ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளி கல்வி துறை தெரிவித்துள்ளது. 

      கடந்த மார்ச், ஏப்ரல் மாதம் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஆண்டு பொதுத் தேர்வுகள் நடந்தன. பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் மாதம் நடந்து முடிந்தது. இதையடுத்து, 10ம் வகுப்பு மற்றும் கீழ்வகுப்புகளுக்கான அனைத்து பொதுத் தேர்வுகளும் ஏப்ரல் மாத இறுதியில் நடந்து முடிந்தது. 

        பின்னர், மே 1ம் தேதி முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டு, ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளி கல்வி துறை அறிவித்தது. இதற்கிடையே, தமிழகத்தில் கத்தரி வெயில் தாக்கத்தின் காரணமாக சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் 110 டிகிரி வரை வெயில் கொளுத்தியது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், பள்ளிகளை ஜூன் 7  தேதி அனைத்து பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளி கல்வி துறை தெரிவித்துள்ளது.

Wednesday 24 May 2017

மதுரை மாவட்ட முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் (மாவட்ட கலந்தாய்வுக்கு பின்)

தமிழ்                                              
உசிலம்பட்டி,
அம்மாபட்டி,
மங்களாம்பட்டி.

ஆங்கிலம்

எழுமலை ( ஆ),
கருங்காலக்குடி(ஆ)
மேலூர்(ஆ)
அம்மாபட்டி,
சருகவலையபட்டி, 
பொட்டபட்டி,
உறங்கான்பட்டி,
வெள்ளலூர்,
வில்லூர்.

கணிதம்
கருங்காலக்குடி ( ஆ)
சேடபட்டி
M.கல்லுபட்டி

இயற்பியல்
சாப்டூர்

வேதியியல்
M. கல்லுப்பட்டி,
அம்மாபட்டி 

உயிரியல்
மங்களாம்பட்டி (bot)
சருகு வளையப்பட்டி (bot)

தாவரவியல்
சாப்டூர்

வரலாறு
கருங்காலக்குடி (ஆ) 
கொட்டாம்பட்டி,
பாலமேடு,
சோழவந்தான்( பெ) 
வாடிப்பட்டி( ஆ)

மேலூர் ( ஆ)

புவியியல்
எழுமலை ( ஆ)
கருங்காலக்குடி ( ஆ)
அலங்காநல்லூர் (ஆ)
மேலூர்( ஆ)

Tuesday 23 May 2017

1 முதல் 12ம் வகுப்பு வரையிலான பாடத்திட்டங்கள் மாற்றம்: தமிழக அரசு

மைச்சர் செங்கோங்கோட்டையன் அளித்த பேட்டி: முதல் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை தமிழக பாட திட்டம் சி.பி.எஸ்.இ., பாடத்திற்கு இணையாக மாற்றப்படும். புதிய பாடத்தில் தமிழர் பண்பாடு, கலாசாரம் சேர்க்கப்படும். பாட திட்டம் மாற்றம், பிளஸ் 1 வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
முதல் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை தமிழக பாட திட்டம் சி.பி.எஸ்.இ., பாடத்திற்கு இணையாக மாற்றப்படும். 2018-19 கல்வியாண்டில் - 1, 6, 9, 11 வகுப்புகளுக்கும் , 2019-20 ல் 2,7,10,12ம் வகுப்புகளுக்கும், 2020 -21 ல் 3,4,5,8 ம் வகுப்புகளுக்கும் , பாடத்திட்டங்கள் மாற்றப்படும். புதிய பாடத்தில் 6 முதல் 12ம் வகுப்பு வரை ஐ.டி., கல்வி கற்றுத்தரப்படும். பிளஸ், பிளஸ்2வில் தேர்ச்சி பெற பாடவாரியாக 35 சதவீத மதிப்பெண் எடுக்க வேண்டும்.
பிளஸ் 1 தேர்வில் தோல்வியடைந்தால், பிளஸ்2வில் அந்த தேர்வை எழுதலாம். ஜூன், ஜூலையில் சிறப்பு தேர்வு நடைபெறும்.
பிளஸ்1, பிளஸ்2 தேர்வில் தேர்வு மதிப்பெண் 1200லிருந்து 600 ஆகவும், தேர்வு நேரம் 2.30 மணி நேரமாகவும் குறைக்கப்பட்டுள்ளது. பிளஸ்1, பிளஸ்2வுக்கு பின் ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்.
முதுநிலை ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தேர்வு மூலம் ஆசிரியர்கள் தேர்வாகும் வரை தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். புதிய பாடதிட்டத்தில் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். 

தேர்வுத்திட்டம் -மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு-அரசாணை எண் 100 நாள்:22/5/17 

 

+1,+2 தேர்வு மதிப்பெண் 600 ஆக குறைப்பு | +1,+2 தேர்வு நேரம் 2.30 மணிநேரமாக குறைப்பு |

அனைத்து வகுப்புகளுக்கும் படிப்படியாக பாடத்திட்டம் மாற்றம் அரசாணை வெளியீடு | 2018-2019 ல் 1,6.9.11 வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் . 2019-2020 ல் 2,7,10,12 வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் . 2020-2021 3,4,5,8 வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம். போட்டித் தேர்வுகளுக்கு சனிக்கிழமை சிறப்பு வகுப்புகள் தேர்வு மதிப்பெண் 600 ஆக குறைப்பு, அரசாணை வெளியீடு. +1,+2 தேர்வு நேரம் 2.30 மணிநேரமாக குறைப்பு. சிபிஎஸ்இ-க்கு இணையாக தமிழக பள்ளி பாடத்திட்டம் மாற்றம். |

பள்ளிக்கல்வித்துறையில் பணி நிரவல் நடைபெற உள்ளதால் ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு அட்டவணையில் மாற்றம் செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது

முதுகலை ஆசிரியர் கலந்தாய்வு தேதிகளில் மாற்றம் இல்லை

Saturday 20 May 2017

மதுரை மாவட்ட முதுகலை ஆசிரியர் காலிப்பணியிட விவரம்



மதுரை மாவட்ட முதுகலை ஆசிரியர் காலிப்பணியிட விவரம்

தமிழ்

திருமங்கலம் பெண்கள்

E.மலம்பட்டி

உசிலம்பட்டி



ஆங்கிலம்

திருமங்கலம் ஆண்கள்

மேலூர் பெண்கள்

மேலூர் ஆண்கள்

கொண்டயம்பட்டி

வெள்ளலூர்

சமயநல்லூர்

கருங்காலக்குடி ஆண்கள்

உறங்கான்பட்டி



கணிதம்

M.சத்திரப்பட்டி

பரவை

வாடிப்பட்டி பெண்கள்




இயற்பியல்

T..கல்லுபட்டி



வேதியியல்

குலமங்கலம்

பாண்டியராஜபுரம்



உயிரியல்

வெள்ளலூர்



தாவரவியல்

சமயநல்லூர்

மேலூர் பெண்கள்



புவியியல்

அலங்காநல்லூர் ஆண்கள்

சமயநல்லூர்

மேலூர் ஆண்கள்

எழுமலை ஆண்கள்

வெள்ளலூர்



வரலாறு

முள்ளிப்பள்ளம்

மாப்பாளையம்

பாலமேடு

T.வாடிப்பட்டி ஆண்கள்

மேலூர் ஆண்கள்

சோழவந்தான் பெண்கள்

மதுரை மாவட்டத்திலிருந்து தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்களுக்கு எமது அமைப்பின் சார்பில் வாழ்த்துக்கள்



இன்று மதுரை மாவட்டத்திலிருந்து தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்களுக்கு  எமது அமைப்பின் சார்பில் வாழ்த்துக்கள்




பரமசிவம்(குலமங்கலம்)மாவட்ட தலைமையிட செயலாளர் TNHSPGTA

சாம் (மேலூர் பெ)

ராமசாமி(கல்லுப்பட்டி)

யாழினி(மேலூர் ஆ)

ஆஷா(பரவை)

வசந்தி (திருமங்கலம்)

நாகராஜன்(வாடிப்பட்டிபெ)

உமா(மேலூர் பெ)

லோகமணி(முள்ளிப்பள்ளம்)