news

முதுகலை ஆசிரியர்க்காக போராடக்கூடிய ஒரே அமைப்பு TNHSPGTA ***** நமது சங்கத்தின் உறுப்பினர் ஆகுங்கள் ******சங்க செயல் பாடுகளை தெரிந்துகொள்ள மேல்நிலைக்குரல் படியுங்கள் ******தங்கள் பள்ளி நிகழ்வுகளை அமைப்போடு பகிர்ந்துகொள்ளுங்கள்*****அனைத்து முதுகலை ஆசிரியர்களின் பங்களிப்பே அமைப்பு வளர்ச்சிக்கு உதவும்

Tuesday 20 June 2017

இன்றைய (19.06.2017) சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட கல்விச்சார்ந்த அறிவிப்புகள்


 *உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் கணினி ஆய்வகங்கள் அமைக்கப்படும்;
சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு.
 *மேல்நிலை பள்ளிகளுக்கு தலா 20கணினிகள் வழங்கப்படும்; உயர், மேல்நிலை பள்ளிகளுக்கு அறிவியல் ஆய்வகம் & இதர பணிகள் ரூ.39 கோடி மதிப்பில் ஏற்படுத்தப்படும்.
 *தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் அமைக்கப்படும்.
*7 அரசு கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் 3 பல்கலை உறுப்பு கல்லூரிகள் நடப்பாண்டில் தொடங்கப்படும்- முதலமைச்சர்.
*எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு எம்.ஜி.ஆர் பெயரில் ரூ.33 கோடியில் பள்ளிக் கல்வி இயக்குநரகத்திற்கு புதிய கட்டடம்.
 *268 புதிய பாடப்பிரிவுகள் 2017-2018 ம் ஆண்டு தொடங்கப்படும்; இதற்காக  660 பேராசிரியர் புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும்.
 *நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை., வளாகத்தில் ரூ.5 கோடி செலவில் நீச்சல் குளம் கட்டப்படும் - முதலமைச்சர்.
 *உயர் கல்வித்துறை அறிவிப்புகள் : 40 கலை & அறிவியல் கல்லூரிகளில் ரூ.210 கோடி செலவில் உட்கட்டமைப்புகள் மேம்படுத்தப் படும்.
 *3090 கிராமப்புற தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் SmartClass ஏற்படுத்தப்படும்.
*தமிழகத்தில் உள்ள மேல் நிலைப் பள்ளிகளில் இலவச வைஃபை வசதி ஏற்படுத்தப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
*அனைத்து நியாய விலைக் கடைகளுக்கும் ரூ.40 கோடி செலவில் விரல் ரேகை அச்சுப்பொறி வழங்கப்படும்.
 *கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்படும் சிறு வணிகக்கடன் உச்சவரம்பு ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரமாக உயர்த்தப்படும்.

Sunday 18 June 2017

அரசுப் பள்ளிகளுக்கான ஆண்டு செயல்திட்டம் வெளியீடு: விளையாட்டு, சுற்றுச்சூழலுக்கு முக்கியத்துவம்

தனியார் பள்ளிகளைப் போலவே அரசு பள்ளிகளுக்கான ஆண்டு செயல்திட்டத்தை பள்ளிக்கல்வித் துறை முதல்முறையாக வெளியிட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் தனியார் பள்ளிகளில் நடத்தப்பட வேண்டிய நிகழ்வுகள், தேர்வு தேதிகள் உள்ளிட்ட செயல்திட்டங்களை முன் கூட்டியே திட்டமிட்டு, மாணவர்களுக்கு அந்தந்த பள்ளிகள் அட்ட வணையை வழங்கும். அரசுப் பள்ளிகளில் இதுவரை அது போன்ற நடைமுறை பின்பற்றப்படவில்லை. இந்நிலையில் அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கான நடப்பு கல்வியாண்டுக்கான செயல் திட்டத்தை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது.
இந்த செயல்திட்டத்தில் பள்ளி வேலை நாட்கள், எந்தெந்த நாளில் எந்தெந்த நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும், செஞ்சிலுவை சங்க செயல்பாடு, நாட்டு நலப்பணி திட்ட செயல்பாடுகள் ஆகியவற்றை எப்போது செய்ய வேண்டும், என்ன செய்ய வேண் டும் என்பன உள்ளிட்ட விவரங் கள் தரப்பட்டுள்ளன. குறிப்பாக விளையாட்டு தொடர்பான நிகழ்வு களுக்கும் சுற்றுச்சூழல் தொடர்பான நிகழ்வு களுக்கும் செயல்திட்ட அட்டவணையில் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.
மாவட்ட அளவிலான விளை யாட்டுப் போட்டிகளை நடத்தும் தேதி, மரம் நடும் விழா நடத்தும் தேதி, கலை நிகழ்ச்சிகள் நடத் தும் தேதி, தேர்வுகள் நடை பெறும் தேதி ஆகியவையும் குறிப்பிடப்பட்டுள்ளன.
சனிக்கிழமைகளில் பள்ளி
இதுவரை அனைத்து சனிக் கிழமைகளிலும் அரசுப் பள்ளி களுக்கு விடுமுறை விடப்பட்டு வந்தது. ஆனால் நடப்பாண்டில் பல சனிக்கிழமைகளில் பள்ளி நடைபெறும் என்று செயல்திட்டத் தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாரந்தோறும் வெள்ளிக்கிழமை களில் கூட்டு உடற்பயிற்சி வகுப்பு நடத்தவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இதுதவிர பள்ளி தலைமை யாசிரியர்கள், ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கும் தேதிகளும் அட்டவணையிடப்பட்டுள்ளன. தற்போது வெளியிடப்பட்ட செயல் திட்டத்தின்படி, 2017-18 கல்வி யாண்டில் 210 நாட்கள் பள்ளி வேலை நாட்களாக நிர்ணயிக் கப்பட்டுள்ளது. 3 நாட்கள் ஈடு செய்யும் உள்ளூர் விடுமுறை நாட்களாக அனுமதிக்கப்பட்டு உள்ளது.

மதுரையில் ஆசிரியர் இல்லம் முடிவை கைவிட்டது அரசு

கட்டடம் கட்ட இடம் கிடைக்காததால், மதுரையில் ஆசிரியர் ஓய்வு இல்லம் கட்டும் பணி கைவிடப்பட்டுள்ளது. தமிழக அரசுப்பள்ளி ஆசிரியர்கள் நலனுக்காக, பெற்றோர், ஆசிரியர் கழகம் இயங்கி வருகிறது. இந்த கழகத்தின் சார்பில், கொடி நாள் நிதி, மாணவர்களிடம் வசூலிக்கப்பட்டு, அந்த நிதி ஆசிரியர்களின் நலனுக்கு செலவிடப்படுகிறது. அதன்படி, ஆசிரியர் நலநிதி திட்டத்தில், சென்னை மற்றும் திருச்சியில், ஆசிரியர் ஓய்வு இல்லங்கள் கட்டப்பட்டுள்ளன. சென்னை மற்றும் திருச்சிக்கு வரும் ஆசிரியர்கள், இவற்றில் குறைந்த வாடகையில் தங்கி செல்கின்றனர். இந்நிலையில், மதுரை உயர்நீதிமன்றத்திற்கு வழக்கு தொடர்பாக வரும், ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு தங்கும் இடம் தேவைப்பட்டது. அதனால், மதுரையிலும், அதை தொடர்ந்து கோவையிலும், ஆசிரியர் இல்லம் அமைக்க, மறைந்த முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு வெளியிட்டிருந்தார். ஆனால், ஒன்றரை ஆண்டுகளாக இடம் தேடியும், மதுரையில் கிடைக்கவில்லை. எனவே, மதுரையில் ஆசிரியர் இல்லம் கட்டும் முடிவு, தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது; கோவையில் மட்டும் கட்டப்படும் என, அரசின் கொள்கை விளக்க குறிப்பில்
தெரிவிக்கப்பட்டு உள்ளது

பள்ளிக்கல்வித் துறை அமைச்சரின் 37 அறிவிப்புகள்

கடந்த இரண்டு மாதங்களாக '41 அறிவிப்புகள் வெளியிடுவேன்' என்றும், 'அந்த அறிவிப்புகளால் நாடே திரும்பிப் பார்க்கும்' என்றும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் பல்வேறு நிகழ்ச்சிகளில் தெரிவித்துவந்தார்.
இதனால் பள்ளிக்கல்வித் துறை அறிவிப்புகள்குறித்து மிகுந்த எதிர்பார்ப்பு இருந்துவந்தது. நேற்று பள்ளிக்கல்வி மானியக் கோரிக்கை விவாதத்தில் 37 அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறார். இவற்றை ஏழு வகைகளாகப் பிரித்திருக்கிறோம். ஒவ்வொரு பிரிவின் கீழ் என்னென்ன அறிவிப்புகள் வெளியாகியுள்ளன என்பதைப் பார்ப்போம்.
மாணவர் நலன் சார்ந்த அறிவிப்புகள்:
புதியதாக 30 தொடக்கப் பள்ளிகள் தொடங்கப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் புதுமைகளைப் புகுத்தி சிறப்பாகச் செயல்படும் நான்கு அரசுப் பள்ளிகளைக் கண்டறிந்து `புதுமைப் பள்ளி' விருது 1.92 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழிக் கற்றலுக்கான அட்டைகளை வாங்க 31.82 கோடி ரூபாய் செலவிடப்படும். 486 அரசு நடுநிலைப் பள்ளிகளில் கணினிவழிக் கற்றல் மையங்கள் அமைக்க 6.71 கோடி ரூபாய் செலவிடப்படும் என்றும், நாப்கின் வழங்கும் இயந்திரம் மற்றும் எரியூட்டி இயந்திரம் 5,639 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு 22.56 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும். 31,322 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு 4.83 கோடி ரூபாய் செலவில் நாளிதழ்கள் மற்றும் சிறுவர் இதழ்கள் வழங்கப்படும் என்றும் அறிவித்திருக்கிறார்.
பள்ளிக்கல்வித் துறை 
அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளுக்கு 39.25 கோடி ரூபாய் செலவில் கற்றல் துணைக் கருவிகள் வழங்கப்படும் என்றும், திறனறித் தேர்வுகளில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கு 2.93 கோடி ரூபாய் செலவில் சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும் என்றும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தனித்திறமையோடு விளங்கும் 100 மாணவர்களுக்கு ஆண்டுதோறும் மூன்று கோடி ரூபாய் செலவில் மேலைநாடுகளுக்குக் கல்விப் பயணம் மேற்கொள்ள வாய்ப்பு அளிக்கப்படும் என்றும், கலை, இலக்கியம் நுண்கலை உள்ளிட்ட 150 வகை பிரிவுகளில் பள்ளி, ஒன்றியம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் ஒரு மாபெரும் மாணவர் கலைத் திருவிழா நான்கு கோடி செலவில் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பன்னிரண்டாம் வகுப்பு பயின்ற மாணவர்கள் அவர்களது மேற்படிப்பைத் தொடர்வதற்கு உதவிடும் வகையில் கல்விக்கடன் முகாம்கள் நடத்தப்படும். ஒன்றிய அளவில் போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி மையங்கள் 20 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும். மேற்படிப்பு / வேலைவாய்ப்புக்கான போட்டித்தேர்வுகளுக்கு வழிகாட்டி மையங்கள் அனைத்து உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளிலும் ஏற்படுத்தப்படும். மேலும், கருத்தரங்குகள் இரண்டு கோடி ரூபாய் செலவில் நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. 

ஆசிரியர் நலன் சார்ந்த அறிவிப்புகள்:
4,084 ஆசிரியர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும், ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பாகச் செயல்படும் ஆறு ஆசிரியர்களுக்குக் கனவு ஆசிரியர் விருதும், 10,000 ரூபாய் ரொக்கப் பரிசுத்தொகையும், பாராட்டுச் சான்றிதழும் வழங்க தொடர் நீட்டிப்பு கோரப்படும் 17,000 தற்காலிகப் பணியிடங்கள் நிரந்தரப் பணியிடங்களாக மாற்றப்படும் என்றும், சுயநிதிப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கும் பணியிடை பயிற்சி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

மின் ஆளுமை சார்ந்த அறிவிப்புகள்:
காணொளி பாடங்கள், கணினிவழித் தேர்வுகள், அலைபேசிச் செயலிகள் உள்ளடக்கிய கற்றல் மேலாண்மைத் தளம் இரண்டு கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்தப்படும். அரசுத் தேர்வுகள் இயக்ககச் செயல்பாடுகள் இரண்டு கோடி ரூபாய் செலவில் கணினி மயமாக்கப்படும். மெட்ரிகுலேஷன் பள்ளிகள் தொடங்க அனுமதி/ அங்கீகாரம்/ தொடர் அங்கீகாரம் வழங்க இணைய வழியில் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. 
நூலகத் துறை சார்ந்த அறிவிப்புகள்:
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்பொது நூலகங்களுக்கு 25 கோடி ரூபாய் செலவில் புதிய நூல்களும், அண்ணா நூற்றாண்டு நூலகத்துக்கு ஐந்து கோடி ரூபாய் செலவில் புதிய நூல்கள் வாங்கப்படும். அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் மூன்று கோடி ரூபாய் செலவில் புத்தகக் கண்காட்சி நடத்தப்படும். தமிழ்ச் சங்கம் கண்ட மதுரையில் ஆறு கோடி ரூபாய் செலவில் மாபெரும் நூலகம் அமைக்கப்படும்.  
சிவகங்கை மாவட்டம் கீழடியில் சிந்துசமவெளி நாகரிகம் உள்ளிட்ட பழம்பெரும் நாகரிகங்கள் குறித்த நூலகமும், தஞ்சாவூரில் தமிழிசை, நடனம் மற்றும் நுண்கலைகள் சார்ந்த நூலகமும், மதுரையில் நாட்டுப்புறக் கலைகள் சார்ந்த நூலகமும், திருநெல்வேலியில் தமிழ் மருத்துவம் சார்ந்த நூலகமும், நீலகிரியில் பழங்குடியினர் பண்பாடு சார்ந்த நூலகமும், திருச்சியில் கணிதம், அறிவியல் சார்ந்த நூலகமும், கோயம்புத்தூரில் வானியல், புதுமைக் கண்டுபிடிப்புகள் சார்ந்த நூலகமும், சென்னையில் அச்சுக்கலை சார்ந்த நூலகம் என்று தனித்தன்மை வாய்ந்த எட்டு சிறப்பு நூலகங்கள் மற்றும் காட்சிக் கூடங்கள் எட்டு கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும். 
மாவட்ட மைய நூலகங்களில் போட்டித்தேர்வுப் பயிற்சி மையங்கள் 72 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படும். 123 முழுநேரக் கிளை நூலகங்களில் மின்னிதழ் வசதிகளுடன்கூடிய கணினி வசதி 1.84 கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்தப்படும். இரண்டு கோடி ரூபாய் செலவில் நவீன மின் நூலகம் அமைக்கப்படும். அரிய வகை நூல்கள் மற்றும் ஆவணங்களைப் பொதுமக்களிடமிருந்து கொடையாகப் பெறும் திட்டம் தொடங்கப்படும். அரியவகை நூல்களைப் பாதுகாத்துவரும் தனியார் அமைப்புகள் நடத்திவரும் நூலகங்களுக்குப் பராமரிப்பு நிதி வழங்கப்படும். நவீன அறிவியல், தொழில்நுட்ப நூல்களைத் தமிழில் ஐந்து கோடி ரூபாய் செலவில் மொழிபெயர்க்கப்படும். அரசுப் பள்ளி மாணவர்கள் பயனடையும் வகையில் நடமாடும் புத்தகக் கண்காட்சி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. 
நிர்வாகம் சார்ந்த அறிவிப்புகள்:
மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் புதிய பணியிடங்கள் 60 லட்சம் ரூபாய் செலவில் ஏற்படுத்தப்படும். கிருஷ்ணகிரி மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் புதிய மெட்ரிகுலேஷன் பள்ளிகள் ஆய்வாளர் அலுவலகம் அமைக்கப்படும். பள்ளிக்கல்வித் துறையின் அலுவலர்களுக்கு 2.89 கோடி ரூபாய் செலவில் புதிய வாகனங்கள் வழங்கப்படும். 
முறைசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி சார்ந்த அறிவிப்புகள்:
மூன்றாம் மற்றும் ஐந்தாம் வகுப்புக்கு இணையான சமநிலைக் கல்வித் திட்டம் 13.94 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. 
சர்வதேச அளவில் பரவியுள்ள தமிழர் நலன்:
உலக நாடுகளில் வாழும் தமிழ் மாணவர்களுக்கு, தமிழ் கற்பித்தலுக்குத் தேவையான தமிழ்ப் பாடநூல்கள் அனுப்புதல், சிறந்த தமிழாசிரியர்கள் மூலம் பயிற்சி மற்றும் இணைய வழியில் தமிழ் கற்பித்தல் ஆகியவற்றை அறிமுகப்படுத்தவும், உலக நாடுகளில் உள்ள தமிழ் நூலகங்களுக்கு ஒரு லட்சம் புத்தகங்கள் கொடையாக வழங்கப்படும். இதில் முதற்கட்டமாக, யாழ்ப்பாணம் பொதுநூலகத்துக்கும் மலேயாப் பல்கலைக்கழக நூலகத்துக்கும் ஒரு லட்சம் நூல்கள் கொடை என்று அறிவித்திருக்கிறார்கள்.

Wednesday 7 June 2017

2018-ம் ஆண்டு நடைபெற உள்ள 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

2018-ம் ஆண்டு நடைபெற உள்ள 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் மன அழுத்தம் இல்லாமல் தேர்வு எழுதவே முன்கூட்டியே தேதி அறிவிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
12ம் வகுப்பு தேர்வு விவரம்
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் 2018 மார்ச் 1-இல் தொடங்கி ஏப்ரல் 6 வரை நடைபெறும். தேர்வு முடிவுகள் மே 16ம் தேதி வெளியிடப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மார்ச் 1 - தமிழ் முதல்தாள்
மார்ச் 2 - தமிழ் 2ம் தாள்
மார்ச் 5 - ஆங்கிலம் முதல் தாள்
மார்ச் 6 - ஆங்கிலம் 2ம் தாள்
மார்ச் 9 -  வணிகவியல், மனை அறிவியல், புவியியல்
மார்ச் 12 -  கணிதம், விலங்கியல், நுண்ணுயிரியல், ஊட்டச்சத்து, உணவியல்
மார்ச் 15 -  அரசியல் அறிவியல், நர்சிங், புள்ளியியல், தொழிற்பிரிவு
மார்ச் 19 -  இயற்பியல் மற்றும் பொருளியல்
மார்ச் 26 -  வேதியியல், கணக்கு பதிவியல்
ஏப்ரல் 2 - உயிரியல், வரலாறு, தாவரவியல், வணிக கணிதம் 
ஏப்ரல் 6 -  இந்திய கலாச்சாரம், கணினி அறிவியல், உயிரிவேதியியல், தமிழ்சிறப்பு பாடம்
11ம் வகுப்பு தேர்வு விவரம்
11ம் வகுப்பு பொதுத்தேர்வு 2018 மார்ச் 7ல் தொடங்கி ஏப்ரல் 16ல் முடிவடையும். தேர்வு முடிவுகள் மே 30ம் தேதி வெளியிடப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மார்ச் 7 - தமிழ் முதல்தாள்
மார்ச் 8 - தமிழ் 2ம் தாள்
மார்ச் 13 - ஆங்கிலம் முதல்தாள்
மார்ச் 14 - ஆங்கிலம் 2ம் தாள்
மார்ச் 20 -  கணிதம், விலங்கியல், நுண்ணுயிரியல், ஊட்டச்சத்து, உணவியல்
மார்ச் 23 -  வணிகவியல், மனை அறிவியல், புவியியல்
மார்ச் 27 -  இயற்பியல் மற்றும் பொருளியல்
ஏப்ரல் 3 - வேதியியல், கணக்கு பதிவியல்
ஏப்ரல் 9 - உயிரியல், வரலாறு, தாவரவியல், வணிக கணிதம் 
ஏப்ரல் 13 -  இந்திய கலாச்சாரம், தகவல் தொடர்பு ஆங்கிலம்,  கணினி அறிவியல், உயிரிவேதியியல், தமிழ்சிறப்பு பாடம்
ஏப்ரல் 16 -  அரசியல் அறிவியல், நர்சிங், புள்ளியியல், தொழிற்பிரிவு
10ம் வகுப்பு தேர்வு விவரம்
10ம் வகுப்பு பொதுத்தேர்வு 2018ம் மார்ச் 16ல் தொடங்கி ஏப்ரல் 20ம் தேதி முடிவடையும்.தேர்வு முடிவுகள் மே 23ம் தேதி வெளியிடப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மார்ச் 16 - தமிழ் முதல்தாள்
மார்ச் 21 - தமிழ் முதல்தாள்
மார்ச் 28 - ஆங்கிலம் முதல்தாள்
ஏப்ரல் 4 -  ஆங்கிலம்  இரண்டாம் தாள்
ஏப்ரல் 10 - கணிதம்
ஏப்ரல் 12 - விருப்பமொழிப் பாடம்
ஏப்ரல் 17 - அறிவியல்
ஏப்ரல் 20 - சமூக அறிவியல்

Tuesday 6 June 2017

நாளை (7.6.17) அனைத்து பள்ளிகளும் திறப்பு

  கோடை வெயில் காரணமாக நீட்டிக்கப்பட்ட விடுமுறை முடிந்து நாளை அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.       மேலும் நாளை பள்ளிக்கு வரும் அனைத்து மாணவர்களுக்கும் இலவச பாடப்புத்தகம், சீருடைகள் வழங்க பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.  

மார்ச் மாதம் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வுகள் நடந்தன. அதைத் தொட ர்ந்து கீழ் வகுப்புகளுக்கான தேர்வுகள் ஏப்ரலில் நடந்தது. கல்வியாண்டு வேலை நாட்களின்படி கடந்த ஏப்ரல் 30ம் தேதி வரை பள்ளிகள் நடத்தப்பட வேண்டும். ஆனால் வெயில் காரணமாக ஏப்ரல் 26ம் தேதி முதல் பெரும்பாலான பள்ளிகள் விடுமுறை அறிவித்தன. இதையடுத்து, ஜூன் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது.


இந்நிலையில், தமிழகத்தில் மே மாதம் கோடை வெயில் வாட்டி வதைத்து  வந்ததால், பள்ளிகள் திறக்கும் தேதியை நீட்டிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதையேற்று, வெயில் காரணமாக பள்ளிகள் ஜூன் 7ம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. இருப்பினும் வெயிலின் தாக்கம் குறையவில்லை. மேலும் விடுமுறை நீட்டிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.அந்தந்த மாவட்ட ஆட்சியர் அதை முடிவு செய்து கொள்ள வேண்டும் என்று பள்ளிக் கல்வி அமைச்சர் தெரிவித்தார்.


ஆனால், 7ம் தேதியே பள்ளிகளை திறக்க வேண்டும். காலம் நீட்டித்து பள்ளிகள் திறந்தால் கல்வி பாதிக்கப்படும் என்று அனைத்து ஆசிரியர் சங்கங்களும் பள்ளிக் கல்வி இயக்குநர், தொடக்க கல்வி இயக்குநர் ஆகியோரிடம் கோரிக்கை வைத்துள்ளனர். இதையடுத்து அரசு அறிவித்தபடி நாளை பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார். அதே நாளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவசப் புத்தகங்கள், சீருடை வழங்கவும் பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது