news

முதுகலை ஆசிரியர்க்காக போராடக்கூடிய ஒரே அமைப்பு TNHSPGTA ***** நமது சங்கத்தின் உறுப்பினர் ஆகுங்கள் ******சங்க செயல் பாடுகளை தெரிந்துகொள்ள மேல்நிலைக்குரல் படியுங்கள் ******தங்கள் பள்ளி நிகழ்வுகளை அமைப்போடு பகிர்ந்துகொள்ளுங்கள்*****அனைத்து முதுகலை ஆசிரியர்களின் பங்களிப்பே அமைப்பு வளர்ச்சிக்கு உதவும்

Friday 29 April 2016

நடப்பு 2016-17-ம் கல்வியாண்டிலேயே மருத்துவ படிப்புக்கு பொது நுழைவுத் தேர்வு: உச்ச நீதிமன்றம் உத்தரவு

நடப்பு 2016-17-ம் கல்வியாண்டிலேயே மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய அளவில் ஒரே நுழைவுத் தேர்வை நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி மே 1 மற்றும் ஜூலை 24 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நுழைவுத் தேர்வு நடைபெற உள்ளது.
நாடு முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கு 90-க்கும் மேற்பட்ட நுழைவுத் தேர்வுகள் நடத்தப்பட்டு வந்தன. தமிழகத்தில் மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு கிடையாது.
இந்த நடைமுறைகளை மாற்றும் வகையில் மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய அளவில் ஒரே நுழைவுத் தேர்வை நடத்த இந்திய மருத்துவ கவுன்சில், இந்திய பல் மருத்துவ கவுன்சில் ஆகியவை முடிவு செய்தன. இதை எதிர்த்து வேலூர் சிஎம்சி உள்ளிட்ட தனியார் மருத்துவக் கல்லூரிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.
இதனை விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி அல்தமஸ் கபீர் தலைமையிலான அமர்வு கடந்த 2013 ஜூலை 18-ம் தேதி தேசிய நுழைவுத் தேர்வு நடத்த தடை விதித்து தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து இந்திய மருத்துவ கவுன்சில் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதிகள் அனில் தவே, ஏ.கே.சிக்ரி, ஆர்.கே.அகர்வால், ஏ.கே.கோயல், ஆர்.பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து கடந்த 11-ம் தேதி தீர்ப்பு வழங்கியது. அதில் தேசிய அளவில் ஒரே மருத்துவ நுழைவுத் தேர்வை நடத்த அனுமதி அளிக்கப்பட்டது. மேலும் கடந்த 2013-ல் பிறப்பித்த தடையுத்தரவையும் உச்ச நீதிமன்றம் வாபஸ் பெற்றது.
மிக குறைந்த காலஅவகாசம் இருப்பதால் இந்த ஆண்டு மருத்துவ நுழைவுத் தேர்வை நடத்துவது கடினம் என்று பல்வேறு மாநிலங்களின் மருத்துவக் கல்வி வட்டாரங்கள் தெரிவித்தன.
இதைத் தொடர்ந்து நடப்பு 2016-17-ம் கல்வியாண்டிலேயே தேசிய மருத்துவ நுழைவுத் தேர்வை நடத்த உத்தரவிடக் கோரி சங்கல்ப் அறக்கட்டளை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் தேவ், கோயல், சிவ கீர்த்தி சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழகம், ஆந்திரா, தெலங்கானா, உத்தரப் பிரதேசம், கர்நாடக மருத்துவக் கல்லூரி கூட்டமைப்பு, வேலூர் சி.எம்.சி. மருத்துவக் கல்லூரி உள்ளிட்டவை தேசிய நுழைவுத்தேர்வுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் நாகேஸ்வர ராவ் ஆஜரானார். அவர் வாதாடியபோது, கடந்த 2007 முதல் தமிழகத்தில் நுழைவுத் தேர்வு நடத்தப்படவில்லை. பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவ படிப்புகளுக்கான சேர்க்கை நடைபெறுகிறது. அதே நடைமுறை தொடர அனுமதிக்க வேண்டும் என்று வாதிட்டார்.
வேலூர் சிஎம்சி மருத்துவ கல்லூரி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபால் சுப்பிரமணியம், சிறுபான்மை கல்வி நிறுவனமான சிஎம்சி சார்பில் தனியாக நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது, தேசிய நுழைவுத்தேர்வு சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு பொருந்தாது என்று தெரிவித்தார்.
இதேபோல ஆந்திரா, தெலங்கானா, உத்தரப் பிரதேசம், கர்நாடக மருத்துவக் கல்லூரி கூட்டமைப்பின் வழக்கறிஞர்களும் தேசிய நுழைவுத் தேர்வு நடத்தக்கூடாது என்று வாதிட்டனர்.
இந்த வாதங்களை நிராகரித்த 5 நீதிபதிகள் அமர்வு, 2016-17-ம் கல்வியாண்டிலேயே மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய தகுதி நுழைவுத் தேர்வை (என்.இ.இ.டி.) நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.
சிபிஎஸ்இ மற்றும் இந்திய மருத்துவ கவுன்சில் இணைந்து ஆண்டுதோறும் நடத்தும் அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு (ஏஐபிஎம்டி) இந்த ஆண்டு 6,67,637 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். அவர்களுக்கு ஏற்கெனவே அறிவித்தபடி மே 1-ம் தேதி தேசிய நுழைவுத் தேர்வு நடத்த நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்கள் பயன்பெறும் வகையில் ஜூலை 24-ம் தேதி இரண்டாம் கட்டமாக தேசிய நுழைவுத் தேர்வை நடத்த வேண்டும். இரண்டு கட்ட நுழைவுத் தேர்வு முடிவுகளையும் ஆகஸ்ட் 17-ம் தேதி வெளியிட்டு செப்டம்பர் 30-க்குள் மாணவர் சேர்க்கை நடைமுறையை நிறைவு செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தேசிய நுழைவுத் தேர்வு குறித்த புதிய அட்டவணையை நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி நுழைவுத் தேர்வை நடத்தும் சிபிஎஸ்இ கல்வி வாரியம் புதிய தேர்வு அட்டவணையை உச்ச நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்கிறது.

Wednesday 27 April 2016

2015-16- ம் நிதி ஆண்டுக்கு பிஎப்-க்கு 8.7 சதவீத வட்டி: மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தகவல்

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியான பிஎப்-புக்கு கடந்த நிதி ஆண்டில் (2015-16) 8.7 சதவீதம் வட்டி அளிக்க நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இத்தகவலை தொழிலாளர் நலத்துறை அணைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா மக்களவையில் தெரிவித்தார்.

பிஎப் நிதியை நிர்வகிக்கும் அறங்காவலர் குழு (சிபிடி) பரிந்துரைத்த 8.8 சதவீத வட்டியை விட இது சற்று குறைவானதாகும்.
பிஎப்ஓ அமைப்பின் உயர் நிலை அமைப்பான சிபிடி கடந்த பிப்ரவரியில் கூடி 8.8 சதவீதம் வட்டி அளிக்கலாம் என பரிந்துரைத்தது. இருப்பினும் நிதி அமைச்சகம் இந்த பரிந்துரையைத் திருத்தி 8.7 சதவீதம் அளிக்க ஒப்புதல் அளித்ததாக மக்களவையில் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் தத்தாத்ரேயா தெரிவித்தார்.

சிபிடி பரிந்துரை செய்த வட்டி விகிதத்தை நிதி அமைச்சகம் மாற்றியமைத்துள்ளது இதுவே முதல் முறையாகும். சிபிடியின் தலைவராக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

2013-14-ம் நிதி ஆண்டிலும் அதைத் தொடர்ந்து 2014-15-ம் நிதி ஆண்டிலும் 8.75 சதவீத வட்டி அளிக்க பரிந்துரை செய்தது. இதற்கு முந்தைய நிதி ஆண்டில் (2012-13) அளிக்கப்பட்ட 8.5 சதவீதம் மற்றும் அதற்கு முந்தைய நிதி ஆண்டில் (2011-12 அளிக்கப்பட்ட 8.25 சதவீதத்தைக் காட்டிலும் இது அதிகமாகும்.

கடந்த ஆண்டு செப்டம்பரில் கூடிய அறங்காவலர் குழு கூடியபோது வைப்பு நிதிகளுக்கு 8.95 சதவீதம் வட்டி அளித்தாலும் ரூ. 100 கோடி கூடுதலாக கைவசம் இருக்கும் என தெரிவித்திருந்தது.

பிஎப் அமைப்பு சேரும் முதலீட்டுத் தொகையை பல்வேறு முதலீடுகளை மேற்கொண்டு அதில் கிடைக்கும் வட்டியை தனது முதலீட்டாளர்களுக்கு பகிர்ந்து அளிக்கிறது.

9 சதவீத வட்டி அளிக்கவேண்டும் என தொழிலாளர் சம்மேளனங்கள் கோரிக்கை வைத்த போதிலும் கடந்த பிப்ரவரி 16-ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் 8.8 சதவீதம் வட்டி அளிப்பது என முடிவு செய்யப்பட்டது. பின்னர் குறிப்பிட்ட தத்தாத்ரேயா 2015-16-ம் நிதி ஆண்டில் இடைக்காலமாக அறிவிக்கப்பட்ட 8.8 சதவீத வட்டி விகிதத்தை பிஎப்ஓ குறைக்காது என உறுதியளித்தார்.

நாட்டின் பொருளாதார சூழல் மற்றும் பல்வேறு திட்டங்களுக்கு அளிக்கப்படும் வட்டி விகிதம் மற்றும் 7-வது ஊதியக் குழு பரிந்துரை அமல் ஆகிய காரணங்களால் வட்டி விகிதம் மாற்றியமைக்கப்பட்டதாக தத்தாத்ரேயா தெரிவித்தார்.

அப்போதைய சூழலுக்கேற்ப இடைக்கால வட்டி விகித முடிவு எடுக்கப்பட்டது. இப்போது அறிவிக்கப்பட்ட முடிவு குறித்து சிபிடி மறுபடியும் கூடிய எதிர்காலத்தில் வழங்கவேண்டிய வட்டி விகிதம் குறித்து தீர்மானிக்கும் என்று பதிலளித்தார் தத்தாத்ரேயா.

Tuesday 26 April 2016


நமது அமைப்பின் மேனாள் மாவட்டப் பொருளாளர் திரு.கண்ணையா அவர்கள் 30.4.16 அன்று அரசுப் பணி நிறைவு பெறுகிறார். மாநிலப் பொதுச் செயலாளர் திரு.பிரபாகரன் அவர்கள் தலைமையில் மதுரை மாவட்ட அமைப்பு சார்பில் பாராட்டுவிழா நடைபெற்றது. மாவட்டப் பொறுப்பாளர்களும் மாநிலமூத்தோர் அணி பொறுப்பாளர்கள் திரு.பார்த்திபன் திரு.கருணாநிதி ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்தினர் 

Thursday 21 April 2016

+2 விடைத்தாள் திருத்தும் பணி இன்றுடன் நிறைவடைந்தது

+2 விடைத்தாள் திருத்தும் பணி இன்றுடன் மதுரையில் நிறைவடைந்தது எப்போதும் இல்லாதவகையில் இந்த ஆண்டு  முதுகலை ஆசிரியர்கள் கடும் வெயிலிலும் மகிழ்ச்சியுடன் விடைத்தாள் திருத்தி சென்றனர் காரணம் மதுரையில் தேர்வு செய்யப்பட்ட 3 மையங்கள் தான் அதற்கு முதன்மைக்கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி அவர்களுக்கு  நன்றியை தெரிவித்து கொள்கிறோம். அமைப்பு சுட்டிக்காட்டிய குறைபாடுகளை சரிசெய்ததோடு குடிதண்ணீர் கழிவறை உட்பட  அனைத்து வசதிகளையும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதேபோல் திருத்தும் பணி சிறப்பாக நடைபெற உதவிய  மேலூர் மற்றும் உசிலை மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் , கூடுதல் முகாம் அலுவலர்களுக்கும், அலுவலக நண்பர்களுக்கும் எமது தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின்  மதுரை மாவட்ட அமைப்பு சார்பில் நன்றியையும் வாழ்த்துகளையும்  தெரிவித்துகொள்கிறோம் .

G.O - 117-நாள்-20.04.2016- நிதித்துறை : 6% அகவிலைப்படி உயர்வுக்கான அரசாணை வெளியீடு

Wednesday 20 April 2016

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி நாளை முடிகிறது

தமிழகத்தில் விடைத்தாள்கள் திருத்த 74 திருத்தும் முகாம்கள் அமைக்கப்பட்டு கடந்த மார்ச் 14ம் தேதியே மொழிப்பாடத் தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி தொடங்கியது. இயற்பியல், கணிதம் உள்ளிட்ட விடைத்தாள்கள் திருத்தும் பணி கடந்த வாரம் தொடங்கியது. ஏப்ரல் 20ம் தேதிக்குள் அனைத்து விடைத்தாள்களையும் திருத்தி முடிக்க தேர்வுத்துறை திட்டமிட்டு இருந்தது. ஆனால், இன்னும் அந்த பணி முடியவில்லை. இந்நிலையில் நாளையுடன் திருத்தி முடிக்க வேண்டும் என்று தேர்வுத் துறை உத்தர விட்டுள்ளது.
பிளஸ் 2 தேர்வில் 9 லட்சம் மாணவ மாணவியர் தேர்வு எழுதியுள்ளதால், குறிப்பிட்ட தேதிக்குள் திருத்தும் பணியை முடிக்க முடியவில்லை என்று முதுநிலைப் பட் டதாரி ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், தேர்தல் பணிக்கான பயிற்சி வகுப்புகளிலும் ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பதிவு எண்களை பதிவு செய்து அதன் பிறகு டேட்டா சென்டருக்கு அனுப்ப வேண்டும். அங்கு தேர்வு முடிவுக்கான பட்டியல், தயாரிக்க வேண்டியுள்ளது. இந்த பணிகள் முடிய 20 நாட்கள் தேவைப்படும். இதுனால் தேர்வு முடிவுகள் மே மாதம் 10ம் தேதி அல்லது அதற்கு பிறகு வெளியாகும் என்று தெரிகிறது.

முழு பணத்தை எடுப்பதை தடுக்கும் பிஎப் புது விதிமுறை ரத்து

பிஎப் பணத்தை முழுமையாக எடுக்க தடை விதிக்கும் புதிய விதிமுறை ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. தனியார் நிறுவனங்கள், பள்ளிகள், தொழிற்சாலைகள் ஆகியவற்றில் பணிபுரியும் ஊழியர்களின் சம்பளத்தில் 12 சதவீதம் வருங்கால வைப்பு நிதிக்காக பிடித்தம் செய்யப்பட்டது. இதே அளவு தொகையை ஊழியர்களின் கணக்கில் முதலாளிகளின் பங்காக நிறுவனங்கள் செலுத்த வேண்டும். இதில் 8.3 சதவீதம் பென்ஷன் திட்டத்துக்காக எடுத்துக் கொள்ளப்படுகிறது. எஞ்சிய தொகை தொழிலாளர்களின் கணக்கில் சேர்க்கப்பட்டு ஆண்டுதோறும் வட்டி சேர்க்கப்பட்டு வருகிறது. 58 வயது பூர்த்தியானவுடன் வைப்பு நிதியில் சேர்ந்த தொகை மொத்தமாக ஊழியர்களுக்கு தரப்படும். பணிக்காலத்தில் இந்த வைப்பு நிதியிலிருந்து குழந்தைகளின் படிப்பு, மருத்துவ செலவு, திருமண செலவுகளுக்கு பணம் திருப்பிக் கொள்ளலாம்.

54 வயதை கடக்கும் போது வைப்பு நிதியில் இருந்து 90 சதவீத தொகையை எடுத்துக் கொள்ளலாம் என விதிமுறை இருந்தது. இந்த விதிமுறை கடந்த பிப்ரவரியில் திருத்தப்பட்டது. இனிமேல் 57 வயது எட்டினால் மட்டுமே 90 சதவீத நிதியை திரும்ப பெற முடியும். 58 வயது பூர்த்தியானவுடன் எஞ்சிய தொகை ெசட்டில் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த புதிய விதிமுறை மே 1ம் தேதி அமலுக்கு வருவதாக மத்திய அரசு அறிவித்திருந்தது. பணிக்காலத்திலேயே பணம் எடுத்துவிட்டால் ஊழியர் ஓய்வுபெற்ற பிறகு அவருக்கு சமூக பாதுகாப்பு இருக்காது என்பதால், இதை கருத்தில் கொண்ேட புதிய விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது என தொழிலாளர் அமைச்சகம் கூறியது.

ஆனால், இதற்கு தொழிலாளர் சங்கங்களில் இருந்து கடும் எதிர்ப்பு வந்தது. இதையடுத்து புதிய விதிமுறையை அமல்படுத்தும் முடிவை மேலும் மூன்று மாதங்களுக்கு தள்ளி வைப்பதாகவும், ஆகஸ்ட் 1ம் தேதிதான் இது அமல்படுத்தப்படும் என்பதால் அதுவரை ஊழியர்கள் வீடு வாங்குதல், ஊழியருக்கோ அவரது குடும்பத்தினருக்கோ பெரிய அளவிலான மருத்துவ  சிகிச்சைகள், குழந்தைகள் உயர் கல்வி, திருமண செலவு போன்றவற்றுக்கு பணம்  எடுத்துக்கொள்ளலாம்’’ என்று தொழிலாளர் அமைச்சகம் தெரிவித்திருந்தது. ஆனால், பெங்களூருவில் தொழிலாளர்களின் போராட்டம் தீவிரம் அடைந்தது. பஸ் மற்றும் வாகனங்களுக்கு தீவைத்து தொழிலாளர்கள் வன்முறையில் இறங்கினர். இதை தொடர்ந்து நேற்று மாலையில், புதிய விதிமுறை அறிவிப்பையே ரத்து செய்வதாக மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா அறிவித்தார்.

Tuesday 19 April 2016

கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் சித்திரா பௌர்ணமி நாளான 22.4.16 அன்று மதுரை மாவட்ட உள்ளூர் விடுமுறையாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.


ப்ளஸ் 1 பாடபுத்தகத்தில் மாற்றம் இல்லை

பத்து ஆண்டுகள் கடந்த பிறகும் பிளஸ் 1, பிளஸ் 2 புத்தகங்கள் இந்த ஆண்டும்  தொடரும் என்று பள்ளிக் கல்வி துறை தெரிவித்துள்ளது. பள்ளிக் கல்வித்துறையின் கீழ் உயர்நிலைப் பள்ளி, மேனிலைப் பள்ளிகள் வருகின்றன. ஒன்று முதல் 8ம் வகுப்பு வரை உள்ள பள்ளிகள் தொடக்க  கல்வித்துறையின் கீழ் வருகின்றன. மேற்கண்ட பள்ளிகளில் மொத்தம் ஒரு கோடியே 20 லட்சம் மாணவ மாணவியர் படித்து வருகின்றனர். இவர்களுக்கான  புத்தகங்களை தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் அச்சிட்டு வழங்கி வருகிறது. அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும்  மாணவ மாணவியருக்கான புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது.
ஒவ்வாரு ஆண்டும் இதற்காக 52 தலைப்புகளில் 6 கோடி புத்தகங்கள் அச்சிட்டு வழங்கப்படுகிறது. தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கான  புத்தகங்கள் விலைக்கு விற்கப்படுகிறது. இந்நிலையில், பாடத்திட்டங்களை வகுத்து அதற்கேற்ப பாடங்களை எழுதும் பொறுப்பு மாநில கல்வி ஆராய்ச்சி  மற்றும் பயிற்சி நிறுவனம் மேற்கொள்வது வழக்கம். இந்நிலையில் கடந்த முறை ஆட்சியில் இருந்த திமுக அரசு 1 முதல் 9ம் வகுப்பு வரை சமச்சீர்  கல்வியை அறிமுகம் செய்தது. அது படிப்படியாக ஒவ்வொரு வகுப்புக்கு அறிமுகமானது.
இதற்கு முன்னதாக ஒவ்வொரு 5 ஆண்டுக்கும் ஒரு முறை பாடத் திட்டம் மாற்றி அமைக்கப்பட்டு புதிய பாடப்புத்தகங்கள் அச்சிட்டு வழங்குவார்கள்.  இதன்படி பிளஸ் 1, பிளஸ் 2 புத்தகங்கள் கடந்த 2005ம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்டு அச்சிட்டு வழங்கினர். அதில் கணக்கு, அறிவியல் பாடங்களில்  கடினமான பகுதிகள் அதிக அளவில் இடம் பெற்று இருந்ததால் மாணவர்களுக்கு பாடச்சுமை அதிகரித்தது. இதை கருத்தில் கொண்டு கடந்த முறை  ஆட்சியில்  இருந்த திமுக அரசு கடினப் பகுதிகளை நீக்கியது. அதற்கு பிறகு ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு, புதிய பாடத்திட்டத்தின்படி புதிய  பாடப்புத்தகங்களை அச்சிட்டு வழங்கி இருக்க வேண்டும்.
மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் என்சிஇஆர்டி(தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கழகத்தின்) வரைவு பாடத்திட்டத்தின்படி  புதிய பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு பிளஸ் 1 பிளஸ் 2 பாடப்புத்தகம் தயாரிக்கப்பட்டது. ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக அந்த புதியபாடப்புத்தகம் அச்சிட  அரசு அனுமதி வழங்கவில்லை. இந்நிலையில் தற்போது அடுத்த சட்டப் பேரவைத் தேர்தலும் அறிவிக்கப்பட்டு விட்டது. அடுத்த கல்வி  ஆண்டு தொடங்க  இன்னும் 40 நாட்கள் உள்ள நிலையில் புதிய பாடப்புத்தகம் அச்சிட்டு வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால், வரும் கல்வி ஆண்டில் பிளஸ் 1,  பிளஸ் 2 வகுப்புகளுக்கு பழைய பாடப்புத்தகங்களே தொடரும் என்று பள்ளிக் கல்வி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Sunday 10 April 2016

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழக மாநிலத் தலைவர் திரு முனைவர் வே.மணிவாசகன் அவர்கள் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பாத்திமா மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வரும் +2 விடைத்தாள் திருத்தும் மையத்தில் இன்று அனைத்து முதுகலை ஆசிரியர்களையும் சந்தித்த போது. ..


மதுரையில் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி முப்பெரும் விழா மற்றும் புதிய அலுவலக திறப்பு விழாவில் TNHSPGTAவின் மாநில பொதுச்செயலாளர் திரு.இரா. பிரபாகரன் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கி போது எடுத்தபடம்


ஈட்டிய விடுப்பு (EL) பற்றிய முழு விளக்கங்கள்

* தகுதிகாண் பருவத்தில் உள்ளவர்கள் EL எடுத்தால் probation period தள்ளிப்போகும். 

* பணியில் சேர்ந்து ஒரு வருடம் முடிந்ததும் ஈட்டிய விடுப்பினை ஒப்படைத்து பணமாகப் பெறலாம். ஆண், பெண் இருவரும். 

* தகுதிகாண் பருவம் முடிக்கும் முன்பு (பணியில் சேர்ந்து 2 வருடங்களுக்குள்) மகப்பேறு விடுப்பு எடுத்தால் அந்த வருடத்திற்கான EL -ஐ ஒப்படைக்க முடியாது. EL நாட்கள் மகப்பேறு விடுப்புடன் சேர்த்துக்கொள்ளப்படும் (உதாரணமாக - அவரது கணக்கில் 10 நாட்கள் EL உள்ளது என்றால் மகப்பேறு விடுப்பில் அந்த 10 நாட்களை கழித்துவிட்டு (180-10= 170) மீதம் உள்ள 170 நாட்கள் மட்டுமே வழங்கப்படும். எனவே மகப்பேறு விடுப்பு எடுக்கும் முன்பே கணக்கில் உள்ள EL-ஐ எடுத்துவிடுவது பயனளிக்கும்) 


* வருடத்திற்கு 17 நாட்கள் EL. அதில் 15 நாட்களை ஒப்படைத்து பணமாகப் பெறலாம் . *

 மீதமுள்ள 2 நாட்கள் சேர்ந்துகொண்டே வரும் அதை ஓய்வுபெறும் பொழுது ஒப்படைத்து பணமாகப் பெறலாம். 

* 21 நாட்கள் ML எடுத்தால் ஒரு நாள் EL கழிக்கப்படும். * வருடத்திற்கு மொத்தம் 365 நாட்கள்.இதை 17ஆல் (EL) வகுத்தால் 365/17=21. 

* எனவே 21 நாட்கள் ML எடுத்தால் ஒரு நாள் EL என்ற கணக்கில் கழிக்கப்படுகிறது. 

* மகப்பேறு விடுப்பு எடுத்த வருடத்தில் ஈட்டிய விடுப்பு ஒப்படைக்கும் பொழுது , மகப்பேறு விடுப்பு எடுத்த 6 மாதங்கள் , மற்றும் ML எடுத்த தாட்கள் தவிர்த்து மீதம் வேலை செய்த நாட்களை 21 ஆல் வகுத்து EL கணக்கிடப்படும். CL, RL, தவிர வேலை செய்த நாட்களுக்கு மட்டுமே EL கணக்கிடப்படும். 

* ஒரு நாள் மட்டும் EL தேவைப்படின் எடுத்துக்கொள்ளலாம். 

* அரசு ஊழியர்களுக்கு மட்டும் வருடத்திற்கு 30 நாட்கள் EL (ஆசிரியர்களுக்கு 17 நாட்கள் மட்டுமே). அதில் 15 நாட்களை ஒப்படைக்கலாம். மீதம் உள்ள 15 நாட்கள் சேர்ந்துகொண்டே வரும்..அதிகபட்ச மாக 240 நாட்களைச் சேர்த்து வைத்து ஒப்படைக்கலாம். அதற்கு மேல் சேருபவை எந்தவிதத்திலும் பயனில்லை. 

*மாறுதல் / பதவி உயர்வு / பணியிறக்கம் / நிரவல் போன்ற நிகழ்வுகளின் போது பழைய இடத்திற்கும் புதிய இடத்திற்குமிடையே குறைந்தது 8 கி.மீ (ரேடியஸ்) இருந்தால் அனுபவிக்காத பணியேற்பிடைக்காலம் EL கணக்கில் சேர்த்துக் கொள்ளப்படும். இதற்கு 30 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 90 நாட்களுக்குள் கணக்கில் சேர்க்கப்பட வேண்டும். (குறைந்தது 5 நாட்கள். 160 கி.மீ க்கு மேற்படின் அட்டவணைப்படி நாட்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்) 

*ஒருமுறை சரண்டர் செய்த அதே தேதியில் தான் ஆண்டுதோறும் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. கணக்கீட்டிற்கு வசதியாக இருக்கவும் Pay Rollல் விவரம் குறிக்க எளிமையாக அமையவும் ஒரே தேதியில் ஆண்டுதோறும் அல்லது இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை சரண் செய்வது சிறந்தது. எவ்வாறாயினும் ஒரு ஒப்படைப்பு நாளுக்கும் அடுத்த ஒப்படைப்பு நாளுக்குமிடையே 15 நாட்கள் ஒப்படைப்பெனில் ஓராண்டு / 30 நாட்கள் ஒப்படைப்பெனில் இரண்டாண்டு இடைவெளி இருக்க வேண்டும். 

* ஒப்படைப்பு நாள் தான் முக்கியமே தவிர விண்ணப்பிக்கும் தேதியோ, அலுவலர் சேங்க்ஷன் செய்யும் தேதியோ, ECS ஆகும் தேதியோ அடுத்தமுறை ஒப்படைப்பு செய்யும்போது குறிக்கப்பட வேண்டியதில்லை. 

* EL ஒப்படைப்பு நாளின் போது குறைந்த அளவு அகவிலைப்படியும் பின்னர் முன்தேதியிட்டு DA உயர்த்தப்படும் போது ஒப்படைப்பு நாளில் அதிக அகவிலைப்படியும் இருந்தால் DA நிலுவையுடன் சரண்டருக்குரிய நிலுவையையும் சேர்த்து சுதந்தரித்துக் கொள்ளலாம். ஊக்க ஊதியம் முன்தேதியிட்டுப் பெற்றாலும் நிலுவைக் கணக்கீட்டுக் காலத்தில் ஒப்படைப்பு தேதி வந்தால் சரண்டர் நிலுவையும் பெறத் தகுதியுண்டு. 

* பணிநிறைவு / இறப்பின் போது இருப்பிலுள்ள EL நாட்களுக்குரிய (அதிகபட்சம் 240) அப்போதைய சம்பளம் மற்றும் அகவிலைப்படி வீதத்தில் கணக்கிடப்பட்டு திரள்தொகையாக ஒப்பளிக்கப்படும். 

* அதிகபட்சம் தொடர்ந்து 180 நாட்கள் ஈட்டிய விடுப்பு எடுக்கலாம். அதனைத் தொடர்ந்து மருத்துவ விடுப்பு எடுக்கலாம். 180 நாட்களுக்குமேற்பட்ட விடுப்புக்கு வீட்டுவாடகைப்படி கிடைக்காது 

Friday 8 April 2016

வேதியியல், கணிதம் மற்றும் இயற்பியலுக்கு, மொத்தம், 14 மதிப்பெண்கள் போனசாக வழங்கப்பட்டு உள்ளன.

பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தம், நேற்று துவங்கியது. வேதியியல், கணிதம் மற்றும் இயற்பியலுக்கு, மொத்தம், 14 மதிப்பெண்கள் போனசாக வழங்கப்பட்டு உள்ளன.

பிளஸ் 2 பொதுத்தேர்வில், முக்கிய பாடங்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணி, நேற்று துவங்கியது. முதல் நாளில், தலைமை திருத்துனர்கள் மற்றும் துறை அலுவலர்கள் மூலம், மாதிரிக்காக ஒவ்வொரு அறையிலும், தலா, 15 விடைத்தாள்கள் திருத்தம் செய்யப்பட்டன. நாளை முதல், உதவி விடை திருத்துனர்கள், முழு அளவில் திருத்தும் பணியில் ஈடுபடுவர்.

வினாத்தாளில் ஏற்பட்ட பிழை காரணமாக, வேதியியலில், ஆறு மதிப்பெண்; கணிதத்தில், தமிழ் வழி மாணவர்களுக்கு மட்டும், ஆறு மதிப்பெண்; இயற்பியலில், தமிழ் வழி மாணவர்களுக்கு மட்டும், இரண்டு மதிப்பெண், 'போனஸ்' மதிப்பெண்களாக வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது
மூன்று பாட தேர்வுகளிலும், சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு பதில் எழுத முயற்சித்திருந்தால் மட்டுமே, போனஸ் மதிப்பெண் வழங்கப்படும்.

அகரம் ஃபவுண்டேசன் - விதை திட்டத்தின் மூலம் தகுதியுடைய 12-ம் வகுப்பு மாணவர்களின் முன்னேற்றம் மற்றும் மேற்படிப்பிற்கான உதவிகள் வழங்குதல்


LETTER REGARDING MERGING PREVIOUS CPS ACCOUNT AMOUNT TO NEW ( PRESENT )CPS ACCOUNT


Monday 4 April 2016

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9-ல் வெளியாக வாய்ப்பு ?

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுவதால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் முன்கூட்டியே மே 9-ல் வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் 4-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 1-ம் தேதியுடன் முடிவடைந்தது. தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 6,550 பள்ளிகளைச் சேர்ந்த 3 லட் சத்து 91 ஆயிரத்து 806 மாண வர்களும், 4 லட்சத்து 47 ஆயிரத்து 891 மாணவிகளும் தேர்வு எழுதியுள்ளனர். தேர்வுகள் நடந்த போதே முடிவுற்ற தேர்வுகளின் விடைத்தாள்கள் திருத்தும் பணி மார்ச் 14-ம் தேதி தொடங்கியது. இதுகுறித்து கல்வித்துறை அதிகாரி கள் கூறியதாவது:
விடைத்தாள்கள் திருத்தும் பணிக்காக, தமிழகம் முழுவதும் 60-க்கும் மேற்பட்ட மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மார்ச் 14-ம் தேதி முதல் விடைத்தாள்கள் திருத்தும் பணி தொடங்கிவிட்டது. தற்போது தமிழ் மற்றும் ஆங்கிலம் விடைத்தாள்களை திருத்தும் பணி முழுமையாக முடிவடைந்துள்ளது.
வேதியியல் உள்ளிட்ட பாடங்களின் விடைத்தாள் திருத்தும் பணி வரும் 5-ம் தேதி முதல் தொடங்க உள்ளன. இதற்காக, விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு விடைத்தாள்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. கடைசியாக நடந்த தேர்வுகளான இயற்பியல் மற்றும் வணிகவியல் பாடங்களின் விடைத்தாள்கள் திருத்தும் பணி 6-ம் தேதி முதல் தொடங்கும். விடைத்தாள் திருத்தும் பணியை ஏப்ரல் 20-ம் தேதிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப் பதிவு மே 16-ம் தேதி நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 19-ம் தேதி நடைபெற உள்ளது. இதனால், பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகளை முன்கூட்டியே வெளியிட கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
குறிப்பாக, பொறியியல் படிப்புகளுக்கு இம்முறை ‘ஆன்-லைனில்’ மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான 15 தினங்களில் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி மே 9-ம் தேதி பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Friday 1 April 2016

ஆசிரியர்களுக்கு ஏப்ரல் இறுதியில் தேர்தல் பயிற்சி வகுப்பு தொடக்கம்

தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஏப்ரல் மாத இறுதியில் தேர்தல் தொடர்பான பயிற்சி வகுப்பு தொடங்க உள்ளது. தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கு, பொதுத் தேர்வுகள் நாளை நிறைவு பெறுகிறது. விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏற்கனவே நடைபெற்று வருகின்றன.

மொழி பாடங்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணி நடந்து வரும் நிலையில் முக்கிய பாடங்களுக்கு ஏப்ரல் 6ம் தேதி முதல் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்குகிறது. இதனை போன்று பத்தாம் வகுப்புக்கு மார்ச் 29ம் தேதி மொழி பாடத்தேர்வுகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் ஏப்ரல் 11ம் தேதியுடன் அனைத்து தேர்வுகளும் முடிந்து விடைத்தாள் திருத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற உள்ளது. இந்தநிலையில் விடைத்தாள் திருத்தும் பணிகளும் நிறைவு பெற்றுவிடும் நிலையில் தேர்தலுக்கான பயிற்சி வகுப்புகளை நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

இதற்காக கால அட்டவணையும் வகுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் வரும் ஏப்ரல் 24ம் தேதி முதல் கட்ட பயிற்சி வகுப்பும், மே 7ம் தேதி 2ம் கட்ட பயிற்சி வகுப்பும், 12ம் தேதி மூன்றாம் கட்ட பயிற்சி வகுப்பும் நடத்தப்பட இருக்கிறது. தொடர்ந்து மே 15ம் தேதி இறுதி கட்ட பயிற்சி வகுப்புடன் தேர்தல் பணி ஆணைகளும் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

பிளஸ் 2 தேர்வு இன்றுடன் நிறைவு: முக்கிய பாடங்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணி ஏப்.,5-ல் தொடக்கம்

தமிழகம், புதுவையில் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் கடந்த மார்ச் 4-ம் தொடங்கியது. முக்கியப் படிப்புகளுக்கான தேர்வுகள் மார்ச் 14-ம் தேதி தொடங்கியது. இன்று, இயற்பியல், பொருளாதாரம் பாடத்துடன் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் முடிவடைக்கின்றது. மொழி பாடங்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கி நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், முக்கிய பாடங்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 5-ம் முதல் ஏப்ரல்17 -ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவித்துள்ளது.


வேதியியல், கணிதம், உயிரியல் ஆகிய பாடங்களுக்கான வினாத்தாள் சற்று கடுமையாக இருந்ததாக மாணவர்களிடையே பேசப்பட்டு வருகின்றது. இந்நிலையில், வேதியியல் பாடத்துக்கு மட்டும் 6 மதிப்பெண்கள் வழங்கப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. மே முதல் வாரத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.