news

முதுகலை ஆசிரியர்க்காக போராடக்கூடிய ஒரே அமைப்பு TNHSPGTA ***** நமது சங்கத்தின் உறுப்பினர் ஆகுங்கள் ******சங்க செயல் பாடுகளை தெரிந்துகொள்ள மேல்நிலைக்குரல் படியுங்கள் ******தங்கள் பள்ளி நிகழ்வுகளை அமைப்போடு பகிர்ந்துகொள்ளுங்கள்*****அனைத்து முதுகலை ஆசிரியர்களின் பங்களிப்பே அமைப்பு வளர்ச்சிக்கு உதவும்

Monday 28 December 2015

Income Tax 2015-16 – Deductions and Exemptions for Salaried Employees with regard to payment of Income Tax for the financial year 2014-15 (Assessment Year 2016-17)

7-வது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்த கூடாது - தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்கள் போர்க் கொடி

ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்தக் கூடாது என்ற தமிழக அரசின் கோரிக்கையால், ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். நீதிபதி ஏ.கே.மாத்தூர் தலைமையிலான ஏழாவது ஊதியக் குழு தனது அறிக்கையை மத்திய அரசிடம் ஏற்கனவே தாக்கல் செய்துவிட்டது.
இதனை ஏற்று ஊதியக் குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்துவதற்காக சிறப்பு பிரிவு ஒன்றையும் மத்திய நிதி அமைச்சகம் ஏற்படுத்தியுள்ளது.
ஏழாவது ஊதியக் குழு அறிக்கையின் படி மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு சுமார் 25 சதவீதம் அளவிற்கு வருவாய் உயரும் என கணக்கிடப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களை தொடர்ந்து பல மாநில அரசுகளும் அதன் அடிப்படையில் தங்களது ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கும் நிலை உள்ளது.
வரும் 1-ம் தேதி முதல் ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தமிழகம், மேற்கு வங்கம், பஞ்சாப், உத்திரப்பிரதேசம், ஒடிசா ஆகிய மாநிலங்கள் ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்தாமல், தள்ளிவைக்குமாறு மத்திய அரசிடம் அறிவுறுத்தியுள்ளன. இது தொடர்பாக பிரதமர் அலுவலகம், கேபினட் செயலகம் உள்ளிட்டவைகளுக்கு மேற்கண்ட 5 மரிநலங்களும் கடிதம் அனுப்பியுள்ளன. மாநிலங்களின் நிதி நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் தங்களது ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு உடனடியாக அளிக்க முடியாது என அந்த மாநிலங்கள் தெரிவித்துள்ளன. எனவே கூடுமானவரை ஏழாவது ஊதிய கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்துவதை தவிர்க்குமாறு இந்த மாநிலங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. இதனால் சம்பந்தப்பட்ட மாநிலங்களின் அரசு ஊழியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Friday 25 December 2015

4 மாவட்டங்களில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்2 மாணவர்களின் தேர்ச்சியை அதிகரிக்க 10 லட்சம் கையேடு இந்த வார இறுதிக்குள் விலையின்றி வழங்க ஏற்பாடு

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர் ஆகிய 4 மாவட்டங்களில் அரசு பள்ளிகளில் படிக்கும் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்–2 மாணவ–மாணவிகளுக்கு 10 லட்சம் கையேடுகள் இந்த வாரத்திற்குள் விலை இன்றி வழங்க ஏற்பாடு நடந்து வருகிறது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், கடலூர் ஆகிய 4 மாவட்டங்களில் சமீபத்தில் பெய்த மிக கனமழை காரணமாக வரலாறு காணாத வகையில் பெரிய அளவில் வெள்ளச்சேதம் ஏற்பட்டது. தொடர்ந்து மழையின் காரணமாக 33 நாட்களுக்கு மேலாக பள்ளிகளுக்கு விடுமுறைவிடப்பட்டது.
எனவே மாணவர்களின் கல்வி பாதிக்கக்கூடாது என்பதற்காக மேற்கண்ட அந்த 4 மாவட்டங்களில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்–2 மாணவ–மாணவிகளுக்கு கற்றலில் குறைபாடு வரக்கூடாது என்பதற்காக அவர்களின் தேர்ச்சியை அதிகரிக்க கையேடு வழங்க முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.
அச்சடிக்கும் பணி
இதையொட்டி மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனம் கையேடுகள் தயாரிக்கும் பணியை செய்து முடித்தது. எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு ஒரே கையேடுவும், பிளஸ்–2 மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலம் பாடங்களுக்கு ஒரே கையேடுவும், வேதியியல், இயற்பியல், கணிதம், உயிரியல் முதலிய பாடங்களுக்கு கையேடுகள் தனியாகவும் வழங்கப்பட உள்ளன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ–மாணவிகள் அனைவருக்கும் விலை இன்றி வழங்கப்பட உள்ளன. மொத்தத்தில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட கையேடுகள் வழங்கப்பட இருக்கிறது.
தற்போது கையேடுகள் அச்சடிக்கும் பணி அரசு அச்சகத்தில் நடைபெற்று வருகிறது. விலை இன்றி வழங்கப்பட உள்ள அந்த கையேடுகளை படித்தால் கண்டிப்பாக நல்ல தேர்ச்சி விகிதம் இந்த மாவட்டங்களில் இருக்கும் என்று கருதப்படுகிறது.
இந்த வார இறுதிக்குள் கிடைக்க ஏற்பாடு
இந்த கையேடுகள் எப்போது வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதாவிடம் கேட்டதற்கு அவர் பதில் அளிக்கையில், ‘மாணவர்கள் நலன் கருதி கையேடு அச்சடிக்கப்படுகிறது. இந்த வார இறுதிக்குள் கையேடு வழங்க ஏற்பாடு நடந்து வருகிறது’ என்றார்.

பிளஸ் 2 செய்முறை தேர்வு எப்போது

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு மாணவர்களுக்கு, பிப்ரவரி இரண்டாம் வாரத்தில், செய்முறைத் தேர்வு நடத்த, கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. 
 
        அதற்கான ஆயத்தப் பணிகளை செய்யும்படி, பள்ளிகளுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர். இதுகுறித்து, அதிகாரிகள் கூறுகையில், 'வழக்கமாக, பிப்ரவரி முதல் வாரத்தில், செய்முறைத் தேர்வு நடத்தப்படும். இந்த ஆண்டு, மழை விடுமுறை மற்றும் அரையாண்டு தேர்வு தாமதத்தால், பிப்ரவரி, இரண்டாம் வாரத்தில் நடத்தப்பட உள்ளது' என்றனர்.

Monday 21 December 2015

பள்ளிக்கல்வி - 80 முதுகலை ஆசிரியர் மற்றும் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு 591 முதல் 611 வரை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு

 01.01.2015 நிலவரப்படி 2015/16 ல் காலியாக உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களுக்கு முன்னுரிமைப்பட்டியலில் உள்ள முதுகலை ஆசிரியர் மற்றும் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு1 முதல் 530 வரை உள்ள நபர்களுக்கு அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக ஏற்கனவே பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
இதில் மேலும் பல மேல்நிலைப்பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ள காரணத்தால் கூடுதலாக 80 முதுகலை ஆசிரியர் மற்றும் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு 591 முதல் 611 வரை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
பதவி உயர்வு பெற்ற அனைத்து முதுகலை ஆசிரியர் பெருமக்களுக்கும்  கழகம் சார்பில் வாழ்த்துக்களையும் மகிழ்ச்சியினையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

click here

Saturday 19 December 2015

பள்ளிகளுக்கு 24-ந் தேதி முதல் ஜனவரி 1-ந் தேதி வரை விடுமுறை; பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவிப்பு

மிலாது நபி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழாக்களையொட்டி 24-ந் தேதி முதல் ஜனவரி 1-ந் தேதி வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என்று பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் தெரிவித்தார்.24-ந் தேதி முதல் விடுமுறை2015-2016-ம் கல்வி ஆண்டுக்கான பள்ளிக்கூட விடுமுறைகள் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு அச்சிடப்பட்டு உள்ளது. அதன்படி தமிழ்நாடு முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் 24-ந் தேதி முதல் ஜனவரி 1-ந் தேதி வரை விடுமுறைவிடப்பட்டுள்ளது. மிலாது நபி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழாக்கள் இந்த விடுமுறையில் அடங்கும்.சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், கடலூர் ஆகிய 4 மாவட்டங்களில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் 24, 25, 27, ஜனவரி 1-ந் தேதி ஆகிய 4 நாட்கள் மட்டும் நடத்தக்கூடாது. மற்ற நாட்களில் சிறப்பு வகுப்புகள் இந்த 4 மாவட்டங்களில் மட்டும் நடத்தப்பட வேண்டும். இவ்வாறு ச.கண்ணப்பன் தெரிவித்தார்.

Friday 18 December 2015

ஜனவரி 11-ல் அரையாண்டு தேர்வு: தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வு வரும் ஜனவரி மாதம் 11-ம் தேதி துவங்கும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் ஏற்பட்ட மழை, வெள்ள பாதிப்புகள் காரணமாக அரையாண்டுத் தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டிருந்தன. ஜனவரி 11-ம் தேதி துவங்கும் தேர்வு அந்த மாதம் 27-ம் தேதி வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
இந்த அறிவிப்பை மீறி ஜனவரி 11-ம் தேதிக்கு முன்னரே அரையாண்டு தேர்வை நடத்தினால், தேர்வு நடத்தும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அரசு தேர்வுத் துறைக்கு புதிய இயக்குனராக, வசுந்தரா தேவி நியமிக்கப்பட்டுள்ளார்

தமிழக அரசு தேர்வு துறையின் புதிய இயக்குனராக, வசுந்தரா தேவி நியமிக்கப்பட்டுள்ளார்.அரசுத் தேர்வுத்துறையின் இயக்குனராக பணியாற்றிய தேவராஜன், கடந்த ஜூலையில் ஓய்வுபெற்றதை அடுத்து, காலியாக இருந்த பதவிக்கு, தமிழ்நாடு ஆசிரியர் வாரிய உறுப்பினர் செயலர் வசுந்தரா தேவி நியமிக்கப்பட்டுள்ளார்.இவர் ஏற்கனவே, தேர்வுத்துறை இயக்குனராக பணியாற்றியுள்ளார்.ஆசிரியர் தேர்வு வாரிய இணை இயக்குனராக இருந்த உமா, பதவி உயர்வு பெற்று, ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் ஆகியுள்ளார்.

டிசம்பரில் நடக்க வேண்டிய மறியல் போராட்டம் ஜனவரி 30,31 மற்றும் பிப்ரவரி 1 ஆகிய தேதிகளில் நடத்த ஜாக்டோ முடிவு

இன்று சென்னையில் கூடிய ஜாக்டோ உயர்மட்டக் குழு கூடியது. அதில் கனமழை பாதிப்பு காரணமாக டிசம்பரில் நடக்க வேண்டிய மறியல் போராட்டம் ஜனவரி 30,31 மற்றும் பிப்ரவரி 1 ஆகிய தேதிகளில் நடத்துவென ஒருமனதாக முடிவாற்றப்பட்டுள்ளது. மேலும் ஜனவரி 27, 28 மற்றும் 29 தேதிகளில் ஆசிரியர் சந்திப்பு கூட்டம் நடத்தப்பட வேண்டுமெனவும், அடுத்த ஜாக்டோ உயர்மட்டக் குழு கூட்டம் ஜனவரி 10ல் திருச்சியில் நடத்த முடிவாற்றப்பட்டுள்ளது.

Tuesday 15 December 2015

பொதுத்தேர்வெழுதும் மாணவர்கள் தேர்ச்சியடையும் வகையில் குறைந்தபட்ச பாடத்திட்டப் புத்தகம்: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தேர்ச்சியடையும் வகையில் குறைந்தபட்ச பாடத்திட்டப் புத்தகம் வழங்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை செயலர் சபீதா அறிவித்துள்ளார்.தமிழகத்தில் கடந்த மாதம் பரவலாக பெய்த வடகிழக்கு பருவமழை காரணமாகப் பள்ளி, கல்லூரிகளுக்குத் தொடர்ச்சியாக 33 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது.இந்நிலையில், பள்ளிகளில் சூழ்ந்த வெள்ள நீர் சீர்ப்படுத்தப்பட்ட நிலையில், இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு, செயல்படத் துவங்கியுள்ளன.வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நாளை வழங்குவதற்காக பாடப்புத்தகங்கள், சீருடைகள் தயாராக உள்ளது. வகுப்பறையில் பழுதடைந்த நாற்காலிகள், மேசைகள் மாற்றப்பட்டுள்ளன. பள்ளிகளில் நாளை மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. மேலும், 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களின் நலன் கருதி குறைந்தபட்ச பாடத்திட்ட புத்தகம் வழங்கப் பள்ளி கல்வித்துறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிகல்வித்துறை செயலர் சபீதா அறிவித்துள்ளார்.பொதுத்தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் மாணவர்களுக்கு உளவியல் ரீதியான ஆலோசனைகளும் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்

நவம்பர் மற்றும் டிசம்பர் 2015 சமீபத்திய பலத்த மழை மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தன்னார்வ பங்களிப்பு - அரசு ஊழியர் / ஆசிரியர்கள் மூலம் ஒரு நாட்கள் சம்பளம் பங்களிப்பு - நடைமுறைகள் - ஆணை வெளியீடு

Friday 11 December 2015

வெள்ள பாதிப்பால் தள்ளிப்போகுமா பொதுத்தேர்வும் தேர்தலும்? -தி இந்து நாளிதழ்

கனமழையால் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பினால் தமிழகத்தில் சட்டப் பேரவை தேர்தலும், மாணவர் களுக்கான பொதுத்தேர்வும் தள்ளிப்போகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட மாவட்ட பள்ளி, கல்லூரி களுக்கு 30 நாட்களுக்குமேல் விடுமுறை விடப்பட்டுள்ளது. பருவ மழைக்காலம் டிசம்பர் இறுதி வரை இருப்பதால் இன்னும் விடுமுறை விடுவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஓராண்டில் தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் 220 நாட்களும், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் 200 நாட்களும் கண்டிப்பாக இயங்க வேண்டும். எதிர்பாராதவகையில் விடுமுறை விடப்பட்டால், அது சனிக்கிழமைகளில் ஈடுகட்டப்படும்.
கனமழை காரணமாக கடந்த 7-ந் தேதி தொடங்கவிருந்த அரை யாண்டுத் தேர்வுகள் ஜனவரிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன. ஜனவரி யில் அரையாண்டுத் தேர்வுகளை நடத்தினால், பொதுத்தேர்வுக்கு 2 மாதமே இடைவெளி இருக்கும். எனவே, அரையாண்டுத் தேர்வுக் குப் பதில் நேரடியாக இறுதித் தேர்வை நடத்தலாம் என்ற கருத்தும் பரவலாக எழுந்துள்ளது. இந்த யோசனையை ஆசிரியர்கள் வரவேற்றாலும் 10 மற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற விமர்சனமும் உள்ளது.
இதுகுறித்து அரசு மேல்நிலைப் பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் வே.மணிவாசகன் கூறும்போது, ‘‘மழை விடுமுறையால் பள்ளி வேலை நாட்கள் குறைவாகத்தான் உள்ளன. எனவே, அரையாண்டுத் தேர்வை ரத்துசெய்துவிட்டு நேரடி யாக ஆண்டு இறுதித்தேர்வை நடத்திவிடலாம்’’ என்றார்.

Saturday 5 December 2015

அரசு விடுமுறை நாட்கள் மற்றும் வரையறுக்கப்பட்ட விடுப்பு நாட்கள் 2016

சிறப்பு வகுப்புத் தேர்வுகளில் மாற்றம்

நமது அமைப்பின் சார்பில் முதன்மைக்கல்வி அலுவலரை சந்தித்து தேர்வுகள் சம்பந்தமாக கடந்த ஆண்டு நடந்த குறைப்பாடுகள் சுட்டிக்காட்டப்பட்டது 11 ம் வகுப்புகளுக்கு சிறப்புத்தேர்வுகள் தற்போது தேவை இல்லை என்று கேட்டுக்கொண்டதன்   அடிப்படையில் ஏற்கனவே மதுரை மாவட்டப் பள்ளிகளில் 10,11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு டிசம்பர் 7ம் தேதி முதல் டிசம்பர் 23ம் தேதி வரை சிறப்பு பயிற்சித் தேர்வுகள் நடத்துமாறு அறிவிக்கை அனுப்பப்பட்டிருந்தது. அதில் 11ம் வகுப்புகளுக்கு சிறப்பு பயிற்சித் தேர்வுகள் நடத்தத் தேவையில்லை. அதற்குப் பதிலாக  சிறப்பு பயிற்சி வகுப்புகள்  மட்டும் நடத்தப்பட வேண்டும் என முதன்மைக்கல்வி அலுவலரால் அறிவிக்கப்பட்டுள்ளது

மதுரை மாவட்டத்தில் டிச.7 முதல் சிறப்பு பயிற்சித்தேர்வுகள் முதன்மைக்கல்வி அலுவலர் அறிவிப்பு


Wednesday 2 December 2015

பிளஸ்–2, 10–ம் வகுப்பு பொதுத் தேர்வை முன்கூட்டியே நடத்தும் திட்டம் இல்லை: தேர்வுத்துறை இயக்குனர் தகவல்

வருகிற மே மாதம் தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதனால்பிளஸ்–2, எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுகள் முன் கூட்டியே நடத்தப்படும் என்ற தகவல் பரவி வருகிறது. மேலும் தொடர் மழையால் பள்ளிகள் 20 நாட்களாக செயல்படாமல்இருப்பதால் மாணவர்களின் கல்வியும் பாதிக்கப்பட்டுள்ளது. 
          இந்த சூழ்நிலையில் பொதுத் தேர்வுகள் தள்ளி வைக்கப்படுமா? தேர்தலுக்காக முன் கூட்டியே நடத்தப்படுமா என்பது குறித்து அரசு தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா தேவியிடம் மாலைமலர் நிருபர் கேட்டதற்கு அவர் அளித்த விளக்கம் வருமாறு:–
தமிழகத்தில் ஒருசில மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் பள்ளிகள் திறக்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, தூத்துக்குடி ஆகிய 7 மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.வருகிற 7–ந்தேதி பிளஸ்–2 மாணவர்களுக்கும், 9–ந்தேதி எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கும் அரையாண்டு தேர்வு தொடங்குவதற்கான அட்டவனை தயாரிக்கப்பட்டு அதற்கான வினாத்தாள்கள் அச்சடிக்கப்பட்டு அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட்டு உள்ளன. தீபாவளிக்கு முன்பே வினாத்தாள்கள் பள்ளிக்கல்வி துறையிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டது.மழையால்அரையாண்டு தேர்வு தள்ளி வைப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை தான் முறைசெய்ய வேண்டும். அரசு தேர்வுத்துறை அல்ல.
பிளஸ்–2, 10–ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தேர்வுத்துறை மூலம் நடத்தப்படுகின்றன. பொதுத்தேர்வுகள் அட்டவணைஇந்த மாதத்திற்குள் வெளியிடப்படும். பிளஸ்–2 தேர்வுகள் 11 நாட்கள் நடைபெறும். மாணவர்கள் படித்து தேர்வு எழுத வசதியாக போதிய கால அவகாசம் கொடுக்கப்படும். சட்டசபை தேர்தலுக்காக பொதுத்தேர்வுகள் முன் கூட்டியே நடத்தும் திட்டம் எதுவும் இல்லை. 
ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுவது போல மார்ச் முதல் வாரத்தில் பிளஸ்–2 தேர்வு தொடங்கி இறுதியில் முடிவடையும்.பொது தேர்வுக்கான கால அட்டவணைஅரசின் ஒப்புதல் பெறப்பட்டு வெளியிடப்படும். குறுகிய காலத்தில் தேர்வுகளை நடத்தஇயலாது. அதனால் ஒவ்வொரு தேர்விற்கும் போதிய இடைவெளி இருக்கும். மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில் அரசின் ஆலோசனைப்படி பொதுத்தேர்வுகள் நடைபெறும்.முன்கூட்டியே தேர்வு நடைபெறும் கால அவகாசம் இல்லை என்று மாணவர்கள் குழப்பம் அடைய தேவையில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

Tuesday 1 December 2015

அரையாண்டுத் தேர்வுகள் ஒத்திவைப்பு

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். கன மழை காரணமாக அரையாண்டுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகின்றன. வழக்கமாக பள்ளிகளில் டிசம்பர் மாதத்தில் அரையாண்டுத் தேர்வுகள் நடத்தப்படும்.

ஆனால், தமிழகத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக 3 வாரங்களாக பள்ளிகள் செயல்படாமல் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இதனால், டிசம்பர் 7ம் தேதி முதல் நடக்கவிருந்த அரையாண்டுத் தேர்வுகள் அனைத்தும் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் நடைபெறும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்