news

முதுகலை ஆசிரியர்க்காக போராடக்கூடிய ஒரே அமைப்பு TNHSPGTA ***** நமது சங்கத்தின் உறுப்பினர் ஆகுங்கள் ******சங்க செயல் பாடுகளை தெரிந்துகொள்ள மேல்நிலைக்குரல் படியுங்கள் ******தங்கள் பள்ளி நிகழ்வுகளை அமைப்போடு பகிர்ந்துகொள்ளுங்கள்*****அனைத்து முதுகலை ஆசிரியர்களின் பங்களிப்பே அமைப்பு வளர்ச்சிக்கு உதவும்

Wednesday 27 December 2017

முதன்மைக்கல்வி அலுவலர் மாற்றம்

பள்ளிக்கல்வித்துறையில் 4 இயக்குநர்கள் பணியிட மாற்றம்.

பள்ளிக்கல்வித்துறையில் 4 இயக்குனர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்குனராக கண்ணப்பன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேபோல் மத்திய இடைநிலை கல்வி திட்ட இயக்குனராக ராமேஸ்வர முருகன், தொடக்கக்கல்வி இயக்குனராக கருப்பசாமி,  முறைசாரா கல்வி இயக்குனராக கார்மேகம் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Sunday 17 December 2017






பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல் படுத்த வேண்டும். குறைந்த பட்ச ஊதியமாக ரூ. 18 ஆயிரம் நிர்ணயிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை பழங்காநத்தத்தில் ஜாக்டோ-ஜியோ கிராப் கூட்டமைப்பு சார்பில் இன்று உண்ணாவிரத போராட் டம் நடந்தது. உண்ணாவிரதத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுருளி ராஜ் தலைமை வகித்தார்.
ஒருங்கிணைப்பாளர்கள் சரவணமுருகன், செல்லப்பாண்டியன் , முருகன் முன்னிலை வகித்தனர்.
தமிழ் நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநில முன்னாள் பொது செயலாளர் தேவேந்திரன்,மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள்  பேசினர். இதில் 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 

Tuesday 21 November 2017

அரசு பள்ளிகளில் 1 முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கான புதிய வரைவு பாடத்திட்டம்: முதல்வர் வெளியிட்டார்

 தமிழக அரசு பள்ளிகளில் ஒன்று முதல் பிளஸ் 2 வரை உள்ள வகுப்புகளுக்கான புதிய வரைவு பாடத்திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். தமிழக பள்ளி கல்வி துறையில் கடந்த 12 ஆண்டுகளாக பாடதிட்டம் மாற்றியமைக்கப்படவில்லை. இதையடுத்து புதிய பாடத்திட்டத்தை உருவாக்க முன்னாள் துணைவேந்தர் அனந்தகிருஷ்ணன் தலைமையில் வல்லுநர் குழு ஒன்றை அரசு அமைத்தது. அந்த குழு தமிழகத்தில் 5 இடங்களில் கருத்து கேட்பு கூட்டங்களை நடத்தியது. இதையடுத்து புதிய வரைவு பாடத்திட்டத்தை அக்குழு உருவாக்கி உள்ளது. வரைவு பாடத்திட்டம் 2 புத்தகங்களாக தயாரிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் இந்த புதிய வரைவு பாடதிட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டார். அப்போது, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், பள்ளிக் கல்வித்துறை செயலாளர் உதயசந்திரன், பள்ளிக் கல்வி துறை இயக்குநர் இளங்கோவன், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் அறிவொளி, பாடத்திட்ட தயாரிப்பு குழு தலைவரும் முன்னாள் துணைவேந்தருமான அனந்தகிருஷ்ணன், முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி, மற்றும் அந்த குழுவில் இடம் பெற்றுள்ள கல்வியாளர்கள் உடன் இருந்தனர். இதன் பின்னர் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டி:  பள்ளிக் கல்வியில் 1ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படுகிறது. அதற்காக அமைக்கப்பட்ட குழு கடந்த 4 மாதங்களில் இந்த பணியை முடித்துள்ளது.

 இக்குழுவினர் தமிழகத்தில் மதுரை, கோவை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், சென்னை ஆகிய இடங்களில் கருத்து கேட்பு கூட்டம் நடத்தினர். அங்கு தெரிவித்த கருத்துகளை பரிசீலித்து இப்போது புதிய வரைவு பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வரைவு பாடத்திட்டம் இணைய தளத்தில் வெளியிடப்படும். 15 நாட்களில் பொதுமக்கள், கல்வியாளர்கள் இது குறித்து கருத்து தெரிவிக்கலாம். அதற்கு பிறகு அந்த கருத்துகளை பரிசீலிக்க குழு அமைக்கப்பட்டு கருத்துகள் ஆய்வு செய்யப்படும். அதில் சிறந்த கருத்துகள் ஏற்கப்பட்டு தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் மூலம் சிறு புத்தக வடிவில் புதிய பாடத்திட்டம் உருவாக்கப்படும். அடுத்த  கல்வி ஆண்டில் 1, 2, 6, 9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் அமலுக்கு வரும்.

இந்த புதிய பாடத்திட்டத்தை உருவாக்க 3 ஆண்டுகள் இலக்கு வைக்கப்பட்டது. ஆனால் விரைவாக முடிக்க முடியும். மற்ற வகுப்புகளுக்கு 2019-2020 கல்வி ஆண்டில் அடுத்த பாடத்திட்டம் கொண்டு வரப்படும். மத்திய அரசு கொண்டுவரும் அனைத்து பொதுத் தேர்வுகளையும் மாணவர்கள் சந்திக்கும் வ கையில் பாடத்திட்டத்தில் கருத்துகள் சேர்க்கப்படும். அதை நடத்துகின்ற அளவுக்கு ஆசிரியர்களுக்கு பயிற்சியும் கையேடும் வழங்கப்படும்.  இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். 
புதிய பாடத்திட்டத்தைபார்வையிட கருத்துப்பதிவிட  இந்த இணைய முகவரிக்கு செல்லவும் 
http://tnscert.org/webapp2/tn17syllabus.aspx

Thursday 16 November 2017

JACTTO GEO கிராப் - CPS, இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு - உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு

இன்று காலை 10 மணியளவில் ஜாக்டோ-ஜியோ கிராப் மாநில உயர் மட்ட குழு கூட்டம் சென்னையில் உள்ள நமது மாஸ்டர் மாளிகையில் நடைபெற்றது.
அதில் இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு மற்றும் CPS களைதல் உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகள் பற்றி தீவிரமாக ஆலோசனை நடைபெற்று 6 முக்கிய தீர்மானங்களும், போராட்ட அறிவிப்புகளும் அறிவிக்கப்பட்டுள்ளது..

💪போராட்ட முடிவுகள்.
👉18.11.2017 ஜாக்டோ ஜியோ கிராப் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் 

👉 02.12.2017 மாவட்டத் தலைநகரங்களில் கோரிக்கை விளக்க கூட்டம்

👉 07.12.2017 மாவட்டத் தலைநகரங்களில் அடையாள உண்ணாவிரதம் 
👉 06.01.2018 சென்னையில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் 
உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன

Thursday 9 November 2017

மேல்நிலை முதலாம் ஆண்டு செய்முறைதேர்வு நடத்தத் அரசாணைகள்

பள்ளிக்கல்வி இணை இயக்குனர்கள் மாற்றம்

கள்ளர் சீரமைப்பு துறை இணை இயக்குனராக இருந்த குப்புசாமி, பள்ளிக்கல்வி பணியாளர் பிரிவு இணை இயக்குனராகவும், பள்ளிக்கல்வி, பணியாளர் பிரிவு இணை இயக்குனராக இருந்த சசிகலா, ஆசிரியர் தேர்வு வாரிய கூடுதல் உறுப்பினராகவும், ஆர்.எம்.எஸ்.ஏ. திட்ட இயக்கக இணை இயக்குனராக இருந்த குமார், கள்ளர் சீரமைப்பு துறை இணை இயக்குனராகவும்,  எஸ்.எஸ்.ஏ இயக்கக இணை இயக்குனராக இருந்த ஸ்ரீதேவி, தொடக்க கல்வி இயக்ககம், நிர்வாக பிரிவு இணை இயக்குனராகவும், ஆசிரியர் தேர்வு வாரிய கூடுதல் உறுப்பினராக இருந்த ஏ.எஸ்.ராதாகிருஷ்ணன், எஸ்.எஸ்.ஏ., இயக்கக இணை இயக்குனராகவும், தொடக்க கல்வி இயக்ககம், நிர்வாக பிரிவு இணை இயக்குனராக இருந்த நாகராஜ் முருகன், ஆர்.எம்.எஸ்.ஏ., திட்ட இயக்கக இணை இயக்குனராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Saturday 4 November 2017

 இன்று மதுரை மாவட்ட TNHSPGTA சார்பில் மாநில பொதுச்செயலாளர் பிரபாகரன் அவர்களின் தலைமையில் முதன்மைக்கல்வி அலுவலரை சந்தித்து மாவட்ட உள்ள பிரச்சினைகள் பற்றி 35 நிமிடம் பேசினோம்
1.தனியார்பள்ளிகளில் மாதம் முதல் தேதியில் சம்பளம் கிடைப்பதில்லை.பள்ளிகளில் சம்பள பில் தாமதமாக மாவட்டக்கல்வி அலுவலகத்தில் சமர்பிக்கப்படுவதும், சரியான நேரத்தில் சமர்பிக்கப்பட்டும் அலுவலகத்தில் தாமதப்படுவதும் விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது.  இனி பள்ளிகளில் ஒவ்வொரு மாதமும் 20 தேதிக்குள் பில் அனுப்பப்பட்டால் மாதம் முதல்தேதியில் சம்பளம் கிடைக்க உறுதி அளித்தார். இதில் ஏதேனும் குறைபாடுகள் வந்தால் எமது அமைப்பு கவனத்திற்கு கொண்டுவரவும்.
2. பதினொன்றாம் வகுப்புக்கு syllabus வருமுன் II இடைத்தேர்வு வினாத்தாள்  தயாரிக்கப்பட்டுவிட்டதால் syllabus ல் மாற்றம் உள்ளது.syllabus பள்ளிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டது. திங்கள்கிழமைக்குள் பள்ளிகளுக்கு அனுப்பப்படும் என உறுதி அளித்தார்.
3.பதினொன்றாம் வகுப்பு செய்முறைத்தேர்வுப் பற்றி விளக்கம் கேட்டபோது இணை இயக்குனர் தெரிவித்துள்ளபடி அடுத்தாண்டு 12வகுப்புடன் சேர்த்து நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.
4. பணிவரன்முறை ஆணை கிடைக்காமல் தகுதிகாண் பருவம் முடிக்க முடியாதவர்கள் ஆணைகளை CEO அலுவலகத்தில் கேட்டுப் பெற்றுக்கொள்ளலாம். இது சம்மந்தமாக பாதிப்பு இருந்தால்  எமது அமைப்பிடம் தெரிவிக்கவும்.
5. போட்டித்  தேர்வு சம்மந்தமாக பயிற்சி வகுப்புகள் அடுத்த மாதம் துவங்க உள்ளது. நமது அமைப்பு மாணவர்களுக்கு  சிறப்பாக கொண்டுசெல்ல உதவி செய்யும் என உறுதி அளிக்கப்பட்டது.


புதிய ஊதியம் சார்ந்து E pay roll பெறப்பட்டு விட்டது. Employe code (gpf )or (cps) கொடுத்தால் எல்லாம் வரும் அதில் நீங்கள் தயாராக உள்ள grade pay கொடுத்து option date கொடுத்தால் புதிய ஊதியம் வரும்.

Tuesday 31 October 2017

Monday 30 October 2017

நமது தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மதுரை மாவட்ட புதிய பொறுப்பாளர்கள்




நமது தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சார்பாக மதுரை அமெரிக்கன் மேல்நிலைப் பள்ளியில் 29.10.17 அன்று நடைபெற்ற நகர, வட்டார மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் தேர்தலில் விருதுநகர் மாவட்டத் தலைவர் திரு.வேல்முருகன் அவர்கள் தேர்தல் அலுவலராகவும், மதிப்பிற்குரிய மாநில பொதுச் செயலாளர் திரு.இரா.பிரபாகரன் அவர்கள் முன்னிலையில் இனிதே தேர்தல் நடந்து முடிந்தது. தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய பொறுப்பாளர்களின் பெயர்கள்
மாவட்டத் தலைவர் திரு.சரவணமுருகன், 

துணை மாவட்டத் தலைவர்கள் திரு.ரவிச்சந்திரன், திரு.முனைவர்.நவநீதகிருஷ்ணன், 
மாவட்டச் செயலாளர் திரு.முனைவர்.சதீஸ்குமார்,
இணைச் செயலாளர் பாலகிருஷ்ணன்
 மாவட்ட பொருளாளர் திரு.சோலைராஜா, 
மாவட்ட அமைப்புச் செயலாளர் திரு.சம்பத், 
மாவட்ட தலைமையிடச் செயலாளர திரு.சரவணன். 
மாவட்ட மகளிரணிச் செயலாளர்  திருமதி. மேரி கரோலின், 
மாவட்ட மகளிரணிச் இணைச் செயலாளார்கள் திருமதி.சந்திரகலா 
மற்றும் திருமதி. விஜயலெட்சுமி, 
மாவட்டதனியார் பள்ளி செயலர் முகம்மதுரபி ,
மாவட்ட தணிக்கையாளர் தமிழ்குமரன் 
மதுரை கல்வி மாவட்டத் தலைவர் திரு.செந்தில் குமார், 
உசிலை கல்வி மாவட்டத் தலைவர் திரு.பாண்டியன், 
மேலூர் கல்வி மாவட்டத் தலைவர் திரு.துரைராஜ், 
மேலூர் கல்வி மாவட்டச் செயலாளர் திரு.பூமிநாதன்  
மற்றும் கல்வி மாவட்ட பொறுப்பாளர்கள், மாநில பொதுக்குழு, மாநில செயற்குழு உறுப்பினர்கள். தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் 

ஏழாவது ஊதியக்குழு - அக்டோபர் மாத புதிய ஊதிய நிலுவைத் தொகையை 20.11.17 க்குள் பெற்று வழங்க வேண்டும். பிறகு நவம்பர் மாத ஊதியப் பட்டியல் சமர்பிக்கப்பட வேண்டும். - தமிழக நிதித்துறை செயலாளரின் கடிதம். (நாள்: 30.10.2017)



Sunday 15 October 2017

ஜாக்டோ ஜியோ கிராஃப் கூட்டமைப்பு முதல்வருடன் சந்திப்பு



ஏழாவது ஊதியக் குழு - ஊதிய நிர்ணயம் செய்யும் வழிமுறைகள்

The Tamilnadu Revised Pay Rules - 2017 ல் ஊதிய நிர்ணயம் செய்ய 1.1.2016 ன் அடிப்படை ஊதியம் + தர ஊதியத்தை 2.57 ஆல் பெருக்க வேண்டும். இதில் இடைநிலை ஆசிரியர்களில் PP 750 பெறுவோர் தனி ஊதியத்தையும் சேர்த்து 2.57 ஆல் பெருக்கக் கூடாது. பக்கம் 9 - ல் 3 (1) ல்
existing Basic Pay பற்றி விளக்கப்பட்டுள்ளது. அதில் does not include any other type of pay like Spl pay , personal pay etc என உள்ளது.எனவே 2.57 என்ற multiplication factor ஆல் பெருக்கும் போது Pay + Grade Pay மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

*அடுத்தாக Pay matrix*
2.57 ஆல் பெருக்கி வரும் தொகையை Pay matrix table - ல் அவரவர் Grade Pay level உள்ள கட்டத்தில் அதற்கு இணையான தொகை அல்லது அடுத்த கூடுதலான ( either equal to or next higher) தொகையை நிர்ணயம் செய்து கொள்ள வேண்டும். இதுவே 1.1.16 - ல் ஒருவரின் புதிய அடிப்படை ஊதியம் ஆகும்.

*Increment கணக்கிடுதல்*
அடுத்ததாக Increment கணக்கிடுதலில் புதிய அடிப்படை ஊதியத்தை 3% ஆல் பெருக்கி increment கணக்கிடக் கூடாது. *Increment கணக்கிடும் போது Pay matrix table - தான் பார்க்க வேண்டும்.* பக்கம் 14 - ல் 9 Increments in pay matrix என்ற தலைப்பில் *The increment shall be effected by moving vertically down along the applicable level by one cell from the existing cell of pay in the Pay matrix.*
(Illustration - III - See schedule - V) என உள்ளது.

*அதாவது Pay matrix - ல் நிர்ணயிக்கப்பட்ட ஊதியத்தின் கீழ் one cell வருவது ஒரு increment ஆக இருக்கும் என்பதாக உள்ளது.* (Vertically down along the applicable level by one cell).
எனவே increment - க்கும் Pay matrix இவ்வாறாக பார்த்து increment தொகையுடன் கூடிய அடிப்படை ஊதியத்தை நிர்ணயித்துக் கொள்ள வேண்டும். இவ்வாறாக அடுத்த increment - க்கு அடுத்த cell - க்கு கீழே வந்து அதனை increment உடன் கூடிய ஊதியமாக கொள்ள வேண்டும்.

*Increment தொகை 3% தொகையளவு இருந்தாலும் ஆறாவது ஊதிய குழு போல 3% ஆல் வகுத்து கணக்கிட தற்போதைய குழுவில் விதிகளில் இடமில்லை, pay matrix தான் increment - க்கும் பார்க்க வேண்டும்.*


*தேர்வுநிலை/சிறப்புநிலை கணக்கிடல்*
தேர்வுநிலை/சிறப்புநிலைகளில் 3% + 3% என எங்கும் குறிப்பிடப்படவில்லை. *பக்கம் 3-ல் 10- ல் இவைகளை குறிப்பிடும் போது two increment என்றே உள்ளது.* எனவே increment கணக்கிட கொடுக்கப்பட்டுள்ள விளக்கங்களின்படியே தே.நி/சி.நி கணக்கிடும்போது two increments - க்காக pay matrix - ல் two cell கீழே வந்து ஊதிய நிர்ணயம் செய்து கொள்ள வேண்டும்.
*Personal Pay*
தனி ஊதியமான 750 - 2.57 ஆல் பெருக்கி தற்போது தனி ஊதியம் 2000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பக்கம் 10 - ல் 3(VIII) - ல் basic pay in the revised pay structure means எனக் குறிப்பிட்டு basic pay என்பது Pay matrix - ல் நிர்ணயிக்கப்பட்ட தொகை எனக் குறிப்பிட்டு அதில் special pay/ Personal pay etc சேராது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. *எனவே 1.1.16 - ல் 2.57 ஆல் பெருக்கி வரும் தொகையுடன் தனி ஊதியம் 2000 - த்தை கூட்டி Pay matrix - ல் பார்க்க கூடாது.

ஏழாவது ஊதியக் குழு - ஊதிய நிர்ணயம் செய்ய விருப்பம் தெரிவிக்க கீழ்கண்ட மூன்று வழிமுறைகளை பின்பற்றலாம்

1. 01.01.2016 அல்லது

2. 01.01.2016 க்கு பிறகு ஆண்டு ஊதிய உயர்வு தேதியில் ஊதிய நிர்ணயம்
செய்து கொள்ளலாம் அல்லது தற்போது பதவி உயர்வு பெற வாய்ப்பு உள்ளது எனில் பதவி உயர்வு பெற்றுக் கொண்டு அதே தேதியில் ஊதிய நிர்ணயம் செய்து கொள்ளலாம். அல்லது

3. 01.01.2016 முதல் 30.09.2017 முடிய இடைப்பட்ட காலத்தில் பதவி உயர்வு பெற்று இருந்தால், பதவி உயர்வு பெற்ற தேதியில் ஊதிய நிர்ணயம் செய்து கொள்ள விருப்பம் தெரிவிக்கலாம்.


Source : G.O.Ms.No.303, Dated : 11.10.2017 - point No. 8 (a,b,c).

Wednesday 11 October 2017

சம்பளம் தொடர்பாக அரசு செய்தி வெளியிடு

அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு எவ்வளவு?

அலுவலர்கள் குழு 2017-ன் பரிந்துரைகளை ஏற்று ஊதிய உயர்வு வழங்க
தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

'மத்திய  ஊதியக் குழு  திருத்திய ஊதிய விகிதங்களை செயல்படுத்தும் போதெல்லாம், தமிழ்நாடு அரசும் அதே ஊதிய விகிதங்களை மாநில அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அறிவித்து வந்துள்ளது. அதேபோல், ஒவ்வொரு முறையும் மத்திய அரசு அகவிலைப்படியை உயர்த்தும்போது, உடனுக்குடன் மாநில அரசும் உயர்த்திய அகவிலைப்படியை  வழங்கி வருகிறது. ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைத்துள்ள ஊதிய விகிதங்களின் அடிப்படையில், மாநில அரசின் அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி நிறுவனங்களில் பணியாற்றும் அலுவலர்களுக்கு ஊதிய விகிதத்தை உயர்த்தி வழங்குவது குறித்து தக்க பரிந்துரைகளை தமிழ்நாடு அரசுக்கு அளித்திடஅலுவலர் குழு’ 2017- அமைத்தது. அதன்படி, அலுவலர் குழு ஆய்வுகள் மேற்கொண்டு தனது பரிந்துரைகளை 27.9.2017 அன்று தமிழ்நாடு அரசுக்கு சமர்ப்பித்தது. இதுவரை தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட அலுவலர் குழுக்கள் எடுத்துக்கொண்ட கால அளவை விட, இம்முறை அமைத்த அலுவலர் குழுதான் மிகக் குறைந்த கால அவகாசத்தில் அறிக்கை அளித்து, ஊதிய விகிதங்களில் மாற்றங்களை விரைவாக கொண்டு வர வழி வகுத்துள்ளது.

இப்பரிந்துரைகளை தமிழ்நாடு அரசு விரிவாக ஆய்வுசெய்து, இன்று எனது தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அதை முழுமையாக ஏற்றுக்கொண்டு, அவற்றை  செயல்படுத்துவதற்கான அரசாணைகளை உடனடியாக பிறப்பிக்க உத்தரவிட்டுள்ளேன்தமிழ்நாடு அரசு, மத்திய அரசு பின்பற்றிய அதே 2.57 என்ற பெருக்கல் காரணியால், அனைத்து அரசு அலுவலர், ஆசிரியர்களின் தற்போதைய ஊதியத்தை பெருக்கி, அவற்றை உயர்த்தி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது  என தெரிவித்துக்கொள்கிறேன்.

மாநிலத்தின் நிதிநிலையையும், அதே சமயம் அரசின் திட்டங்களையும் பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்கும் அவசியத்தை கருத்தில் கொண்டு, இந்த புதிய ஊதிய உயர்வை 1.1.2016 முதல் கருத்தியலாகவும், 1.10.2017 முதல் பணப்பயனுடனும் அமல்படுத்த ஆணையிட்டுள்ளேன்இதன்படி, தற்போது  உள்ள குறைந்தபட்ச ஊதியம் ரூ.6,100  மற்றும் அதிகபட்ச ஊதியம்  ரூ.77,000  என்பது உயர்த்தப்பட்டு, குறைந்தபட்ச ஊதியம் ரூ.15,700 மற்றும்  அதிகபட்ச ஊதியம் ரூ.2,25,000 எனவும்  நிர்ணயிக்கப்பட்டுள்ளதுமேலும், முந்தைய ஊதியக்குழுக்களால் தமிழ்நாடு அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுவாடகைப்படி போன்ற பல்வேறு படிகளுக்கான  உயர்வைவிட இம்முறை அதிகமான உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, அனைத்து தமிழ்நாடு அரசு ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும், மத்திய அரசு ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதிய உயர்வுக்கு கடைபிடித்த அதே 2.57 என்ற பெருக்கல் காரணியைப் பின்பற்றி ஓய்வு ஊதிய உயர்வை வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதனால், புதிய உயர்த்தப்பட்ட ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் குறைந்தபட்சம் ரூ.7,850 என்றும், அதிகபட்ச ஓய்வூதியம்குடும்ப ஓய்வூதியம் முறையே ரூ.1,12,500 மற்றும் ரூ.67,500 என்றும் உயர்த்தி வழங்கப்படும். மேலும், ஓய்வு பெறும்போது வழங்கப்படும் பணிக்கொடைக்கான அதிகப்பட்ச வரம்பு ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

சத்துணவுப் பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், கிராம பஞ்சாயத்துச் செயலர் மற்றும் அனைத்து துறைகளில் பணியாற்றும் சிறப்பு காலமுறை ஊதியம் பெற்றுவரும் பணியாளர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் 2.57 என்ற காரணியால் பெருக்கி, திருத்திய ஊதியம் நிர்ணயிக்கப்பட்டு அவர்களின்  குறைந்தபட்ச  ஊதியம் ரூ.3000 ஆகவும், அதிகபட்ச ஊதியம் ரூ.11,100 ஆகவும் திருத்தியமைக்கப்பட்டுள்ளது என்றும்  தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ்நாடு அரசு தொகுப்பூதியம்நிலையான ஊதியம் மற்றும் மதிப்பூதியத்தில் உள்ள பணியாளர்களின் நலன்களைக் கருத்தில்கொண்டு அவர்களுக்கு குறைந்தபட்சமாக 30 சதவிகித ஊதிய உயர்வு வழங்கப்பட்டு உள்ளதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த முடிவுகளின் அடிப்படையில்அரசு அலுவலர் மற்றும் ஆசிரியர்களுக்கு ஆண்டொன்றுக்கு ரூ.8,016 கோடி கூடுதல் ஊதியமும், ஓய்வு பெற்றோர் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கு ரூ.6,703 கோடி கூடுதல் ஓய்வூதியமும் வழங்கப்படும்இதனால் ஆண்டொன்றுக்கு ஏற்படும் மொத்த கூடுதல் செலவான ரூ.14,719 கோடியை தமிழ்நாடு  அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் அவர் தம் குடும்பத்தினரின் நலன் கருதி மாநில அரசே முழுமையாக ஏற்றுக்கொண்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.


  இவ்வறிவிப்புகள் மூலம் சுமார் பன்னிரண்டு  லட்சம் அரசு அலுவலர்களும், ஆசிரியர்களும், சுமார் ஏழு லட்சம் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களும் பலனடைவார்கள் என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றேன்' என்று தெரிவித்துள்ளார்.