news

முதுகலை ஆசிரியர்க்காக போராடக்கூடிய ஒரே அமைப்பு TNHSPGTA ***** நமது சங்கத்தின் உறுப்பினர் ஆகுங்கள் ******சங்க செயல் பாடுகளை தெரிந்துகொள்ள மேல்நிலைக்குரல் படியுங்கள் ******தங்கள் பள்ளி நிகழ்வுகளை அமைப்போடு பகிர்ந்துகொள்ளுங்கள்*****அனைத்து முதுகலை ஆசிரியர்களின் பங்களிப்பே அமைப்பு வளர்ச்சிக்கு உதவும்

Tuesday 29 September 2015

கல்வித்துறை பணிகளுக்கு தனி கட்டடங்கள் தேவை: ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை

கல்வித் துறை பணிகளுக்கு தனி கட்டடங்கள் தேவை என்று மதுரையில் உள்ள ஆசிரியர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வெளியூர்களில் இருந்து மதுரைக்கு முக்கிய கூட்டங்களுக்கு வரும் ஆசிரியர்கள் தங்குவதற்கு ஏதுவாக மதுரையில் நடப்பாண்டில் ஆசிரியர் இல்லங்கள் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்தக் குடியிருப்புகளில் ஆசிரியர் இல்லங்கள் மட்டுமல்லாமல் கல்வித் துறையின் பல்வேறு பணிகளுக்கு ஏதுவான வகையில் கட்டடங்கள் அமைக்கப்பட வேண்டும் என்று ஆசிரியர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாவட்டத் தலைவர் பெ.சரவண முருகன் கூறியதாவது: சென்னை, கோவை உள்ளிட்ட சில மாவட்டங்களில் மட்டுமே ஆசிரியர் இல்லங்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், மதுரையிலும் ஆசிரியர் இல்லங்கள் அமைக்கப்படும் என அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. தற்போது மதுரையில் நடைபெறும் பள்ளிக் கல்வித்துறையின் முக்கியமான கூட்டங்கள் அனைத்தும் தனியார் பள்ளி, கல்லூரிகளின் கட்டடங்களில் நடைபெறுகின்றன. சில நேரங்களில் அரங்குகள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டு, முக்கிய கூட்டங்கள் நடத்துவதிலும் தாமதம் ஏற்படுகிறது.
இதைக் கருத்தில் கொண்டு கட்டப்படும் ஆசிரியர் இல்லங்களோடு சேர்ந்து அரசு பள்ளி ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்துவதற்கு தனி மையங்கள், பள்ளிக் கல்வித் துறை கூட்டங்கள் நடத்துவதற்கு அரங்குகள் மற்றும் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க ஏதுவான வகையில் கருத்தரங்க கூடம் அமைக்கப்பட்டால் அது மிகவும் உதவியாக இருக்கும் என்றார்.

மதிப்புறு முனைவர் பட்டம் பெற்ற மாநிலத் தலைவருக்கு பாராட்டு விழா சிறப்பாக நடைபெற்றது















Thursday 24 September 2015

இந்த நிதியாண்டில் (2015-16) மதுரை மாவட்டத்தில் புதிதாக ஆசிரியர் இல்லம் அமைக்கப்படும்-முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

தமிழகத்தில் இந்த ஆண்டு புதிதாக 39 அரசுத் தொடக்கப் பள்ளிகள் தொடங்கப்படும் என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். சட்டப் பேரவையில்  இதுதொடர்பாக அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

          கடந்த 4 ஆண்டுகளில் 107 தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டதோடு, 182 புதிய தொடக்கப் பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு 5 அரசு தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்.

தொடக்கப் பள்ளிகள் இல்லை எனக் கண்டறியப்பட்டுள்ள 39 குடியிருப்புப் பகுதிகளில் புதிய தொடக்கப் பள்ளிகள் அமைக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

நடுநிலைப் பள்ளிக்கு 3 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வீதம் 15 பட்டதாரி ஆசிரியர்கள், புதிய தொடக்கப் பள்ளிகளுக்கு ஒரு தலைமை ஆசிரியர், இடைநிலை ஆசிரியர் என 78 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். இந்தப் பள்ளிகளுக்குத் தேவைப்படும் உள்கட்டமைப்பு வசதிகளும் செய்து தரப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இதனால், அரசுக்கு கூடுதலாக ரூ.11 கோடியே 67 லட்சம் செலவு ஏற்படும்.

புதிதாக 770 கூடுதல் வகுப்பறைகள்: கடந்த 4 ஆண்டுகளில் ரூ.2,798 கோடியில் பள்ளிகளுக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 

இந்த ஆண்டு உள்கட்டமைப்பு வசதிகள் தேவைப்படும் அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் 770 கூடுதல் வகுப்பறைகள் கட்டப்படும். 

மேலும் 287 பள்ளிகளின் வகுப்பறைகள் பழுது சரிபார்க்கப்படும். இதனால் அரசுக்கு ரூ.56 கோடியே 53 லட்சம் செலவு ஏற்படும்.

பெரம்பலூர், கோவையில் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம்: ஆசிரியர் கல்வி பயில விரும்பும் மாணவர்களின் நலனைக் கருத்தில்கொண்டு, பெரம்பலூர், கோவை மாவட்டங்களில் புதிய மாவட்ட ஆசிரியர் கல்வி, பயிற்சி நிறுவனம் தொடங்கப்படும்.

புதிதாக உருவாக்கப்பட உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி, பயிற்சி நிறுவனங்கள் ஒவ்வொன்றிற்கும் தலா 10 ஆசிரியர் சார்ந்த பணியிடங்களும், 5 ஆசிரியர் அல்லாத பணியிடங்களும் என 30 பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும்.

ஆதிதிராவிடர், பழங்குடியினர் அதிகமாக உள்ள கடலூர், காஞ்சிபுரம், நாகப்பட்டினம், நீலகிரி, பெரம்பலூர், விழுப்புரம், திருவாரூர் ஆகிய 7 மாவட்டங்களில் உள்ளவர்கள் தொடக்கக் கல்வி பட்டயப் பயிற்சி பெறும் வகையில் புதிதாக ஒன்றிய ஆசிரியர் கல்வி, பயிற்சி நிறுவனங்கள் தொடங்கப்படும். 

இந்த நிறுவனங்களில் 49 ஆசிரியர் சார்ந்த பணியிடங்கள், 56 ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் என மொத்தம் 105 பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும். இதனால் அரசுக்கு ரூ.21 கோடியே 71 லட்சம் கூடுதல் செலவு ஏற்படும்.

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் பார்வையற்ற மாணவர்களுக்கு பிரெயில் பாடப் புத்தகங்களும், பார்வை குறைபாடு உள்ள மாணவர்களுக்கு உரு பெருக்கப்பட்ட அச்சு பாடப்புத்தகங்களும் வழங்கப்படும்.

கல்வியில் பின்தங்கிய ஒன்றியங்கள், சிறப்பு கவனம் செலுத்தப்படும் மாவட்டங்களில் தனி விழிப்புணர்வும், பாலினம் சார்ந்த விழிப்புணர்வும் ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதற்காக ரூ.9 கோடி செலவிடப்படும்.

இந்த நிதியாண்டில் (2015-16) கோவை, மதுரை மாவட்டங்களில் புதிதாக 2 ஆசிரியர் இல்லங்கள் அமைக்கப்படும். இதனால், அரசுக்கு ரூ.6 கோடி கூடுதல் செலவு ஏற்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

நூறு சதவிதம் பெற்ற அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு அக் முதல் வாரத்தில் கலெக்டர் சுப்ரமணியன் தலைமையில் பாராட்டு விழா மதுரை முதன்மைக்கல்வி அதிகாரி அறிவிப்பு


மதுரையில் புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட கல்வி அதிகாரிகள் பதவியேற்ப்பு


அக்.,8ல் நடக்கும் வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்க, முதல் நாளே அனைத்து பள்ளிகளை பூட்டி விட்டு, சாவிகளை முதன்மை கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்,' என, மதுரையில் நடந்த 'ஜாக்டோ' வேலைநிறுத்த ஆயத்த கூட்டத்தில் முடிவு

மதுரை மாவட்டத்தில், அக்.,8ல் நடக்கும் வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்க, முதல் நாளே அனைத்து பள்ளிகளை பூட்டி விட்டு, சாவிகளை முதன்மை கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்,' என, மதுரையில் நேற்று நடந்த 'ஜாக்டோ' வேலைநிறுத்த ஆயத்த கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
  கூட்டத்தில், 'மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான சம்பளம், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உட்பட 15 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி நடக்கும் வேலைநிறுத்தத்தில், தொடக்க முதல் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் வரை அனைவரும் கட்டாயம் பங்கேற்க வேண்டும். அக்.,7 மாலையே பள்ளிகளை பூட்டி சாவிகளை, முதன்மை கல்வி அலுவலகத்தில், தலைமையாசிரியர்கள் ஒப்படைக்க வேண்டும்,' என வலியுறுத்தப்பட்டது.
கூட்டத்தில் ஜாக்டோவின் 17 ஆசிரியர் அமைப்பு நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Monday 7 September 2015

முனைவர் பட்டம் பெற்ற நம் மாநிலத் தலைவர் வே.மணிவாசகன் அவர்களுக்கு அனைத்து மாவட்ட அமைப்பு சார்பாக பாராட்டு விழா கூட்டம் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் 26:09:15 சனிக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற உள்ளது.

முனைவர் பட்டம் பெற்ற நம் மாநிலத் தலைவர் அவர்களுக்கு அனைத்து மாவட்ட அமைப்பு சார்பாக பாராட்டு விழா கூட்டம்  கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் 26:09:15 சனிக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் சீரிய முறையில் நடைபெற்று வருகின்றன. எனவே அனைத்து நிலை  மாநில, மாவட்ட, பொறுப்பாளர்கள், நண்பர்கள்,  முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் இச்செய்தியையே அழைப்பாகக் கொண்டு பாராட்டு விழாக் கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என பணிவன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது

Tuesday 1 September 2015

377 ஆசிரியர்கள்ராதாகிருஷ்ணன் விருதுக்கு தேர்வு

மறைந்த முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான, வரும், 5ம் தேதி, ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.
இந்த தினத்தில், ஒவ்வொரு ஆண்டும் சிறந்த ஆசிரியர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு, டாக்டர் ராதாகிருஷ்ணன், நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டு, தமிழகம் முழுவதுமுள்ள பல பள்ளிகளில் பணியாற்றும், 377 ஆசிரியர்கள், ராதாகிருஷ்ணன் விருதுக்கு தேர்வாகியுள்ளனர். தொடக்கப் பள்ளி, 201; உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி, 134; மெட்ரிக், 30; ஆங்கிலோ இந்தியன் பள்ளி, இரண்டு; கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன ஆசிரியர்கள், 10 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

40 தலைமை ஆசிரியர்களுக்கு DEO பதவி உயர்வு செப்.7 முதல் 19 வரை பயிற்சி

தமிழகத்தில் அரசு பள்ளி தலைமையாசிரியர்கள் 40 பேர் மாவட்ட கல்வி அதிகாரிகளாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.தமிழகத்தின் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் 20 பேர், மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் 20 என 40 பேர் மாவட்ட கல்வி அதிகாரி மற்றும் அதற்கு இணையான மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி, மெட்ரிக்.,பள்ளி ஆய்வாளர் பணியிடங்களுக்கு பதவி உயர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

இவர்களுக்கு செப்.,7 முதல் செப்., 19 வரை சென்னை மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் அவர்களுக்கான பயிற்சியளிக்கப்படுகிறது.கல்வித்துறை உயரதிகாரி ஒருவர் கூறுகையில்,“மாவட்ட கல்வி அதிகாரிக்கான பொறுப்புகள், விதிகள், நிர்வாகம் குறித்து முழுமையாக பயிற்சியளிக்கப்பட்டு அவர்களுக்கு பணியிடங்கள் ஒதுக்கப்படும்,”என்றார்

அக்.8ல் ஆசிரியர்கள் வேலை நிறுத்தம்; ஜாக்டோ கூட்டத்தில் முடிவு

ஜாக்டோ மாநிலஉயர்மட்டக்குழு கூட்டம் 30.08.2015 காலை 10 மணியளவில் திருச்சியில் திருச்சி சேவா சங்க மகளிர்மேல்நிலைப்பள்ளியில் கூடியது.கூட்டத்திற்கு சுழற்சி முறையில், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற பொதுச்செயலர் பாவலர் திருமிகு.மீனாட்சி சுந்தரம் அவர்களும்,தமிழ்நாடு உயர்நிலை,மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்க பொதுசெயலர்.திருமிகு எத்திராஜ் அவர்களும் கூட்டுத் தலைமை யேற்று நடத்தினர்.
ஜாக்டோவில் உள்ள 24 சங்கங்களில் 19 சங்கத்தை  சார்ந்த   மாநிலப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர் .இக்கூட்டத்தில் நமது அமைப்பின்  சார்பில் மாநிலப் பொதுச் செயலர் திரு.இரா.பிரபாகரன்  அவர்கள் கலந்து கொண்டார்.
கூட்ட முடிவுகள்
ஜாக்டோவின் 15 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி அக்டோபர் 8 ம் தேதியன்று அனைத்துபள்ளிகளையும் மூடி ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில்ஈடுபடுவது என்றும் அதில் அனைத்து ஆசிரியர்களையும் பங்கேற்க செய்வது என்றும் முடிவாற்றியது
மேலும் அன்றைய தினம் காலை 11.00 மணிக்கு மாவட்டத்தலைநகரில்,ஆட்சியர் அலுவலகம் முன்பு,அல்லது மாவட்ட ஜாக்டோ முடிவெடுக்கும் இடத்தின் முன்பு திரளான ஆசிரியர்கள் அனைவரும் கூடிஒருமணி நேரம் கோரிக்கை முழக்க ஆர்பாட்டம் நடத்துவது என்றும் முடிவாற்றியது.
இது சார்பாக மாவட்டதலைநகரில் ஏற்கனவே செயலாற்றி வருகின்ற மாவட்டஜாக்டோ தொடர்பாளர்கள் தலைமையில் 20.09.2015 ஞாயிறு அன்று ஆயத்தக்கூட்டம் கூட்டுவது என்றும் அதில் அனைத்து இயக்கம் சார்ந்த,மாநில, ,மாவட்ட வட்டம் மற்றும் ,வட்டார /நகர பொறுப்பாளர்கள் கலந்துகொண்டு ஒருநாள் வேலை நிறுத்தம் வெற்றிபெற ஆக்கபூர்வமான திட்டங்களை வகுக்க வேண்டுமெனவும் முடிவாற்றியது.
20.09.2015 முன்பாக மாவட்ட ஜாக்டோ உயர்மட்டக்குழு க்கூட்டம் மாவட்ட ஜாக்டோ தொடர்பாளர்கள் மூலம் கூட்டப்பட்டு,அதில் மாநில ஜாக்டோ உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டு ஜாக்டோவின் உயர்மட்டக்குழுக்கூட்டமுடிவுகள் பற்றிய விளக்க உரை நிகழ்த்திஆயத்தப்படுத்துவது எனவும் முடிவாற்றப்பட்டது
அக்டோபர்-8 அடையாள வேலை நிறுத்தபோராட்டத்திற்கான சுவரொட்டிகள் மாநில ஜாக்டோ அமைப்பின் மூலமாக அச்சிட்டுவழங்குவது என்றும்,துண்டறிக்கைகள் மாநில அமைப்பின் வழிகாட்டுதலின் அடிப்படையில்.மாவட்ட ஜாக்டோஅமைப்பு அச்சிட்டு ஆசிரியர்களிடம் வழங்குவதுஎனவும் முடிவாற்றப்பட்டது.
ஆசிரியர்கள் அனைவரும் ஜாக்டோவின் அனைத்து செயல்பாடுகளுக்கும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது

கலந்தாய்வு நிறைவு: 6,402 ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல்

இந்த ஆண்டு பதவி உயர்வு, பணியிட மாறுதல் கலந்தாய்வு மூலம், பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களில் 6,402 பேர் பணியிடமாறுதல் பெற்றுள்ளனர்.
 இதில் 2,307 பட்டதாரி ஆசிரியர்கள், பணி நிரவல் மூலம் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.
 பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், சிறப்பு ஆசிரியர்களுக்கான இடமாறுதல், பதவி உயர்வுக் கலந்தாய்வு ஆகியவை ஆகஸ்ட் 12-ஆம் தேதி தொடங்கின.
 இந்தக் கலந்தாய்வு பட்டதாரி ஆசிரியர் பணி நிரவலோடு ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது. இந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் உபரியாக இருந்த பட்டதாரி ஆசிரியர்களில் 2,307 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
 இடமாறுதல் பெற்ற ஆசிரியர்களின் எண்ணிக்கை விவரம்:
 * மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் (மாவட்டத்துக்குள்) - 265, மாவட்டம் விட்டு மாவட்டம் - 130
 * சிறப்பு ஆசிரியர்கள் (மாவட்டத்துக்குள் ) - 327
 * மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு - 430
 * உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் இடமாற்றம் (மாவட்டத்துக்குள்) - 249
 * சிறப்பு ஆசிரியர்கள் (மாவட்டம் விட்டு மாவட்டம்) -157
 * உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் (மாவட்டம் விட்டு மாவட்டம்) - 177
 * மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு - 330
 * முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் (மாவட்டத்துக்குள்) - 865
 * முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் (மாவட்டம் விட்டு மாவட்டம்) - 570
 * முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு - 542
 * முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனம் - 53
 * பணி நிரவல் பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள்:
 தமிழ் - 443
 ஆங்கிலம் - 451
 கணிதம் - 543
 அறிவியல் - 570
 சமூக அறிவியல் - 300
 மொத்தம் - 2,307
 * இடமாறுதல் பெற்ற ஆசிரியர்களின் மொத்த எண்ணிக்கை - 6,402.