news

முதுகலை ஆசிரியர்க்காக போராடக்கூடிய ஒரே அமைப்பு TNHSPGTA ***** நமது சங்கத்தின் உறுப்பினர் ஆகுங்கள் ******சங்க செயல் பாடுகளை தெரிந்துகொள்ள மேல்நிலைக்குரல் படியுங்கள் ******தங்கள் பள்ளி நிகழ்வுகளை அமைப்போடு பகிர்ந்துகொள்ளுங்கள்*****அனைத்து முதுகலை ஆசிரியர்களின் பங்களிப்பே அமைப்பு வளர்ச்சிக்கு உதவும்

Saturday 28 February 2015

தனிநபர் வருமானவரி விலக்கில் மாற்றமில்லை.



தனிநபர் வருமானவரி விலக்கில் மாற்றமில்லை, மேலும் தனிநபர் வருமானவரி விலக்கில் தற்போதைய நிலையே தொடரும் என்றும்  மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

பள்ளிக்கல்வி - 122 உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு மார்ச் 1ம் தேதி நடைபெறவுள்ளது

தமிழகத்தில் காலியாக உள்ள 122 உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களுக்கான பதவி உயர்வு கல்ந்தாய்வு மார்ச்1ம் தேதி நடைபெறவுள்ளது.
இக்கலந்தாய்வில் முன்னுரிமை பட்டியல் வரிசை எண்.675 வரை உள்ள ஆசிரியர்கள் கலந்து கொள்ளலாம்.


DSE.103963/C1/E1/14-
Date 27.2.15-
High School HM Promotion on 1.3.15 @Siemat Hall, Chennai for 122 Vacants
Panel upto S.No.685 TRs can Participate in Counselling

1591 முதுகலை ஆசிரியர்கள் தற்காலிக பணியிடங்களுக்கான பிப்ரவரி 2015க்கு சம்பளம் வழங்க அதிகார ஆணை

Thursday 26 February 2015

மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திமார்ச் 8-இல் அனைத்து ஆசிரியர்களின் கூட்டமைப்பு சார்பில் மாபெரும் பேரணி


மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மார்ச் 8-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த அனைத்து ஆசிரியர் சங்கங்களும் முடிவு செய்தன. இது தொடர்பாக தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் பேச்சு நடத்த தலைமைச் செயலகத்துக்கு வந்தனர். ஆனால், முதல்வரைச் சந்திக்க அவர்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை. இதையடுத்து, திட்டமிட்டபடி மார்ச் 8-இல் போராட்டம் நடத்தவுள்ளனர்.

Tuesday 24 February 2015

விடைத்தாளை கையாளும் முறை பொதுத்தேர்வு மாணவர்களுக்கு அறிவுரை


     பொதுத்தேர்வின்போது அறை கண்காணிப்பாளர்கள்   தேர்வர்களுக்கு முக்கிய  அறிவிப்புகளை     தெரிவிக்க  வேண்டும் என  தேர்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது. அதன் விவரம்:
* தேர்வு துவங்குவதற்கு முன் அன்றைய தேர்வுக்குரிய முதன்மை விடைத்தாளின் பக்க எண்ணிக்கையை அறிவித்து, மாணவர்கள் தமக்கு வழங்கப்பட்டுள்ள விடைத்தாளின் பக்கங்களின் எண்ணிக்கையை சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.
* மாணவர்கள் தமது முகப்புச் சீட்டிலுள்ள புகைப்படம், பெயர், பாடம், பயிற்றுமொழி ஆகிய விவரங்களை சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.
* எஸ்எஸ்எல்சி மொழி பாட தேர்வர்களுக்கு வழங்கப்படும் 22 பக்கங்கள் கொண்ட விடைத்தாளிலுள்ள முதல் 2 பக்கங்கள் ஆங்கிலம் 2வது தாள் தேர்வுக்கென சிறப்பாக வடிவமைக்கப்பட்டதாகும். எனவே, தமிழ் முதல் தாள் மற்றும் ஆங்கிலம் முதல்தாள் ஆகிய தேர்வுகளின்போது அவ்விரண்டு பக்கங்களை பயன்படுத்தாமல் தவிர்க்க வேண்டும் .
* எஸ்எஸ்எல்சி ஆங்கிலம் 2வது தாள் தேர்வுக்கு வழங்கப்படும் எஸ்எஸ்எல்சி மொழி பாட முதன்மை தாளிலுள்ள கோடிடப்படாத முதல் 2 பக்கங்களை விளம்பரம் தொடர்பான வினாவிற்கு விடையளிக்க பயன்படுத்த வேண்டும்.
* விடைத்தாளின் எந்தவொரு பகுதியிலும் தேர்வு எண்ணையோ அல்லது பெயரையோ கண்டிப்பாக எழுதக்கூடாது.
* தேர்வு எழுதும்போது ரப் வொர்க் செய்வதற்கு விடைத்தாளின் அடிப்பகுதியை மட்டும் பயன்படுத்த வேண்டும், விடைத்தாளின் வலது பக்க ஓரப்பகுதியை பயன்படுத்தக் கூடாது. ஏனெனில், வலது பக்க ஓரப்பகுதி மதிப்பெண்களை குறிப்படுவதற்கென்றே ஒதுக்கப்பட்டுள்ளது.
* விடைகளை கோடிட்டு அடிக்கும் நிகழ்வுகளில், “மேற்படி விடை என்னால் அடிக்கப்பட்டது’ என்ற குறிப்புரையை பேனாவால் எழுதவேண்டும். மேலும் பயன்படுத்தாத பக்கங்கள் தேர்வரே தமது கைப்பட பேனாவால் கோடிட்டு அடித்து, “பயன்படுத்தப்படாத பக்கம் என்னால் அடிக்கபட்டது’ என எழுதவேண்டும். ஆனால், தேர்வரது/ அறைக்கண்காணிப்பாளராவது கையொப்பம் இடக்கூடாது. மேலும் தேர்வரது பதிவெண்ணோ, பெயரோ எழுதக்கூடாது என்றும் தெரிவிக்க வேண்டும்.
* கூடுதல் விடைத்தாள்கள் வேண்டுமென்றால், கடைசி 2 பக்கங்கள் எழுதும் முன்னரே கூடுதல் விடைத்தாளின் தேவையை அறைக் கண்காணிப்பாளரிடம் தெரிவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது