news

முதுகலை ஆசிரியர்க்காக போராடக்கூடிய ஒரே அமைப்பு TNHSPGTA ***** நமது சங்கத்தின் உறுப்பினர் ஆகுங்கள் ******சங்க செயல் பாடுகளை தெரிந்துகொள்ள மேல்நிலைக்குரல் படியுங்கள் ******தங்கள் பள்ளி நிகழ்வுகளை அமைப்போடு பகிர்ந்துகொள்ளுங்கள்*****அனைத்து முதுகலை ஆசிரியர்களின் பங்களிப்பே அமைப்பு வளர்ச்சிக்கு உதவும்

Tuesday 15 March 2016

+2 தேர்வு முடிவுகள் மே முதல் வாரத்தில் வெளியீடு அரசு தேர்வுகள் இயக்கம் தகவல்.

12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள், மே முதல் வாரத்தில் வெளியிடப்படும் என அரசு தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி
தகவல் தெரிவித்துள்ளார்
கடந்த மார்ச் 4-ஆம் தேதி தொடங்கிய 12ம் வகுப்பு தேர்வுகள், வரும் ஏப்ரல் 1-ந்தேதி வரை நடைபெறுகிறது.
தமிழ், ஆங்கிலம், வேதியியல் ஆகிய தேர்வுகள் முடிந்து விட்டன. அரசு தேர்வுகள் துறை திட்டமிட்டபடி தமிழ் மற்றும் ஆங்கில விடைத்தாள்களை திருத்தும் பணி நேற்று தொடங்கியது.மொத்தம் 74 முகாம்களில் பிளஸ்–2 விடைத்தாள் திருத்தும்பணி அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி தலைமையில் இந்த பணி தொடங்கியது.  ஏப்ரல் 20–ந்தேதிக்குள் விடைத்தாள் திருத்தும் பணியை முடிக்க அரசு தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது.

12ம் வகுப்பு தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 6,550 பள்ளிகளில் இருந்து 8,39,697 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள். இதற்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 2421 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.