news

முதுகலை ஆசிரியர்க்காக போராடக்கூடிய ஒரே அமைப்பு TNHSPGTA ***** நமது சங்கத்தின் உறுப்பினர் ஆகுங்கள் ******சங்க செயல் பாடுகளை தெரிந்துகொள்ள மேல்நிலைக்குரல் படியுங்கள் ******தங்கள் பள்ளி நிகழ்வுகளை அமைப்போடு பகிர்ந்துகொள்ளுங்கள்*****அனைத்து முதுகலை ஆசிரியர்களின் பங்களிப்பே அமைப்பு வளர்ச்சிக்கு உதவும்

Friday 31 July 2015

ஆசிரியர் கலந்தாய்வு மாறுதல் விண்ணப்பம் இன்று முதல்(31.07.15) விண்ணப்பிக்கலாம் தமிழக அரசு அறிவிப்பு

ஆசிரியர் கலந்தாய்வு மாறுதல் விண்ணப்பம் இன்று முதல்(31.07.15) விண்ணப்பிக்கலாம் தமிழக அரசு அறிவிப்பு

*மேல்நிலை,உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் முதன்மைக்கல்வி அலுவகத்தில் விண்ணப்பிக்க கடைசி நாள் 7.08.2015

*தொடக்க ,நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் உதவித்தொடக்க கல்வி அலுவலகத்தில் விண்ணப்பிக்க கடைசி நாள் 06.08.2015.
*கலந்தாய்வு குறித்த அட்டவணை விரைவில் வெளியிடப்படும்.
*கலந்தாய்வு ஆகஸ்ட் இரண்டாம் வாரத்தில் தொடங்க வாய்ப்பு!

Thursday 30 July 2015

திட்டமிட்டப்படி ஆகஸ்டு 1ஆம் தேதி ஜாக்டோவின் "மாபெரும் தொடர் முழுக்க உண்ணாவிரதப் போராட்டம்" சென்னையில் நடைபெறும்


மதுரை மாவட்ட கழகம் சார்பில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் அவர்களுக்கு அஞ்சலி

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் பிரபாகரன் முன்னிலையில்  மாவட்டத் தலைவர் சரவணமுருகன் தலைமையில் 29.7.15 அன்று பொதுக்குழுக்கூட்டம் நடைபெற்றது மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

மாநிலத் துணைத்தலைவர் ராஜேந்திரன்,  மாநில மகளிரணி இணைச் செயலாளர் விமலா ,மாவட்ட பொறுப்பாளர்கள் ரவிச்சந்திரன், வினோத், முருகன், சுதாகர், துரைராஜா. ஆனந்தசகாயநாதன், பாண்டியன், ராஜா, பிரபாகரன் ,  சம்பத் சௌந்தரபாண்டியன் பிரபு பாலகிருஷ்ணன் விஜயகுமார்,சோலைராஜா மகளிரணிசெயலர் கரோலின் ,சந்திரகலா ஆகியோர் கலந்துகொண்டனர் .

Sunday 26 July 2015

பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு ஆக.,1 அல்லது 2ம் தேதி துவங்க வாய்ப்பு உள்ளது.என பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்தார்

மதுரையில் மண்டல அளவிலான கல்வி அதிகாரிகள், தலைமையாசிரியர்கள் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற அவர் நிருபர்களிடம் கூறியதாவது: பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவு குறித்தும், இவ்வாண்டு தேர்ச்சி விகிதம் அதிகரிக்க தேவையான நடவடிக்கை குறித்தும் வேலூர், கடலூர், திருச்சி, மதுரை மண்டலங்களில் ஆய்வுக் கூட்டங்கள் நடந்தன. இதன்பின் நெல்லை, கோவை, காஞ்சிபுரத்தில் நடக்கிறது.மாநிலத்தில் அரசு பள்ளிகளில் 90 சதவீதத்திற்கு மேல் கழிப்பறை வசதி உள்ளது. இதுதவிர எஸ்.எஸ்.ஏ., திட்டம் மற்றும் என்.எல்.சி., சார்பில் 1500 கழிப்பறைகள் வசதி செய்யப்பட்டு நூறு சதவீத வசதியை எட்டியுள்ளது.முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் பதவி உயர்வு பட்டியல் தயாராக உள்ளது. விரைவில் வெளியிடப்படும்.

ஆசிரியர்கள் எதிர்பார்த்த பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு ஆக.,1 அல்லது 2ம் தேதி துவங்க வாய்ப்பு உள்ளது. இந்தாண்டு கலந்தாய்வு நிபந்தனை தொடர்பாக ஆசிரியர்களிடையே எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 'ஒரு பள்ளியில் மூன்று கல்வியாண்டு பணியாற்றியிருக்க வேண்டும்' என்ற அந்த நிபந்தனையை ரத்து செய்ய ஆசிரியர் சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன. இதுகுறித்து துறை செயலரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முடிவு குறித்து அவர் பரிசீலனை செய்வார் என கண்ணப்பன் தெரிவித்தார்.

Wednesday 22 July 2015

முதலாம் இடைப்பருவத்தேர்வு அட்டவணை -மதுரை


ஜூலை 24ல் ஐந்து மாவட்டகல்வி அதிகாரிகள் கூட்டம்

:மதுரையில் பொதுத் தேர்வு முடிவுகள் குறித்து ஐந்து மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆய்வுக் கூட்டம் ஜூலை 24ல் நடக்கிறது.மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வில் 80 சதவீதத்திற்கு கீழ் தேர்ச்சி பெற்ற அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் இக்கூட்டத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர். முதன்மை மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களும் பங்கேற்கின்றனர்.இக்கூட்டத்தை இயக்குனர்கள் கண்ணப்பன், அறிவொளி (ஆர்.எம்.எஸ்.ஏ.,) நடத்துகின்றனர்.இதில் தேர்ச்சி குறைவிற்கான காரணம் குறித்து தலைமையாசிரியர்களிடம் விளக்கம் கேட்கவும், இக்கல்வியாண்டில் தேர்ச்சியை அதிகரிக்க மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்படவுள்ளது

Friday 17 July 2015

ஆகஸ்டு 1ஆம் தேதி நடைபெறவிருந்த ஜாக்டோவின் மாபெரும் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம், உண்ணாவிரத போராட்டமாக மாற்றம்

ஆகஸ்டு 1ஆம் தேதி நடைபெறவிருந்த ஜாக்டோவின் மாபெரும் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம், உண்ணாவிரத போராட்டமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை விருந்தினர் மாளிகை முன்பு காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 4 மணிவரை நடைபெறவுள்ளது.

தமிழ்நாடு பாடநுால் மற்றும் கல்வியியல் கழகத்துக்கு புதிய செயலராக இணை இயக்குனர் கார்மேகம் நியமிக்கப்பட்டுள்ளார்

தமிழ்நாடு பாடநுால் மற்றும் கல்வியியல் கழகத்துக்கு புதிய செயலராக கார்மேகம் நியமிக்கப்பட்டுள்ளார்.இந்த கழகத்தின் செயலராக இருந்த அன்பழகன் கடந்த ஜனவரியில் ஓய்வு பெற்றார். அதன் பிறகு அந்த இடம் நிரப்பப்படவில்லை.மத்திய இடைநிலைக் கல்வித் திட்ட இயக்குனர் அறிவொளி, பாடநுால் கழக செயலர் பொறுப்பை சில மாதங்கள் மேற்கொண்டார். அவர் விலகியதையடுத்து கடந்த மாதம் மூன்று நாட்களுக்கு மட்டும் மாநிலக் கல்வியியல் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் ராமேஸ்வர முருகன் கவனித்தார்.

Monday 13 July 2015

கள்ளர் சீரமைப்பு இணை இயக்குநர் திரு.செல்வகுமார் அவர்களை நமது அமைப்பினர் சந்தித்து கோரிக்கைகளை அளித்தனர்

இணை இயக்குநர்  திரு.செல்வகுமார் அவர்களுடன் மாநில துணைத்தலைவர்  சிவ.ராஜேந்திரன்,மண்டல செயலர் வீர ராமசாமி மதுரை மாவட்ட செய்தி தொடர்பாளர் சுதாகர்,காளி ராஜன்

Saturday 11 July 2015

ஊதிய கோரிக்கையை வலியுறுத்தி 'ஜாக்டோ' போர்க்கொடி!


தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்கங்களின் சம்பள உயர்வு கோரிக்கை உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்த பிரச்னை இழுபறியாக உள்ள நிலையில், தமிழக அரசுக்கு அடுத்த தலைவலி உருவாகியுள்ளது.
  மத்திய அரசுக்கு இணையாக தமிழக ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆசிரியர் சங்க இயக்கங்களின் கூட்டு நடடிக்கை குழுவான 'ஜாக்டோ' அமைப்பு, அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளது. ஆகஸ்ட் 1-ம் தேதி 'ஜாக்டோ' அமைப்பு சார்பில் தொடர் முழக்க போராட்டங்களையும், தொடர் போராட்டங்களையும் நடத்தப்போவதாக அந்த அமைப்பு அறிவித்துள்ளது.

தங்களது போராட்டத்திற்கு ஆதரவு கோரி திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் கட்சி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோரை நேரில் சந்தித்து இந்த அமைப்பினர் ஆதரவு திரட்டி வருவது அரசுக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் சென்னையில் 'ஜாக்டோ' அமைப்பின் உயர் மட்டக்குழு கூட்டம் அதன் தலைவர் தாஸ் தலைமையில் நடந்தது. தமிழ்நாடு உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சங்க மாநில பொதுச்செயலாளர் சாமி சத்தியமூர்த்தி, தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தலைவர் மணிவாசகன், ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநில தலைவர் தியாகராஜன், பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தலைவர் இளங்கோவன் உள்பட 15 ஆசிரியர் சங்க நிர்வாகிகள்  இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
பிறகு 'ஜாக்டோ' அமைப்பின் தலைவர் தாஸ் இது பற்றி கூறுகையில், "மத்திய அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு இணையாக தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும். ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்களுக்கு வழங்கப்படும் 50 சதவீத அகவிலைப்படியை அடிப்படை சம்பளத்துடன் இணைக்க வேண்டும் என்பது உள்பட 15 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றும்படி அரசிடம் வலியுறுத்தி வருகிறோம்.
ஆனால் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரோ அல்லது பள்ளிக்கல்வி செயலாளரோ எங்களை சந்திக்க மறுக்கின்றனர். எனவே ஆகஸ்ட் 1-ம் தேதி சென்னையில் தொடர் முழக்க போராட்டம் நடத்த உள்ளோம்.
பின்னர் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும். இது தொடர்பாக திமுக உள்ளிட்ட எதிர்கட்சி தலைவர்களை நேரில் சந்தித்து எங்களது கோரிக்கைகளுக்கு ஆதரவு திரட்டி வருகிறோம்” என்றார்