news

முதுகலை ஆசிரியர்க்காக போராடக்கூடிய ஒரே அமைப்பு TNHSPGTA ***** நமது சங்கத்தின் உறுப்பினர் ஆகுங்கள் ******சங்க செயல் பாடுகளை தெரிந்துகொள்ள மேல்நிலைக்குரல் படியுங்கள் ******தங்கள் பள்ளி நிகழ்வுகளை அமைப்போடு பகிர்ந்துகொள்ளுங்கள்*****அனைத்து முதுகலை ஆசிரியர்களின் பங்களிப்பே அமைப்பு வளர்ச்சிக்கு உதவும்

Saturday 18 March 2017

150 நடுநிலை பள்ளிகள் உயர்நிலை பள்ளிகளாவும், 100 உயர்நிலை பள்ளிகள் மேல்நிலை பள்ளிகளாக மாற்றப்படும் என்று நிதியமைச்சர் ஜெயக்குமார் தமிழக பட்ஜெட்டில் அறிவித்தார

150 நடுநிலை பள்ளிகள் உயர்நிலை பள்ளிகளாவும், 100 உயர்நிலை பள்ளிகள் மேல்நிலை பள்ளிகளாக மாற்றப்படும் என்று நிதியமைச்சர்
ஜெயக்குமார் தமிழக பட்ஜெட்டில் அறிவித்தார். மேலும் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்க ரூ.758 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் நிதியமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். 2017-18-ம் ஆண்டு பட்ஜெட்டில் பள்ளிக்கல்விக்கு ரூ.26,932 கோடி தமிழக பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஊதிய விகிதத்தில் 7% அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட உள்ளது

தமிழக அரசுஊழியர்களுக்கும் பழைய ஊதிய விகிதத்தில் 7% அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட உள்ளது.மத்திய அரசு
ஊழியர்களுக்கு 2 சதவிகிதம் அகவிலைப்படியை உயர்த்தி அளிப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தமிழக அரசு ஊழியர்களுக்கும் பழைய ஊதிய விகிதத்தில் 7% அகவிலைப்படிஉயர்வு வழங்கப்பட உள்ளது.

Tuesday 14 March 2017

விடைத்தாள் திருத்தும் மையங்களில் ஜெனரேட்டர் வசதி,குடிநீர் ,கழிப்பறை, காற்றோட்ட வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

இப்போதே மின்வெட்டு ஆரம்பித்துவிட்டது .விடைத்தாள் திருத்தும் போது  அதிகமாக இருக்கும்  கடந்த ஆண்டுகளில்   நமது அமைப்பின்  போராட்டத்தால் விடைத்தாள் மையங்களில்  ஜெனரேட்டர்கள்கள்  அமைக்கப்பட்டு  விடைத்தாள்  திருத்தும் பணி  நடைபெற்றது . ஆனால்  கடந்த இரண்டு ஆண்டுகள்  மின்வெட்டு குறைவாக இருந்ததால்  அமைக்கப்படவில்லை  இந்த ஆண்டு அமைக்கப்படவேண்டும்

ஜெனரேட்டர் வசதி விடைத்தாள் திருத்தும் மையங்களிலும் செய்ய வேண்டும். குடிநீர் ,கழிப்பறை, காற்றோட்ட வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.
தேர்வுப் பணி, பறக்கும் படையில் பணிபுரிவோருக்கு தேர்வு முடிந்த நாளில், உழைப்பூதியத்தை நிலுவையின்றி வழங்க வேண்டும்  போன்ற  கோரிக்கைகளை  நாம் ஒவ்வொரு ஆண்டும்  வலியுறுத்தி வருகிறோம் .
இந்தாண்டு  அமைக்கப்பட்டுள்ள விடைத்தாள் திருத்தும்  மையத்தில்  உரிய ஏற்பாடுகள்  செய்யாத பட்சத்திலும் தேர்வு மற்றும் விடைத்தாள் உழைப்புதியம்  உயர்த்துவதற்கான அரசாணை உடனே வெளியிடப்படவேண்டும்  என்று தலைவர் தேர்வுத்துறை இயக்குனரோடு நடத்திய  பேச்சுவார்த்தை அடிப்படையில் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால்   +2 விடைத்தாள் திருத்தும் பணி புறக்கணிப்பு  செய்யப்படும் என்பதை தெரிவித்துகொள்கிறோம் .

Tuesday 7 March 2017

பள்ளி கல்வித் துறை செயலாளர் மாற்றம்

தமிழகத்தில் 17 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை மாவட்ட கலெக்டராக அன்புசெல்வன் நியமிக்கப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டராக பொன்னையா நியமிக்கப்பட்டுள்ளார்.
இடமாற்ற விவரம்:
1. சுனில் பாலிவால் - உயர்கல்வித் துறை முதன்மை செயலர்
2. காமராஜ் - பால் உற்பத்தி கழக மேலாண் இயக்குநர்
3. உதயசந்திரன் - பள்ளி கல்வித் துறை செயலாளர்
4. வள்ளலார் - சிறுபான்மை நலத்துறை இயக்குநர்
5. தயானந்த் கட்டாரியா - போக்குவரத்து துறை கமிஷனர்

6. விக்ரம் கபூர் - எரிசக்தி துறை முதன்மை செயலர்
7. அடூலியா மிஷ்ரா - தொழில் துறை முதன்மை செயலர்
8. பழனிக்குமார் - தமிழ்நாடு சுற்றுலா துறை மேலாண் இயக்குநர்
9. நசிமுதீன் - சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மை செயலர்
10. அன்புசெல்வன் - சென்னை மாவட்ட கலெக்டர்

11. மகேஸ்வரி - வணிக வரித்துறை இணை கமிஷனர்
12. பொன்னையா - காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர்

13. சபிதா - தமிழக சிமிண்ட் கழக மேலாண் இயக்குநர்
14. வெங்கடேசன் - கனிம வளத்துறை மேலாண் இயக்குநர்
15. சத்யபிரதா சாஹீ - தொழில் முதலீட்டு கழக மேலாண் இயக்குநர்

16.ஹர் சகாய் மீனா - உப்பு கழக மேலாண் இயக்குநர்
17. கஜலெட்சுமி - சென்னை பெருநகர மாநகராட்சி துணை கமிஷனர்.

கணினி அறிவியல் பாடத்தேர்வுக்கான அறிவுரைகள்


Saturday 4 March 2017

பிளஸ் 2 விடைத்தாள் ஏப்.3ல் திருத்தம்

பிளஸ் 2 தேர்வில் விடைத்தாள் திருத்தம், ஏப்., 3 முதல் துவங்கும் என, ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.        தமிழகம் மற்றும் புதுச்சேரியில், பிளஸ் 2 தேர்வு, 2ம் தேதி துவங்கியது. இதில், 9.33 லட்சம் பேர் பங்கேற்கின்றனர். மொத்தம், 2,434 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன; 4,000 பறக்கும் படைகள், தேர்வு நாட்களில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றன.
இந்நிலையில், பிளஸ் 2 தேர்வுகள், 31ல் முடிகின்றன. கடந்த சில ஆண்டுகளாக தேர்வு நடக்கும் போதே, விடைத்தாள் திருத்தமும் துவங்கியது. அதனால், ஆசிரியர்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர். விடைத்தாள் திருத்துவதா; தேர்வு பணி பார்ப்பதா; பிளஸ் 1 மாணவர்களை கவனிப்பதா என, குழப்பம் ஏற்பட்டது. இதை தடுக்க, இந்த ஆண்டு தேர்வு முடிந்த பின், ஏப்., 1 முதல் விடைத்தாள் திருத்தம் துவங்குகிறது. தமிழகம் மற்றும் புதுவையில், 150 விடை திருத்தும் மையங்கள் அமைக்கப்பட்டு, திருத்த பணிகள் நடக்க உள்ளதாக, தேர்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஏப்., 20க்குள், அனைத்து பாடங்களுக்கான திருத்தத்தையும் முடிக்க, தேர்வுத் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.