news

முதுகலை ஆசிரியர்க்காக போராடக்கூடிய ஒரே அமைப்பு TNHSPGTA ***** நமது சங்கத்தின் உறுப்பினர் ஆகுங்கள் ******சங்க செயல் பாடுகளை தெரிந்துகொள்ள மேல்நிலைக்குரல் படியுங்கள் ******தங்கள் பள்ளி நிகழ்வுகளை அமைப்போடு பகிர்ந்துகொள்ளுங்கள்*****அனைத்து முதுகலை ஆசிரியர்களின் பங்களிப்பே அமைப்பு வளர்ச்சிக்கு உதவும்

Wednesday 29 June 2016

7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்த மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

     7வது ஊதியக் குழு பரிந்துரைகள் 2016ம் ஆண்டு ஜனவரி மாதம் 1ம் தேதியை கணக்கிட்டு அமல்படுத்தப்படுகிறது.ஊதியக் குழு அறிக்கையின் பரிந்துரைகள் தொடர்பான அறிக்கையை மத்திய அமைச்சரவை செயலர் பி.கே. சின்ஹா தலைமையிலான செயலர் குழு இறுதி செய்தது. அந்த அறிக்கையின் அடிப்படையில் நிதி அமைச்சகம் அமைச்சரவைக் குறிப்பைத் தயார் செய்தது.
இதையடுத்து, ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்துவதற்கு இன்று புது தில்லியில்நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.7-ஆவது ஊதியக் குழுவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதன் அடிப்படையில், அதன் பரிந்துரைகள் சென்ற ஜனவரி 1-ஆம் தேதியை கணக்கிட்டு அமல்படுத்தப்படும். இதனால், 50 லட்சம் மத்திய அரசு பணியாளர்களும், 58 லட்சம் ஓய்வூதியர்களும் பயன்பெறுவர்.7வது ஊதியக் குழு பரிந்துரையை அமல்படுத்துவதால், மத்தியஅரசுக்கு ஆண்டுக்கு ரூ.1.02 லட்சம் கோடி கூடுதலாக செலவாகும். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இது 0.7 சதவீதம்.7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைப்படி, மத்திய அரசு பணியாளர்களுக்கு அடிப்படை சம்பளத்தில் 14.27 சதவீத ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு பணியில் சேரும் அறிமுக நிலை பணியாளருக்கான மாத ஊதியம் தற்போதைய ரூ.7,000-லிருந்து, ரூ.18,000-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.மேலும், அமைச்சரவை செயலரின் அதிகபட்ச மாத ஊதியம் தற்போதைய ரூ.90,000-லிருந்து ரூ.2.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

Wednesday 22 June 2016

ஒரே பதவியில் தொடர்ந்து 30 வருடங்கள் பணிபுரிந்தால் அவர்களுக்கு 3% Bouns Increment வழங்கப்படும்

STAGNATION INCREMENT :FINANCE (PAY CELL) DEPARTMENT G.O. Ms. No. 234, DATED: 1ST JUNE, 2009


STAGNATION INCREMENT 
*In the case of employees who have completed 30 years of continuous service in the same post, they shall be granted one bonus increment at the rate of three per cent of basic pay including
Grade pay.

 *In respect of employees who reached the maximum of the revised pay scale shall be allowed biennial increment at the rate of three per cent of basic pay including Grade pay as stagnation increment

Monday 20 June 2016

பள்ளிக்கல்வி - 2015-16ம் ஆண்டுக்குரிய மாநில அளவிலான நல்லாசிரியர் விருது பெற தகுதிவாய்ந்த ஆசிரியர்களை தேர்வு செய்ய கருத்துருக்களை கோருதல் சார்பு

ஒவ்வொரு ஆண்டும், செப்., 5ல் ஆசிரியர் தினத்தன்று அவர்களை கவுரவிக்கும் வகையில், சிறந்த ஆசிரியர்கள் தேர்வு செய்து நல்லாசிரியர் விருது வழங்கப்படுவது வழக்கம். அதன்படி, 2015-16ம் கல்வியாண்டுக்கான நல்லாசிரியர் தேர்வு பணிகள் துவக்கப்பட்டுள்ளன.
மாவட்ட அளவில், முதன்மை கல்வி அலுவலரை தலைவராக கொண்டு, டி.இ.ஓ., டி.இ.இ.ஓ., ஐ.எம்.எஸ்., ஏ.இ.ஓ., மற்றும் ஒரு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் உட்பட, ஆறு பேர் கொண்ட குழு அமைத்து ஆய்வுகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆய்வு பணிகள், ஜூன் 5 முதல் ஜூலை 15 வரை பள்ளிகளில் நேரடியாக மேற்கொள்ளவும், ஆய்வின் அடிப்படையில் தகுதியானவர்களுக்கு, ஜூலை 20 முதல் 30 வரை நேர்காணல் நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கல்வி மாவட்டத்துக்கு, ஆறு பேர் வீதம் நல்லாசிரியர்கள் தேர்வு செய்து, ஆக., 10க்குள் பரிந்துரைக்க மாவட்ட தேர்வு குழுவுக்கு இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். 
CLICK HERE-TO DOWNLOAD STATE BEST TEACHERS AWARD PERFORMA

CLICK HERE-GO.218 SCL EDN DEPT DATED.05.07.2013 - TEACHERS AWARD SELECTION GUIDELINES 

Saturday 18 June 2016

பிளஸ்-2 தேர்வு ...2,278 பேருக்கு மதிப்பெண் அதிகரிப்பு

கடந்த மார்ச் மாதம் 4-ந் தேதி முதல் ஏப்ரல் 1-ந் தேதிவரை பிளஸ்-2 தேர்வு நடைபெற்று, முடிவுகள் வெளியிடப்பட்டது. தேர்வில் அதிக மதிப்பெண் வரும் என்று எதிர்பார்த்தவர்கள் முடிவில் எதிர்பார்த்த மதிப்பெண் இல்லாதாதால் ஏமாற்றம் அடைந்தனர். 
_அவர்களில் 3,378 பேர் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்தனர். மறு கூட்டலுக்கு 2 ஆயிரத்து 707 பேர் விண்ணப்பித்தனர். 
_ஆசிரியர்களின் குளறுபடி
_மறுமதிப்பீட்டில் 2,200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளுக்கு மதிப்பெண் மாற்றம் இருந்தது. ஏராளமான மாணவ-மாணவிகளுக்கு மதிப்பெண் கூடுதலாக வந்துள்ளது. 5 முதல் 10 மதிப்பெண் அதிகமாக வந்துள்ளது. 
_சில பக்கங்கள் மதிப்பீடு செய்யாமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மறுகூட்டலில் 56 பேருக்கு மதிப்பெண் அதிகரித்துள்ளது. 
_குறிப்பாக ஒரு மாணவருக்கு 186 மதிப்பெண்ணுக்கு பதிலாக 86 மதிப்பெண் என்று போடப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் மதிப்பீடு செய்ததில் பல குளறுபடிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் 2 ஆயிரத்து 278 பேருக்கு மதிப்பெண் அதிகரித்துள்ளது.

Friday 17 June 2016

கல்வி துறையில்இணை இயக்குனர்கள் மாற்றம்

பள்ளிக் கல்வித் துறையில், மூன்று இணை இயக்குனர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அனைவருக்கும் கல்விஇயக்ககமான, எஸ்.எஸ்.ஏ.,வின் இணை இயக்குனர் சசிகலா, தொடக்ககல்வி இணை இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார்.
அங்கு பணியாற்றும், இணை இயக்குனர் செல்வராஜ், தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரிய இணை இயக்குனர் வர்மா, எஸ்.எஸ்.ஏ.,வுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

11ம் வகுப்பு மாணவர்களுக்கு 23ம் தேதி தொடக்கம்...

தமிழகத்தில் 11ம் வகுப்பு சேர்ந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும்  பள்ளிகளின் மாணவர்களுக்கு 23ம் தேதி முதல் வகுப்பறைகள் தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.

Saturday 11 June 2016

பொதுத்தேர்வு தேர்ச்சி குறைவு ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை.

          மதுரை மாவட்டத்தில்10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வில்,தேர்ச்சி சதவீதம் குறைந்த பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது.பள்ளிக்கல்வி தேர்வுத் துறை இணை இயக்குனர் அமுதவள்ளி தலைமை வகித்தார்.

முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி முன்னிலை வகித்தார்.80சதவீதம் மாணவர் தேர்ச்சி குறைந்த அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த80ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர்கள் பங்கேற்றனர்.கிராம பள்ளிகளில் தேர்ச்சி சதவீதம் அதிகரித்த நிலையில்,நகர் பகுதி பள்ளிகளில் ஏன் தேர்ச்சி விகிதம் குறைந்தது,தலைமையாசிரியர்கள் நடவடிக்கை எடுக்காத காரணம் என்ன,மாணவர்களின் எதிர்காலத்திற்கான கல்வியில் ஆசிரியர்கள் பொறுப்பற்ற விதங்களில் நடக்கக்கூடாது என எச்சரித்ததோடு,விளக்கங்களும் கேட்கப்பட்டன.கல்வி அலுவலர்கள் ரேணுகா,துரைப்பாண்டி,லோகநாதன் (பொறுப்பு),மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் சீனிவாசன் மற்றும் அனந்தராமன்,ஆதிராமசுப்பு பங்கேற்றனர்.

Thursday 9 June 2016

01-06-2016 அன்று முதுகலை பட்டதாரி ஆசிரியர்களின் தேர்வு நிலைக்கான படிவம்


தேர்வுநிலை அனுமதித்திட   
1.    தேர்வு நிலை விணணப்ப படிவம்
(இதில்  அனைத்து கலங்களும்  எழுத்தால் / எண்ணால் மட்டுமே குறிக்கப்பட வேண்டும்)
தலைமையாசிரியரின் பரிந்துரை கண்டிப்பாக இடம் பெற வேண்டும். பரிந்துரை இல்லாத விண்ணப்பம் பரிசீலிக்கப்பட மாட்டாது  எனத் தெரிவிக்கப்படுகிறது.
2.    ரெக்கார்டு சீட் (பதிவு தாள்)
3.    பணிநியமன ஆணை நகல்
4.    பணிவரன்முறை ஆணை நகல்
5.    தகுதிகாண் பருவம் முடித்த ஆணை நகல்
6.    பணி சரிபார்ப்பு சான்றின் பக்க விவரங்கள் தனித்தாளில் குறிக்கப்பட்டிருக்க வேண்டும்.
7.    அசல் பணிப்பதிவேடு

கல்விச்சான்று நகல்கள் அதன் உண்மைத் தன்மை சான்றுகள் தேவையில்லை. மற்ற விவரங்கள் அசல் பணிப்பதிவேட்டில் உள்ள விவரங்களின் அடிப்படையில் சரிபார்த்தல் போதுமானது.
மதுரை மாவட்டத்தில் ஒப்படைக்க வேண்டிய நாட்கள்
1.    மேலுர் கல்வி மாவட்ட   பள்ளிகள் - 14.06.2016
2.    மதுரை கல்வி மாவட்ட  பள்ளிகள்  - 15.06.2016
3.    உசிலம்பட்டி கல்வி மாவட்ட பள்ளிகள்  - 16.06.2016
படிவம் தரவிறக்கம் செய்ய இங்கே அழுத்தவும் 

பள்ளிக்கல்வி - தேர்வுநிலை பெற்ற ஆசிரியர்களுக்கு மாவட்டம்தோறும் சிறப்பு முகாம் - இயக்குனர் செயல்முறைகள்