news

முதுகலை ஆசிரியர்க்காக போராடக்கூடிய ஒரே அமைப்பு TNHSPGTA ***** நமது சங்கத்தின் உறுப்பினர் ஆகுங்கள் ******சங்க செயல் பாடுகளை தெரிந்துகொள்ள மேல்நிலைக்குரல் படியுங்கள் ******தங்கள் பள்ளி நிகழ்வுகளை அமைப்போடு பகிர்ந்துகொள்ளுங்கள்*****அனைத்து முதுகலை ஆசிரியர்களின் பங்களிப்பே அமைப்பு வளர்ச்சிக்கு உதவும்

Thursday 3 March 2016

பிளஸ் 2 தேர்வு இன்று தொடங்குகிறது.

தமிழகம், புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வுகள் இன்று தொடங்கி ஏப்ரல் 1ம் தேதி முடிகிறது. இந்த தேர்வில் தமிழகம், புதுச்சேரியில் மொத்தம் 8,82,044 மாணவ மாணவியர் எழுதுகின்றனர். இவர்களில் தனித்தேர்வர்கள் 42,347 பேர் அடங்குவர். 6550 பள்ளிகள் மூலம் 8,39697 மாணவ மாணவியர் நேரடியாக தேர்வு எழுதுகின்றனர். கடந்த ஆண்டில் பிளஸ் 2 தேர்வு எழுதியோரை விட இந்த ஆண்டு 3367 பேர் குறைவாக தேர்வு எழுத உள்ளனர்.
பள்ளிகள் மூலம் தேர்வு எழுதவோரில் மாணவர்கள் 391806, மாணவியர் 447891 பேர். மொத்த எண்ணிக்கையில் மாணவர்களை விட 56085 மாணவியர் இந்த ஆண்டு கூடுதலாக தேர்வு எழுதுகின்றனர். ஆனால் கடந்த ஆண்டு தேர்வு எழுதியோரை ஒப்பிடும் போது, இந்த ஆண்டு 1053 மாணவர்கள் கூடுதலாகவும், 4420 மாணவியர் குறைவாகவும் எழுதுகின்றனர்.
மதுரை மாவட்டத்தில் 92 மையங்களில் 1792 தனித்தேர்வர்கள் உள்பட மொத்தம் 37 ஆயிரத்து 683 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்.
தேர்வுக்கு வரும் மாணவ, மாணவிகள் காலை 9.45 மணிக்குள் வந்து விட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். காலை 10 மணிக்கு தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படும் மாணவ, மாணவிகளுக்கு வினாத்தாள் வழங்கப்பட்டு, 15 நிமிடங்கள் படித்து பார்க்க நேரம் கொடுக்கப்படும். பின்னர் காலை 10.15 மணிக்கு துவங்கும் தேர்வு, மதியம் 1.15 மணிக்கு முடிவடையும். பிளஸ்2 தேர்வு ஏப்.1ம் தேதி வரை நடக்கிறது. தேர்வில் காப்பி அடிப்பதை தடுக்க, பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி செய்து வருகிறார்.