news

முதுகலை ஆசிரியர்க்காக போராடக்கூடிய ஒரே அமைப்பு TNHSPGTA ***** நமது சங்கத்தின் உறுப்பினர் ஆகுங்கள் ******சங்க செயல் பாடுகளை தெரிந்துகொள்ள மேல்நிலைக்குரல் படியுங்கள் ******தங்கள் பள்ளி நிகழ்வுகளை அமைப்போடு பகிர்ந்துகொள்ளுங்கள்*****அனைத்து முதுகலை ஆசிரியர்களின் பங்களிப்பே அமைப்பு வளர்ச்சிக்கு உதவும்

Tuesday 30 August 2016

தமிழக அரசு நல்லாசிரியர் விருதுக்கு 534 பேர் தேர்வு

          தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் 534 ஆசிரியர்கள் நல்லாசிரியர் விருதுக்க தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
 
            அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு 1960ம் ஆண்டு முதல் நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்பட்டு வந்தன. 
பின்னர், இந்த விருது 1997ம் ஆண்டு முதல் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு ஆண்டுதோறும் செப்டம்பர் 5ம் தேதி வழங்கப்படுகிறது. ஆசிரியர்களின் பணியை அங்கீகரிக்கும் வகையில் வழங்கப்படும் இந்த விருதுடன் முன்னதாக ரூ.5 ஆயிரம் மற்றும் வெள்ளிப் பதக்கம், பாராட்டுப் பத்திரம் வழங்கப்பட்டது.
இந்நிலையில், இந்த ஆண்டு 534 பேருக்கு மேற்கண்ட விருது வழங்கப்பட  உள்ளது. இந்த ஆண்டு விருது பெறுவோருக்கு ரூ.5 ஆயிரம் ரொக்கத்துக்கு பதிலாக ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இதற்கு ஆசிரியர்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது.
இந்த ஆண்டுக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுகள் அரசுப் பள்ளிகள், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட உள்ளது. இதற்கான பட்டியலை பள்ளிக் கல்வித்துறை தயாரித்து வருகிறது. 
இன்று அல்லது நாளை இந்த பட்டியல் வெளியாகும் என்று தெரிகிறது. விருதுகள் செப்டம்பர் 5ம் தேதி சென்னை சாந்தோமில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் நடக்கும் விழாவில் வழங்கவும் பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.இந்த விழாவிற்கான அழைப்பிதழில் பள்ளி கல்வி துறை அமை ச்சர் பென்ஜமின்  பெயர் அச்சி டப்பட்டு இருந்தது நேற்று இத்துறை அமைச்சர்   மாற்றப் பட்டதால் தற்போது மாபா. பாண்டியராஜன் வழங்குவார்.

Monday 29 August 2016

மதுரை மாவட்டம் 11 ம் வகுப்பு காலாண்டுத் தேர்வு அட்டவணை


பள்ளிக் கல்வித் துறை புதிய அமைச்சராக திரு. மாஃபா பாண்டியராஜன் நியமனம்

புதிய கல்வி அமைச்சராக மாஃபா கே.பாண்டியராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். மாஃபா கே. பாண்டியராஜனுக்கு பள்ளிக்கல்வித்துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை ஒதுக்கப்பட்டுள்ளது.  பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்த பென்ஜமினிடம், ராஜேந்திர பாலாஜி வகித்து வந்த ஊரகத் தொழில் துறை ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Sunday 28 August 2016

பிளஸ் 2 புதிய பாடத்திட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகுமா?:பெற்றோர், மாணவர், கல்வியாளர்கள் எதிர்பார்ப்பு

            மருத்துவ படிப்புகளில் சேர, 'நீட்' நுழைவுத் தேர்வு கட்டாயமாகி விட்ட நிலையில், தமிழகத் தில், 10 ஆண்டுகள் பழமையான, பிளஸ் 2 பாடத் திட்டத்தை மாற்றுவது குறித்த அறிவிப்பு, சட்டசபையில் வெளியாகாததால், பெற்றோர், மாணவர் மற்றும் கல்வியாளர்கள் பாடத் திட்டம் மாற்றம் குறித்த அறிவிப்பு, எப்போது வெளியாகும் என்றும் காத்திருக்கின்றனர்.

தமிழக பள்ளி கல்வித் துறையில், ஒவ்வொரு வகுப்பின் பாடத் திட்டமும், ஐந்து ஆண்டுக ளுக்கு ஒரு முறை, தொழில்நுட்ப வளர்ச்சி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட அம்சங்களின் அடிப்படையில் புதுப்பிக்கப்படும். 20 ஆண்டு களாக, இந்த தொலைநோக்கு பார்வை மங்கி, பள்ளி கல்வியில் இலவசங் களை புகுத்தும் ஆர்வம், அதிகாரிகளிடம் அதிகரித்து உள்ளது.

தற்போதைய, பிளஸ் 1, பிளஸ் 2 பாடத் திட்டம், 2007ம் ஆண்டு முதல் அமலில் உள்ளது. அது, 2005ம் ஆண்டில் தயார் செய்யப்பட்டதால், இந்த பாடத் திட்டத்தின் ஆயுட்காலம், 11 ஆண்டு களை எட்டி விட்டது. 2012ல், ஐ.ஐ.டி., பேராசிரியர் நாகபூஷன ராவ் தலைமையில், தமிழக அரசு அமைத்த கமிட்டி, புதிய பாடத் திட்டத்தை உருவாக்கியது. இது, 2013ல், தமிழக அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப் பட்டது.
இதுவரை புதிய பாடத் திட்டத்தை அரசு அறிவிக்க வில்லை. தற்போதைய சட்டசபை கூட்டத்தொடரில், பள்ளி கல்வி மானிய கோரிக்கை மற்றும் முதல்வரின், 110வது விதியிலாவது, பாடத்திட்டம் மாற்றம் குறித்த 
அறிவிப்பு வெளியாகும் என, எதிர்பார்க்கப் பட்டது. ஆனால், அப்படிப்பட்ட அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை. எனவே, 'நீட்' போன்ற தேர்வை எதிர்நோக்கியுள்ள மாணவர்களும், பெற்றோரும், கல்வியாளர்களும் கவலை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து, கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தி கூறியதாவது:
மத்திய அரசின்கல்வி, வேலைவாய்ப்பு தொடர் பான விரிவான திட்டங்களை, தமிழக மாணவர் களும் எதிர் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயமாகியுள் ளது. இன்ஜி., படிப்புக்கும், நீட் தேர்வு வரும் என, கூறப்பட்டுள்ளது.தென் மாநிலங்களில், தமிழகம் தவிர மற்ற மாநில மாணவர்கள், மத்திய அரசின் போட்டி தேர்வு களில், சிறந்த மதிப்பெண் பெறுகின் றனர். பழைய பாடத் திட்டத்தில் படிக்கும், தமிழக மாணவர்கள் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளனர். மாணவர்களின் எதிர்கால நலன் கருதி, பாடத் திட்டத்தை கால தாமதமின்றி மாற்ற, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
'வளர்ச்சிக்கு ஏற்ற மாற்றம் அவசியம்':
தற்போது அமலில் உள்ள, பிளஸ் 1, பிளஸ் 2 பாடத் திட்டத்தை, 2002ல் பள்ளிக் கல்வி இயக்கு னராக இருந்த எஸ்.பரமசிவன் தலைமையிலான கமிட்டி உருவாக்கியது. 'சிலபஸ்' மாற்றம் குறித்து, அவர் கூறியதாவது:
பிளஸ் 1, பிளஸ் 2 பாடத் திட்டத்தை 2002ல் உருவாக்கினோம். அது, 2006 முதல் அமலில் உள்ளது. நாங்கள் தயாரிக்கும் போது, இந்த பாடத் திட்டம் தரம்உயர்ந்ததாகவே இருந்தது. ஆனால், தற்போதைய வளர்ச்சிக்கு இந்த பாடத் திட்டத்தை மாற்ற வேண்டிய அவசியம் உள்ளது. 
எந்த ஒரு பாடத் திட்டத்தையும், அதிகபட்சம், ஐந்து ஆண்டுகளுக்குள் மாற்ற வேண்டும். சி.பி.எஸ்.இ., பாடத் திட்டம் ஆண்டுக்கு ஒரு முறை கூடுதல் தகவல்களுடன் மாற்றப் 
படுகிறது. எனவே, நம்முடைய பாடத் திட்டம், 10 ஆண்டுகளாக தொடர்வது சரியல்ல. நுழைவுத் தேர்வுகளுக்கு ஏற்ற வகையில் பாடத் திட்டத்தை மாற்ற வேண்டும். இவ்வாறு பரமசிவன் கூறினார்.

Friday 26 August 2016

பயோ மெட்ரிக் வருகைப் பதிவேடு பற்றி. நமது. தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழக மாநிலத் தலைவர் திரு. முனைவர் வே.மணிவாசகன் அவர்களின் கருத்து

பயோ-மெட்ரிக் வருகைப் பதிவேடு முறையை தலைமைச் செயலகம் முதல் அனைத்து அரசு அலுவலகங்களிலும் கொண்டுவர வேண்டும் என்று அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன.
அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் தங்கள் வருகை யைப் பதிவு செய்வதற்காக வருகைப் பதிவேட்டில் கையெழுத்திடும் முறை தற்போது நடைமுறையில் உள்ளது. இதை மாற்றிவிட்டு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வருகைப் பதிவேட்டுக்கு பயோ-மெட்ரிக் முறை அறிமுகப்படுத்தப்படும் என்று சட்டப் பேரவையில் முதல்வர் ஜெயலலிதா கடந்த செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.
பயோ-மெட்ரிக் முறை ஏற்கெனவே பரீட்சார்த்த முறையில் பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங் களில் சில அரசு பள்ளிகளில் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் பயோ-மெட்ரிக் முறை வருகைப் பதிவேடு அண்மையில் அறிமுகப்படுத்தப் பட்டது. பயோ-மெட்ரிக் முறை வந்தபிறகு பணியாளர்கள் குறிப்பிட்ட நேரத்துக்குள் பணிக்கு வந்துவிடுவதாக பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மத்திய அரசு அலுவலகங்களிலும் பயோ மெட்ரிக் வருகைப் பதிவேடு முறை படிப்படியாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பயோமெட்ரிக் வருகைப் பதிவேடு முறையை சென்னை தலைமைச் செயலகம் தொடங்கி அனைத்து அரசு அலுவலகங்களிலும் கொண்டுவர வேண்டும் என்று ஆசிரியர், அரசு ஊழியர் சங்கங்கள் வலியுறுத்துகின்றன. இது தொடர்பாக ஆசிரியர், மாணவர், அரசு ஊழியர் மற்றும் மாணவர் அமைப்பு நிர்வாகிகள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:
சாமி.சத்தியமூர்த்தி (தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்க மாநிலத் தலைவர்)
பயோமெட்ரிக் வருகைப் பதிவேடு திட்டம் வரவேற்கத்தக்கது. அதேநேரத்தில் கல்வித்துறை யில் மட்டுமின்றி அரசின் அனைத்து துறை அலுவலகங்களிலும் இதை நடைமுறைப்படுத்த வேண்டும். கிராமப்புறங்களில் உள்ள அரசு பள்ளி களுக்கு ஆசிரியர்கள் உரிய நேரத்தில் செல்ல வகைசெய்யும் வகையில் உரிய போக்குவரத்து வசதிகளை உறுதிசெய்த பிறகு பயோ-மெட்ரிக் முறையை தாராளமாக கொண்டுவரலாம்.
கே.மணிவாசகன் (தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழக மாநிலத் தலைவர்)
பள்ளிகளில் பயோ-மெட்ரிக் வருகைப் பதிவேடு முறையை கொண்டுவருவதால் அனைத்து ஆசிரியர்களும் குறிப்பிட்ட நேரத்துக்குள் பள்ளிக்கு வந்துவிடுவார்கள். பள்ளிக் கல்வித்துறையில் மட்டுமின்றி தலைமைச் செயலகம் உட்பட அனைத்து அரசு துறைகளுக்கும் இந்த முறையை கொண்டுவர வேண்டும். பள்ளிகளுக்கு மட்டும் கொண்டுவர முடிவு செய்திருப்பது சரியானதல்ல.
வி.மாரியப்பன் (இந்திய மாணவர் சங்க மாநிலத் தலைவர்)
தற்போதைய வருகைப் பதிவேட்டில் ஆசிரியர்கள் ஒவ்வொரு மாணவரையும் பெயர் சொல்லி அழைப்பார்கள். பயோ-மெட்ரிக் முறை வரும்போது ஆசிரியர்கள் மாணவர்களை பெயர் சொல்லி அழைக்கக்கூடிய உறவு இல்லாமல் போய்விடும். அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் எவ்வளவோ செய்யவேண்டியுள்ளது. இந்த பணிகள்தான் இப்போதைய தேவையே தவிர பயோ-மெட்ரிக் போன்ற கவர்ச்சிகரமான திட்டங்கள் அல்ல.
ஜெ. கணேசன் (தமிழ்நாடு தலைமைச் செயலக சங்க தலைவர்)
கடைநிலை ஊழியர் முதல் அரசு நிர்வாகம் தொடர்பான அனைவருக்கும் இந்த முறையை அமல்படுத்த வேண்டும். இந்த வருகைப் பதிவு முறை வந்தால் காலையில் 10 மணிக்கு வந்து மாலை 5.45 மணிக்கு பணிமுடித்து சென்றுவிடுவர். சில துறைகளில் இதில் நடைமுறை சிக்கல்கள் உள்ளன. போக்குவரத்து தொடர்பான பிரச்சினைகளால்தான் அலுவலகங்களுக்கு பணியாளர்கள் தாமதமாக வரும் சூழல் ஏற்படுகிறது. எனவே, நடைமுறைச் சிக்கல்களை ஆய்வு செய்து, அவற்றை தவிர்த்துவிட்டு இந்த வருகைப் பதிவு முறையை அமல்படுத்தலாம்.
ஆர்.தமிழ்ச்செல்வி (அரசு ஊழியர் சங்க மாநில தலைவர்)
நவீன தொழில்நுட்பத்தை அரசு நிர்வாகத்தில் புகுத்தும்போது அதற்கு ஊழியர்கள் தடையாக இருக்க கூடாது. 8 மணி நேரம் வேலை என்பது அமலானால், அலுவலர்களின் வருகை, வீட்டுக்கு நேரத்துக்கு செல்வதும் உறுதிப்படுத்தப்படும், அதே நேரம், தலைமைச் செயலகம் தவிர மற்ற துறைகளில், களப்பணி இருக்கும். எனவே, பயோ மெட்ரிக் கொண்டுவரும் போது, ஊழியர் சங்கங்களுடன் பேசி பணி ரீதியிலான நடைமுறைச் சிக்கல்களை முழுமையாக களைந்திட வேண்டும்.
கு.பாலசுப்பிரமணியன் (அகில இந்திய மாநில அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர்)
பயோ மெட்ரிக் வருகைப் பதிவு என்பது வரவேற்க கூடிய ஒன்றுதான். அதே நேரம் உயர் நிலை அதிகாரிகளுக்கும் அது பொருந்த வேண்டும். நிர்வாக பதவிகளில் இருக்கும் ஐஏஎஸ் அதிகாரிகளும் இந்த திட்டத்துக்குள் வரவேண்டும். அப்போதுதான் மற்ற ஊழியர்கள் திட்டத்தை புரிந்து கொண்டு செயல்படுவார்கள். பணியாளர்களுக்கு மட்டும் என கொண்டுவந்தால், அவர்கள் நசுக்கப்படுவதற்கு இது வழிவகுக்கும்.
பயோ-மெட்ரிக் முறை அடுத்த ஆண்டு அமல்
அரசு பள்ளிகளில் பயோ-மெட்ரிக் வருகைப் பதிவேடு முறையை கொண்டுவருவது குறித்து பள்ளிக்கல்வி இயக்கக உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, “முதற்கட்டமாக இதற்காக அனைத்து அரசு பள்ளிகளுக்கும் தேவையான பயோ-மெட்ரிக் இயந்திரங்கள் வாங்கப்பட வேண்டும். இந்த இயந்திரங்களை வாங்குவதற்காக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் மூலம் டெண்டர் விடப்படும். இந்தப் பணிகளை முடிவடைய ஏறத்தாழ 6 மாதங்கள் ஆகிவிடும். எனவே, அடுத்த கல்வி ஆண்டு (2017-2018) முதல் அரசு பள்ளிகளில் பயோ-மெட்ரிக் முறையை அமல் படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் பட்சத்தில் பள்ளிக்கு தாமதமாக வரும் ஆசிரியர்கள், மாணவர்கள் மீதான நடவடிக்கைகள் தொடர்பான விதிமுறைகள் இனிமேல்தான் வகுக்கப்படும்” என்றார்.
பழிவாங்க கூடாது
டெல்லியில் மத்திய தலைமைச் செயலகத்தில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பயோ-மெட்ரிக் வருகைப் பதிவேடு முறையில், வருகை, திரும்பி செல்லும் நேரம் மட்டுமே கணக்கில் எடுக்கப் பட்டு வருகிறது. அதே நேரம் சில துறைகளில், வருகைப் பதிவு கண்காணிக்கப்பட்டு, நேரம் தவறும் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, பழிவாங்கப்படுவதாகவும் மத்திய அரசு ஊழியர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். தற்போது. மத்திய அரசைப் போன்று தமிழக அரசும் பயோ-மெட்ரிக் முறையை பின்பற்ற முடிவெடுத்திருக்கும் நிலையில், ஆட்சியாளர்களும் இந்த கட்டுப்பாட்டுக்குள் வர வேண்டும். வேலைநேரம் அதிகரிக்காமல் இருப் பதற்கு, காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், பழிவாங்கும் நடவடிக்கையும் இருக்கக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளும் பணியாளர்கள் சங்கங்கள் சார்பில் முன் வைக்கப்படுகின்றன.

Tuesday 23 August 2016

ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு Bio-Metric வருகைப் பதிவேடு முறை அறிமுகம் முதல்வர் அறிவிப்பு






நல்லாசிரியர் விருதுக்கான பரிசுத் தொகை ரூ.10 ஆயிரமாக உயர்வு: ஜெயலலிதா அறிவிப்பு

தமிழக அரசால் வழங்கப்படும் நல்லாசிரியர் விருது பெறுவோருக்கு வழங்கப்படும் பரிசுத் தொகை ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்படுவதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் அவர் அறிவித்ததாவது,

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களை ஊக்குவிக்கும் வகையில் நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது.

நல்லாசிரியர் விருது பெறும் ஆசிரியர்களுக்கு பரிசுத் தொகை ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது.

நல்லாசிரியர் விருது பெற ஆசிரியர்களை ஊக்கப்படுத்தும் வகையில் இந்த தொகை உயர்த்தப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்

Monday 22 August 2016

2,100 ஆசிரியர்களுக்கு விருப்ப இடமாறுதல்

          முதுகலை ஆசிரியர்களுக்கான கவுன்சிலிங்கில், இரண்டு நாட்களில், 2,100 பேருக்கு விருப்ப இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
 
        அரசு தொடக்கப் பள்ளி மற்றும் பள்ளிக் கல்விஆசிரியர்களுக்கு, இம்மாதம், 3ம் தேதி முதல், விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங் நடந்து வருகிறது. இந்த ஆண்டு, ஆசிரியர் காலியிடங்களை மறைக்காமல், வெளிப்படையாக, கவுன்சிலிங் நடத்துவதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
 
           நேற்று முன்தினம், 1,277 முதுகலை ஆசிரியர்களுக்கு, ஒரே மாவட்டத்திற்குள் இடமாறுதல் வழங்கப்பட்டது; நேற்று, 826 ஆசிரியர்களுக்கு, மாவட்டம் விட்டு மாவட்டத்திற்கு, இடமாறுதல் அளிக்கப்பட்டதாக, பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

Saturday 20 August 2016

PG VACANCY MADURAI ON 20 8 16




TAMIL              3     ELUMALAI B       ELUMALAI B      M.KALLUPATTI 

ENGLISH         3     MANGALAMPATTI ,SEKIPATTI,          USILAMPATTI   

MATHS             1     PERAIYUR G

PHYSICS          0    

CHEMISTRY   3     M.KALLUPATTI, MANGALAMPATTI, KOTTAMPATTI

BIOLOGY        2     POTTAPPATTI   ,THIRUVATHAVUR

BOTANY          2     ELUMALAI B,KOTTAMPATTI

ZOOLOGY       3     PALAMEDU,KOTTAMPATTI ,    PERAIYUR B

COMMERCE 4     M.KALLUPPATTI, USILAMPATTI, SARUGUVALAYAPATTI,              

ECONOMICS 6     SARUGUVALAYAPATTI, M.PULIANGULAM, M.KALLUPATTI,    KARUNGALAKKUDI B   ELUMALAI B ELUMALAI           G

HISTORY        4     ELUMALAI B, MANGALAMPATTI, P.AMMAPATTI,VELLALUR,

GEOGRAPHY 5    KOTTAMPATTI, VELLALUR, ELUMALAI B,MELUR B, ALANGANALLUR,B

COMP.SC        1     KARUNGALAKKUDI B

Tuesday 16 August 2016

பள்ளிக் கல்வித்துறையில் சிறந்த பணிக்கு விருது

மதுரை மாவட்டத்தில் பள்ளிக் கல்விதுறையில் சுதந்திர தின விழா அன்று சிறந்த பணிக்காக பல்வேறு ஆசிரியர்களுக்கு அரசு விருதுகள் வழங்கப்பட்டன. 
செல்வராஜ், தலைமையாசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, திருவாதவூர்.
அழகிரிசாமி, தலைமையாசிரியர், அரசு கள்ளர் உயர்நிலைப் பள்ளி, கப்பலூர்.
பால்தாஸ், அரசு உயர்நிலைப் பள்ளி, சத்தியமூர்த்தி நகர்.
செங்கதிர், உடற்கல்வி இயக்குனர், ஏ.எஸ். மேல்நிலைப் பள்ளி, சோழவந்தான்.
விஜிந்தா, முதுநிலை பட்டதாரி ஆசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி, வெள்ளையம்பட்டி.
சந்திரசேகரன், உடற்கல்வி ஆசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, பி.அம்மாபட்டி.
அமுதா, இடைநிலை ஆசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி, பேரையூர்.
ராம்பிரகாஷ், ஆய்வக உதவியாளர், அரசு உயர்நிலைப் பள்ளி, விராதனூர்.

அனைவருக்கும் வாழ்த்துக்கள்