news

முதுகலை ஆசிரியர்க்காக போராடக்கூடிய ஒரே அமைப்பு TNHSPGTA ***** நமது சங்கத்தின் உறுப்பினர் ஆகுங்கள் ******சங்க செயல் பாடுகளை தெரிந்துகொள்ள மேல்நிலைக்குரல் படியுங்கள் ******தங்கள் பள்ளி நிகழ்வுகளை அமைப்போடு பகிர்ந்துகொள்ளுங்கள்*****அனைத்து முதுகலை ஆசிரியர்களின் பங்களிப்பே அமைப்பு வளர்ச்சிக்கு உதவும்

Friday 29 July 2016

தலைமை ஆசிரியர்கள் நிலையில் இருந்து மாவட்டக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு 41 புதிய மாவட்டக் கல்வி அலுவலர் அவர்களின் பெயர் பட்டியல்


பள்ளிக் கல்வித் துறையில் மாவட்டக் கல்வி அலுவலர்கள் காலிப் பணியிடங்கள், அதற்கு இணையான காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.
அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் பதவி உயர்வு மூலம் மாவட்டக் கல்வி அலுவலர்களாக 41 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் எஸ்.கண்ணப்பன் வெள்ளிக்கிழமை பிறப்பித்துள்ளார்.
புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர்கள் குறித்த விவரம்
1. என்.சுப்பிரமணியன், மாவட்டக் கல்வி அலுவலர்,திருவாரூர்
2. மு.மணிமேகலை, மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்,தஞ்சாவூர்
3. எம்.எஸ்.மல்லிகா, மாவட்டக் கல்வி அலுவலர், ஓசூர்
4.ஆர்.கலைச்செல்வன், மாவட்டக்கல்விஅலுவலர், கோபிசெட்டிப் பாளையம்
5. ஆர்.சண்முகம், மாவட்டக் கல்வி அலுவலர், திருச்சி
6. பி.வி.சாவித்திரி, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்,திருவாரூர்
7. இ.மொக்கத்துரை, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர், தேனி
8. கே.வீரேஸ்வரன்நாயர், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர், நாகர்கோவில்
9. கே.சங்கரநாராயணன், மாவட்டக் கல்வி அலுவலர், சேலம்
10. எஸ்.தமிழரசி, மாவட்டக் கல்வி அலுவலர், செங்கல்பட்டு
11. ஆர்.சௌந்தரநாயகி, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர், தூத்துக்குடி
12. எஸ்.கற்பகவல்லி, மாவட்டக் கல்வி அலுவலர், காஞ்சிபுரம்
13. ஏ.கே.கங்காதரரெட்டி, மாவட்டக் கல்வி அலுவலர், பொன்னேரி
14. ஆர்.லோகநாதன், மாவட்டக் கல்வி அலுவலர், உசிலம்பட்டி
15. கா.பழனிச்சாமி, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர், தர்மபுரி
16. என்.விசாகமூர்த்தி, மெட்ரிக் பள்ளி ஆய்வாளர், காஞ்சிபுரம்
17. ஜி.லில்லிபுஷ்பராணி, மாவட்டக் கல்வி அலுவலர், திருவள்ளூர்
18. கே.தேன்மொழி, மாவட்டக் கல்வி அலுவலர், கோவை
19. கே.அருளரங்கன், மாவட்டக் கல்வி அலுவலர், நாமக்கல்
20. என்.சரஸ்வதி, ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் ஆய்வாளர், சென்னை
21. சி.செல்வராசு, மாவட்டக் கல்வி அலுவலர், சங்ககிரி
22. எம்.பரிமளம், மாவட்டக் கல்வி அலுவலர், மத்திய சென்னை
23. இ.செந்தமிழ்ச்செல்வி, உதவி இயக்குநர், தொடக்கக் கல்வி இயக்ககம், சென்னை
24. ஆர்.எத்திராஜூலு, மாவட்டக் கல்வி அலுவலர், சென்னை வடக்கு
25. அ.பாலுமுத்து, மாவட்டக் கல்வி அலுவலர், பெரியகுளம்
26. ஆர்.எடிசன், மாவட்டக் கல்வி அலுவலர், சென்னை கிழக்கு
27. ஐ.முகம்மதுஅயூப், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர், திருச்சி
28. எஸ்.ஆஷா கிறிஸ்டி எமெரால்ட், மாவட்ட தொடக்க கல்விஅலுவலர், நாகப்பட்டினம்
29. ஏ.செல்வராஜ், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர், நீலகிரி
30. கே.தங்கவேல், மாவட்டக் கல்வி அலுவலர், கரூர்
31. டி.பாலசுப்பிரமணியன், மாவட்டக் கல்வி அலுவலர், பரமக்குடி
32. எஸ்.முருகேசன், மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர், மதுரை
33. ஆர்.ஜெயபாண்டி, மாவட்டக் கல்வி அலுவலர், திருநெல்வேலி
34. எம். செல்வராஜ், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்,கரூர்
35. எஸ்.வளர்மதி, மாவட்டக் கல்வி அலுவலர், பட்டுக்கோட்டை
36. ஜி.ஜெயராஜ், மாவட்டக் கல்வி அலுவலர், சேரன்மகாதேவி
37. எம்.அன்புக்கரசி, ஒருங்கிணைப்பாளர், எஸ்எஸ்ஏ, சென்னை.
38. அ.ராமகிருஷ்ணன், மாவட்டக் கல்வி அலுவலர், விருதுநகர்
39. எம்.எஸ்.உமா, மாநகராட்சி கல்வி அலுவலர், கோவை
40. மு.வேலம்மாள், மாவட்ட தொடக்கக் கல்விஅலுவலர், விருதுநகர்
41. த.சுப்பிரமணியன், மாவட்டக் கல்வி அலுவலர், நாகப்பட்டினம்


CLICK HERE

மத்திய அரசு ஊழியர்களுக்கான ஏழாவது ஊதியக்குழு அறிக்கை மீதான நிதித்துறை தீர்மானம் - அரசிதழில் வெளியீடு

COMMITTEE – Expert Committee on the Demand for Continuing Old Pension Scheme – Modification in the Composition and Extension of Term of the Expert Committee – Orders - Issued



Monday 25 July 2016

பதவி உயர்வு மூலம் முதுகலை ஆசிரியராக செல்பவர் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியராக மீண்டும் ஓராண்டு பட்டதாரி ஆசிரியராக பணி புரியவேண்டும்.பள்ளிக் கல்வி இயக்குனர் செயல்முறை வெளியீடு.நமது அமைப்புக்கு கிடைத்த வெற்றி.




மதுரை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலருடன் 25.7.16 அன்று சந்திப்பு

TNHSPGTA மாநில பொதுச்செயலாளர் இரா.பிரபாகரன் தலைமையில் மதுரை மாவட்ட பொறுப்பாளர்கள் இன்று முதன்மைக்கல்வி அலுவலரை  சந்தித்து  மாவட்ட பிரச்சனைகள் குறித்து  பேசப்பட்டது
1.பலமுறை வேண்டுகோள் விடுத்தும்  கடந்த ஆண்டுக்கான செயமுறைத் தேர்வு நிலுவைத் தொகை வழங்கப்படாதது குறித்து அதிருப்தி தெரிவிக்கப்பட்டது. ஓரிரு நாள்களில் காசோலை வழங்க ஏற்பாடுசெய்வதாக பதில் தெரிவிக்கப்பட்டது
11 வகுப்பு பொதுத் தேர்வுக்கான உழைப்பூதியமும்  வழங்கப்படவில்லை என்று சுட்டிக்காட்டப்பட்டது
2.தணிக்கைத் தடை என்ற பெயரில் 1.6.2016ல் பத்தாண்டுகள் பணிநிறைவு செய்தவர்களுக்கு தேர்வுநிலை வழங்காமல் காலம் தாழ்த்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது
3.பணியிட  மாறுதலுக்கான  கலந்தாய்வில் அனைத்து இடங்களும் காண்பிக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டது
4.பொறுப்பு தலைமையாசிரியர்களாக பணியாற்றும்  முதுகலை ஆசிரியர்களுக்கு  பொறுப்புப் படி வழங்கவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது
உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வதாக முதன்மைக்கல்வி அலுவலர் தெரிவித்தார் 

Friday 22 July 2016

DSE; PAY ORDER FOR 675 PG POSTS FOR GO NO 142,143,157,159,177,183,199,236,228,42,226 AND LETTER NO 028623




7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த உயர்மட்ட குழு. தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு

   சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. காலை 11 மணிக்கு பேரவையில் 2016-17-ம் ஆண்டுக்கான திருத்திய நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர்ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
 
          அப்போது அவர் கூறுகையில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன்பெறும் வகையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டது போல் தமிழக அரசு ஊழியர்களுக்கும் 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை ஆராய்ந்து அமல்படுத்த உயர்மட்ட அலுவலர் குழு அமைக்கப்படும் என்று கூறினார்.

Tuesday 19 July 2016

பொது மாறுதல் விண்ணப்ப படிவம்

தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பொதுமாறுதல் விண்ணப்பங்கள் அனுப்பி வைப்பது சார்பாக அனுப்பப்பட்ட விண்ணப்பப் படிவத்தினை பெற்று Online  ல் பதிவேற்றம் செய்ய இருப்பதால் விண்ணப்பத்தில் கலம் 1ல் ஆசிரியர் பெயர்ஆங்கிலத்தில் (தலைபெழுத்தில் பெயர் குறிப்பிட்டு) அனுப்பி வைக்க வேண்டும்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

மாணாக்கர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் நடப்பு கல்வியாண்டில் மேல்நிலைப்பள்ளிகளுக்கு கூடுதலாக 1600 முதுகலை ஆசிரியர்களை நியமிக்க அரசிடம் அனுமதி கோரி இருப்பதாக பள்ளிக்கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன் தகவல் தெரிவித்துள்ளார்

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின்(TNHSPGTA)  வழக்கின் காரணமாகவும், நமது மாநிலத்தலைவர் வே.மணிவாசகன் எடுத்த முயற்சியின் அடிப்படையிலும்   , மாணாக்கர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் நடப்பு கல்வியாண்டில் மேல்நிலைப்பள்ளிகளுக்கு கூடுதலாக 1600 முதுகலை ஆசிரியர்களை நியமிக்க அரசிடம் அனுமதி கோரி இருப்பதாக  பள்ளிக்கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன் தகவல் தெரிவித்துள்ளார். 
 

பள்ளிக்கல்வி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு தேதிகள் அறிவிப்பு

பள்ளிக்கல்வித்துறை
6.8.16 - மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் மாறுதல் கலந்தாய்வு  
7.8.16 - மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு 
13.8.16 - உயர் நிலைப் பள்ளி தலைமையாசிரியர் மாறுதல் 
20.8.16 - முதுகலை ஆசிரியர் மாறுதல் (மாவட்டத்திற்குள்)
21.8.16 - முதுகலை ஆசிரியர் மாறுதல் (மாவட்டம் விட்டு மாவட்டம்)
22.8.16 - முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு
23.08.16 - உடற்கல்வி, இடை நிலை, தையல் ஆசிரியர் மாறுதல் (மாவட்டத்திற்குள்)
24.08.16 - உடற்கல்வி, இடை நிலை, தையல் ஆசிரியர் மாறுதல் (மாவட்டம் விட்டு மாவட்டம்)
27.8.16 முதல் 29.8.16 வரை பட்டதாரி ஆசிரியர் பணி நிரவல்
03.9.16 - பட்டதாரி ஆசிரியர் மாறுதல் (மாவட்டத்திற்குள்)
04.9.16 - பட்டதாரி ஆசிரியர் மாறுதல் (மாவட்டம் விட்டு மாவட்டம்)
06.9.16 - பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு


மாறுதல் விண்ணப்பங்கள் ஜுலை 19 முதல் 28 வரை விண்ணப்பிக்கலாம்

கலந்தாய்வு விதிகள் மற்றும் படிவம் பதிவிறக்கம் செய்ய இங்கே அழுத்தவும்  

Wednesday 13 July 2016

பழைய பென்சன் திட்ட ஆய்வு வல்லுநர் குழுவின் அறிக்கை தாக்கல் எப்போது?- கெடு முடிந்ததால் ஏமாற்றத்தில் அரசு ஊழியர்கள் - தி இந்து நாளிதழ்



பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்துவது குறித்து ஆராய அமைக்கப்பட்ட வல்லுநர் குழு, 5 மாதங்கள் ஆகியும் அரசு ஊழியர், ஆசிரியர் சங்க நிர்வாகிகளை இன்னும் சந்திக்கவில்லை. வல்லுநர் குழு அறிக்கை சமர்ப்பிக்க நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடு முடிவடைந்து விட்டதால் அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் கடந்த 2003-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதிக்கு பிறகு அரசுப் பணியில் சேர்ந்த ஊழியர்கள், ஆசிரியர்கள் அனைவரும் புதிய பென்சன் திட்டத்தில் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.

புதிய பென்சன் திட்டத்தின்படி, அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம், தர ஊதியம் (கிரேடு பே), அகவிலைப்படி ஆகியவற்றின் கூட்டுத்தொகையில் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்படுகிறது. இதற்கு சமமான தொகையை அரசு தன் பங்காகச் செலுத்துகிறது. இதற்காக ஒவ்வொரு அரசு ஊழியருக்கும் சிபிஎஃப் எனப்படும் பிரத்யேக எண் அளிக்கப்பட்டு அந்தக் கணக்கில் இந்த தொகை வரவு வைக்கப்படுகிறது.

இவ்வாறு சிபிஎஃப் கணக்கில் சேரும் தொகையானது அரசு ஊழியர் ஓய்வு பெறும்போது 60 சதவீதம் திருப்பிக் கொடுக்கப்படும். மீதமுள்ள 40 சதவீத தொகை, பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்பட்டு ஓய்வூதியமாக வழங்கப்படும்.

பழைய பென்சன் திட்டத்தில் ஒரு அரசு ஊழியருக்கு அவரது பணி அனுபவத்துக்கு ஏற்ப எவ்வளவு பென்சன் கிடைக்கும் என்பதை துல்லியமாக சொல்லிவிடலாம். ஆனால், புதிய பென்சன் திட்டத்தில் இவ்வளவு பென்சன் கிடைக்கும் என்ற உத்தரவாதம் கிடையாது. எனவேதான், புதிய பென்சன் திட்டத்தை அரசு ஊழியர்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். தமிழகத்தில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் புதிய பென்சன் திட்டத்தில் உள்ளனர்.

இந்நிலையில், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்வது, அரசு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் கடந்த பிப்ரவரி 10-ம் தேதி தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டம் 10 நாட்கள் நீடித்த நிலையில், முதல்வர் ஜெயலலிதா பிப்ரவரி 19-ம் தேதி சட்டப்பேரவையில் விதி எண் 110-என் கீழ் ஓர் அறிவிப்பை வெளியிட்டார். அரசு ஊழியர்களுக்கு பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்துவது குறித்து ஆராய வல்லுநர் குழு அமைக்கப்படும் என்று அறிவித்தார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து அரசு ஊழியர்களின் 10 நாள் போராட்டம் முடிவுக்கு வந்தது.

வல்லுநர் குழு

இந்நிலையில், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியும் மாநில திட்டக்குழு துணைத் தலைவருமான சாந்தா ஷீலா நாயர் தலைமையில் பிப்ரவரி 26-ம் தேதி தமிழக அரசு ஒரு வல்லுநர் குழுவை அமைத்தது. நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கே.சண்முகம், சென்னை பொருளியல் பள்ளி பேராசிரியர்கள் கே.வி.பார்த்தசாரதி, லலிதா சுப்ரமணியம் ஆகியோர் உறுப்பினர்களாகவும், திட்டம், மேம்பாடு சிறப்பு முயற்சிகள் துறையின் செயலாளர் எஸ்.கிருஷ்ணன் உறுப்பினர் செயலாளராகவும் நியமிக்கப்பட்டனர். இதற்கான அரசாணை (எண் 65) 26.2.2016 அன்று வெளியிடப்பட்டது. இந்த வல்லுநர் குழு, அரசு ஊழியர்களுக்கு பழைய பென்சன் திட்டத்தை தொடர்வது குறித்து ஆராயும் என்றும், தனது அறிக்கையை 4 மாதங்களுக்குள் (ஜூன் 26-க்குள்) சமர்ப்பிக்கும் என்றும் அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், வல்லுநர் குழு அமைக்கப்பட்டு சுமார் 5 மாதங்கள் ஆகியும் இன்னும் அந்த குழு அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகளை சந்திக்கவில்லை. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், அனைத்து ஆசிரியர் முன்னேற்றப் பேரவை, ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு ஆகிய அமைப்புகள் அளித்த மனுக்களை மட்டும் கடந்த ஏப்ரல், ஜூன் மாதங்களில் பெற்றுள்ளது.

திண்டுக்கல்லை சேர்ந்த பி.பிரெடெரிக் ஏங்கல்ஸ் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்டிருந்த விளக்கம் மூலம் இந்த விவரங்கள் தெரியவந்துள்ளது. அறிக்கை சமர்ப்பிப்பதற்கான காலக் கெடு ஜூன் 26-ம் தேதி முடிவடைந்த நிலையில், இதுவரை அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகளை வல்லுநர் குழு சந்திக்காதது அவர்களை அதிர்ச்சியும் ஏமாற்றமும் அடையச் செய்துள்ளது.

வல்லுநர் குழு அமைத்தது, உண்மையிலேயே அரசு ஊழியர்களுக்கு பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட முயற்சியா அல்லது அரசு ஊழியர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்காக மேற்கொள்ளப்பட்ட தற்காலிக ஏற்பாடா என்று அரசு ஊழியர்கள் மத்தியில் ஐயம் எழுந்துள்ளது.

வல்லுநர் குழு அறிக்கை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டதா, இல்லையா என்பது குறித்தும் அரசு அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை. இதற் கிடையே, வல்லுநர் குழுவின் தலைவரான சாந்தா ஷீலா நாயர், அண்மையில் முதல்வரின் தனிப்பிரிவு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

அரசே அறிவிக்கலாம்

இந்த பிரச்சினை குறித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலப் பொதுச்செயலாளர் இரா.பாலசுப்பிரமணியனிடம் கேட்டபோது, "வல்லுநர் குழு அறிக்கை சமர்ப்பித்ததா, அறிக்கை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டதா என்பது குறித்து ஒன்றுமே தெரியவில்லை.

அரசு வல்லுநர் குழு அமைத்ததே இந்தப் பிரச்சினையை தள்ளிப்போட வேண்டும் என்பதற்காகத்தான். புதிய பென்சன் திட்டம் தொடர்பாக ஓய்வூதிய ஒழுங்குமுறை மேம் பாட்டு ஆணையத்திடம் (பிஎப்ஆர்டிஏ) தமிழக அரசு இன்னும் புரிந்துணர்வு ஒப்பந்தம்கூட போட வில்லை.

அதனால், அரசு ஊழியர் களிடமிருந்து பிடித்தம் செய்யப்பட்ட தொகை அந்த அமைப்பிடம் இதுவரை செலுத்தப்படவில்லை. எனவே, தமிழக அரசு நினைத்தால் பழைய பென்சன் திட்டத்தை உடனடியாக அறிவித்துவிடலாம்" என்றார்.

தமிழக மேல்நிலைப் பாடத் திட்டம் மேம்படுத்தப்படுமா? - தினகரன் 7.7.16 நாளிதழில் நமது மாநிலத் தலைவர் பேட்டி

   ஐ.ஐ.டியில் தேர்வதற்கான JEE தேர்வுகள், அகில இந்திய மருத்துவ இடங்களுக்கான AIPMT தேர்வு உள்பட அகில இந்திய அளவிலான அத்தனை நுழைவுத்தேர்வுகளிலும் தமிழக மாணவர்கள் தொடர்ந்து பின்தங்குகிறார்கள். அண்டை மாநிலங்களில் இருந்து ஏராளமான மாணவர்கள் தேர்வாகும் நிலையில், தமிழக மாணவர்கள் பின்தங்குவதற்கு காரணம், கடந்த பத்தாண்டுகளாக மேல்நிலைப் பாடத் திட்டங்கள் மாற்றப்படாதது தான் என்று குமுறுகிறார்கள் கல்வியாளர்கள்.
தமிழகத்தில், ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை பாடத் திட்டங்களை கால மாறுதல்களுக்கேற்ப மாற்றியமைப்பது நடைமுறை. பேராசிரியர்களைக் கொண்டு குழு அமைத்து புதிய பாடத் திட்டங்களை வகுப்பார்கள். +1, +2 படிப்புகளுக்கான பாடத்திட்டங்கள் 2006ம் வருடம் மாற்றியமைக்கப்பட்டது. நடைமுறைப்படி, 2011ல் இந்தப் பாடத்திட்டத்தை மாற்றியிருக்க வேண்டும். ஆனால், இன்றளவும் மாணவர்களை அந்த பழைய பாடங்களைத் தான் மாணவர்கள் படித்து வருகிறார்கள். அகில இந்திய நுழைவுத்ேதர்வுகள் மட்டுமின்றி, தமிழக பொறியியல், மருத்துவ சேர்க்கையிலும் மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்கள் பின்தங்கியே இருக்கின்றனர்.
‘‘தமிழக மேல்நிலைப் பாடத்திட்டம் மிகவும் பின்தங்கியிருப்பது உண்மை தான்... ஐந்து வருடத்திற்கு ஒருமுறை பாடத்திட்டத்தை மாற்ற வேண்டும். 2012ல் அதற்காக ஒரு குழுவை தமிழக அரசு அமைத்தது. ஆனால் புதிய பாடத்திட்டம் இப்போது வரை நடைமுறைக்கு வரவேயில்லை...’’ என்கிறார் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் மணிவாசகன்.
 
‘‘ நம் பாடத்திட்ட முறையை மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (எஸ்.சி.இ.ஆர்.டி) தான் உருவாக்குகிறது.
ஆனால் பெரும்பாலான மாநிலங்கள் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் (என்.சி.இ.ஆர்.டி)  பாடத்திட்டங்களையே பின்பற்றுகிறார்கள். அதனால், கல்வியில் சீராக முன்னேறி வருகிறார்கள். முதலில், நம் பாடத்திட்ட முறையில் மாற்றம் கொண்டு வரவேண்டும். தமிழ், வரலாறு தவிர்த்து மற்ற பாடங்களுக்கு என்.சி.இ.ஆர்.டி பாடத்திட்டத்தைக் கொண்டு வர வேண்டும். அதில், தமிழ்வழி மாணவர்களுக்கு அறிவியல், கணக்கு பாடங்களை மொழிமாற்றம் செய்து தரவேண்டும். ஆந்திராவில் 20 வருடங்களுக்கு முன்னாடியே இதை அறிமுகப்படுத்தி விட்டார்கள்.
ஆனால், நாம் இன்னும் பின்தங்கியே இருக்கிறோம். இந்தமுறை நம் மாநிலப் பாடத்திட்டத்தில் படித்தவர்கள், வெகு சிலரே ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். அதற்குக் காரணம் நம் பாடத்திட்டம்தான். பொதுத்தேர்வு கேள்வி முறையிலும் மாற்றம் தேவைப்படுகிறது.என்றால் என்ன?’, ‘சமன்பாட்டை விவரி?’ என்று புத்தகத்தில் இருப்பதை மனப்பாடம் செய்து எழுதுவதால் மாணவன் சிந்திக்க இடமே இல்லாமல் போய்விடுகிறது. அறிவியல் தேர்வெழுதும் மாணவர்கள் அதிலுள்ள கணக்கு சம்பந்தமான கேள்வியை தவிர்த்து விடுகிறார்கள். ஆசிரியர்களே அக்கேள்விகளைத் தவிர்க்கும்படி மாணவர்களுக்கு வழிகாட்டுகிறார்கள்.   
கேள்விகளை புரிந்துகொண்டு பதில் எழுதும் வகையில் தேர்வு அமைய வேண்டும். அதுதான் எந்தவொரு இடத்திலும் தனித்தன்மையோடு மாணவர்கள நிற்க வைக்கும். ஆசிரியர்களுக்கும் தரமான பயிற்சிகளை வழங்க வேண்டும். இந்த மூன்றையும் செய்தால் தான் தேசிய அளவில் தமிழக மாணவர்கள் கவனம் பெற முடியும்...” என்கிறார் அழுத்தமாக!
ஐ.ஐ.டி.க்களில் சேர்ப்பதற்காக முதல்கட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 31,000 மாணவர்களில் வெறும் 60 மாணவர்கள் மட்டுமே தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தைப் படித்தவர்கள். இதன்மூலம் ஐ.ஐ.டி நுழைவுத்தேர்வில் கலந்து கொண்ட 12 மாநிலப் பாடத் திட்டங்களில் தமிழகப் பாடத்திட்டம் தான் 0.2% தேர்ச்சியுடன் கடைசி இடத்தைப் பிடித்திருக்கிறது. தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்திலிருந்து தேர்ச்சி பெற்ற 60 மாணவர்களில் எத்தனை பேருக்கு ஐ.ஐ.டிக்களில் சேர இடம் கிடைக்கும் என்பது தெரியவில்லை.
கடந்த ஆண்டில் தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த 33 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். அவர்களில் 9 பேர் மட்டுமே ஐ.ஐ.டிக்களில் சேர முடிந்தது. இம்முறை கடந்த ஆண்டை விட அதிக எண்ணிக்கையிலானவர்கள் தேர்ச்சி பெற்றுள்ள போதிலும், தகுதி மதிப்பெண் அடிப்படையில் பார்த்தால் கடந்த ஆண்டை விட குறைந்த மாணவர்கள் தான் ஐ.ஐ.டியில் சேரமுடியும்.
அதேநேரத்தில், சி.பி.எஸ்.இ மாணவர்கள்  53% அளவுக்கு (16,430 பேர்) ஐ.ஐ.டிக்களில் சேர தகுதி பெற்றுள்ளனர். தெலுங்கானா மாநிலப் பாடத்திட்ட மாணவர்களில் 2293 பேரும்(7.7%), மராட்டியப் பாடத்திட்ட மாணவர்களில் 2077(6.7%) பேரும், ராஜஸ்தான் மாநிலப்பாடத்திட்ட மாணவர்களில் 2015(6.5) பேரும், ஆந்திர மாநில பாடத்திட்ட மாணவர்களில் 1307 (4.21%) பேரும் ஐ.ஐ.டிக்களில் சேர தகுதி பெற்றுள்ளனர். தமிழகத்தில் சி.பி.எஸ்.இ மாணவர்கள் 555 பேர் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், அவர்களில் சுமார் 10% மாணவர்கள் மட்டுமே தமிழகப் பாடத்திட்டத்திலிருந்து தேர்ச்சி பெற்றிருப்பது பெருமைக்குரியதல்ல.
மிகவும் பின்தங்கிய மாநிலம் என்று விமர்சிக்கப்படும் பிகார் மாநிலப் பாடத் திட்டத்திலிருந்து 900 மாணவர்கள் இந்த நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆனால், பிகார் மாநிலப் பாடத்திட்டத்தை விட 15 மடங்கு குறைவான தேர்ச்சியையே தமிழகப் பாடத்திட்டம் பெற்றிருக்கிறது. அடுத்த ஆண்டு முதல் மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.  பொறியியல் படிப்புகளுக்கும் பொது நுழைவுத்தேர்வு கட்டாயமாக்கப்படும் என்பதால் அதை எதிர்கொள்ள தமிழக மேல்நிலைப் பாடத்திட்டத்தை மேம்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுகிறார்கள் கல்வியாளர்கள்.