news

முதுகலை ஆசிரியர்க்காக போராடக்கூடிய ஒரே அமைப்பு TNHSPGTA ***** நமது சங்கத்தின் உறுப்பினர் ஆகுங்கள் ******சங்க செயல் பாடுகளை தெரிந்துகொள்ள மேல்நிலைக்குரல் படியுங்கள் ******தங்கள் பள்ளி நிகழ்வுகளை அமைப்போடு பகிர்ந்துகொள்ளுங்கள்*****அனைத்து முதுகலை ஆசிரியர்களின் பங்களிப்பே அமைப்பு வளர்ச்சிக்கு உதவும்

Thursday 17 March 2016

14.03.2016 அன்று சீதாலட்சுமி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மேல்நிலை / இடைநிலை பள்ளி விடுப்பு சான்றிதழ் பொதுத் தேர்வுகள் தொடர்பாக, இணை இயக்குநர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்


1.தேர்வு மையங்களில் மாணவ / மாணவியர்களுக்கு வழங்கப்பட்ட வினாத்தாட்கள் போக மீதமுள்ள வினாத்தாள்கள் சேகரிக்கப்பட்டு மீண்டும் உறையில் ஒட்டி அரக்கு முத்திரை வைத்து பின்பு அலமாரியில் வைத்து முத்திரையிடப்பட வேண்டும்.

2.சில மையங்களில் கட்டுப்பாட்டு அறையானது, உயிரியல் ஆய்வகம் போன்ற இடங்களில் செயல்படும் பொழுது சுவர்களில் உள்ள பாடம் சார்ந்த வரைபடங்கள், விபரங்கள் மறைத்து வைக்கப்பட வேண்டும்.

3.விடைத்தாளின் முகப்புத் தாளில் உள்ள Part C யில் உள்ள வினாத்தாள் வகை குறியீடு ( A/B) குறிக்கப்பட வேண்டும்.

4.ஒரு சில மையங்களில் தேர்வு நேரங்களில் தேனீர் விநியோகிக்கப்படுவதை முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.

5.பெண் குழந்தைகள் எழுதும் மையங்களில் ஆண் பறக்கும் படை உறுப்பினர்கள் செயல்பட கூடாது.

6.உடல் நலம் பாதிக்கப்பட்ட (அம்மை போன்ற நோய்) மாணவர்களுக்கு போதிய வசதியுடன் கூடிய தனி அறை ஒதுக்கப்பட வேண்டும். எக்காரணம் கொண்டும் வராண்டாவில் அமர வைக்கக்கூடாது.

7.சொல்வதை  எழுதுபவர்களை நியமிக்கும் பொழுது அவர்கள் பணிபுரியும் ஆசிரியர்களின் பள்ளிகளுக்கு நியமனம் செய்யப்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்.

8.அருள் மலர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி துணைத் தேர்வு மையத்திற்கு மந்தணக் கட்டுக்கள் வழிதட அலுவலரே, உரிய காவலர் வசதியுடன் பாதுகாப்பாக எடுத்துச் செல்லவேண்டும்.  ஆய்வு அலுவலர்கள் எடுத்துச் செல்வதை தவிர்க்க வேண்டும்.

9.அனைத்து மையங்களிலும், கழிவறைகள் சுத்தமாகவும், சுகாதாரமாகவும், பராமரிப்பு பணியாளர்களைக் கொண்டு பராமரிக்கப்பட வேண்டும்.   இதை கண்காணிக்க பதிவேடு ஒன்று பராமரிக்கப்பட வேண்டும்.

10.பறக்கும் படை உறுப்பினர்களாக செயல்படும் ஆசிரியர்களின் குழந்தைகள் / உறவினர்கள் எவரும் அவர்கள் செல்லும் மையங்களில் தேர்வு எழுத வில்லை என்பதை உறுதி செய்யப்பட வேண்டும்.

11.நகல் எடுக்கும் இயந்திரம் (Xerox Machine) மற்றும் கணிணிகள் உள்ள அறைகள் தேர்வு துவங்குவதற்கு முன்பிருந்தும் தேர்வு முடிவுற்று விடைத்தாள் கட்டுக்கள் எடுத்துச் செல்லப்படும் வரை அரக்கினால் சீலிடப்பட்டு மூடியிருத்தல் வேண்டும்.

மேற்காணும் நடைமுறைகளை தவறாது பின்பற்றுமாறு அனைத்து தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.