news

முதுகலை ஆசிரியர்க்காக போராடக்கூடிய ஒரே அமைப்பு TNHSPGTA ***** நமது சங்கத்தின் உறுப்பினர் ஆகுங்கள் ******சங்க செயல் பாடுகளை தெரிந்துகொள்ள மேல்நிலைக்குரல் படியுங்கள் ******தங்கள் பள்ளி நிகழ்வுகளை அமைப்போடு பகிர்ந்துகொள்ளுங்கள்*****அனைத்து முதுகலை ஆசிரியர்களின் பங்களிப்பே அமைப்பு வளர்ச்சிக்கு உதவும்

Wednesday 26 October 2016

புதிய கல்விக் கொள்கை - தில்லியில் தமிழக அரசு எதிர்ப்பு!

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை குறித்து விவாதிக்க மத்திய, மாநில அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் பங்கேற்கும் மத்திய கல்வி
ஆலோசனைக் குழு கூட்டம் தலைநகர் தில்லியில் இன்று நடந்தது.


புதிய வரைவு கல்விக் கொள்கையை உருவாக்க மத்திய அரசின் சார்பில், ஓய்வு பெற்ற ..எஸ்., அதிகாரி டி.எஸ்.ஆர்.சுப்ரமணியன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இந்தக் குழுவினர் கருத்துக் கேட்புக்களை நடத்தினர். அதன் பின்னர்புதிய கல்விக் கொள்கை வரைவுஒன்றை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்துக்கு அனுப்பினர்.

புதிய கல்விக் கொள்கை குறித்து விவாதிக்க மத்திய, மாநில அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் பங்கேற்கும் மத்திய கல்வி ஆலோசனைக் குழு கூட்டம் தலைநகர் தில்லியில் இன்று நடந்தது. இந்தக் கூட்டத்தில் அனைத்து மாநில கல்வி அமைச்சர்கள் பங்கேற்றனர். புதிய கல்விக் கொள்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்த மாநாட்டில் கவனத்தில் கொள்ளவேண்டிய முக்கிய தீர்மானங்களாக 8-ம் வகுப்பு வரை உள்ள "ஆல்-பாஸ்' முறையை திரும்ப பெற்று மீண்டும் கட்டாய தேர்வு முறையை கொண்டு வருவது, சமஸ்கிருத பாடத்திட்டம் மற்றும் கல்வியல் தேர்ச்சி பெறாத தனியார் பள்ளி ஆசிரியைகளுக்கான தடை போன்றவை பேசப்பட்டது.

இதில் 8-ம் வகுப்பு வரையிலான ஆல்-பாஸ் ரத்து திட்டத்துக்கு தமிழக அரசின் சார்பில் கலந்துகொண்ட தமிழக பள்ளிக்கல்விதுறை அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இது குறித்து அவரிடம் பேசினோம்.

 " இரண்டு முக்கியமான அம்சங்கள் இன்று முடிவு செய்யப்பட்டது. முதலாவதாக இந்த 8-ம் வகுப்பு ஆல்-பாஸ் திட்டம் ரத்து என்பதை பல்வேறு மாநிலங்களின் எதிர்ப்பினை தொடர்ந்து மத்திய அரசு கைவிட்டுள்ளது.

அந்த முடிவினை எடுக்கும் அதிகாரத்தினை மாநில அரசுகளுக்கு வழங்க முடிவு செய்துள்ளது. கல்வி உரிமைச்சட்ட பரிந்துரைப்படி 2015 டிசம்பர் வரை மட்டுமே முறையான கல்வி தேர்ச்சி அற்றவர்கள் ஆசிரியர்களாக பணியாற்றலாம் என இருந்தது. தமிழகத்தில் அப்படியான ஆசிரியர்கள் குறைவு என்ற போதிலும் 2020-ம் ஆண்டு வரை அப்படியான ஆசிரியர்கள் பணியாற்ற மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதே போல சமஸ்கிருத பாடத்திட்டத்தை அமுல்படுத்த ஒரு கருத்துரு முன் வைக்கப்பட்டது. வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அப்போது இது இறுதி முடிவு அல்ல. இப்படியான கருத்துக்கள் எங்களுக்கு ஆயிரக்கணக்கில் வந்துள்ளது. அதில் 143 கருத்துருக்களை உங்கள் முன் வைத்துள்ளோம். உங்களின் கருத்துக்களையும் கவனத்தில் கொள்வோம் என தெரிவித்துள்ளனர்." என்று கூறினார்.

பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிப்பது எப்படி? மாணவர்களுக்கு ஆசிரியர்கள் அறிவுறுத்த வலியுறுத்தல்

பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிப்பது குறித்தும், தீ பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள் தினமும் சுமார் 5 நிமிஷங்கள் மாணவர்களிடம் பேச வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தீபாவளி பண்டிகை அக்டோபர் 29-இல் கொண்டாடப்பட உள்ளது. இத்தகைய மகிழ்ச்சிகரமான நன்னாளில் கவனக்குறைவாக பட்டாசு வெடிப்பதால் சில இடங்களில் தீ விபத்து ஏற்பட்டு குடிசைப் பகுதிகளில் உயிர், பொருள்சேதங்கள் ஏற்படுகின்றன. மேலும், மாணவர்களுக்கு தீக்காயங்களும் சில நேரங்களில் பார்வை இழப்பும் ஏற்படுகிறது. இத்தகைய நிகழ்வுகளை தவிர்ப்பதும் தடுப்பதும் முக்கிய கடமையாகும்.
முறையாக கவனமாக பட்டாசுகளை வெடிக்க வேண்டும். தவறுதல் காரணமாக தீ விபத்துகள் ஏற்பட ஏதுவாக உள்ளது. எனவே, விபத்துகள் அற்ற மகிழ்ச்சி நிறைந்த தீபாவளி கொண்டாட மாணவர்கள் அறியுமாறு செயல்முறை விளக்கம் செய்திட வேண்டும். பட்டாசுகளை கொளுத்தும்போது தளர்வான ஆடைகள் உடுத்துவதை மாணவர்கள் தவிர்க்கவும். டெரிகாட்டன், டெர்லின் ஆகிய எளிதில் பற்றக் கூடிய ஆடைகளை அணியக் கூடாது.
ஒரு வாளி தண்ணீர் வைத்துகொண்டோ பட்டாசு வெடிக்க வேண்டும். கொளுத்தி கையில் வைத்துக்கொண்டோ அல்லது உடலுக்கு அருகில் வெடிக்காமல் பாதுகாப்பான தொலைவில் வைத்தே வெடியுங்கள். பெற்றோர்களின் முன்னிலையில் அவர்களது பாதுகாப்பின் கீழ் குழந்தைகள் வெடிக்க வேண்டும். மருத்துவமனைக்கு அருகில் பட்டாசுகளை வெடிக்காதீர்கள். விலங்குகளை துன்புறுத்தும் வகையிலும் பட்டாசுகளை வெடிக்காதீர்கள். இரவு 10 முதல் காலை 6 மணிவரை பட்டாசுகளை வெடிக்காதீர்கள். உடலையும் மனநிலையையும் பாதிக்கும் வகையில், அதிக சப்தமுள்ள பட்டாசுகளை வெடிக்க வேண்டாம். ஒரு நாள் கொண்டாட்டத்துக்காக வாழ்நாள் முழுவதும் துன்பப்பட வேண்டாம்.
மகிழ்ச்சி நிறைந்த விபத்துகளற்ற தீபாவளி கொண்டாடும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது. நாள்தோறும் பள்ளியின் காலை இறைவணக்கத்துக்கு பின்னரோ அல்லது அணி திரளும்போதோ சுமார் 5 நிமிஷங்களுக்கு முன்னதாக தீ பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள் பேச வேண்டும்.
விபத்தில்லா வகையில் எவ்வாறு கொண்டாடுவது என்பது குறித்து மாணவர்களின் அறிவுக்கூர்மையை சோதித்து பார்த்தல், ஒரு குறிப்பிட்ட இடைவெளி நேரத்தில் 5 முதல் 10 நிமிஷம் தீ பாதுகாப்பு குறித்து நிகழ்ச்சி நடத்துதல், வரைபடபோட்டி நடத்தி பரிசளித்தல் உள்ளிட்ட விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.

Thursday 20 October 2016

ஒரே பதவியில் தொடர்ந்து 30 வருடங்கள் பணிபுரிந்தால் அவர்களுக்கு 3% Bouns Increment வழங்கப்படும்

பிளஸ் 2, 10-ஆம் வகுப்பு: அக்டோபர் 25 முதல் வினா வங்கி புத்தகங்கள்

          தமிழகம் முழுவதும் பிளஸ் 2, 10-ஆம் வகுப்பு அறிவியல் பாடப் பிரிவு மாணவர்களுக்கு வினா வங்கி புத்தகங்கள் வரும் 25-ஆம் தேதி முதல் விற்பனை செய்யப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

          இது தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் கண்ணப்பன் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: ""10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்குப் பயன்படும் வகையில், பள்ளிக் கல்வி இயக்கக வளாகத்தில் செயல்படும் தமிழ்நாடு மாநிலப் பெற்றோர் ஆசிரியர் அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் வினா வங்கி, மாதிரி வினா ஏடுகள், தீர்வுப் புத்தகங்களை தயாரித்து, தமிழ்நாட்டு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் நிறுவனம் மூலம் அச்சிட்டு குறைவான விலையில் விற்பனை செய்து வருகிறது. செப்டம்பர், மார்ச் மாதங்களில் நடைபெற்ற அரசு பொதுத் தேர்வு வினாத் தாள்கள் உள்ளடக்கி ஒவ்வொரு ஆண்டும் வினா வங்கி புத்தகம் வெளியிடப்படுகிறது.
 மாவட்டத்துக்கு ஒரு மையம் வீதம்...:இந்த ஆண்டுக்கு உரிய பிளஸ் 2 அறிவியல் பாடப் பிரிவு, 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உரிய வினா வங்கி புத்தகங்கள் அச்சிடும் பணி முடிவடைந்து தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பும் பணி நிறைவடையும் நிலை உள்ளது. சென்னையைப் பொருத்தவரை மூன்று மையங்கள், பிற மாவட்டங்களுக்கு ஒரு மையம் வீதம் வினா வங்கி புத்தகங்கள் விநியோகத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிளஸ் 2, 10-ஆம் வகுப்பு அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு உரிய வினா வங்கி புத்தகங்கள் வரும் 25-ஆம் தேதி முதல் அனைத்து மையங்களிலும் விற்பனைக்குக் கிடைக்கும்.
 விலை எவ்வளவு? பிளஸ் 2 மாணவர்களுக்கு வினா வங்கி, மாதிரி வினா புத்தகங்கள், தீர்வுப் புத்தகங்கள் தமிழ் வழி மற்றும் ஆங்கில வழியில் ஒவ்வொரு பாட வரிசைக்கும் ரூ.30 முதல் ரூ.100 வரையும் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வினா வங்கி மற்றும் அனைத்துப் பாடங்களுக்கும் பொதுத் தேர்வு வினாத் தாள்களின் தொகுப்பு ஆங்கில வழியில் ரூ.220 வீதமும் தமிழ் வழியில் ரூ.225 வீதமும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 வணிகவியல், கணக்குப் பதிவியல் மாணவர்களுக்கு...: பிளஸ் 2, 10-ஆம் வகுப்பில் படிக்கும் அறிவியல் பிரிவு அல்லாத வணிகவியல் உள்ளிட்ட பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு வினா வங்கி புத்தகங்கள் அச்சிடும் பணி நடைபெற்று வருகிறது; இந்த வினா வங்கி புத்தகங்கள் நவம்பர் மாத இறுதியில் அனைத்து மாவட்ட மையங்களிலும் விற்பனைக்குக் கிடைக்கும்.
வினா வங்கி புத்தகங்கள் வழங்கும் மையங்கள்
 சென்னை: அரசு மேல்நிலைப் பள்ளி, அரும்பாக்கம்;
 ஜெயகோபால் கரோடியா மகளிர் மேல்நிலைப்பள்ளி, சைதாப்பேட்டை;
 எம்.சி.சி. மேல்நிலைப் பள்ளி, சேத்துப்பட்டு.
 காஞ்சிபுரம்: அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, குரோம்பேட்டை.
 திருவள்ளூர்: ஆர்.எம்.ஜெயின் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளி.
 வேலூர்: வெங்கடேஷ்வரா மேல்நிலைப் பள்ளி

Saturday 15 October 2016

மதுரை மாவட்ட பொதுக்குழுக்கூட்டம் 14.10.16

நமது அமைப்பின் மாவட்ட பொதுக்குழுக்கூட்டம் 14.10.16 அன்று தமிழ்நாடு தொடக்கப்பள்ளி கூட்டணி அரங்கில் நடைபெற்றது. மாநித்தலைவர் மணிவாசகன் அவர்கள்  மற்றும்  மாநிலப் பொதுச் செயலாளர் பிரபாகரன் அவர்கள் முன்னிலை வகித்தனர். மாவட்டத் தலைவர் சரவணமுருகன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் வரவேற்றார்  மாவட்டப் பொருளாளர் வினோத் நன்றி கூறினார்
தமிழக அரசு  மற்றும் பள்ளிக்கல்வித்துறை பல்வேறு போராட்டம் நடத்தியும்  செவி சாய்க்காத கோரிக்கைகளை மீது  வழக்குகள் தொடுத்துள்ள நிலையில் அதற்கான நிதியினை திரட்டி  மாநிலத்தலைவரிடம் அளிப்பது முடிவெடுக்கப்பட்டது. மாவட்ட அளவில் உள்ள பிரச்சனைகளை வந்த உறுப்பினர்கள் எடுத்துரைத்தனர்.
கூட்டத்தில் மாநில துணைத்தலைவர் சிவராஜேந்திரன், மாவட்டப் பொறுப்பாளர்கள் கரோலின், துரைராஜ் சுதாகரன்,பாண்டியன் நந்தகுமார் சோலைராஜா, சௌந்திரபாண்டியன், அன்புதவமணி, நவநீதகிருஷ்ணன், சதீஸ்குமார், விஜயரெங்கன், ரபி, நாகநாதன்  முருகேசன், உமர்பாரூக்  மற்றும் பலர் கலந்துகொண்டனர்


 

Tuesday 11 October 2016

மகப்பேறு விடுப்பு 9மாதமாக நீட்டிப்பு அரசாணை விரைவில் வெளியிட வாய்ப்பு.

         அரசு ஊழியர்களில் பெண்களுக்கு அறிவிக்கப்பட்ட 9 மாத மகப்பேறு விடுப்புக்கான அரசாணையை விரைவில் வெளியிட வேண்டும் என ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

       அரசு பெண் ஊழியர்களுக்கான மகப்பேறு விடுப்பு தற்போது 6 மாதமாக உள்ளது. இது 9 மாதமாக உயர்த்தப்படும் என முதல்வர் ஜெயலலிதா, அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
இதை நிறைவேற்றும் வகையில், கடந்த செப்டம்பர் 1-ம் தேதி, சட்டப்பேரவையில் 110- விதியின் கீழ், ‘அரசு பணியில் இருக்கும் தாய்மார்கள் தங்கள் பச்சிளம் குழந்தையை பேணிப் பாதுகாக்கும் வகையில் பேறு காலச் சலுகையாக வழங்கப்படும் 6 மாத மகப்பேறு விடுப்பு 9மாதமாக உயர்த்தப்படும்’ என்று அறிவித்தார்.ஆனால், இதற்கான அரசாணை இன்னும் வெளியிடப்படவில்லை. இதனால், செப்டம்பர் 30-ம் தேதி 6 மாத விடுப்பு முடியும்,அரசு பெண் ஊழியர்கள் விடுப்பை நீட்டிக்க முடியுமா முடியாதா என்பது தெரியவில்லை. சம்பந்தப்பட்ட பணியாளர் நலன் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறையில் கேட்டபோது இது தொடர்பாக அரசாணை இன்னும் கையெழுத்தாகவில்லை என கூறுகின்றனர். அரசாணையை விரைவில் வெளியிட்டால், மகப் பேறு விடுப்பு எடுத்துள்ள பெண் கள் பயன்பெறுவார்கள்’’ என்றார்.

அதிகாரிகள் விளக்கம்

இது தொடர்பாக பணியாளர் நலத் துறையினரிடம் கேட்ட போது,‘‘இதற்கான அரசாணை வெளியிட கோப்பு தயாரிக்கப்பட்டு, அரசு பரிசீலனைக்கு அனுப்பப் பட்டுள்ளது. விரைவில் அரசாணை வெளியாக வாய்ப்புள்ளது’’ என்றார்.

Saturday 1 October 2016

எட்டாவது ஊதிய குழு : அரசுக்கு கோரிக்கை தலைமைச் செயலக சங்க கூட்டம் 29-09-2016

           
 எட்டாவது ஊதியக் குழுவை, தமிழக அரசு உடனடியாக அமைக்க வேண்டும்' என, அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

            தமிழகத்தில் உள்ள, பல்வேறு அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் அமைப்புகளின் பிரதிநிதிகள் கூட்டத்தை, தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம் நடத்தியது. நமது அமைப்பின் சார்பில் மாநில பொதுச்செயலாளர் திரு.இரா.பிரபாகரன் அவர்கள் கலந்துகொண்டார்  அதில், மத்திய அரசின் ஏழாவது ஊதியக் குழுபரிந்துரைகளை, ஜனவரி முதல் வழங்கும் வகையில், உடனடியாக, எட்டாவது ஊதியக் குழு அமைக்க வலியுறுத்தப்பட்டது. 'மேலும், 2003 ஏப்., 1க்கு பிறகு, அரசு பணியில் சேர்ந்தோருக்கும், பழைய ஓய்வூதிய திட்டமே தொடர வேண்டும்; அதுபற்றி ஆலோசிக்க அமைக்கப்பட்டுள்ள உயர்மட்டக் குழு, தன் அறிக்கையை, விரைவில் முதல்வரிடம் வழங்க வேண்டும்' என்பது உட்பட, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.