news

முதுகலை ஆசிரியர்க்காக போராடக்கூடிய ஒரே அமைப்பு TNHSPGTA ***** நமது சங்கத்தின் உறுப்பினர் ஆகுங்கள் ******சங்க செயல் பாடுகளை தெரிந்துகொள்ள மேல்நிலைக்குரல் படியுங்கள் ******தங்கள் பள்ளி நிகழ்வுகளை அமைப்போடு பகிர்ந்துகொள்ளுங்கள்*****அனைத்து முதுகலை ஆசிரியர்களின் பங்களிப்பே அமைப்பு வளர்ச்சிக்கு உதவும்

Sunday 26 February 2017

திருச்சி மாநில செயற்குழு கூட்டம் 26.02.2017

தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சார்பாக இன்று 26.02.2017 ஞாயிற்றுக்கிழமை திருச்சி மாநகரில் கி. ஆ. பெ. விஸ்வநாதன் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மாநில செயற்குழு கூட்டம் மாநிலத் தலைவர் முனைவர் திரு. வே. மணிவாசகன் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநிலப் பொதுச் செயலாளர் திரு. இரா. பிரபாகரன், மாநிலப் பொருளாளர் திரு. அ.கிருஷ்ணன், மற்றும் மாநிலப் பொறுப்பாளர்கள் மற்றும் அனைத்து மாவட்டத் தலைவர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். செயற்குழுவில் பொதுத் தேர்வு சம்பந்தப்பட்ட அனைத்து விதமான உழைப்பூதியங்களை உயர்த்திட மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள் பற்றி மாவட்ட வாரியாக விவாதிக்கப்பட்டது. மேற்கொண்டு நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்கள் பற்றி எடுத்துச் சொல்லப்பட்டது. செயற்குழுவில் முக்கிய கோரிக்கையாக மேல்நிலைப் பொதுத் தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டு மையத்தில் முகாம் அலுவலராக உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியராக இருந்து பதவி உயர்வு மூலம் மாவட்ட கல்வி அலுவலராக உள்ளவர்கள் பணியமர்த்தக் கூடாது எனவும் அப்படி மீறி பணியமர்த்தப்பட்டால் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியை புறக்கணிக்க ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது என மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் செயற்குழுவில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  



Wednesday 22 February 2017

TNPSC துறை தேர்வுகள் மே 2017 அறிவிப்பு - விண்ணப்பிக்க கடைசி நாள்:31/3/17


ஊதிய விகிதத்தை மாற்றியமைக்க 5 பேர் கொண்ட ஊதியக் குழு: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

7வது ஊதியக் குழுவின் அடிப்படையில் அரசு ஊழியர்களின் ஊதிய விகிதத்தை மாற்றியமைக்க 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
முதல்வர் பழனிசாமி தலைமையில் சென்னையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் இது குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
இது தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி மு பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், அரசுப் பணியாளர்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-ஆவது ஊதியக்குழு பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டவுடன், தமிழக அரசுப் பணியாளர்களுக்கும் ஊதிய விகிதங்கள் மாற்றியமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அறிவித்திருந்தார்கள். அவருடைய அறிவிப்பை செயல்முறைபடுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து எனது தலைமையில் ஆலோசனைக் கூட்டம் இன்று இன்று நடத்தப்பட்டது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி. சீனிவாசன், பள்ளிக் கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி. தங்கமணி உள்ளிட்ட அமைச்சர்களும், தலைமைச் செயலாளர் முனைவர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில், மத்திய அரசின் ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைத்துள்ள திருத்திய ஊதிய விகிதங்கள் குறித்து மத்திய அரசு எடுத்துள்ள முடிவுகளை தொடர்ந்து தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு ஊதிய விகிதங்களை மாற்றியமைப்பதற்கான பரிந்துரைகளை அளிக்க "அலுவலர் குழு" ஒன்றை உடனடியாக அமைக்க உத்திரவிட்டுள்ளேன். இக்குழுவில் கீழ்கண்ட அலுவலர்கள் உறுப்பினர்களாக இருப்பர் :
1. கூடுதல் தலைமை செயலாளர், நிதித்துறை
2. முதன்மை செயலாளர், உள்துறை
3. முதன்மை செயலாளர், பள்ளிக் கல்வித்துறை
4. செயலாளர், பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத்துறை
5. Dr. பி.உமாநாத், - உறுப்பினர் செயலாளர்.
2) இந்த "அலுவலர் குழு" மத்திய அரசின் ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைத்துள்ள திருத்திய ஊதிய விகிதங்கள் குறித்து மத்திய அரசு எடுத்துள்ள முடிவுகளை ஆராய்ந்து, அவற்றை தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி நிறுவனங்களில் பணியாற்றும் அலுவலர்களுக்கு ஊதிய விகிதங்களை மாற்றியமைப்பதற்கான பரிந்துரைகளை வழங்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும், இக்குழு மத்திய அரசு பரிந்துரைத்துள்ள திருத்திய ஓய்வூதியம் / குடும்ப ஓய்வூதியம் மற்றும் திருத்திய ஓய்வுக் கால பயன்கள் குறித்து ஆராய்ந்து அவற்றை தமிழ்நாடு அரசு ஓய்வூதியதாரர்கள் மற்றும் அலுவலர்களுக்கு விரிவுபடுத்துவது குறித்தும் தக்க பரிந்துரைகள் அளிக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இக்குழு, இதர படிகள் தொடர்பாக மத்திய அரசு அமைத்துள்ள உயர்மட்ட குழு அளிக்கும் அறிக்கையினையும் ஆராய்ந்து உரிய பரிந்துரைகளை வழங்கும்.
3) அங்கீகரிக்கப்பட்ட அலுவலர் மற்றும் ஏனைய சங்கங்கள் இவ்வலுவலர் குழுவிற்கு ஊதிய விகிதம் / ஓய்வூதிய திருத்தம் குறித்த தங்கள் கோரிக்கையை அனுப்பி வைக்கவும், அவற்றை உரியவாறு ஆராய்ந்து பரிந்துரைக்கவும் இக்குழுவிற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
4) இக்குழு தனது அறிக்கையை நான்கு மாத காலத்திற்குள், அதாவது 30.06.2017க்குள் அரசிற்கு அளிக்கும்படி உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

தேர்வுப்பணிக்கான கையேடு 2017

Tuesday 21 February 2017

தேர்வுத்துறை இயக்குனரோடு பேச்சுவார்த்தைக்கு பின் மாநிலத்தலைவர் அறிக்கை

அனைத்து நிலை பொறுப்பாளர்களுக்கும் தோழர்களுக்கும் தோழிகளுக்கும் வணக்கம். இன்று தேர்வுகள் துறை இயக்குநரோடு நல்ல முறையில் கூட்டம் நடந்து முடிந்தது.மாலை 3.00  மணிக்கு தொடங்கி 5.15 வரை நடைபெற்றது. வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளில் 60% வெற்றி அடைந்துள்ளது.. விடைத்தாள் ஒன்றுக்கு ரூ.10/- என்றார்கள். இது போதாது என்று பேசி உள்ளோம்... ரூ 15 / - அய்ப் பெற்றுத் தர முயற்சி. செய்யுங்கள் என கேட்டுள்ளோம். கட்டாயம் மாற்றம் கூடுதலாகவே இருக்கும்... உழைப்பூதியங்களை பொறுத்த வரையில் நாம் கேட்டுள்ள மாற்றம் இல்லை. கொஞ்சமே கூடுதலாக சென்றுள்ளது...  நிதித்துறை 15% க்கு மேல் ஏற்ற முடியாது என்று மறுத்து கோப்பை திருப்பி அனுப்பி உள்ளது... மீண்டும் கோப்பு அனுப்பப்பட்டுள்ளது...         8 கி.மீ. தூரத்திற்கு கட்டாயம் உயர்த்தப்பட்ட உழைப்பூதியம் விடைத்தாள் திருத்தும் போது கிடைக்கும்.... விடைத்தாள் எண்ணிக்கை என்று வரும்போது அதனைப் பற்றியே 45 நிமிடங்கள் பேசி உள்ளேன். வெற்றி நிச்சயம்.... மு.க.அலுவலர் மாற்றம் என்று வரும் போது எவர் சரியில்லையோ அவரை மட்டும் மாற்றலாம் என உறுதியளித்துள்ளார்கள்... முகாம் அலுவலராக மாவட்டக் கல்வி அலுவலர் நியமனம் என்று வருகின்ற போது எங்கு தேவையோ அங்கு மாற்றிக் கொள்ளலாம் என உறுதி அளித்துள்ளார்கள்... உடனடியாக யார் யார் முகாம் அலுவலர் அவர் DE0 வாக இருந்தால் எந்த பணித் தொகுதியிலிருந்து  வந்தவர் என எனக்கு உடனடியாக தெரியப்படுத்துங்கள்.. நமக்கு கீழே இருந்து வந்தவர்கள் நம்மை அதிகாரம் செய்ய விட வேண்டாம்.முழுத் தோல்வி என்றால் உயிரியல் விடைத்தாள் விவகாரம் தான்... அருள்கூர்ந்து இந்த ஆண்டு பொறுத்துக் கொள்ளுங்கள்... சில மாவட்டங்களில் உள்ள விடைத்தாள் திருத்தும் பணி இடர்பாடுகள் சரி செய்யப்படும்... நிதி உதவி பெறும் தனியார் பள்ளிகளில் பணியாற்றும் மூத்த முதுகலை ஆசிரியர்களுக்கு கூடுதல் துறை அலுவலர் நியமனத்திற்கு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது... 400 க்கு மேல் உள்ள நடுவங்கள் வரும் கல்வி ஆண்டில் பிரிக்கப்படும்... இந்த ஆண்டு இவ்வாறான நடுவங்களில் கூடுதல் முதன்மைக் கண்காணிப்பாளரும்  அனைத்து படிவங்களிலும் கையொப்பம் இட வேண்டும்... விடைத்தாள் திருத்தும் நடுவங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், மின்விசிறி மற்றும் அகண்ட நீள்பலகைகள் ( bench) கட்டாயம் செய்து தரப்படும்... தொகை வழங்கவில்லை என்று காரணம் சொல்லக் கூடாது. எவ்வளவு தொகை கூடுதலாக செலவாகிறதோ அதனை தேர்வுகள் துறை கொடுத்து விடும்.... தேர்வு மற்றும் விடைத்தாள் திருத்தும் நேரங்களில் உள்ள இடர்பாடுகளை என்னிடம் தெரிவித்தால் அதனை தேர்வுகள் துறை இயக்குநர் அம்மாவிடம் தெரிவித்து சரி செய்யப்படும்... 9.45 to 1.00 என தேர்வு நேரம் அடுத்த ஆண்டு எடுத்துக் கொள்ளப்படும்.... கூடுதலான ஒரு வெற்றி அதனை நேரில் சொல்கிறேன்... பேச்சுவார்த்தையின் போது என்னோடு பிரபாகரன், கிருஷ்ணன், பாலு மற்றும் சீனிவாசன் உடனிருந்தனர்.... பிப்ரவரி 26 திருச்சியில் மாநில செயற்குழு.மாநிலப் பொறுப்பாளர்கள், மாவட்டத் தலைவர் மற்றும் செயலர் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும். மணிவாசகன்.

துறை அலுவலர் கூட்டம் புறக்கணிப்பு

இன்று   20. 1. 17 துறை அலுவலர்  தொடர்பான  கூட்டம் மதுரையில் நடைபெற்றது. முதுகலை ஆசிரியர்களின் மத்தியில்  நமது  TNHSPGTA அமைப்பின் தேர்வு  உழைப்பூதியம் தொடர்பான  போராட்டங்களை  விளக்கி  கூறி  ஆசிரியர்கள்  கூட்டத்தை  புறக்கணிப்பது  என்றும் முடிவெடுக்கப்பட்டது  அதனால் முதன்மைக்கண்காணிப்பாளர் கூட்டம் மட்டும் நடைபெற்றது. ஆணைகள் தலைமை ஆசிரியர் முலம் அனுப்பப்பட்டன . அதைத் தொடர்ந்து இணை இயக்குனர் பொன்குமார் அவர்களிடம்  கோரிக்கைகளை தெரிவித்தோம் . அவர் ஏற்கனவே திண்டுக்கல்  மாவட்டத்தில்  புறக்கணிப்பு நடந்ததை  தேர்வுத்துறை இயக்குனரிடம் தெரிவித்துவிட்டதாகவும்  உங்கள் கோரிக்கையும் தெரிவிப்பதாகவும் கூறினார். குலுக்கல் முறையில்  அறைக் கண்காணிப்பாளர் தேர்ந்தெடுக்க கூடாது என்றும்  20 கிமீ க்குள்  பணிகளை நியமிப்பதாகவும் , தேர்வு திருத்தும் மையங்களில்   விருப்பப்பட்ட மையங்களில்  திருத்தலாம் என்ற  கோரிக்கைகளை  ஏற்றுக் கொள்வதாகவும்  சொன்னபிறகு  துறை அலுவலர்  கூட்டம் தொடங்கியது .
மாநிலத்தலைவர்  அவர்களின்  வழிகாட்டுதலின் படி மதுரை மாவட்டம்  மூன்றாம் கட்ட போராட்டம் நடைபெற்றது .ஒத்துழைப்பு  நல்கிய முதுகலை ஆசிரியர்களுக்கு நமது இயக்க வாழ்த்துக்கள்
 

Wednesday 8 February 2017

உழைப்பூதியம் உயர்த்த கோரி ஆசிரியர்கள் உண்ணாவிரதம்!

வரும், 19ல், முதுநிலை ஆசிரியர்கள், உண்ணாவிரத போராட்டம் நடத்துகின்றனர். தமிழகம் முழுவதும், அரசு, அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். அவர்கள், தேர்வு பணி உழைப்பூதியம் உயர்த்தக்கோரி, பிப்., 19ல், உண்ணாவிரத போராட்டம் நடத்துகின்றனர்.


இதுகுறித்து, தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின், மாநில தலைவர்  அறிவித்துள்ளபடி மண்டல அளவில் நடைபெறும்

நடுவண் அரசு பள்ளிகளை போல், தமிழகத்திலுள்ள விடைத்தாள் திருத்தும், முதுநிலை ஆசிரியர்களுக்கு, ஒரு விடைத்தாளுக்கு, 15 ரூபாய் வழங்க வேண்டும். தேர்வு மைய மேற்பார்வை பணிக்கு செல்லும் உள்ளூர் மற்றும் வெளியூர் ஆசிரியர்களுக்கு, தினப்படி அதிகரிக்க வேண்டும்.

பெரும்பாலான பள்ளிகளில் உள்ள பொதுத்தேர்வு மையத்தில், 1,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். அப்பள்ளிகளில், ஒரு முதன்மை கண்காணிப்பாளர் மட்டும் நியமிக்கப்படுகின்றனர். இதனால், தேர்வு பணி முடிய தாமதமாகிறது.

400 மாணவர்களுக்கு, ஒரு முதன்மை கண்காணிப்பாளர் நியமிக்க வேண்டும். தேர்வு காலங்களில், முதன்மை கல்வி அலுவலர்களை, மாவட்டம் விட்டு மாவட்டம் மாற்ற வேண்டும் உள்பட, பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றக்கோரி, சங்கம் சார்பில், உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது.

Thursday 2 February 2017

மத்திய பட்ஜெட் 2017: தனிநபர் வருமான வரி உச்ச வரம்பில் மாற்றமில்லை: ரூ.5 லட்சம் வரை 5 சதவீதமாக வரி குறைப்பு



தனிநபர் வருமான வரிவிலக்கு உச்ச வரம்பில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. எனினும் ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையிலான தனிநபர் வருமானத் துக்கான வரி 10 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகக் குறைக்கப் பட்டுள்ளது.
வருமான வரிச் சட்டம் அத்தி யாயம் 8, பிரிவு 87ஏ-ன் கீழ் ரூ.3.5 லட்சம் வரை வருவாய் ஈட்டுபவர்களுக்கு ரூ.2,500 வரி தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதன்படி ரூ.3 லட்சம் வரை வருமான வரி செலுத்த வேண்டிய அவசியம் இருக்காது. மேலும் பல்வேறு வரிச்சலுகைகளின்படி தனிநபர்கள் ரூ.4.5 லட்சம் வரையிலான வருமானத்துக்கு வரிவிலக்கு பெற முடியும்.
ரூ.50 லட்சத்துக்கு மேல் வருவாய் ஈட்டும் தனிநபர்களுக்கு 10 சதவீத கூடுதல் வரியும் ரூ.1 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டும் தனிநபர்களுக்கு 15 சதவீத கூடுதல் வரிவிதிப்பும் தொடரும்
மேலும் ஒரே ஒரு பக்கத்தில் வருமான வரி விண்ணப்ப படிவம் வழங்கப்படும் .