news

முதுகலை ஆசிரியர்க்காக போராடக்கூடிய ஒரே அமைப்பு TNHSPGTA ***** நமது சங்கத்தின் உறுப்பினர் ஆகுங்கள் ******சங்க செயல் பாடுகளை தெரிந்துகொள்ள மேல்நிலைக்குரல் படியுங்கள் ******தங்கள் பள்ளி நிகழ்வுகளை அமைப்போடு பகிர்ந்துகொள்ளுங்கள்*****அனைத்து முதுகலை ஆசிரியர்களின் பங்களிப்பே அமைப்பு வளர்ச்சிக்கு உதவும்

Friday 30 December 2016

பொதுத் தேர்வில் மாணவ / மாணவியர் சிறப்பாக தேர்ச்சி பெற ஆசிரியர்கள் தமது முழுப் பங்கினை அளிக்குமாறு மதுரை முதன்மைக்கல்வி அலுவலர் சுற்றறிக்கை


திருத்தப்பட்ட அரையாண்டுத் தேர்வு விடைத்தாள்களை உரிய நேரத்தில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு மீளாய்வு செய்தல் வேண்டும்,அரையாண்டுத் தேர்வு தேர்ச்சி சார்ந்த அறிக்கையினை  சார்ந்த மாவட்டக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்படவேண்டும் மற்றும் இவ்வாண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்வில்  மாணவ / மாணவியர் சிறப்பாக தேர்ச்சி பெற ஆசிரியர்கள் தமது முழுப்  பங்கினை அளிக்குமாறு முதன்மைக்கல்வி அலுவலர் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது 

Thursday 22 December 2016

10th & 12th - செய்முறைத்தேர்வு அறிவிப்பு.

பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் அடுத்த ஆண்டு மார்ச் 3-ம் தேதி தொடங்கி 31-ம் தேதியும், எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வுகள் மார்ச் 8-ல் தொடங்கி 30-ம் தேதி வரையும் நடக்கவுள்ளன.பிளஸ் 2-வில் கணிதம் மற்றும் அறிவியல் பிரிவு மாணவர் களுக்கும் (ஒரு பாடத்துக்கு 50 மதிப்பெண்) அதேபோல், 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவி யல் பாடத்துக்கும் (25 மதிப்பெண்) செய்முறைத்தேர்வு உண்டு.
பொதுத் தேர்வுகளுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ள நிலையில், செய்முறைத்தேர்வுகள் எப்போது நடத்தப்படும் என்ற எதிர் பார்ப்பு தேர்வெழுத உள்ள மாணவர் கள் இடையே எழுந்துள்ளது.
இதுகுறித்து அரசு தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந் தராதேவியிடம் கேட்டபோது, “பிளஸ் 2 செய்முறைத்தேர்வை பிப்ரவரி முதல் வாரத்தில் தொடங்கி 3-வது வாரத்துக்குள்ளாகவும் அதேபோல், 10-ம் வகுப்பு செய்மு றைத்தேர்வை பிப்ரவரி 3-வது வாரம் முதல் மார்ச் 5-ம் தேதிக்குள் நடத்தி முடிக்கவும் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளோம்” என்று தெரிவித்தார்.

Tuesday 20 December 2016

டிச.,7,8 ம் தேதிகளில் நடக்க இருந்த அரையாண்டு தேர்வுகள், ஜன.2,,3 ம் தேதிகளில் நடைபெறும்; டிச.,14ம் தேதி நடக்க தேர்வு ஜன.,5ம் தேதி நடைபெறும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு


டிச. 7 மற்றும் 8-ல் தள்ளிவைக்கப்பட்ட 12-ம் வகுப்பு அரையாண்டு தேர்வு
ஜன. 2, 3 தேதிகளில் நடைபெறும்
டிச.14-ம் தேதிசென்னை , காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஒத்திவைக்கப்பட்ட +2 அரையாண்டு தேர்வு, ஜன.5-ல் நடைபெறும் - பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது

Sunday 18 December 2016

ரத்து செய்யப்பட்ட தேர்வுகள் நடத்தப்படும் : பள்ளி கல்வித்துறை.

 பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன் கூறுகையில், “தற்போது அரையாண்டு தேர்வு நடைப்பெற்று வருகிறது. 23-ந் தேதியுடன் தேர்வுகள் நிறைவு பெறுகின்றன. 24 ஆம் தேதி முதல் ஜனவரி 1 ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. கிறிஸ்துமஸ்-புத்தாண்டு கொண்டாட்டத்திற்கான வழக்கமான விடுமுறையாகும் இது. இந்த விடுமுறை நாட்களை குறைக்கவில்லை. கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறந்த உடன் ரத்து செய்யப்பட்ட தேர்வுகள் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.


தமிழக முதல்வர் மறைவையொட்டி அளிக்கப்பட்ட ஒரு நாள் அரசு விடுமுறை, வார்தா புயல் விடுமுறையால் 2 தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. தமிழ் முதல் தாள் மற்றும்
தமிழ் இரண்டாம்  தாள் ஆகிய 2 தேர்வும் நடைபெறவில்லை. கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறந்த உடன் அந்த தேர்வுகள் நடத்தப்படும். மாணவர்களுக்கு அளிக்கப்படும் விடுமுறை நாட்களை குறைக்காமல் சிறப்பு வகுப்புகள் மூலம் இதனை ஈடு செய்வோம். தற்போது எந்த பாதிப்பும் இல்லாமல் மாணவர்கள் தேர்வு எழுதி வருகின்றனர். மரங்கள் விழுந்து இருந்த போதிலும் வகுப்பறைகளில் எந்தவித பாதிப்பும் கிடையாது.என்று தெரிவித்தார்.

Income Tax 2016-17 – Deductions and Exemptions for Salaried Employees with regard to payment of Income Tax for the financial year 2016-17 (Assessment Year 2017-18))

For Men Below 60 Years Of Age

Income Tax SlabIncome Tax Rate

Income upto Rs. 2,50,000
Nil
Income between Rs. 2,50,001 - Rs. 500,000
10% of Income exceeding Rs. 2,50,000
Income between Rs. 500,001 - Rs. 10,00,000
20% of Income exceeding Rs. 5,00,000
Income above Rs. 10,00,000
30% of Income exceeding Rs. 10,00,000
முழு விவரம் அறிய இங்கே அழுத்தவும்






































கணக்கீட்டு படிவம் பதிவிறக்கம் செய்ய இங்கே அழுத்தவும்
வருமானவரி கணக்கிட உங்கள் சம்பளத்தை அறிய வேண்டுமா ? இங்கே அழுத்தவும்  





Saturday 17 December 2016

பொதுவிடுமுறை மற்றும் வரையறுக்கப்பட்ட விடுப்பு 2017


பிளஸ் 2 தேர்வு மார்ச் 2-ல் தொடக்கம்

தமிழகத்தில் 2016-17ஆம் கல்வியாண்டுக்கான பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் மார்ச் 2-ஆம் தேதியும், எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வுகள் மார்ச் 8-ஆம் தேதியும் தொடங்குகின்றன. இதற்கான அறிவிப்பை அரசுத் தேர்வுகள் இயக்குநரகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளது.
பிளஸ் 2 தேர்வுகள் மார்ச் 2 தொடங்கி மார்ச் 31 வரை காலை 10 முதல் பகல் 1.15 மணி வரையும், .  வினாத்தாளைப் படித்துப் பார்க்க 10 நிமிடங்களும், விடைத்தாளில் விவரங்களைப் பூர்த்தி செய்ய 5 நிமிடங்களும் வழங்கப்படுகின்றன. கற்றல் குறைபாடு உடையவர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் வழங்கப்படுகிறது.


Thursday 15 December 2016

தமிழக அரசு ஊழியர்களுக்கு 7% அகவிலைப்படி உயர்வு

இது தொடர்பாக இன்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில், ''முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காட்டிய வழியில் செயல்படும் நான், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படியை கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

திருத்திய ஊதியம் பெற்றுள்ள மத்திய அரசு அலுவலர்களுக்கு ஜூலை 1-ம் தேதி முதல் 2 சதவீதம் எனவும், திருத்திய ஊதியம் பெறாத மத்திய அரசு அலுவலர்களுக்கு 7 சதவீதம் எனவும் அகவிலைப்படியை மத்திய
அரசு உயர்த்தியுள்ளது.

அதன் அடிப்படையில், தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் ஆகியோருக்கு வழங்கப்படும் அகவிலைப்படி கடந்த ஜூலை 1 முதல் 7 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதன்படி, அகவிலைப்படி 125 சதவீதத்திலிருந்து 132 சதவீதமாக உயரும்.

இந்த அகவிலைப்படி உயர்வு, உள்ளாட்சி நிறுவனங்கள் மற்றும் அரசு மானியம் பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் அலுவலர்கள், ஆசிரியர்கள், வருவாய்த் துறையில் பணிபுரியும் கிராம உதவியாளர்கள், அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்கள், ஊராட்சி செயலாளர்கள் மற்றும் வழக்கமாக அகவிலைப்படி அளிக்கப்படும் அனைத்து அரசு அலுவலர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும் பொருந்தும்.

இந்த அகவிலைப்படி உயர்வினால் அரசு ஊழியர்களுக்கு ரூ.427 முதல் ரூ.5,390 வரையில் ஊதிய உயர்வும், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.214 முதல் ரூ.2,695 வரை ஓய்வூதிய உயர்வும் கிடைக்கும்.

1.7.2016 முதல் 30.11.2016 வரை உள்ள காலத்திற்கான அகவிலைப்படி உயர்வு அவரவர் வங்கிக் கணக்கில் மொத்தமாக செலுத்தப்படும். இந்த மாதம் முதல் இந்த அகவிலைப்படி உயர்வு சம்பளத்துடன் சேர்த்து வழங்கப்படும்.

இந்த அகவிலைப்படி உயர்வினால் சுமார் 18 லட்சம் அரசு அலுவலர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயனடைவர். அகவிலைப்படி உயர்வின் காரணமாக அரசுக்கு ஏற்படும் கூடுதல் செலவு ஆண்டொன்றுக்கு தோராயமாக ரூ.1,833 கோடியே 33 லட்சமாக இருக்கும்'' என்று முதல்வர் .பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
அரசாணை தரவிறக்கம் செய்ய இங்கே அழுத்தவும்