news

முதுகலை ஆசிரியர்க்காக போராடக்கூடிய ஒரே அமைப்பு TNHSPGTA ***** நமது சங்கத்தின் உறுப்பினர் ஆகுங்கள் ******சங்க செயல் பாடுகளை தெரிந்துகொள்ள மேல்நிலைக்குரல் படியுங்கள் ******தங்கள் பள்ளி நிகழ்வுகளை அமைப்போடு பகிர்ந்துகொள்ளுங்கள்*****அனைத்து முதுகலை ஆசிரியர்களின் பங்களிப்பே அமைப்பு வளர்ச்சிக்கு உதவும்

Monday 26 September 2016

இணை இயக்குனர் மாறுதல் மற்றும் பதவி உயர்வு



இன்னும் சில தினங்களில் அறிவிப்பு வரும் 1,620 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப முடிவு: பள்ளி கல்வி இயக்குனர் தகவல்

நாகர்கோவில் : ``1620 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன’’ என்று பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன் கூறினார்.

நாகர்கோவில் கல்வி மாவட்டத்தில் பிளஸ்-2, 10-ம் வகுப்பு தேர்வுகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு பரிசளிப்பு விழா, நாகர்கோவிலில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில், தமிழக பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன், பாராட்டு சான்றிதழ்களை வழங்கி பேசியதாவது:- மாணவர்களின் படைப்பாற்றல் திறனை ஊக்குவிக்கும் சக்தி, ஆசிரியர்களுக்குத்தான் உண்டு. பள்ளியில் கணிதம் பாடத்தில் 200க்கு 200 எடுக்கும் மாணவர்கள் கூட, அண்ணா பல்கலைக்கழக தேர்வில் 50 மதிப்பெண்கள் எடுப்பதற்கு, திணறும் நிலை உள்ளது.

நமது வகுப்பறைகளின் செயல்பாடுகளில் மாற்றம் வேண்டும். எம்.பி.பி.எஸ்., பி.இ. மட்டும்தான் படிப்பு என்பதை மாற்ற வேண்டும். ஏராளமான உயர்கல்வி படிப்புகள் உள்ளன. எந்தெந்த படிப்புகளுக்கு என்னென்ன வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்பதை மாணவர்களுக்கு விளக்க வேண்டும். தமிழகம், கல்வியில் வேகமாக முன்னேறி வருகிறது. 400-க்கும் மேற்பட்ட பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டு உள்ளன. 1000-த்துக்கும் மேற்பட்ட தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் தொடங்கப்பட்டு உள்ளன. தற்போது, 1620 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பு இன்னும் 10 அல்லது 15 நாட்களில் வெளியிடப்படும். இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் 1,536 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. 12ம் வகுப்பு மாணவர்களுக்கான புதிய ஆன்ட்ராய்டு செயலியையும் கண்ணப்பன் வெளியிட்டார்.

Thursday 15 September 2016

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தையே நடைமுறைப்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட வல்லுநர் குழுவோடு ஜாக்டோ சந்திப்பு




தோழர்களே...தோழிகளே .. வணக்கம். இன்று காலையில் ஜாக்டோ உயர்மட்டக் குழுக் கூட்டம் நடைபெற்றது. வழக்கமான விவாதங்கள்...மாலை 3.00 மணிக்கு தலைமைச் செயலக அழைப்பு.. ஆனால் 5.15 க்குத் தான் அழைப்பு வந்தது. இன்று கலந்து கொண்ட 18 சங்கங்களின் பொறுப்பாளர்களும் பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டோம்... திருமதி.சாந்தா ஷீலா நாயர் தலைமையில் உள்ள குழுவோடு பேச்சைத் தொடங்கினோம். அவர்கள் தெளிவாக இருந்தார்கள்... தன் பங்களிப்பில் ஏதாவது மாற்றம் வேண்டுமானால் சொல்லுங்கள்... பழைய ஓய்வூதியத் திட்டம் என்பதனை தொடரக் கூடிய சூழல் - நிதிநிலை மிக மிக மோசமாக உள்ளது என்பதனைச் சொன்னார்கள். அனைவரும் ஒருவர் மாற்றி ஒருவர் பழைய ஓய்வூதிய நன்மைகள் - அதனால் குடும்பப் பாதுகாப்பு என பல நிகழ்வுகளை வரிசைப் படுத்தினார்கள்... ஆனாலும் இடை இடையே புதிய ஓய்வூதியத் திட்டத்தில் உள்ள குறைபாடுகளைக் குழு கேட்டுக் கொண்டே இருந்தது... இதில் உள்ள குறைபாடுகளையும் எடுத்து வைத்தோம்.... 30 நிமிடங்கள் பேச்சு வார்த்தை நடந்தது.... முடிவு என்ன ? முழுத் தோல்வியும் இல்லை... முழு வெற்றியும் இல்லை.... தலைவரே பிறகு என்ன எனக் கேட்பீர்கள்... குழு அறிக்கையை வெளியிடும் .... அதன் பிறகு களம் காண வேண்டும் என்றால் களத்தில் நமது பணிகளைத் தொடர வேண்டியது தான்... மணிவாசகன்.

பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

தமிழகம் முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் வழக்கம் போல் நாளை இயங்கும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என தமிழ்நாடு காவல்துறை அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.  பேருந்துகள் பாதுகாப்புடன் இயக்கப்படும் என காவல்துறை அறிவித்துள்ளது

Tuesday 13 September 2016

புதிய கல்வி கொள்கையில் முடிவெடுக்கஆசிரியர் சங்கத்திடம் அரசு கருத்து கேட்பு

           ஆசிரியர் சங்க நிர்வாகிகளிடம் கருத்து கேட்டு, புதிய கல்விக் கொள்கை குறித்து முடிவு எடுக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
 
           மத்திய அரசு, அனைத்து மாநிலங்களுக்குமான புதிய கல்விக் கொள்கை உருவாக்கி உள்ளது. அதன் வரைவு அறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்கள், http://mhrd.gov.in/nep-new என்ற, மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை இணைய தளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன.பொதுமக்கள், மாநில அரசுகள், கல்வியாளர்களின் கருத்துக்களை, nep.edu@gov.in என்ற இணையதளத்தில், செப்., 30க்குள் அனுப்பலாம். புதிய கல்விக் கொள்கைக்கு, ஒரு தரப்பில் ஆதரவும், ஒரு தரப்பில் எதிர்ப்பும் உள்ளது.இதில், தமிழக அரசு எந்த மாதிரியான நிலைப்பாடு எடுப்பது என்பது குறித்து, உயர்மட்ட ஆலோசனையில் வல்லுனர்களின் கருத்துகளை பெற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.பள்ளிக் கல்வியில், ஆசிரியர் சங்கங்களின் கருத்துகளை கேட்க, அரசு முடிவு செய்துள்ளது. 'கருத்துகளை மனுக்களாக வழங்கலாம்' என, பள்ளிக் கல்வி அமைச்சர் பாண்டியராஜன் அறிவித்துள்ளார். ஆசிரியர் சங்க நிர்வாகிகள், அமைச்சரை நேரில் சந்தித்து, மனு அளித்து வருகின்றனர்.

Thursday 8 September 2016

10, 12-ஆம் வகுப்பு காலாண்டு தேர்வுகள் இன்று தொடக்கம்

           தமிழகத்தில் 10, 12-ஆம் வகுப்பு காலாண்டு தேர்வுகள் வியாழக்கிழமை (செப்.8) தொடங்குகின்றன.

             காலாண்டுத் தேர்வு வரும் 23-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.பொதுத் தேர்வுகளில் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் கடந்த சில ஆண்டுகளாக காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் பொதுத் தேர்வுகளாக நடத்தப்பட்டு வருகின்றன.

பள்ளிக் கல்வி இயக்குநரகத்தில் வினாக்கள் தயாரிக்கப்பட்டு, முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். அதன் அடிப்படையில் அந்தந்த மாவட்டங்களில் வினாத்தாள் அச்சிடப்பட்டு தேர்வுகள் நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Sunday 4 September 2016

அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரிய தின நல்வாழ்த்துக்கள்

எத்தனை சவால்களை,
சிரமங்களை,
 ஏமாற்றங்களை
எதிர்ப்பட்டாலும்,
இவை அனைத்தின் மத்தியிலும்
உலகெங்குமுள்ள
கோடிக்கணக்கான ஆசிரியர்கள்
தாங்கள் தேர்ந்தெடுத்த பணியை
விட்டு விடாமல்
அதில் நிலைத்திருக்கிறார்கள்.
காரணம்
தன்னிடம் படித்த மாணவர்கள் 
சமுதாயத்தின் அங்கமாக 
மாறியிருப்பதைக் காண்பதுதான்;
ஏனெனில் அவர்கள் வெற்றிக்கு
என் முயற்சியும் ஓரளவு பங்களித்திருக்கிறது
என்ற திருப்தியும் தான்.

இன்று எத்தனையோ பேர்
ஆசிரியரை குறை சொன்னாலும்
வெற்றிபெற்ற 
ஒவ்வொருவரும்
தங்கள் ஆசிரியர்களைக்
கண்டுபிடித்து
அவர்களுக்கு நன்றி சொல்லவே
விரும்புகின்றனர்.
ஆசீர்வதிக்கப்பட்டவன் மட்டுமே
ஆசிரியர் ஆகமுடியும்.
ஆசிரியர்தான்
உலகிற்கு சொந்தமானவன்
என்பதை உணர்ந்த
ஒரு சிறந்த ஆசிரியரால்தான்
உலகம் இன்றளவும்
பல்துறை அறிஞர்களை
பெற்றுக் கொண்டிருக்கிறது. 

மேலும் கல்வி கற்றுக்கொடுப்பது
மட்டுமில்லாமல்
மாணவ சமூகத்துக்கு
தேவையான ஆற்றல்,
ஊக்கம்,
தன்னம்பிக்கை,
விடாமுயற்சி
என்று அனைத்தையும்
ஒன்று சேர கற்றுக்கொடுத்து 
சமூகத்தின் உயர்ந்த நிலைக்கு
எடுத்து செல்லும்
உயரிய பொறுப்பு
ஆசிரியருடையதாகும்
என்பதை உணருவோம். 

ஆசிரியர்தின வாழ்த்துக்கள்

மதுரை மாவட்டத்தில் 17 ஆசிரியர்களுக்கு தமிழக அரசின் 2015-16 ஆம் ஆண்டுக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டுள்ளது.

தமிழக அரசால் நல்லாசிரியர்களுக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மதுரை மாவட்டத்தில் விருது பெற்றவர்கள் விவரம்: மதுரை கல்வி மாவட்டத்தில் தா.வாடிப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர் பி.சங்கரலிங்கம், தலைமை ஆசிரியர்கள் கி.நாகசுப்பிரமணியன் (மதுரை எம்.எல்.டபிள்யு.ஏ.மேல்நிலைப் பள்ளி).
மேலூர் கல்வி மாவட்டத்தில் தலைமை ஆசிரியர்கள் க.கல்யாணி (மதுரை பொன்முடியார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி), ச.செல்வராஜ் (திருவாதவூர் அரசு மேல்நிலைப் பள்ளி).
உசிலம்பட்டி கல்வி மாவட்டத்தில் தலைமை ஆசிரியர்கள் ச.இளமாறன் (பாப்புநாயக்கன்பட்டி எஸ்.கே.வி.மேல்நிலைப் பள்ளி), க.தர்மர் (வீரப்பெருமாள்புரம் அரசு உயர்நிலைப் பள்ளி).
மதுரை டி.வி.எஸ்.மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி முதல்வர் கே.என்.மோகனன்நம்பூதிரி, தே.கல்லுப்பட்டி மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் விரிவுரையாளர் ரா.ராஜசேகர்.
தொடக்க கல்வி: மதுரைக் கல்வி மாவட்டத்தில் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பெ.ஜெயந்தி (தா.வாடிப்பட்டி சி.புதூர் நடுநிலைப்பள்ளி), ஓ.எம்.ஆர்.தனேஷ்வரி (மதுரை தெற்குவெளிவீதி மாநகராட்சி தொடக்கப்பள்ளி), இ.பாத்திமா ஜெயராணி (கண்மாய்க்கரை பாத்திமா நடுநிலைப் பள்ளி).
மேலூர் கல்வி மாவட்டம்: ஊராட்சி ஒன்றிய பள்ளி தலைமை ஆசிரியர்கள் குறிச்சிபட்டி கோ.ஜெயலதா (குறிச்சிபட்டி நடுநிலைப் பள்ளி), ந.லதா (அ.புதூர் தொடக்கப்பள்ளி), ஜெ.கலைச்செல்வி (திருமோகூர் நடுநிலைப் பள்ளி).
உசிலம்பட்டி கல்வி மாவட்டம்: ஊராட்சி ஒன்றிய பள்ளி தலைமை ஆசிரியர்கள் ரா.ஆண்டாள் (சந்தையூர் நடுநிலைப் பள்ளி), ரா.கோபாலகிருஷ்ணன் (பேரையூர் தொடக்கப்பள்ளி), இடைநிலை ஆசிரியர் சு.ஷீலா (உசிலம்பட்டி தொடக்கப்பள்ளி).