news

முதுகலை ஆசிரியர்க்காக போராடக்கூடிய ஒரே அமைப்பு TNHSPGTA ***** நமது சங்கத்தின் உறுப்பினர் ஆகுங்கள் ******சங்க செயல் பாடுகளை தெரிந்துகொள்ள மேல்நிலைக்குரல் படியுங்கள் ******தங்கள் பள்ளி நிகழ்வுகளை அமைப்போடு பகிர்ந்துகொள்ளுங்கள்*****அனைத்து முதுகலை ஆசிரியர்களின் பங்களிப்பே அமைப்பு வளர்ச்சிக்கு உதவும்

Friday 21 July 2017

மாநிலத் தலைவர் கல்விச் செயலருடன் சந்திப்பு - தலைவர் செய்தி

நமது மாண்பமை செயலர் அவர்களை சனிக்கிழமை அன்று சந்தித்து 25 நிமியங்கள் கோரிக்கைகள் சார்ந்து பேசினேன். முதன்மையான முக்கியமான கோரிக்கையாக 01-6-09 முதல் கடந்த ஊதியக் குழுவால் பாதிக்கப்பட்டுள்ள முதுகலை ஆசிரியர்களின் நிலை பற்றி பேசினேன். 8 ஆண்டுகள் கடந்து விட்டனவே எனக் கூறினார். நான் 2011 மார்ச் தேர்வுப் புறக்கணிப்பை பற்றிச் சொன்னேன். 2011 முதல் 2016 வரை எதையும் கண்டு கொள்ளாத நிலை தமிழகத்தில் இருந்ததைப் பற்றியும் பேசினேன். 400 பேர் மொட்டை அடித்துக் கொண்டு 2500 முதுகலை ஆசிரியர்களோடு கோட்டை நோக்கி பேரணியாகச் சென்றதையும் கூறினேன். பள்ளிக் கல்வித் துறையில் நாம் எவ்வாறு கடந்த ஊதியக் குழுவில் பாதிக்கப் பட்டுள்ளோம் என்பதனை அட்டவணையோடு விளக்கினேன்.... அடுத்து உயிரியல் ஆசிரியர்களுக்கான தனித்தனி பணியிடம் - தமிழ், ஆங்கிலம் மற்றும் வணிகவியலுக்கான கூடுதல் பணியிடங்கள் ஆகியவற்றைப் பற்றி பேசினேன்... இவைகள் உடனடியாக சரி செய்ய தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்... நமது அமைப்பின் வழக்கால் 1600 கூடுதல் பணியிடங்கள் கிடைத்துள்ளன. இவைகளோடு சேர்த்து 3400 முதுகலை ஆசிரியப் பணியிடங்கள் தற்போது தேர்ந்தெடுக்கப்பட உள்ளதைக் கூறி அதனோடு மேலும் கூடுதலான பணியிடங்களை உருவாக்க தயாராக உள்ளேன் எனவும் உறுதி அளித்தார்... தற்காலிக ஊதியம் பெறும் நிலையைப் பற்றி பேசினோம். தற்போது உடனடியாக 17,000 தற்காலிகப் பணியிடங்கள் நிரந்தரப் பணியிடங்களாக மாற்றப்படும் என்றார்.ஒவ்வொரு மாநில - மாவட்டக் கழகப் பொறுப்பாளர்களும் முதுகலை ஆசிரியத் தோழர்களும் செய்ய வேண்டியது என்னவென்றால் தற்காலிக ஊதியத்தில் உள்ள பணியிடங்களுக்கான அரசாணை நகல்களை உடனடியாக நமது சென்னை அலுவலக முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்... அனுமதியின்றி உயர்கல்வி படித்தோர்களுக்கு  பின்னேற்பு வழங்குங்கள் எனக் கேட்டுள்ளேன். அதனைக் கட்டாயம் பரிசீலிப்பதாக உறுதி அளித்துள்ளார்கள்....- மாநிலத் தலைவர்

Wednesday 19 July 2017

7ஆவது ஊதிய குழு குறித்து தமிழக நிதியமைச்சர் தகவல்


அனைத்து வகை அரசு பள்ளிகளை ஒரே நிர்வாகத்திற்கு மாற்ற உத்தரவு

தமிழகத்தில், 18 வகை நிர்வாகங்களின் கீழ் செயல்படும் அரசு பள்ளிகளை ஒருங்கிணைத்து, ஒரே நிர்வாக முறையில் கொண்டு வர, மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. தமிழகத்தில், 8,400 அரசு உதவிபெறும் பள்ளிகள் உட்பட, 40 ஆயிரம் பள்ளிகள், அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. 


மற்ற பள்ளிகள், ஆங்கிலோ இந்தியன், மெட்ரிக் என, தனியார் பள்ளிகளாக, தனி இயக்குனரக கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த பள்ளிகளில், மாநிலம் முழுவதும், 5.60 லட்சம் பேர் படிக்கின்றனர். அரசு பள்ளிகளை பொறுத்த வரை, அரசின் பல்வேறு துறைகள் மூலம் நிர்வாகம் செய்யப்படுகிறது.

அதாவது, பள்ளிக்கல்வித் துறை, நகராட்சி, மாநகராட்சி, பஞ்சாயத்துகளுக்கான ஊரக வளர்ச்சித் துறை, கள்ளர் மறுசீரமைப்பு, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, சிறுபான்மையினர் நலத்துறை, வனத்துறை, சமூகநலத் துறை, பழங்குடியினர் நலத்துறை மற்றும் கன்டோன்மென்ட் என, பல்வேறு துறைகளின் நிர்வாகத்தில் செயல்படுகின்றன. 

மாணவர் சேர்க்கை, ஆசிரியர்கள் நியமனம், உள்கட்டமைப்பு மேம்பாடு, பள்ளி நிர்வாகம் போன்றவற்றில், பல்வேறு விதிகள் தனித்தனியாக வகுக்கப்படுகின்றன. அதனால், பள்ளிகளின் திட்டங்களை வகுப்பதிலும், ஒழுங்குமுறை செய்வதிலும், பல்வேறு குளறுபடிகள் ஏற்படுகின்றன. 

இது குறித்து, தமிழக பள்ளிக்கல்வியின் ஆண்டறிக்கையை ஆய்வு செய்த மத்திய அரசு, குளறுபடிகளை கண்டறிந்துள்ளது. இதை தொடர்ந்து, அனைத்து நிர்வாகங்களையும், ஒரே குடையின் கீழ் வரும் வகையில் ஒன்றிணைக்க வேண்டும். இதில், தாமதம் ஏற்படக் கூடாது என, தமிழக பள்ளிக் கல்வித் துறைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

ஜாக்டோ ஜியோ ஆர்ப்பாட்டத்தில் நமது பொதுச்செயலாளர் மற்றும் மதுரை மாவட்ட பொறுப்பாளர்கள்






மதுரையில் 'ஆசிரியர் இல்லம்' இடம் தேர்வு

மதுரையில் கல்வித்துறை சார்பில் 3 கோடி ரூபாயில் கட்டப்படவுள்ள ஆசிரியர் இல்லத்திற்கான இடம் தேர்வு நீண்ட இழுபறிக்கு பின் ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ளது. 'சென்னை, மதுரை, கோவை உட்பட மாவட்டங்களில் கல்வித்துறை சார்பில் ஆசிரியர் இல்லம் கட்டப்படும்,' என முதல்வராக இருந்த ஜெயலலிதா சட்டசபையில் '110' விதியின் கீழ் அறிவித்தார்.
இதற்கான இடம் தேர்வு பிற மாவட்டங்களில் முடிந்த நிலையில், மதுரையில் மட்டும் இழுபறி ஏற்பட்டது. முதலில் புதுதாமரைப்பட்டியில் தேர்வு செய்யப்பட்டு நிலம் வழங்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் உத்தரவும் பிறப்பித்தது. ஆனால், துாரமாக உள்ளதால் கல்வி அதிகாரிகள் நிராகரித்தனர். பின்னர் கல்வித்துறைக்கு சொந்தமாக ஜெய்ஹிந்துபுரம் மார்க்கெட் பகுதி இடமும் குறுகியதாக இருந்ததால் நிராகரிக்கப்பட்டது.
இந்நிலையில், சட்டசபை கொள்கை விளக்க குறிப்பில் விபரம் இடம் பெறாததால் மதுரை ஆசிரியர் இல்லம் திட்டம் கைவிடப்பட்டதாக தகவல் வெளியானது. கல்வி அதிகாரிகள் தலையிட்ட பின், விரைவில் இடம் தேர்வு செய்ய அரசு கெடு விதித்தது. இதன் அடிப்படையில் முதன்மை கல்வி அலுவலர் மாரிமுத்து தலைமையில் கல்வி அலுவலர்கள் மூன்று இடங்களை தேர்வு செய்து ஆய்வு செய்தனர். இதில் அவனியாபுரம் உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் 50 சென்ட் இடத்தில் இல்லம் கட்ட முடிவானது.
அதிகாரி ஒருவர் கூறியதாவது: அவனியாபுரம் பள்ளி வளாகம் ஆறு ஏக்கரில் அமைந்துள்ளது. வகுப்பறை கட்டடங்கள் 2 ஏக்கர் பகுதியில் உள்ள நிலையில், 50 சென்ட் இடத்தில் இல்லம் கட்டப்படும். விமான நிலையம் அருகில் உள்ளது. தென் மாவட்ட ஆசிரியர், அதிகாரிகள் மண்டேலா நகரில் இருந்து எளிதில் வரமுடியும். பொதுப்பணித்துறை ஆய்வுக்கு பின் கட்டடப் பணி துவங்கும், என்றார்.

புதிய பாடத்திட்டம் - 20.07.2017 அன்று முறைப்படி துவக்கம் - மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் மற்றும் குழு உறுப்பினர்கள் பங்கேற்பு - செய்தி வெளியீடு



Wednesday 12 July 2017

பள்ளிக்கல்வி இணை இயக்குனர்கள் மாற்றம்

    பள்ளிக்கல்வியில், இரண்டு இணை இயக்குனர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
பள்ளிக்கல்வி பணியாளர் நலப்பிரிவு இணை இயக்குனர் பாஸ்கர சேதுபதி, தொடக்கக் கல்வித் துறையில், அரசு உதவிபெறும் பள்ளிகளின் நிர்வாக இணை இயக்குனராக மாற்றப்பட்டு உள்ளார்.
பணியாளர் நலப்பிரிவு இணை இயக்குனராக, தொடக்கக் கல்வி இணை இயக்குனர் சசிகலா நியமிக்கப்பட்டு உள்ளார்.

Friday 7 July 2017

மதுரையில் பிளஸ் 2 துணைத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி இன்று (7ம் தேதி) தொடங்குகிறது.

மதுரையில் பிளஸ் 2 துணைத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி இன்று  (7ம் தேதி) தொடங்குகிறது.
பிளஸ் 2 துணைத் தேர்வு ஜூன் 23ம் தேதி தொடங்கியது. இத்தேர்வு 6ம் தேதி முடிந்தது . இதற்கான விடைத்தாள் திருத்தும் மையம் மதுரை வேலம்மாள் மெட்ரிக்குலேசன் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ளது.
மதுரையின் 5 மையங்கள் உள்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 48 மையங்களில் தேர்வு எழுதிய மாணவர்களின் அனைத்துப் பாடங்களைச் சேர்ந்த விடைத்தாள்கள் இங்கு மதிப்பீடு செய்யப்படுகின்றன.
இப் ப ணிக்கான ஆசிரியர் கள் தேர்வுப் பட்டியல் தயாரிப்பு உள்பட அனைத்து ஏற்பாடுகளும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மாரி முத்து தலைமையில் செய்யப்பட்டு வருகின்றன.

முதலாம் இடைப்பருவத் தேர்வு-2017 கால அட்டவணை


Sunday 2 July 2017

அரசு ஊழியர் ஊதிய உயர்வு ஆய்வு குழு காலம் நீட்டிப்பு

     மத்திய அரசின் ஏழாவது ஊதியக்குழு பரிந்துரை அடிப்படையில், தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, ஊதிய விகிதங்களை மாற்றி அமைப்பதற்கான பரிந்துரைகளை அளிக்க, தமிழக அரசு நியமித்த குழுவின் பதவி காலத்தை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
தமிழக அரசு சார்பில், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர்களுக்கு, ஊதிய விகிதங்களை மாற்றுவதற்கான பரிந்துரைகள் அளிக்க, 'அலுவலர் குழு' பிப்ரவரியில் அமைக்கப்பட்டது. 
குழுவில், நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலர், உள்துறை முதன்மைச் செயலர், பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறைச் செயலர், உறுப்பினர் செயலராக உமாநாத் ஆகியோர் இடம் பெற்றனர்.

இக்குழுவினர், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகளை சந்தித்து, அவர்களின் கோரிக்கைகளை கேட்டனர். அறிக்கையை, ஜூன், 30க்குள் அளிக்க வேண்டும் என, முதல்வர் உத்தரவிட்டிருந்தார். 

அதற்கான காலம், நேற்றுடன் நிறைவு பெற்றது. இன்னமும் பணி நிறைவு பெறாததால், குழுவின் பதவி காலத்தை, மேலும் மூன்று மாதங்களுக்கு, அதாவது, செப்டம்பர், 30 வரை நீட்டிக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.