news

முதுகலை ஆசிரியர்க்காக போராடக்கூடிய ஒரே அமைப்பு TNHSPGTA ***** நமது சங்கத்தின் உறுப்பினர் ஆகுங்கள் ******சங்க செயல் பாடுகளை தெரிந்துகொள்ள மேல்நிலைக்குரல் படியுங்கள் ******தங்கள் பள்ளி நிகழ்வுகளை அமைப்போடு பகிர்ந்துகொள்ளுங்கள்*****அனைத்து முதுகலை ஆசிரியர்களின் பங்களிப்பே அமைப்பு வளர்ச்சிக்கு உதவும்

Sunday 29 November 2015

ஆசிரியர்கள் மறியல் போராட்டம் டிச., 1ல் மனு அளிக்க 'ஐாக்டோ' முடிவு

ஆசிரியர்களின், 15 அம்ச கோரிக்கை குறித்தும், டிச., 28ம் தேதி மறியல் போராட்டம் குறித்தும், வரும் 1ம் தேதி ஜாக்டோ நிர்வாகிகள், தலைமைச் செயலகத்தில் மனு அளிக்க உள்ளனர். பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் ரத்து, மத்திய அரசுக்கு இணையான இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதியம், ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு சட்டம், தமிழை முதல் பாடமாக்க அரசாணை உள்ளிட்ட, 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆசிரியர் சங்கங்களின் கூட்டுக்குழுவான ஜாக்டோ, கடந்த பிப்ரவரி முதல் போராட்டம் நடத்துகிறது.
அக்., 8ல் ஜாக்டோ நடத்திய, மாநில அளவிலான வேலை நிறுத்தத்தால், பள்ளிகள் செயல்படாமல் முடங்கின. ஆனாலும், அரசு அவர்களை அழைத்து பேச்சு நடத்தவில்லை. இந்நிலையில், அடுத்த கட்டமாக டிச., 28 முதல் 30 வரை தொடர் மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து, வரும் 1ம் தேதி தலைமைச் செயலகத்தில், பள்ளிக்கல்வி முதன்மை செயலரை, ஜாக்டோ உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் சந்தித்து, மனு அளிக்க உள்ளனர்.

Saturday 28 November 2015

அரையாண்டு தேர்வில் மாற்றமில்லை


பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர், இதர உதவி ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லத பணியாளர்கள் அனைவரின் அடிப்படை கடமைகள் குறித்து RTI வழியாக பெற்ற தகவல்கள்.

PAY ORDER FOR NOV MONTH G.O. 137

தினமணி” நாளிதழில் ”தேவையற்ற சுமை” என்ற தலைப்பில் வெளிவந்த தலையங்கத்திற்கு தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநில தலைவரின் பதில்

23.11.2015 அன்று தினமணி நாளிதழில் மத்திய அரசு அறிவித்த ஏழாவது ஊதியக்குழு அறிக்கை தொடர்பாகவும,அரசு அலுவலர்களுக்கு ஊதியம் அறிப்பது ’’தேவையற்ற சுமை” என்ற தலைப்பில் தலையங்கம் எழுதப்பட்டது.
அத்தலையங்கத்திற்கு பதில் :
தமிழகத்தில் தொண்ணுற்று ஐந்து ஆண்டு காலம் பாரம்பரியமிக்கதும்,தமிழக அரசின் அங்கீகாரம் பெற்ற சங்கங்களில் முதன்மையானதாக திகழ்ந்து வருவதும்,தமிழக அரசில் பணிபுரியும் அரசு அலுவலர்களில் சுமார் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு அலுவலர்களை உறுப்பினர்களாக கொண்டுள்ளதும்,தமிழக அரசு அலுவலர்களின் பாதுகாப்பு அரணாக திகழ்ந்து வரும் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநிலத் தலைவர் என்ற முறையில் இந்தக் கடிதத்தினை தினமணி நாளிதழ் ஆசிரியர் அவர்களின் கனிவான பார்வைக்கு வைக்க விரும்புகின்றேன்.
23.11.2015 திங்கள் கிழமையன்று வெளிவந்த ”தினமணி” நாளிதழில் ”தேவையற்ற சுமை” என்ற தலைப்பில் வெளிவந்த தலையங்கத்திற்கு தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் சார்பில் கண்டனம் என்று தெரிவிக்க வேண்டும் என்று விரும்பினாலும் நாகரீகம் கருதி எங்களது வேதனையை முதலில் தெரிவித்துக் கொள்கிறோம். மத்திய அரசில் பணிபுரியும் 47 லட்சம் அரசு அலுவலர்கள் 52 லட்சம் ஓய்வூதியர்கள் ஆகியோருக்கான ஏழாவது ஊதியக்குழு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.இவ்வறிக்கையினால் மத்திய அரசிற்கு ரூ.1 லட்சம் கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வறிக்கை தொடர்பாக தங்களது தலையங்கம் உடியாக கருத்து தெரிவிக்க வேண்டும் என்ற அவசரத்திலும்,அரசு அலுவலர்களின் பணி பற்றி தவறாக சிந்தித்தும்,குற்றம் சாட்ட வேண்டும் என்ற உள்நோக்கத்துடனும் அரைவேக்காட்டுத்தனமாக சித்தரிக்கப்பட்ட தலையங்கமோ? என்று தான் நாங்கள் எண்ணத் தோன்றுகின்றது. தலைங்கம் பற்றி எங்கள் கருத்தினை தாங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமென விரும்புகிறோம்.
தற்போது வெளிவந்திருக்கும் இந்த ஏழாவது ஊதிய குழு அறிக்கை 1.1.2006க்கு பின்னர் 10 ஆண்டுகளுக்கு 1.1.2016ல் வெளிவரும் அறிக்கையாகும். மேலும், மத்திய அரசில் உள்ள ராணுவத்தில் பணிபுரியும் அனைத்து நிலை ராணுவ வீரர்களுக்கும் இவ்வூதியக்குழு பொருந்தும்.
இந்த ஊதியக்குழு பரிந்துரைகளின்படி அரசு அலுவலர்களின் ஊதியம் ”எங்கோ உயரப்போகிறது” என்ற கற்பனை யாருக்கும் வேண்டாம். ஒரு சிறு கணக்கீடு மத்திய அரசில் பணிபுரியும் ஓர் அடிப்படைப்ப்ணியாளர் தற்போது பெற்று வரும் ஊதியம் ..ரூ.5200+1800=7000. இந்த 7000த்தினை 2.57ல் பெருக்கி வரும் தொகை ரூ.17,990 ஆக ரூ.18,000 இதன் மூலம் ஒரு பணியாளருக்கு ரூ.11,000 ஊதியம் கூடும் என கற்பனை செய்ய வேண்டாம். 1.1.2016ல் அவ்வலுவலர் பெற்று வரும் அகவிலைப்படி 1.1.2016ல் 125 சதவீதம் ஆகும். இந்த 125 சதவீத அகவிலைப்படியும் அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப்படவேண்டும் என்றும் 1.1.2016ல் அகவிலைப்படி 0 சதவீதம் மட்டும் தான் என்பதையும் அறிக்கையில் தெளிவாக அறிவிக்கப்பட்டது. அதன்படி ஓர் அடிப்படை அலுவலர் 1.1.2016ல் பெறும் ஊதியம் + அகவிலைப்படி ரூ.5200 + 1800 + = 8750 = ரூ.15750 ஆகும்.
ஆக ஏழாவது ஊதியக்குழு அறிக்கையின்படி 2.57சதவீதம்
உயர்வின் மூலம் கிடைக்கும் ஊதியம் ரூ.18,000
அகவிலைப்படி 125 சதவீதத்தினை அடிப்படை ஊதியத்துடன் இணைத்து வரும் தொகை ரூ.15,750  = 2,250/-
ஆக 10 ஆண்டுகளுக்கு பிறகு மத்திய அரசின் அடிப்படை பணியாளருக்கு கிடைக்கும் ஊதிய உயர்வு ரூ.2,250/- மட்டுமே என்பதை ”தினமணி” சரியாக புரிந்து கொள்ள வேண்டும். 10 ஆண்டுகளுக்கு பிறகு ரூ.2000/- மட்டும் ஊதிய உயர்வு பெறும் அலுவலர்களின் ஊதியம் தங்களின் பார்வையில் ”தேவையற்ற சுமையா”
மத்திய அர8சாக இருந்தாலும், மாநில அரசாக இருந்தாலும் சரி அவ்வரசில் பணிபுரியும் அரசு அலுவலர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தினை வழங்குவது ”தேவையற்ற செவினம்” என்று கருதும் தினமணிக்கு தமிழக முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா அவர்கள் தெரிவித்த கருத்தையே பதிலாக முன் வைக்கின்றேன்.
”அரசில் பணிபுரியும் அரசு அலுவலர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் ” வருவாய் செலவினம்” என்று கருதக்கூடாது. அது திட்ட ”முதலீட்டு செலவினம்” ஒரு திட்டத்தினை தீட்டும் பொழுது அத்திட்டத்தில் பணிபுரியும் அலுவலர்களுக்கு வழங்கும் ஊதியத்தினை முதலீட்டு செலவினமாக எடுத்துக் கொள்வது போல் அரசு தீட்டும் பல மக்கள் நல திட்டங்களுக்காக பணிபுரியும் அரசு அலுவலர்களுக்கு வழங்கும் ஊதியத்தினையும் அரசின் முதலீட்டு செலவினமாகத்தான் கருத வேண்டும்” என்று அன்றைக்கு தமிழக முதலமைச்சராக இருந்த பொழுது தமிழக சட்டசபையில் தெரிவித்த கருத்து இதுவாகும். ஆக, ஓர் அரசு மக்களுக்காக செயல்படுத்தும் மக்கள் நலத்திட்டங்களை கடைக்கோடி மக்களுக்கு எடுத்து செல்லப் பணிபுயும் அரசு அலுவலர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் தங்கள் பார்வை ”தேவையற்ற சுமையா?”
நாளிதழ் என்பது அனைத்து பிரச்னைகளையும் அவரவர் பார்வையில் பார்த்து, ஒவ்வொரு நிகழ்வினையும் ஆராய்ந்து, அதனை தனது பார்வையால் தீர்வு சொல்ல வேண்டிய நிலையில் இருப்பது. ஆனால், அரசு அலுவலர்களின் ஊதிய உயர்வு விஷயத்தில் எங்களது நிலையிலிருந்து இதனை ஆய்வு செய்யாமல் ஏற்கனவே ஒரு முடிவினை முடிவு செய்து கொண்டு தலையங்கம் தீட்டி இருப்பதும், மக்களுக்காக உழைத்து வரும் எங்களை ”தேவையற்ற சுமை” என்று விமர்சிப்பதும், பாரம்பரியமிக்க ”தினமணி”-யின் பார்வையில் கோளாறு ஏற்பட்டு விட்டதோ என்று எண்ணத்தோன்றுகிறது.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஐந்து உரிமைகளை வழங்கியுள்ளது. (1) குடியுரிமை (2) காப்புரிமை (3) வாக்குரிமை (4) பேச்சுரிமை (5) எழுத்துரிமை. ஆனால், இந்திய குடிமக்களில் ஒருவராக வாழ்ந்து இந்திய குடிமக்களுக்காக உழைத்து வரும் அரசு அலுவலர்களுக்கு ”வாக்குரிமை” தவிர வேறு எந்த உரிமையும் இல்லை ”நடத்தை விதிகள்” என்ற பெயரில் எங்களது அனைத்து உரிமைகளையும் மறைமுகமாக பறிக்கப்பட்டுது என்பதை ”தினமணிக்கு” தெரியுமா?
இந்திய நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாநிலங்களின் சட்ட மன்ற உறுப்பினர்கள் ஆகியவர்கள் தங்களுக்கு தாங்களே உயர்த்திக் கொள்ளும் நிலைப்பற்றி யாரும் வாய் திறக்காமல், அரசு அலுவலர்களின் ஊதியம் உயர்த்தப்படும் போது மட்டும், விமர்சித்து கருத்துக்களை தெரிவிப்பது ஏன்? அரசிற்காகவும், மக்களுக்காகவும் உழைத்து வரும் எங்களின் ஊதியம் மட்டும் எப்படி தங்களின் பார்வையில் ” தேவையற்ற சுமையாகும்?”
இந்த இந்திய நாட்டின் வளர்ச்சிக்கும், தமிழகத்தின் வளர்ச்சிக்கும் மத்திய, மாநில அரசு அலுவலர் சமுதாயம் அபரிதமான உழைப்பினை அளித்துள்ளார்கள் என்பதை ”தினமணி” நன்கு உணர வேண்டும். நாட்டில் நிகழும் இயற்கை சீற்றத்தின் காரணமாக நடக்கும் பேரிடர் நிகழ்வுகளால் ஏற்படும் இடர்பாடுகளிலிருந்து மக்களை காப்பாற்றியும், மீண்டும் இயல்புநிலை திரும்புவதற்கு அடிப்படை பணிகளிலிருந்து அனைத்துப் பணிகளையும் தங்களது பசியறியாது பணிபுரியும் அலுவலர்கள்  என்பதை ”தினமணி” மறுக்க முடியுமா? இன்று உலகின் மிகப்பெரிய ராணுவங்களில் ஒன்று என்று பெருமையுடன் கருதப்படும் இந்திய ராணுவத்தின் அனைத்துப் படைகளிலும் அதன் பிற துறைகளிலும் பணிபுரிபவர்கள் அரசு அலுவலர்க்ளே. இன்றைக்கு நாட்டில் ஏற்பட்டுள்ள தீவிரவாதத்தை தடுத்தல், பேரிடர் மேலாண்மை என்றும், எல்லையே இந்த நாட்டினை காக்க கண் துஞ்சாது, பசியறியாது பணிபுரியும் ராணுவ வீரர்கள் தினமணி-யின் பார்வையில் ”தேவையற்ற சுமையா”
தமிழகத்தில் சுனாமி ஏற்பட்ட பொழுது தொற்று நோய் பரவும் என்ற உலக சுகாதார நிறுவனம் எச்சரித்தபோது சுனாமியால் ஏற்பட்ட தாக்கத்தினை சீர் செய்ததோடு மட்டுமல்லாது, அச்சுமியினால் ஏற்படும் தொற்று நோயால் ஒருவர் கூட மரிக்காமல் சீரமைத்த அற்புதத்தினை படைத்தவர்கள் எங்கள் அரசு அலுவலர்கள்.
பெரியம்மை, பிளேக், காலரா, தொழுநோய் போன்ற நோய்களை அடியோடு அகற்றி புதிய மறுமலர்ச்சியை உருவாக்கியது எங்கள் அரசு அலுவலர்கள்.
வெண்மை புரிட்சி, கல்விபுரட்சி, பசுமைபுரட்சி, தொழில் புரட்சி என்று சாசுவதமான எத்தனையோ புரட்சி வெற்றி பெற விதையாக இருப்பவர்களும் நாங்கள்.
மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களும், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களும் அறிவிக்கும் மக்கள் நலத்திட்டங்கள் வெற்றி பெற்றுள்ளது என்று உங்கள் போன்ற ஊடகங்கள் தெரிவிக்கும் போது அவ்வெற்றிக்கு பின்னர் நிற்பது யார்? அரசு அலுவலர்கள் தான்.
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களே அரசு அலுவலர்களுக்கான அறிவிப்பு வெளியிடும் பொழுதெல்லாம் ”அரசின் அச்சாணியாக செயல்படும் அரசு அலுவலர்கள்” என்று விளித்து கூறுவார்கள். அதன்படி ஓர் அரசின் அச்சாணியாக மாண்புமிகு முதலமைச்சர் பார்வையில் திகழும் நாங்கள் ”தினமணி”-யின் பார்வைக்கு மட்டும் எப்படி ”தேவையற்ற சுமை”யானோம்.
அரசு அலுவலர்கள் அனைவரும் கையூட்டு வாங்குகிறார்கள் இல்லை என்ற தாங்களே தலையங்கத்தில் கூறிவிட்டு கையூட்டாக பெறும் தொகை என்று ஓர் தனியார் நிறுவன ஆய்வினை சுட்டிக் காட்டியுள்ளீர்கள். பத்திரிக்கை உலகிலும், ஊடகங்களிலும் தங்களைப் போன்ற பாரம்பரியமிக்க நிறுவனங்கள் செயல்படும் வேளையில், போலி பத்திரிக்கைகளும், நிலவி வரும் போது ஒட்டு மொத்தமாக அனைவரையும் குறைசொல்ல இயலாது அல்லவா? அதைப்போல யாரோ சிலர் செய்யும் தவறுக்கு ஒட்டுமொத்த அரசு அலுவலர் சமுதாயத்தினை குறை சொல்வது ”தினமணி” -க்கு அழகல்ல..
இவ்வாறு குறிப்பிட்டது ஒரு சிறு துளி தான்.. .. ..
மேலும் குறிப்பிட்டு எழுத முடியும், ஆனால், நாட்களும்,தாட்களும் பத்தாது.. .. ..
இறுதியாக,, இந்தியாவில் உள்ள பல பன்னாட்டு நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் போலியான பெயரில் உலவும் வணிக நிறுவனங்கள், பல பணக்காரர்கள் வரியினை ஏய்ப்பு செய்கிறார்கள் என்று ”தினமணி” போன்ற பத்திரிக்கைகளில் செய்தி வருவதை தொடர்ந்து நாங்கள் பார்த்து வரகிறோம். ஆனால், இந்த இந்தியாவில் வருமான வரியினை ஒழுங்காக கட்டி வரும் ஒரே சமுதாயம் அரசு அலுவலர் சமுதாயம் மட்டுமே என்பதை தங்கள் பார்வைக்கு சுட்டி காட்ட கடைமைப்பட்டுள்ளோம் என்பதோடு வரி ஒழுங்காக கட்டி வரும் எங்களை பற்றியும் தினமணி எழுதுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
”தேவையற்ற சுமை” என்று எங்களை விளித்தது வேதனை தந்தாலும் இந்த விளக்கத்தினை தங்கள் பார்வைக்கு தெரிவிக்க விழைந்தமைக்கு அத் தலையங்கத்திற்கு நன்றி.
அய்யா,
நாங்கள் அரசிற்கும் மக்களுக்கும் ”தேவையற்ற சுமை” அல்ல ’சுமைதாங்கிகள்’
அன்புடன்
(இரா.சண்முகராஜன்)
மாநிலத் தலைவர்
தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம்

Wednesday 25 November 2015

வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் மட்டும், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு அரையாண்டுத் தேர்வை தள்ளி வைக்க, கல்வித்துறை முடிவு

வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் மட்டும், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு அரையாண்டுத் தேர்வை தள்ளி வைக்க, கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்துடன், அரையாண்டுத் தேர்வு விடுமுறை நாட்களையும் குறைக்காமல் இருப்பது குறித்து, கல்வித்துறை பரிசீலனை செய்து வருகிறது. எனவே, மாணவர்கள் குஷியாகியுள்ளனர்.
வட கிழக்கு பருவ மழையின் போது ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால், சென்னை, கடலுார், விழுப்புரம், வேலுார், காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அதனால், பள்ளிகளுக்கு, நவ., 9 முதல் தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது. ஐந்து லட்சம் மாணவர்கள், பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், சீருடை, புத்தகப் பை, வழிகாட்டி நுால்கள், சான்றிதழ்களை இழந்துள்ளனர். லட்சக்கணக்கான மாணவர்கள், குடும்பத்தினருடன் வீடுகளில் இருந்து வெளியேறி, பாதுகாப்பான இடங்களில் தங்கியுள்ளனர். பள்ளி திறந்ததும், புதிய புத்தகங்கள், சீருடை, புத்தகப் பை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் மட்டும், அரையாண்டுத் தேர்வை தள்ளி வைக்க, தமிழக பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. முந்தைய அறிவிப்புப்படி, 10ம் வகுப்புக்கு டிச., 9; பிளஸ் 2வுக்கு டிச., 7ல் அரையாண்டுத் தேர்வு துவங்கி, டிச., 22ல் முடிய வேண்டும். ஆனால், மழை விடுமுறையால், ஆறு மாவட்டங்களுக்கு மட்டும், அரையாண்டுத் தேர்வை, ஜனவரி முதல் வாரத்தில் நடத்த, பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் பொதுத் தேர்வு எழுத வேண்டியுள்ளதால் அவர்களுக்கு பாடங்கள், முன்கூட்டியே நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. மழை விடுமுறையால், 
தேர்வுக்கான பாடங்கள் நடத்துவதில் பிரச்னை இல்லை.ஆனால், மழை பாதித்த இடங்களில், மாணவர்களிடம் பாடப் புத்தகங்கள் மற்றும் நோட்டுப் புத்தகங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன; மீதமிருக்கும் புத்தகங்களும் நனைந்துள்ளன. பல மாணவர்களுக்கு புத்தகங்கள் சேதமாகி விட்டன. கணிதம், அறிவியல், இயற்பியல், வேதியியல், விலங்கியல் பாடங்களில், பாடப் புத்தகங்களை விட, ஆசிரியர்கள் வகுப்பறையில் பாடம் நடத்திய குறிப்புகளை, நோட்டுப் புத்தகத்தில் மாணவர்கள் எழுதி வைத்திருப்பர்.
தற்போது நோட்டுப் புத்தகம் இல்லாததால், அவர்கள் தேர்வுக்கு தயாராக முடியாது. புதிய நோட்டுப் புத்தகம் கொடுத்து, மற்ற மாணவர்களின் நோட்டுப் புத்தகங்களைப் பார்த்து எழுதவும், பாடங்களைப் படிக்கவும் கால அவகாசம் தேவை. எனவே, டிச., 7ல் துவங்க உள்ள அரையாண்டுத் தேர்வை தள்ளி வைத்து, டிச., 16 அல்லது கிறிஸ்துமஸ் பண்டிகைக்குப் பின், ஜனவரியில் நடத்துவது குறித்து ஆலோசித்து வருகிறோம். அதே போன்று, டிசம்பரில் வழக்கமாக அறிவிக்கப்படும், அரையாண்டுத் தேர்வுக்கான விடுமுறையில், பண்டிகை நாட்களுக்கு மட்டும் இந்த ஆண்டு 
விடுமுறை அளித்து விட்டு, சனிக்கிழமை உட்பட அனைத்து நாட்களிலும் பள்ளிகளைநடத்தலாம் என்றும் பரிசீலனை செய்கிறோம். ஆனால், மழை விட்டால் தான் பள்ளி தேதி குறித்து, சரியாக முடிவெடுக்க இயலும்.இதில், 1ம் வகுப்பு முதல், 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, இரண்டாம் பருவத் தேர்விலோ, விடுமுறையிலோ பெரிய மாற்றம் இருக்காது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். அரையாண்டுத் தேர்வு தள்ளிப்போகும் என்ற தகவல் வெளியாகி உள்ளதால், ஆறு மாவட்டங்களில் உள்ள மாணவ, மாணவியர் குஷியடைந்துள்ளனர்.

Monday 23 November 2015

ஊதிய கமிஷனில் 7-வது ஊதிய கமிஷன் பரிந்துரை தான் மிக மோசமானது!!!

      7-வது சம்பள கமிஷன் பரிந்துரைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னையில் மத்திய அரசு ஊழியர்கள் வருகிற 24-ந்தேதி(செவ்வாய்க்கிழமை) ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.7-வது சம்பள கமிஷன்மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான 7-வது சம்பள கமிஷன் தொடர்பான 900 பக்கங்கள் கொண்ட சிபாரிசு அறிக்கையை மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லியிடம், சம்பள கமிஷன் குழு தலைவர் நீதிபதி ஏ.கே.மாத்தூர் நேற்று முன்தினம் சமர்ப்பித்தார். 
       7-வது சம்பள கமிஷன் பரிந்துரை மத்திய அரசு ஊழியர்களின் சலுகைகளை பறிப்பதாக உள்ளதாகவும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் 24-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று மத்திய அரசு ஊழியர்கள் மகா சம்மேளனம்(தமிழ் பிரிவு) அறிவித்துள்ளது.
வாரி வழங்குவது போல்...
இதுகுறித்து அந்த சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் எம்.துரை பாண்டியன் நிருபரிடம் கூறியதாவது:-மத்திய அரசு ஊழியர்களுக்கு வாரி வழங்குவது போல் 7-வது சம்பள கமிஷன் தோற்றத்தை உருவாக்கி இருக்கிறது. ஆனால் அது உண்மை இல்லை.மத்திய அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ.26 ஆயிரம் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது. ஆனால், ரூ.18 ஆயிரம் தான் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தற்போது மத்திய அரசு ஊழியர்கள் குறைந்தபட்ச மாத சம்பளமாக ரூ.15 ஆயிரத்து 750 வாங்கி வருகிறார்கள். 
அதன்படி, ரூ.2ஆயிரத்து 250 மட்டுமே உயர்த்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதிலும், வைப்புநிதி, இன்சூரன்ஸ் தொகையாக மாதம் ரூ.2 ஆயிரம் 580 பிடித்தம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது வாங்கும் சம்பளத்தில் இருந்து ரூ.330 குறைவாகவே மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடைக்கும். பல சலுகைகள் ரத்துவீட்டு உபயோக பொருட் கள், சைக்கிள், மோட்டார் சைக்கிள், கார் போன்ற பொருட்கள் வாங்குவதற்கு முன் பணம் வழங்கப்பட்டு வருகிறது.இனி அது வழங்கப்படாது என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ் போன்ற பாண்டிகை காலங்களில் சம்பள முன் தொகையாக ரூ.2 ஆயிரத்து 500 வழங்கப்பட்டு வருகிறது. 
அதுவும் இனி கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.விலைவாசி உயர்ந்து கொண்டே செல்கிறது. எனினும், மத்திய அரசு ஊழியர்கள் வாடகை கணக்கீடு உயர்த்தப்படாமல் 30 சதவீதத்தில் இருந்து 26 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு ரகசிய அறிக்கை மூலம் ‘நன்று’ கிடைத்தால் பதவி உயர்வு அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது ‘மிக நன்று’ கிடைத்தால்மட்டுமே பதவி உயர்வு என்று கூறியிருப்பது, ஒரு சிலருக்கு மட்டுமேபதவி உயர்வு வாய்ப்பு அமையும். இதுபோன்று பல சலுகைகளை 7-வது ஊதிய கமிஷன் பரிந்துரையில் பறிக்கப்பட்டுள்ளது
24-ந்தேதி ஆர்ப்பாட்டம்
மத்திய அரசு ஊழியர்களுக்கு இதுவரையில் பரிந்துரை செய்யப்பட்ட ஊதிய கமிஷனில் 7-வது ஊதிய கமிஷன் பரிந்துரை தான் மிக மோசமானதாக உள்ளது. இந்த ஊதிய கமிஷன் நடைமுறைப்படுத்தப்பட்டால் நாடு முழுவதும் உள்ள 48 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 55 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பாதிக்கப்படுவார்கள். 
எனவே மத்திய மந்திரி சபை, செயலாளர்கள் கூட்டத்தில், 7-வது ஊதிய கமிஷன் பரிந்துரையில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். இதனை வலியுறுத்தி வருகிற 24-ந்தேதி சென்னை அண்ணாசாலை தலைமை தபால்நிலையம் முன்பு மத்திய அரசு ஊழியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவார்கள். அதன்பின்னர் வேலைநிறுத்த போராட்டம் மேற்கொள்வது தொடர்பான அறிவிப்புகள் வெளியிடப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

7ஆவது ஊதியக் குழு பரிந்துரைகள்:காங்கிரஸ் அதிருப்தி

அண்மையில் வெளியிடப்பட்ட 7ஆவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் குறித்து காங்கிரஸ் கட்சி அதிருப்தி தெரிவித்துள்ளது. பல்வேறு துறைகளில் பணியாற்றி வரும் அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்சமாக 40 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்றும் அக்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் அஜய் மாக்கன், தில்லியில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:
ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளால் மத்திய அரசு ஊழியர்கள் அதிருப்தியும், விரக்தியும் அடைந்துள்ளனர். அந்தப் பரிந்துரைகளால், ஊழியர்களுக்கு அநியாயமும், அவமதிப்பும் ஏற்பட்டுள்ளது.
5ஆவது மற்றும் 6ஆவது ஊதியக் குழுக்கள் 40 சதவீத ஊதிய உயர்வுகளை அறிவித்தன. ஆனால், 7ஆவது ஊதியக் குழுவில் 14.29 சதவீத ஊதிய உயர்வுக்கு மட்டுமே பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மேலும், மத்திய அரசு ஊழியர்களுக்கு இடையில் ஒன்றுக்கு 12 என்ற விகிதத்தில் இருந்த ஊதிய வேறுபாட்டை, ஒன்றுக்கு 8 என்ற விகிதமாகக் குறைக்க வேண்டும் என்று 6ஆவது ஊதியக் குழு பரிந்துரைத்திருந்தது. ஆனால், அந்த இடைவெளியை ஒன்றுக்கு 14 என்ற விகிதத்தில் 7ஆவது ஊதியக் குழு அதிகரித்துள்ளது.
குறைந்த ஊதியம் வாங்கும் ஊழியர்களுக்கு எதிராகவும், மேல்நிலை அதிகாரிகளுக்கு ஆதரவாகவும் இந்தப் பரிந்துரை உள்ளது.
இதனால், ஊழியர்களின் வாழ்க்கைத் தரம் மேம்படாது.
தற்போது வழங்கப்பட்டு வரும் 52 படிகளை நிறுத்தி வைத்தல், பண்டிகைக் காலங்களில் வட்டியில்லா முன்பணம் வழங்கப்படும் முறையை ஒழித்தல் உள்பட ஆட்சேபணைக்குரிய பல்வேறு அம்சங்கள் ஊதியக் குழுவின் பரிந்துரைகளில் காணப்படுகின்றன.
ஆண்டுதோறும் 3 முதல் 4 சதவீதம் வரை ஊதிய உயர்வு அளிக்கப்பட வேண்டும் என்று ஆறாவது குழு பரிந்துரை செய்திருந்தது. அது தற்போது 3 சதவீதமாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றார் அஜய் மாக்கன்.

Friday 20 November 2015

7-வது ஊதியக்குழுவின் அறிக்கை விவரங்கள்

*மத்திய அரசு ஊழியர்களுக்கு 23.55 சதவீத ஊதிய உயர்வு அளிக்கப்பட வேண்டும். இதில், சம்பளம் 16 சதவீதமும், இதர படிகள் 63 சதவீதமும் உயர்த்தப்பட வேண்டும்.

.*ஓய்வூதியதாரர்களுக்கு 24 சதவீத ஓய்வூதிய உயர்வு.

*மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் 3 சதவீத ஊதிய உயர்வு. குறைந்தபட்ச சம்பளம் ரூ.18 ஆயிரம்.
*குறைந்தபட்ச சம்பளம் ரூ.18 ஆயிரமாகவும், அதிகபட்ச சம்பளம் ரூ.2 லட்சத்து 25 ஆயிரமாகவும் இருக்க வேண்டும். தற்போது, ரூ.90 ஆயிரம் சம்பளம் பெற்று வரும் மந்திரிசபை செயலாளர், இனிமேல் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் சம்பளம் பெறுவார்.

*இந்த சிபாரிசுகள், அடுத்த ஆண்டு ஜனவரி 1–ந் தேதி முதல் அமல்.*பணிக்கொடை உச்சவரம்பு, ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்வு. அத்துடன், எப்போதெல்லாம் அகவிலைப்படி 50 சதவீதம் உயர்கிறதோ, அப்போதெல்லாம் பணிக்கொடை உச்சவரம்பு 25 சதவீதம் உயர வேண்டும்.

*இந்த சம்பள உயர்வால், 47 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 52 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பலன் அடைவார்கள். மேலும், பொதுத்துறை நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், தன்னாட்சி அமைப்புகள் ஆகியவற்றில் பணியாற்றும் ஊழியர்களும் பலன் அடைவார்கள்.ரூ.1.02 லட்சம் கோடி கூடுதல் செலவு

*சம்பள உயர்வால், மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சத்து 2 ஆயிரம் கோடி கூடுதல் செலவாகும். (இதில், பொது பட்ஜெட்டில் ரூ.73 ஆயிரத்து 650 கோடியும், ரெயில்வே பட்ஜெட்டில் ரூ.28 ஆயிரத்து 450 கோடியும் ஏற்றுக் கொள்ளப்படும்.)

*வீட்டுக்கடன் வட்டியுடன் கூடிய வீட்டுக்கடனுக்கான உச்சவரம்பு ரூ.7 லட்சத்து 50 ஆயிரத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்வு. வட்டி இல்லாத அனைத்து கடன் திட்டங்களும் கைவிடப்பட வேண்டும்

.*ராணுவத்தினரைப் போலவே, இதர மத்திய அரசு ஊழியர்களுக்கும் திருத்தப்பட்ட ஓய்வூதிய திட்டம் அமல்.*ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மருத்துவ காப்பீட்டு திட்டம் அறிமுகம்.

*குரூப் இன்சூரன்சு திட்டத்தின் கீழ், மாதாந்திர பிடித்தம் அதிகரிப்பதுடன், காப்பீட்டு தொகையும் அதிகரிக்கப்பட வேண்டும்.

*52 படிகள் கைவிடப்பட வேண்டும். மேலும் 36 படிகள், தற்போதைய படிகளுடனோ அல்லது புதிதாக அறிமுகமாகும் படிகளுடனோ இணைக்கப்பட வேண்டும்.

*கிரேடு சம்பளம், ஒட்டுமொத்த சம்பளத்துடன் இணைப்பு.ராணுவ சேவை ஊதியம்

*ராணுவ பணியின் பல்வேறு அம்சங்களுக்காக இழப்பீடாக வழங்கப்படும் ‘ராணுவ சேவை ஊதியம்’, ராணுவத்தினருக்கு மட்டுமே நீடிக்க வேண்டும். அதன்படி, சர்வீஸ் அதிகாரிகளுக்கான ராணுவ சேவை ஊதியம், ரூ.6 ஆயிரத்தில் இருந்து ரூ.15 ஆயிரத்து 500 ஆக உயரும். நர்சிங் அதிகாரிகளுக்கான ராணுவ சேவை ஊதியம், ரூ.4 ஆயிரத்து 200–ல் இருந்து ரூ.10 ஆயிரத்து 800 ஆக உயரும். போரில் ஈடுபடுத்தப்படாத ராணுவத்தினருக்கான ராணுவ சேவை ஊதியம், ரூ.1,000–ல் இருந்து ரூ.3 ஆயிரத்து 600 ஆக உயரும்

.*குறுகிய பணிக்கால அதிகாரிகள், தங்கள் பணிக்காலத்தில் 7 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளுக்குள் எப்போது வேண்டுமானாலும் ராணுவத்தை விட்டு வெளியேறலாம்.இவ்வாறு 7–வது சம்பள கமிஷன் சிபாரிசு செய்துள்ளது.

Thursday 19 November 2015

பிளஸ் 2 மாணவர்களுக்கு முக்கிய வினா விடை ’சிடி’

பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறுவதற்காக பள்ளி கல்வித்துறை சார்பில் 11 பாடங்களின் முக்கிய வினா விடை அடங்கிய சிடி பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற பள்ளிக்கல்வித்துறை பல்வேறு நடவடிக்கை எடுத்துவருகிறது. அதன் ஒருபகுதியாக அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் மூலம் தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிர் தாவரவியல், உயிர்விலங்கியல், வரலாறு, பொருளாதாரம், வணிகவியல், கணக்குப்பதிவியல் ஆகிய 11 பாடங்களுக்கு முக்கிய வினா விடை அடங்கிய ஒரே சிடி தயாரிக்கப்பட்டு பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மாவட்ட கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், தமிழ் வழி பாடப்பிரிவு மாணவர்களுக்கான இந்த சிடி அனைத்து அரசு, அரசு உதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்களிடமும் வழங்கப்பட்டுள்ளது.

இதை அவர்கள் பாடவாரியாக பிரின்ட் அவுட் எடுத்து ஆசிரியர்கள் மூலம் மாணவர்களுக்கு கற்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மெல்லக்கற்கும் மாணவர்கள் முதல் 200க்கு 200 எடுக்கும் மாணவர்கள் வரை அனைவருக்கும் இது பயன்பெறும். அந்தந்த மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகளின் இணையதள முகவரியிலும் இந்த வினா-விடையை பார்த்து படித்துக் கொள்ளலாம், என்றார்.
தரவிறக்கம் செய்ய இங்கே அழுத்தவும் 

Wednesday 18 November 2015

விடுமுறை நாட்கள் 2016


மூவகை சான்றிதழ்; 'மூச்சு முட்டும்' ஆசிரியர்கள்:

பள்ளி மாணவர்களுக்கு ஜாதி, வருவாய், இருப்பிடச் சான்றிதழ்கள் (மூவகை சான்று) வழங்குவதற்கு மாணவர் விவரங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய, மின்னணு உபகரணங்கள் வசதி இல்லாததால் ஆசிரியர்கள் திண்டாடுகின்றனர். அரசு சார்பில் வழங்கப்படும் 14 வகை நலத் திட்டங்களில், மூவகை சான்றும் ஒன்று. இதை டிசம்பருக்குள் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. 

இதனால் அனைத்து மாவட்டங்களிலும், மாணவர் விவரத்தை ஆன்லைனில் பதிவேற்றம் செய்யும்பணியை, கல்வித்துறை முடுக்கிவிட்டுள்ளது.


ஆனால், பதிவேற்றம் செய்ய தேவையான கணினி, ஸ்கேனிங், உட்பட உபகரணங்கள் எதுவும் இல்லை. இணையதளம் வசதி, கணினி ஆசிரியர் பெரும்பாலான பள்ளியில் இல்லை. இதனால் ஒரு மாணவருக்கு ரூ.30 செலுத்தி, தனியார் மையங்கள் மூலம் பதிவேற்றம் செய்யப்படுகின்றன.இதற்குமுன் மாணவரிடம் ஆவணங்கள் பெற்று, அவை தாலுகா அலுவலகங்களில் வழங்கப்பட்டன. அதை பரிசீலித்து மாணவருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. ஆனால், தற்போது தலைமையாசிரியரே பதிவேற்றம் செய்ய வேண்டும் என்ற உத்தரவால் கூடுதல் பணிச்சுமையில்தத்தளிக்கின்றனர்.

மழை சீசனில் மாணவர்களுக்காக பாதுகாப்பு நடவடிக்கைகள்


Sunday 15 November 2015

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு கால அட்டவணை வெளியீடு

பிளஸ் 2 வகுப்புக்கான அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 7-ஆம் தேதியும், பத்தாம் வகுப்புக்கான அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 9-ஆம் தேதியும் தொடங்குகின்றன.

மாநிலம் முழுவதும் பொதுவாக நடைபெறும் இந்தத் தேர்வுகளுக்கான கால அட்டவணையை பள்ளிக் கல்வி இயக்ககம் சனிக்கிழமை வெளியிட்டுள்ளது.

பிளஸ் 2 வகுப்புக்கான கால அட்டவணை விவரம்:-

டிசம்பர் 7 - திங்கள்கிழமை - மொழிப்பாடம் முதல் தாள்

டிசம்பர் 8 - செவ்வாய்க்கிழமை - மொழிப்பாடம் இரண்டாம் தாள்

டிசம்பர் 9 - புதன்கிழமை - ஆங்கிலம் முதல் தாள்

டிசம்பர் 10 - வியாழக்கிழமை - ஆங்கிலம் இரண்டாம் தாள்

டிசம்பர் 12 - சனிக்கிழமை - வணிகவியல், மனையியல், புவியியல்

டிசம்பர் 14 - திங்கள்கிழமை - கணிதம், விலங்கியல், மைக்ரோ பயாலஜி, நியூட்ரிஷன் அண்ட் டயட்டிக்ஸ், டெக்ஸ்டைல்ஸ் டிசைனிங், விவசாயம், அரசியல் அறிவியல், நர்சிங் (தொழில் கல்வி), நர்சிங் (பொது), கணக்குப் பதிவியல், கணக்குத் தணிக்கை

டிசம்பர் 16 - புதன்கிழமை - இயற்பியல், பொருளாதாரம், பொது இயந்திரவியல், எலெக்ட்ரானிக்ஸ் எக்யூப்மென்ட், டிராப்ட்ஸ்மென் சிவில், எலெக்ட்ரிக்கல் மெஷின்ஸ் அண்ட் அப்ளையன்சஸ், ஆட்டோ மெக்கானிக், டெக்ஸ்டைல் டெக்னாலஜி, அலுவலக மேலாண்மை

டிசம்பர் 18 - வெள்ளிக்கிழமை - வேதியியல், கணக்குப் பதிவியல், பொது இயந்திரவியல் தாள்-2, எலெக்ட்ரிக்கல் மெஷின்ஸ் அண்ட் அப்ளையன்சஸ் தாள் 2, தொழில்கல்வி மற்றும் தணிக்கை

டிசம்பர் 21 - திங்கள்கிழமை - உயிரியல், தாவரவயில், வரலாறு, வணிகக் கணிதம்

டிசம்பர் 22 - செவ்வாய்க்கிழமை - கம்யூனிக்கேட்டிவ் இங்கிலீஷ், இந்திய கலாசாரம், கம்ப்யூட்டர் சயின்ஸ், பயோ-கெமிஸ்ட்ரி, சிறப்பு மொழிப்பாடம் (தமிழ்), புள்ளியியல், கணக்குப் பதிவியல் மற்றும் கணக்குத் தணிக்கை, செய்முறைத் தேர்வு, தட்டச்சு (தமிழ், ஆங்கிலம்)


தேர்வுகள் காலை 10 முதல் 1.15 வரை நடைபெறும். இதில் முதல் 10 நிமிஷங்கள் வினாத்தாளைப் படித்துப் பார்க்கவும், அடுத்த 5 நிமிஷங்கள் விடைத்தாளில் உள்ள விவரங்களைப் பூர்த்தி செய்யவும் வழங்கப்படும்.

பத்தாம் வகுப்புத் தேர்வு அட்டவணை:

டிசம்பர் 9 - புதன்கிழமை - மொழிப்பாடம் முதல் தாள்

டிசம்பர் 10 - வியாழக்கிழமை - மொழிப்பாடம் இரண்டாம் தாள்

டிசம்பர் 12 - சனிக்கிழமை - ஆங்கிலம் முதல் தாள்

டிசம்பர் 14 - திங்கள்கிழமை - ஆங்கிலம் இரண்டாம் தாள்

டிசம்பர் 16 - புதன்கிழமை - அறிவியல்

டிசம்பர் 18 - வெள்ளிக்கிழமை - சமூக அறிவியல்

டிசம்பர் 21 - திங்கள்கிழமை - கணிதம்


தேர்வுகள் காலை 10 மணி முதல் 12.45 மணி வரை நடைபெறும். முதல் 10 நிமிஷங்கள் வினாத்தாளைப் படித்துப் பார்க்கவும், அடுத்த 5 நிமிஷங்கள் விடைத்தாள் விவரங்களைப் பூர்த்தி செய்யவும் வழங்கப்படும்.

Saturday 14 November 2015

ஆசிரியர் உயர்கல்விக்கு முன் அனுமதி அவசியம்

தமிழகத்தில், அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள், உயர்கல்வியை நேரடியாக தொடர, அரசு தடை உள்ளது. பகுதி நேரமாக, அல்லது தொலைதூர கல்வி மையங்கள் வாயிலாக உயர்கல்வியை தொடர அனுமதிக்கப்படுகின்றனர்.
 
பதவி உயர்வு, ஊக்க ஊதியம் போன்றவற்றுக்கு கல்வி தகுதியை அடிப்படையாக கொண்டு மதிப்பீடு செய்வதால், பணியில் இருந்துகொண்டே பலரும், உயர்கல்விக்கு அதிக ஆர்வம் காட்டுகின்றனர். 
 
எம்.பில்., - பி.எச்.டி., போன்ற ஆராய்ச்சி படிப்புகளில் சேருவோர், துறை தலைவரான, பள்ளி கல்வித்துறை இயக்குனரிடம் முன் அனுமதி பெற வேண்டும். பி.எட்., - எம்.எட்., படிப்புகளுக்கு, பள்ளி தலைமை ஆசிரியரின் முன்அனுமதி பெற்றால் போதுமானது என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Friday 6 November 2015

தீபாவளித் திருநாள் மேற்கொள்ளப்படவேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் பள்ளிகல்வி இயக்குனர் அறிவுரை

தீபவளி நன்னாளில் சிறியவர்களும், பெரியவர்களும் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திக்கொள்ளும் வேளையில் முறையாக கவனமாக பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.  தவறுதல் காரணமாக தீ விபத்துக்கள் ஏற்பட ஏதுவாக உள்ளது.  எனவே, விபத்துக்கள் அற்ற மகிழ்ச்சி நிறைந்த தீபாவளி கொண்டாட பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவியர் அறியுமாறு செயல்முறை விளக்கம் செய்திட கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

(1)    பட்டாசுகளை கொளுத்தும்போது தளர்வான ஆடைகள் உடுத்துவதை
      தவிருங்கள்.  டெரிகாட்டன்  / டெரிலின் ஆகிய எளிதில் பற்றக்கூடிய
     ஆடைகளை அணியக்கூடாது.
    (2)  பட்டாசுகள் கொளுத்துமிடத்திற்கு அருகாமையில் ஒரு வாளி தண்ணீர்        வைத்துக்கொள்ளுங்கள்.
     (3)  பட்டாசுகளை கொளுத்தி கையில் வைத்துக்கொண்டோ அல்லது உடலுக்கு     அருகாமையிலோ வெடிக்க வேண்டாம்.  மாறாக பாதுகாப்பான தொலைவில்    வைத்தே வெடியுங்கள்.
    (4)  மூடிய பெட்டிகளில் / பாட்டில்களில் பட்டாசுகளை உள்ளிட்டு கொளுத்தி       வெடிக்க செய்யாதீர்கள்.
    (5)  ராக்கெட்டுகளை வெட்ட வெளியில் குடிசைகள் இல்லாத பகுதிகளில்
             மட்டுமே செலுத்துங்கள்.
    (6)  பட்டாசுகளை கூட்டமான பகுதிகளிலும் தெருக்களிலும் மற்றுட்ம
               சாலைகளிலும்  வெடிக்காதீர்கள்.
    (7)  பட்டாசுகளை விற்பனை செய்யும் கடைக்கு முன்னரோ அருகிலோ
              வெடிக்காதீர்கள்.
    (8)  குழந்தைகள் பட்டாசுகளை பெற்றோர்களின் முன்னிலையில்   அவர்களது      பாதுகாப்பின் கீழ் வெடிக்க வேண்டும்.
    (9) நோயாளர்கள் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கு அருகாமையில்      பட்டாசுகளை  வெடிக்காதீர்கள்.
    (10)  விலங்குகளை துன்புறுத்தும் வகையிலும் அவைகள் பயப்படும் வகையிலும்     பட்டாசுகளை வெடிக்காதீர்கள்.
    (11)  பெட்ரோல் சேமித்து வைக்கப்பட்டுள்ள இடங்களுக்கு அருகாமையில்     பட்டாசுகளை  வெடிக்கவோ கொளுத்தவோ செய்யாதீர்கள்.
    (12)  இரவு 10.00 மணிமுதல் காலை 6.00 மணிவரை பட்டாசுகளை
                  வெடிக்காதீர்கள்.
    (13) அதிக சப்தமுள்ள பட்டாசுகளை வெடிக்க வேண்டாம்.  ஏனெனில் அது     உடலையும்  மனநிலையையும் பாதிக்கும்.  காதுகள் செவிடாக் கூடும்.  ஒரு  நாள் கொண்டாட்டத்திற்காக   வாழ்நாள் முழுவதும் துன்பப்பட வேண்டாம்.

Wednesday 4 November 2015

08.10.2015 . போராட்டத்தில் மாநில அளவில் கலந்து கொண்டோர் விவரம் (-இயக்குனரிடமிருந்து பெறப்பட்ட தகவல்)

தொடக்கக் கல்வியில் உள்ள மொத்த ஆசிரியர்களின் எண்ணிக்கை - 1,12,742
* அதில் பள்ளிக்கு சென்றவர்கள்- 33,061
* வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவர்கள்- 79,681
* பங்கேற்றோர் % -70.68 %

பள்ளிக் கல்வியில் உள்ள மொத்த ஆசிரியர்களின் எண்ணிக்கை- 1,07,473
* அதில் பள்ளிக்கு சென்றவர்கள்- 84,408வேலை நிறுத்தத்தில்
* ஈடுபட்டவர்கள்- 23,065
* பங்கேற்றோர் % -21.46 %

ஒட்டு மொத்த ஆசிரியர்களின் எண்ணிக்கை- 2,20,215
* அதில் பள்ளிக்கு சென்றவர்கள்- 1,17,469
* வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவர்கள்- 1,02,746
* பங்கேற்றோர் % - 46.65 % 

Monday 2 November 2015

மதுரை கள்ளர் சீரமைப்பு அலுவலகத்தில் இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தை கூட்டத்தின் முடிவுகள்.

இன்று காலை 11 மணியளவில் கள்ளர் சீரமைப்பு இணை இயக்குநர் பேச்சு வார்த்தை அழைத்ததின் பேரில்  நமது தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சார்பாக மாநில பொதுச் செயலாளர் திரு இரா.பிரபாகரன் , மதுரை மாவட்டத் தலைவர்  திரு,பெ.சரவணமுருகன்,  மாநில துணைத்தலைவர் திரு. சிவ.ராஜேந்திரன், மற்றும் திரு. ச. சுதாகர், திரு. க.வெங்கடேசன்,  திரு. கோ. வீரசத்திய ராமசாமி, திருமதி. சி.சரண்யா பேபி அவர்களும் கலந்து கொண்டனர் 
நடைபெற்ற பேச்சு வார்த்தை கூட்டத்தில் துறைமாறுதலுக்கு நிரந்தர அரசாணை வெளியிட உரிய கருத்துருக்ளை விரைவில் அனுப்பி உரிய நிரந்தர அரசாணை பெறப்படும்,என்பது உட்பட  7 கோரிக்கைகளும் விரைவில் நிறைவேற்றித் தரப்படும் என இணை இயக்குனர் உறுதியளித்ததின் பேரில் 04.11.2015 (புதன்கிழமை) அன்று மாலை 5 மணி அளவில் மதுரை, ஜெயம் திரையரங்கம் முன்பாக நடைபெற இருந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒத்தி வைக்கப்படுகிறது 
கூட்டத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் குறிப்புகள் இங்கு தரப்பட்டுள்ளது