news

முதுகலை ஆசிரியர்க்காக போராடக்கூடிய ஒரே அமைப்பு TNHSPGTA ***** நமது சங்கத்தின் உறுப்பினர் ஆகுங்கள் ******சங்க செயல் பாடுகளை தெரிந்துகொள்ள மேல்நிலைக்குரல் படியுங்கள் ******தங்கள் பள்ளி நிகழ்வுகளை அமைப்போடு பகிர்ந்துகொள்ளுங்கள்*****அனைத்து முதுகலை ஆசிரியர்களின் பங்களிப்பே அமைப்பு வளர்ச்சிக்கு உதவும்

Thursday 31 March 2016

மாநிலத் தலைவரின் செய்தி

அன்பிற்கினிய தோழர்களே தோழிகளே வணக்கம். 3 வாரங்களுக்கு முன்பு நெல்லை,நாமக்கல் மற்றும் காஞ்சி மாவட்டப் பொறுப்பாளர்கள் என்னோடு ப.க.துறை வந்தார்கள். நெல்லை மாவட்டத்திற்கு வள்ளியூர் விடைத்தாள் நடுவப் பிரச்சனை. முடித்துத் தந்தேன். நாமக்கல்   மாவட்டத்திற்கு திருச்செங்கோடு விடைத்தாள் நடுவம். கூடுதலாக 630 முதுகலைத் தமிழாசிரிர்களின் பணிவரன்முறைப் பிரச்சனை. அதனை இணை இயக்குநர் திரு.மு. பழநிச்சாமி அவர்களோடு பேசி நமது அமைப்பின் முகப்புக் கடிதத்தில் ( letter Pad ) எழுதித் தந்தோம்.JD அவர்களும் உடனடியாக W3 பிரிவின் கண்காணிப்பாளர் மற்றும் உதவியாளரை அழைத்து பணிவரன்முறை ஆணையை போடச் சொன்னார்.கடந்த வாரம் சென்றேன். JD இல்லை. நேற்று கைபேசியில் அவரிடம் பேசினேன். உடனடியாக நேற்றே அதனை முடித்துள்ளார். JD அவர்களுக்கு இயக்கத்தின் சார்பில் மனமார்ந்த நன்றி.
                                                                                                                                     -வே.மணிவாசகன்   மாநிலத்தலைவர்                                                                     

2012-13ம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டு 19.2.14 & 21.02.14 ஆகிய தேதிகளில் பணி நியமனம் பெற்றவர்களுக்கு திருத்திய பணிவரன்முறை ஆணை


Friday 25 March 2016

புதிய வண்ணத்தில் பிளஸ் 2 சான்றிதழ்

இந்த ஆண்டுக்கான, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் நவீன, '2 டி பார்கோடு' மற்றும், 'வாட்டர் மார்க்' என்ற, ரகசிய குறியீடுடன் பளிச்சிடும் வண்ணத்தில் தயாராக உள்ளது. பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்து வருகிறது. தேர்வு முடிவுகளை, சட்டசபை தேர்தலுக்கு முன் வெளியிட, பள்ளிக்கல்வித் துறையும் மற்றும் தேர்வுத் துறையும் திட்டமிட்டு உள்ளன.

* இந்த ஆண்டுக்கான மதிப்பெண் சான்றிதழ், பல பாதுகாப்பு அம்சங்கள் கொண்டதாக இருக்கும்
* வெயில் மற்றும் மழையால் பாதிக்கப்படாத வகையில், வழவழப்பான கனமான தாளில்
தயாரிக்கப்படும்
* பச்சை நிறத்தில் குறுக்கு கட்டம் போட்ட தாளில், மதிப்பெண் சான்றிதழ் தயாரிக்கப்படும்
* 'வாட்டர் மார்க்' என்ற ரகசிய குறியீடு, '2 டி பார்கோடு' மற்றும் மதிப்பெண் பட்டியலுக்கு தனி எண், பதிவு எண் போன்றவை இடம் பெறும்
*தமிழக அரசு முத்திரையுடன், நடப்பு ஆண்டை குறிக்கும் ரகசிய எண்ணும், சான்றிதழில் இணைக்கப்படும்.
இந்த சான்றிதழ் உண்மையா, பொய்யா என ஆய்வு செய்யும் வகையில், சென்னை, அண்ணா பல்கலையிலுள்ள தேர்வுத் துறையின், கணினி வழி சான்றிதழ் ஆய்வு மையத்தில், சரிபார்க்க அதிகாரம் வழங்கப்பட உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Wednesday 23 March 2016

மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 சதவீதம் அகவிலைப்படி உயர்வு

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஹோலி பண்டிகை பரிசாக அகவிலைப்படியை 6 சதவீதம் உயர்த்தி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 சதவீதம் அகவிலைப்படி உயர்வு வழங்கும், நிதித்துறை அமைச்சகத்தின் கோரிக்கைக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 119 சதவீதத்தில் இருந்து 125 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்த புதிய அகவிலைப்படி உயர்வால் 10 மில்லியன் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயனடைய உள்ளனர்.

இந்த புதிய அகவிலைப்படி 2016ம் ஆண்டு ஜனவரி முதல் தேதியிலிருந்து கணக்கிட்டு வழங்கப்பட உள்ளது. 4.8 மில்லியன் மத்திய அரசு ஊழியர்களும், 5.5 மில்லியன் ஓய்வூதியதாரர்களுக்கும் இந்த புதிய அகவிலைப்படி பொருந்தும்.

இதற்கு முன் 2015ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 113 சதவீதமாக இருந்த மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 119 சதவீதமாக உயர்த்தப்பட்டது. 2015ம் ஆண்டு ஜூலை 1ம் தேதியிலிருந்து கணக்கிட்டு அகவிலைப்படி உயர்வு கணக்கிட்டு வழங்கப்பட்டது. 2015ம் ஆண்டு மட்டும் ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்களில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Saturday 19 March 2016

DGE has accepted to give 16+16 scripts in biology paper.

DGE has accepted to give 16+16 scripts in biology paper. This is our INDIVIDUAL success. Inform all our dt off brs & PGTs about this. I assured her there WOULD not be any mistake now onwards in biology paper. arrange a meeting of botany, zoology & biology PGTs and request them to do the valuation 100% correctly.if it moves in Success we can move to the next stage to get more amount than they are getting now.Pls inform through SMS & via through what's app to all our PGTs & dt off brs all over the State. 

Manivasagan. V.State president TNHSPGTA

Thursday 17 March 2016

பள்ளிகல்வித் துறை புதிய மாதிரி படிவங்கள் - உயர் நிலை மற்றும் மேல் நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான பணி வரன் முறை படிவம் / தகுதிகாண் பருவம் படிவம் /தேர்வு நிலை படிவம் /சிறப்பு நிலை படிவம் / மற்றும் அதனுடன் இணைக்க வேண்டிய படிவங்கள்

14.03.2016 அன்று சீதாலட்சுமி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மேல்நிலை / இடைநிலை பள்ளி விடுப்பு சான்றிதழ் பொதுத் தேர்வுகள் தொடர்பாக, இணை இயக்குநர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்


1.தேர்வு மையங்களில் மாணவ / மாணவியர்களுக்கு வழங்கப்பட்ட வினாத்தாட்கள் போக மீதமுள்ள வினாத்தாள்கள் சேகரிக்கப்பட்டு மீண்டும் உறையில் ஒட்டி அரக்கு முத்திரை வைத்து பின்பு அலமாரியில் வைத்து முத்திரையிடப்பட வேண்டும்.

2.சில மையங்களில் கட்டுப்பாட்டு அறையானது, உயிரியல் ஆய்வகம் போன்ற இடங்களில் செயல்படும் பொழுது சுவர்களில் உள்ள பாடம் சார்ந்த வரைபடங்கள், விபரங்கள் மறைத்து வைக்கப்பட வேண்டும்.

3.விடைத்தாளின் முகப்புத் தாளில் உள்ள Part C யில் உள்ள வினாத்தாள் வகை குறியீடு ( A/B) குறிக்கப்பட வேண்டும்.

4.ஒரு சில மையங்களில் தேர்வு நேரங்களில் தேனீர் விநியோகிக்கப்படுவதை முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.

5.பெண் குழந்தைகள் எழுதும் மையங்களில் ஆண் பறக்கும் படை உறுப்பினர்கள் செயல்பட கூடாது.

6.உடல் நலம் பாதிக்கப்பட்ட (அம்மை போன்ற நோய்) மாணவர்களுக்கு போதிய வசதியுடன் கூடிய தனி அறை ஒதுக்கப்பட வேண்டும். எக்காரணம் கொண்டும் வராண்டாவில் அமர வைக்கக்கூடாது.

7.சொல்வதை  எழுதுபவர்களை நியமிக்கும் பொழுது அவர்கள் பணிபுரியும் ஆசிரியர்களின் பள்ளிகளுக்கு நியமனம் செய்யப்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்.

8.அருள் மலர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி துணைத் தேர்வு மையத்திற்கு மந்தணக் கட்டுக்கள் வழிதட அலுவலரே, உரிய காவலர் வசதியுடன் பாதுகாப்பாக எடுத்துச் செல்லவேண்டும்.  ஆய்வு அலுவலர்கள் எடுத்துச் செல்வதை தவிர்க்க வேண்டும்.

9.அனைத்து மையங்களிலும், கழிவறைகள் சுத்தமாகவும், சுகாதாரமாகவும், பராமரிப்பு பணியாளர்களைக் கொண்டு பராமரிக்கப்பட வேண்டும்.   இதை கண்காணிக்க பதிவேடு ஒன்று பராமரிக்கப்பட வேண்டும்.

10.பறக்கும் படை உறுப்பினர்களாக செயல்படும் ஆசிரியர்களின் குழந்தைகள் / உறவினர்கள் எவரும் அவர்கள் செல்லும் மையங்களில் தேர்வு எழுத வில்லை என்பதை உறுதி செய்யப்பட வேண்டும்.

11.நகல் எடுக்கும் இயந்திரம் (Xerox Machine) மற்றும் கணிணிகள் உள்ள அறைகள் தேர்வு துவங்குவதற்கு முன்பிருந்தும் தேர்வு முடிவுற்று விடைத்தாள் கட்டுக்கள் எடுத்துச் செல்லப்படும் வரை அரக்கினால் சீலிடப்பட்டு மூடியிருத்தல் வேண்டும்.

மேற்காணும் நடைமுறைகளை தவறாது பின்பற்றுமாறு அனைத்து தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கணினி அறிவியல் பாடத்தேர்விற்கான OMR விடைத்தாட்கள் பற்றிய இணை இயக்குனரின் அறிவுரைகள்



1.OMR விடைத்தாட்களை தேர்வர்களுக்கு விநியோகிக்கும்போது, பெயர் மற்றும் பதிவெண் சரியாக அச்சிடப்பட்டுள்ளதா என்பதை தேர்வர்கள் உறுதி செய்து கொள்ள  அறிவுறுத்த வேண்டும்.
2OMR விடைத்தாட்களை சேதப்படுத்தாமல் பயன்படுத்த வேண்டுமென தேர்வர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.      
3.OMR தாளில் வட்டங்களில் Shade செய்யப்பட வேண்டிய பகுதிகளை நிழலிட கருப்பு நிற மை பந்து முனை பேனாவினை (Ball point pen) மட்டுமே பயன்படுத்த வேண்டுமென தேர்வர்களுக்கு அறிவுறுத்தவேண்டும்.    
4.மாற்று OMR விடைத்தாள் பெறும் தேர்வர்  தனது பெயர், பதிவெண், தேர்வு மைய எண் மற்றும்  பெயரை தெளிவாக தலைப்பெழுத்துக்களில் எழுத வேண்டும். பின்னர் பதிவெண்ணையும் இதர விவரங்களையும் உரிய கட்டங்களில் ளுhயனந செய்ய அறிவுறுத்த வேண்டும்.     
5.Barcoding முறைப்படி OMR விடைத்தாட்கள் அச்சிடப்பட்டு அனுப்பப்பட்டுள்ளதால், வருகைப் படிவத்தில் (Attendance sheet)  கூடுதலாக ஒரு  கையொப்பத்தினை தேர்வரிடமிருந்து பெற வேண்டும்.
6.OMR விடைத்தாளில் Question paper Sl.No சரியாக பூர்த்தி செய்துள்ளாரா எனவும், கேள்வித் தாள் வகை (No. of dashes) மற்றும் பயிற்று மொழி (Medium) குறிப்பிடப்பட்டுள்ளதை சரிபார்த்து அறைக் கண்காணிப்பாளர்கள்  உரிய இடத்தில் தமது பெயரை தெளிவாக எழுதி கையொப்பமிட வேண்டும்.   
7.தேர்வர்கள் மற்றும் அறைக் கண்காணிப்பாளர்கள் OMR தாளில் தேதியுடன் கூடிய கையெழுத்தை (Signature with date) அதற்குரிய கட்டத்தில் ( Box ) உள்ளேயே  இட வேண்டும். கட்டத்திற்கு வெளியே கையெழுத்து மற்றும் தேதியினை எக்காரணம் கொண்டும் நீட்டிக்கக் கூடாது.    
8.வருகை புரியாத தேர்வர்களின்OMR விடைத்தாட்களில் அறைக் கண்காணிப்பாளர்கள் Signature of the Candidate with date  என்ற கட்டத்தில்  ABSENT எனக் குறிப்பிட்டு  உரிய இடத்தில் கையொப்பமிட வேண்டும்.