news

முதுகலை ஆசிரியர்க்காக போராடக்கூடிய ஒரே அமைப்பு TNHSPGTA ***** நமது சங்கத்தின் உறுப்பினர் ஆகுங்கள் ******சங்க செயல் பாடுகளை தெரிந்துகொள்ள மேல்நிலைக்குரல் படியுங்கள் ******தங்கள் பள்ளி நிகழ்வுகளை அமைப்போடு பகிர்ந்துகொள்ளுங்கள்*****அனைத்து முதுகலை ஆசிரியர்களின் பங்களிப்பே அமைப்பு வளர்ச்சிக்கு உதவும்

Saturday 31 October 2015

சென்னையில் இன்று நடைபெற்ற ஜாக்டோ உயர்மட்டக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்

இன்று  காலை 11 மணியளவில் ஜாக்டோ மாநில உயர்மட்டக்குழு பொறுப்பாளர்கள் கூட்டம் சென்னையில் நடைபெற்றது.தமிழ்நாடு மேல் நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சார்பாக      நமது  மாநில தலைவர் வே.மணிவாசகன் மற்றும் நமது மாநிலப் பொதுச்செயலாளர் இரா.பிரபாகரன்  ஆகியோர்  கலந்து  கொண்டனர்
1.நவம்பர் -16 ஜாக்டோ நிர்வாகிகள் அனைவரும் கல்விச்செயலர், நிதியமைச்சர், கல்வி அமைச்சர் ஆகியோரை சந்தித்து போராட்ட அறிவிப்பினை மனுவாக அளித்தல்.

2-டிசம்பர் 5, 6 ஆகிய நாட்களில் மாவட்டத்தலைநகரில் மறியல்   மாநாடு.


3,டிசம்பர் 12, 13 ஆகிய நாட்களில் வட்டார அளவில் போராட்ட ஆயத்த மாநாடு

4. டிசம்பர் 28, 29 மற்றும் 30 ஆகிய நாட்களில் மாவட்டத் தலைநகரில் தொடர் மறியல் போராட்டம் ஆகியன முடிவெடுக்கப்பட்டது .

Tuesday 27 October 2015

மாண்புமிகு.தமிழக முதல்வர் அவர்களின் கவனத்தினை ஈர்த்திட - துறைமாறுதல் உள்ளிட்ட கள்ளர் சீரமைப்பு பள்ளிகளின் ஏழு அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டி மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்



            தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் கள்ளர் சீரமைப்பு கூட்டு நடவடிக்கைக் குழுவின் சார்பில் கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் நீண்ட காலமாக நிறைவேற்றப்படாத  ஏழு  அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டி மாண்புமிகு.தமிழக முதல்வர் அவர்களின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் கீழ்க்காணும் விபரப்படி நடைபெற உள்ளது என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம். அனைவரும் தவறாது கலந்து கொள்ளும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

நாள்:    04.11.2015 (புதன்கிழமை)                             
நேரம்:  மாலை 05.00 மணி
இடம்: பழங்காநத்தம் நடராஜ் திரையரங்கம் அருகில் , மதுரை.
ஏழு  அம்ச கோரிக்கைகள் :
1.            கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் பணிபுரியும் முதுகலைப் பட்டதாரி மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு நீண்ட காலமாக இருந்து வரும் துறைமாறுதல் பிரச்சினைக்குரியத் தீர்வாக பள்ளிக் கல்வித் துறையின் கீழ் உள்ள பள்ளிகளுக்கு (ஆண்டுதோறும் பணிமாறுதல் பெறும் வகையில்)  ஆண்டுதோறும் துறைமாறுதல் பெறும் வகையில் ஒரு நிரந்தர தீர்வு ஏற்படுத்தித் தர வேண்டுதல்  . . .
2.            பள்ளிக் கல்வித் துறையால், துறைமாறுதல் அரசாணை எண்.86, நாள் 02.03.2011-ல் வெளியிடப்பட்டு அனைவருக்கும் பணிமாறுதல் உத்தரவு வழங்கப்பட்டு, விடுவிக்கப்பட்ட நிலையில் துறைமாறுதலில் இன்று வரை கள்ளர் சீரமைப்பில் பணிமாறுதல் உத்தரவு வழங்கப்படாத, விடுவிக்கப்படாத 8 ஆசிரியர்களை முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களாகவே துறைமாறுதல் வழங்கிட வேண்டுதல் . . .
3.            மாண்புமிகு.தமிழக முதல்வர் அவர்களால் காணொளிக் காட்சி மூலம் திறந்து வைத்து 5 மாதங்களாக நிரந்தர ஆசிரியர்கள் இன்றிச் செயல்பட்டு வரும் மதுரை மாவட்டம், செக்கானுhரணி, அரசு கள்ளர் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு நிரந்தர ஆசிரியர் பணியிடங்களுக்கான அரசாணையினை விரைவில் வெளியிட்டு அனைத்து பணியிடங்களையும்  கலந்தாய்வு முறைப்படி  நிரப்பிட வேண்டுதல் . . .
4.            கள்ளர் சீரமைப்பு பள்ளிகளுக்கு இரவு நேரக் காவலர், பகல் நேரக் காவலர், உடற்கல்வி ஆசிரியர், கணிணி பயிற்றுநர், கைத்தொழில் ஆசிரியர், ஓவிய ஆசிரியர், யோகா ஆசிரியர், தையல் ஆசிரியர், துப்புரவாளர், இளநிலை உதவியாளர், பதிவுறு எழுத்தர், அலுவலக உதவியாளர், தோட்டக்காரர் போன்ற அனைத்து பணியிடங்களையும் உருவாக்கி, நிரந்தமாக நியமித்திட வேண்டுதல் . . .
5.            கள்ளர் சீரமைப்பில் உள்ள அனைத்து மேல்நிலைப் பள்ளிகளுக்கும் 9 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள், 11, 12-ஆம் வகுப்பினைச் சேர்த்து மாணவர்களின் எண்ணிக்கை மொத்தம் 160-க்கு மேல் இருந்தால் பாட வாரியாக கூடுதல் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பிட வேண்டுதல் . . .
6.            பிப்ரவரி 2013-ல் புதிதாகப் பணியேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவுற்ற முதுகலை ஆசிரியர்களுக்கும், 06.08.2014-ல் பதவி உயர்வில் பணியேற்று ஓராண்டு நிறைவுற்ற முதுகலை ஆசிரியர்களுக்கும் பணிவரன்முறை/தகுதிகாண் பருவம் முடித்த உத்தரவுகளை வழங்கிட வேண்டுதல் . . .
7.            ஆசிரியர்களுக்கு பணிப்பாதுகாப்பு வழங்கிட ஒரு குழு, மாணவர்களை நல்வழிப்படுத்த ஒரு குழு, மீண்டும் மீண்டும் தவறு செய்யும் மாணவர்களை கண்டிக்க மற்றும் தண்டிக்க ஒரு குழு, நுhறு சதவிகித தேர்ச்சிக்கு ஒரு குழு, அதிக மதிப்பெண் பெற வைக்க ஒரு குழு ஆகியன ஏற்படுத்தி தர வேண்டுதல்

மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு விருது

பொதுத்தேர்வில் முதலிடம் பெற்ற மதுரை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு முதல்வரின் சிறப்பு கல்வி விருது வழங்கும் விழா நடந்தது. கமிஷனர் கதிரவன் தலைமை வகித்தார். தமிழகத்தில் மாநகராட்சி பள்ளிகளில், மதுரை மாநகராட்சி பள்ளி மாணவர்கள் கடந்த கல்வியாண்டு பொதுத் தேர்வில் முதலிடம் பெற்று சாதித்தனர்.

அவர்களுக்கும், முதல் மூன்று இடம் பெற்றவர்களுக்கும், பாடங்களில் 100 சதவீதம் தேர்ச்சியடைந்த பள்ளிகளுக்கும் ரூ.18 லட்சம் வழங்கப்பட்டது. மாநகராட்சி சாதனை மலரை மேயர் ராஜன் செல்லப்பா வழங்கி பேசுகையில், பழக்கமிஷன் மண்டி, லாரி ஸ்டாண்ட் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதனால் நகரில் நெரிசல் குறையும். வைகை ஆற்றில் புதிதாக கட்டப்பட்டு வரும் உயர்மட்ட பாலம் பணிகள் விரைவாக முடிக்கப்படும், என்றார்.

Sunday 25 October 2015

நவ.16ம் தேதி முதல் 2ம் பருவ இடைத்தேர்வு துவக்கம்


தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும், 10ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, நவ., 16ம் தேதி முதல், இரண்டாம் பருவ இடைத்தேர்வு நடத்த, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது. சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தில், ஒன்பதாம் வகுப்பு வரை முப்பருவ தேர்வு மற்றும் கற்பித்தல் முறை அமலாகிறது. 10ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை ஆண்டு தேர்வு நடத்தப்படுகிறது. 


காலாண்டுத் தேர்வு முடிந்து, பள்ளிகளில் இரண்டாம் பருவ பாடங்கள் நடத்தப்படுகின்றன. எனவே, தீபாவளி விடுமுறைக்கு பின், இரண்டாம் பருவ இடைத்தேர்வை நடத்த, அனைத்து அரசு, அரசு உதவி மற்றும் தனியார் மெட்ரிக் பள்ளிகளுக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

நவ., 16ம் தேதி தேர்வுகளை துவங்கி, 20ம் தேதிக்குள் முடிக்கவும், அதன்பின், அரையாண்டுத் தேர்வுக்கான பாடப்பகுதிகளை முடிக்கவும், முதன்மைக் கல்வி அதிகாரிகள் மூலம், பள்ளித் தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.


'இந்தத் தேர்வுக்கு மாவட்ட அளவில், மாவட்ட தேர்வுக்குழு மூலம், ஒரே வகையான வினாத்தாள்கள் வழங்கப்படும்' என, கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
CLICK HERE FOR TIME TABLE

Wednesday 21 October 2015

வினா வங்கிகளுக்கு பதிலாக புத்தகங்களைப் படிக்க வேண்டும்

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் வினா வங்கிகளுக்குப் பதிலாக புத்தகங்களை முழுமையாகப் படிக்குமாறு அறிவுறுத்த வேண்டும் என அனைத்துப் பள்ளிகளுக்கும் அரசுத் தேர்வுகள் இயக்குநர் (பொறுப்பு) தண்.வசுந்தராதேவி உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அனைத்து மாவட்டக் கல்வித் துறை அதிகாரிகள் வாயிலாக பள்ளிகளுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:-

 மாணவர்கள், புத்தகத்தில் உள்ள கருத்துகளை முழுமையாகப் படித்து புரிந்து தேர்வுகளுக்கு தயார் செய்வதற்குப் பதிலாக, ஏற்கெனவே கடந்த பருவங்களில் வெளியான வினாக்களின் தொகுப்பை மட்டும் படித்தால் முழு மதிப்பெண் பெற்றுவிடலாம் என்ற தவறான புரிதல் மாணவர்கள் மத்தியில் இருக்கிறது.

 அதனால், வினாத்தாள் கட்டமைப்புக்கு உட்பட்டு புத்தகத்தில் உள்ள பகுதிகள் தொடர்பாக வினாக்கள் வரும்போது மாணவர்கள் மத்தியில் அச்சம் ஏற்படுகிறது.  இதனை களையும் பொருட்டு, அனைத்து வினாக்களுக்கும் மாணவர்கள் தன்னம்பிக்கையுடனும், முழு புரிதலுடனும் பதிலளிக்க ஏதுவாக புத்தகத்தில் உள்ள கருத்துகளை முழுமையாகப் படிக்க வேண்டும் என்று மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இந்தச் சுற்றறிக்கையை அனைத்து மாணவர்களுக்கும் விநியோகிப்பதோடு, அதற்கு ஆதாரமாக பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களின் கையெழுத்தையும் தலைமையாசிரியர்கள் பெற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காலிப் பணியிடங்களை நிரப்ப சிறப்புக் கலந்தாய்வு: தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் கோரிக்கை

 தமிழகத்தில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப சிறப்புக் கலந்தாய்வு நடத்த வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில், திருநெல்வேலி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் அளிக்கப்பட்டுள்ள மனு:

  தமிழக அரசின் ஆணையோ, பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் எதுவும் வழங்கப்படாத நிலையில், சேரன்மகாதேவி அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் ஆசிரியர்களின் வருகைப் பதிவை பதிவு செய்ய நடைமுறைப்படுத்தும் பயோ மெட்ரிக் முறையை ரத்து செய்யவேண்டும்; கடந்த ஆகஸ்ட் 2015இல் நடைபெற்ற தலைமையாசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வில் திருநெல்வேலி மாவட்டத்தில் சில அரசு மேல்நிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியர் பணியிடங்கள் மறைக்கப்பட்டிருந்தன. ஆனால், இதுவரை அந்தக் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாததால்பிளஸ்-2 வகுப்புகளுக்கு பாடம் போதிக்கும் முதுநிலை ஆசிரியர்களிடம் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதனால் கூடுதல் பணிச்சுமையால் ஆசிரியர்கள் அவதிப்படுகிறார்கள். ஆகவே, விடுபட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப சிறப்புக் கலந்தாய்வு நடத்த வேண்டும்; குறிப்பாக திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடிமாவட்டங்களைச் சேர்ந்த முதுநிலை ஆசிரியர்களுக்கு 2ஆவது பொதுக் கலந்தாய்வு நடத்த வேண்டும்; இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை (அக்.19) கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளது என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

CPS திட்டம்: இணையத்தில் கணக்கு விவரங்கள்: தமிழக அரசு தகவல்!

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் தொடர்பான விவரங்கள், இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக கருவூல கணக்குத் துறை தெரிவித்துள்ளது. இது குறித்து இயக்குநரகம் வெளியிட்ட அறிவிப்பு:
தமிழகத்தில் 2003-ஆம் ஆண்டு ஏப்ரலில் புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதில், அரசு ஊழியர்கள் உள்பட 4.20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தத் திட்டத்தில் அடிப்படை ஊதியம், தர ஊதியம், அகவிலைப்படிக்கென மாதம் 10 சதவீதம் பிடிக்கப்படும். அதே அளவு தொகையை, அரசும் தன் பங்காகச் செலுத்தும்.
அரசு பங்குத் தொகைக்கும் பணியாளரின் பங்கு தொகைக்கும் சேர்த்து வட்டி கணக்கிடப்பட்டு வருகிறது. இந்த விவரங்கள் அனைத்தும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. அதில் விடுபட்ட விவரங்கள்-குறைகள் இருந்தால் சம்பள கணக்கு அலுவலர் அல்லது மாவட்ட கருவூல அலுவலரை அணுகலாம். 2014-15-ஆம் ஆண்டுக்கான கணக்குத்தாள்கள் அடங்கிய விவரங்களை, அதாவது அவரவர் கணக்குத்தாள்களை http://218.248.44.123/auto_cps/public என்ற முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என கருவூல கணக்குத் துறை தெரிவித்துள்ளது.
CLICK HERE ACCOUNT SLIP-2014-2015 

ஜேக்டோ போராட்டத்தின் தற்போதைய நிலை

ஆசிரியர்களுக்கு சம்பளம் 'கட்- தினமலர் செய்தி
 
ஆசிரியர் சங்கங்களின் கூட்டுக்குழுவான, 'ஜாக்டோ' சார்பில், 8ம் தேதி, வேலைநிறுத்த போராட்டம் நடந்தது; 1.5 லட்சம் ஆசிரியர்கள் பங்கேற்றனர்; 50 ஆயிரம் பள்ளிகளில், வகுப்புகள் நடக்கவில்லை.போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள், விடுப்பு எடுத்தனர். சில ஆசிரியர்கள், அனுமதி பெற்று போராட்டத்தில் பங்கேற்றனர். 

பெரும்பாலானோர் விடுப்பு கடிதமும் அளிக்காமல், பள்ளிக்கும் செல்லாமல் போராட்டத்தில் பங்கேற்றனர்.இதில், விடுப்பு கடிதம் கொடுக்காத ஆசிரியர்களுக்கு மட்டும், ஒருநாள் சம்பளம் பிடித்தம் செய்ய, கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது.
நமது சிந்தனைக்கு .....

ஜேக்டோ போராட்டத்தின் தற்போதைய நிலை:


ஆசிரியர்களின் அக்டோபர்- 8 , போராட்டத்தினால் அதிர்ந்து போயிருக்கும் அரசுவேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ஆசிரியர்களின் ஊதியம் பிடித்தம் செய்யப்பட வேண்டும் என்ற அரசு விதியின் படி,

ஊதியத்தை பிடித்தம் செய்வதற்குக் கூட யோசனையில் உள்ளது.இதுவே நமக்கு ஒரு வெற்றிதான்.

வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள், ஊதியத்தை இழப்பதும் பிறகு பெற்றுக் கொள்வதும் போராட்ட வரலாறு.
தற்போதைய சூழ்நிலையில் அரசு , ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்தில்(அதாவது ஆசிரியர்களின் பலத்தை அறிந்ததால்) இருப்பதால்,
நமது பிரதானமான நிதி சார்ந்த கோரிக்கைகளை நிறைவேற்ற முனைப்பு காட்டி வருகிறது.

நிதி சார்ந்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் நிதிச்சுமையும் நிதிப்பற்றாக்குறையும் அதிகமாக உள்ளதாகத் தெரிகிறது.
ஆனால் நமது கோரிக்கைகள் நியாயமானதாக இருப்பதால் நாம் பின் வாங்கத் தேவையில்லை.
ஆசிரியர்கள் எவரும் நமது கோரிக்கைகள் நிறைவேற்றப் படுமா என்று குழப்பம் அடையத் தேவையில்லை.போராடாமல் எதுவும் கிடைக்காது.தொடர்ந்து போராடினால் தான் நமது கோரிக்கைகளில் ஓரளவேனும் பெற்றுக் கொள்ள முடியும்.
குறிப்பாக .நி.ஆசிரியர்கள் இதில் தங்களை முழுவதுமாக அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும்.ஏனெனில் பெரும்பாலான நிதி சார்ந்த கோரிக்கைகள் அவர்களுடையதாகவே உள்ளது.

ஆகவே ஜேக்டோ எடுக்கும் எந்த ஒரு முடிவுக்கும் ஒத்துழைப்பு நல்க வேண்டியது நம் ஒவ்வொருவருடைய கடமையாகும்.

Monday 19 October 2015

அடுத்தக் கட்ட போராட்டம் அக்.31ல் 'ஜாக்டோ' முடிவு

சென்னை: 'ஜாக்டோ' என, அழைக்கப்படும், அரசு ஆசிரியர் சங்க கூட்டுக்குழுவின், மாநிலப் பொதுக்குழுக் கூட்டம், 31ம் தேதி, சென்னையில் நடக்கிறது.

இதில் அடுத்த கட்ட போராட்டம் குறித்து, முடிவு எடுக்கப்பட உள்ளது.அரசு மற்றும் அரசு உதவிப் பள்ளி ஆசிரியர்களின், 27 சங்கங்கள் இணைந்து, ஜாக்டோ கூட்டுக்குழுவை ஏற்படுத்தியுள்ளன. இந்தக் குழு, இதுவரை நான்கு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டுள்ளது. இதில், 8ம் தேதி நடந்த மாநில அளவிலான வேலை நிறுத்தம் வெற்றி பெற்றது.ஆனாலும், அரசு கண்டு கொள்ளவில்லை; பேச்சுக்கும் அழைக்கவில்லை. இதனால், அதிருப்தி அடைந்துள்ள ஜாக்டோ நிர்வாகிகள், அடுத்த கட்ட போராட்டம் குறித்து முடிவெடுக்க, 31ம் தேதி சென்னையில் ஆலோசனை நடத்த உள்ளனர். இத்தகவலை, ஜாக்டோ ஒருங்கிணைப்பாளர் இளங்கோவன் தெரிவித்து உள்ளார்

பொது விடுமுறை - மொகரம் பண்டிகை 23.10.2015ம் தேதிக்கு பதிலாக 24.10.2015 அன்று கடைபிடிப்பதையடுத்து தமிழக அரசு பொது விடுமுறை அறிவிப்பு

Saturday 17 October 2015

ஆசிரியர்களுக்கு ஓர் ஆறுதல் செய்தி; மிஸ்டர் கழுகு:ஜூனியர் விகடன்

‘ஆசிரியர்கள் போராட்டம் ஆட்சிக்கு பெரிய சிக்கலை உருவாக்கிவிட்டதாமே?” ‘‘ஆசிரியர் சங்கங்களின் கூட்டு குழுவான ஜாக்டோ அமைப்பு கடந்த 8ம் தேதி தமிழகத்தில் பள்ளிகளில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தியது.ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் முக்கியமான கோரிக்கை 6-வது ஊதிய ஊயர்வு கமிஷன் நிர்ணயித்த சம்பள விகிதங்களில் உள்ள குளறுபடிகளை நீக்க வேண்டும் என்பது. இதை வைத்துஆசிரியர் மற்றும் அரசு ஊழியர் சங்கங்கள்நீண்ட நாள் போராட்டங்கள் நடத்தி வந்தன.ஆசிரியர் சங்கங்களின் இந்தப் போராட்டம்சட்டசபை தேர்தலில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று உளவுத் துறையினர் ஆளும் கட்சி மேலிடத்தின் கவனத்துக்குக் கொண்டு சென்றனர்.இதையடுத்து தலைமைச்செயலகத்தில் அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் தலைமையில் தலைமைச்செயலாளர், நிதித்துறை செயலாளர்,பொதுத்துறை செயலாளர் ஆகியோர்கூடிய அவசர கூட்டம் நடந்தது.இதையடுத்து நிதித் துறை செயலாளர் சண்முகம் அனைத்து துறை\முதன்மைச் செயலாளர்களுக்கும் ஓர் உத்தரவை அவசர அவசரமாக அனுப்பி வைத்தார். அதில் 6-வது ஊதியக்குழுவில் என்னென்ன முரண்பாடுகள் இருக்கின்றன. அதை எப்படி தீர்ப்பது என்று அறிக்கை அளிக்கும்படி அந்த உத்தரவில் கூறப்பட்டிருந்தது.

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு; தமிழக அரசு ஆணை வெளியீடு

Thursday 15 October 2015

வி.ஐ.பி., வரவேற்பில் மாணவர்களை ஈடுபடுத்த மாட்டோம்: அரசு உறுதி

'வி.ஐ.பி.,க்கள் வரவேற்பில் மாணவர்களை ஈடுபடுத்தக்கூடாது,' என, அனைத்துப் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியதை பதிவு செய்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, வழக்கை முடித்தது.மதுரை விஜயகுமார் தாக்கல் செய்த பொதுநல மனுமதுரை காமராஜ் பல்கலை துணைவேந்தராக இருந்த கல்யாணி பணி நியமனம் செல்லாது என, உயர்
நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு, உச்சநீதிமன்றம் தடை விதித்தது. கல்யாணிக்கு 2014 ஜூலை 7 ல் பல்கலை வளாகத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பல்கலை பள்ளி மாணவர்களை வெயிலில் காத்திருக்க வைத்தனர். அவர்கள் மலர்துாவி, கல்யாணியை வரவேற்றனர்.
அனைத்துப் பள்ளிகளைச் சேர்ந்த 14 வயதிற்குட்பட்ட குழந்தைகள், பொது நிகழ்ச்சிகள் மற்றும் மிக முக்கிய பிரமுகர்கள் (வி.வி.ஐ.பி.,) வரவேற்பில் பங்கேற்க தடை விதிக்க வேண்டும். இவ்வாறு, 

விஜயகுமார் மனு செய்திருந்தார்.நீதிபதிகள்,'வி.ஐ.பி.,க்கள் வரவேற்பில் மாணவர்களை ஈடுபடுத்தக்கூடாது என, மதுரை முதன்மைக் கல்வி அலுவலர், அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி, அந்நகலை சமர்ப்பிக்க வேண்டும்,' என்றனர்.
நீதிபதிகள் ஆர்.சுதாகர், வி.எம்.வேலுமணி கொண்ட அமர்வு நேற்று விசாரித்தது. மனுதாரர் வழக்கறிஞர் லஜபதிராய், அரசு சிறப்பு வழக்கறிஞர் சண்முகநாதன், பல்கலை வழக்கறிஞர் சக்திகுமரன் ஆஜராயினர்.
பல்கலை பதிவாளர் ராஜசேகர்,'வரும்காலங்களில், துவக்கப் பள்ளி மாணவர்களை இதுபோன்ற நிகழ்ச்சிகளில் ஈடுபடுத்தக்கூடாது என, பல்கலை பொது நர்சரி மற்றும் துவக்கப் பள்ளி தலைமை ஆசிரியருக்கு அறிவுறுத்தியுள்ளோம்,' என அறிக்கை சமர்ப்பித்தார்.
மதுரை முதன்மைக் கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி தாக்கல் செய்த அறிக்கைதுவக்கநிலை படிக்கும் மாணவர்களை எவ்வித வரவேற்பு நிகழ்ச்சியிலும் ஈடுபடுத்தக்கூடாது. தவிர்க்க முடியாத நிகழ்வுகளில் சிறப்பு விருந்தினர்களை வரவேற்க, கலை நிகழ்ச்சிகளில் பள்ளியில் செயல்படும் குழு சார்பான மாணவர்களை (சாரண-சாரணீயர், செஞ்சிலுவை சங்கம், தேசிய மாணவர் படை, பசுமைப் படை மற்றும் இதர அமைப்புகள்) ஈடுபடுத்தலாம்.
அத்தகைய நிகழ்வுகளில் மாணவர்கள் பங்கேற்கும் பட்சத்தில் போதிய பாதுகாப்பு, குடிநீர், கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டுள்ளதா? என்பதை தலைமை ஆசிரியர் உறுதி செய்ய வேண்டும்.
சிறப்பு விருந்தினர்களின் நிகழ்ச்சியில் மாணவர்கள் பங்கேற்பதால், அவர்களின் கல்வி பாதிக்கும். பங்கேற்பதை தவிர்க்க வேண்டும். இதை பதிவு செய்த நீதிபதிகள் வழக்கை முடித்தனர்.

Tuesday 13 October 2015

அப்துல்கலாமின் பிறந்த நாளை இளைஞர் எழுச்சி நாளாக பள்ளிக்கூடங்களில் கொண்டாடுங்கள்: பள்ளிக்கல்வி இயக்குனர் சுற்றறிக்கை


பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா உத்தரவுப்படி பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் அனைத்து பள்ளிகளுக்கும் முதன்மை கல்வி அதிகாரிகள் வழியாகசுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார்.அதில் அவர் கூறியிருப்பதாவது:-
“இந்தியாவின் ஏவுகணை நாயகன்” என்றும் “இளைஞர்களின் எழுச்சி நாயகன்” என்றும் போற்றப்படும் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாமின் பிறந்த தினமான அக்டோபர் 15-ந்தேதி “இளைஞர் எழுச்சி நாள்” ஆக ஆண்டுதோறும் கொண்டாடப்படும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்து அரசாணை வெளியிட்டுள்ளார்.அதன்படி அப்துல்கலாமின் பிறந்த தினத்தினை அனைத்து பள்ளிகளிலும் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட வேண்டும் என அறிவித்துள்ளார்.
எனவே , அக்டோபர் 15-ந்தேதி அனைத்து பள்ளிகளிலும் கீழ்க்கண்ட அறிவுரைகளின்படி, போட்டிகள் நடத்தப்பட்டு, “இளைஞர் எழுச்சி நாள்” ஆக கொண்டாட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
1 மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள நாட்டு நலப்பணி திட்ட மாணவர்களைக் கொண்டு, அனைத்து மாவட்ட தலைநகரங்களில் இளைஞர் பேரணி அக்டோபர் 15-ந்தேதி காலை 9 மணியளவில் நடத்த வேண்டும்.
2. கட்டுரைப் போட்டி மற்றும் பேச்சுப்போட்டிகளை மாவட்ட அளவில், அனைத்து அரசு, உதவி பெறும் பள்ளி, தனியார் நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகளில் (6 முதல் 12 வரை) படிக்கும் மாணவர்களைக் கொண்டு அக்டோபர் 13-ந்தேதி நடத்தப்பட வேண்டும்.
இப்போட்டிகளிலிருந்து 6 முதல் 8 வரை உள்ள மாணவர்களில் முதலிடம் பெறும் ஒரு மாணவரும், 9 முதல் 12 வரை உள்ள மாணவர்களில் முதலிடம் பெறும் ஒரு மாணவரும், மாநில அளவில் நடைபெறும் பரிசளிப்பு விழாவில், பரிசு பெற அனுப்பப்பட வேண்டும். மாநில அளவில் நடைபெறும் பரிசளிப்பு விழாவிற்கு மாவட்ட அளவில் நடைபெற்ற கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகளில் முதலிடம் பெற்ற மாணவர்கள் பங்கேற்க வேண்டும்.
3. மாவட்ட அளவில், நடுநிலை (6 முதல் 8) , உயர்நிலை (9 மற்றும்10) மற்றும் மேல்நிலைப்பள்ளி ( பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2) மாணவர்களைக் கொண்டு அக்டோபர் 13-ந்தேதி அறிவியல் கண்காட்சி நடத்தப்பட வேண்டும். அதில் தேர்ந்தெடுக்கப்படும் முதலிடம் பெறும் மாணவர் தங்களது படைப்புகளோடு 14-ந்தேதி காலை சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியில் பங்கேற்க செய்ய வேண்டும்.
4. பள்ளி மாணவர்கள் பயனடையும் விதமாக, விண்வெளி கல்வி சார்பான புகைப்படக் காட்சி, அக்டோபர் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில், சென்னையில் உள்ள பிர்லா கோளரங்கத்தில் நடைபெறுகிறது. விருப்பமுள்ள பள்ளிகள் மாணவர்களை பிர்லா கோளரங்கத்திற்கு அழைத்துச் சென்று புகைப்படக் காட்சியினைக் காணச் செய்யலாம்.
5. தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், உள்ளுர் பிரமுகர்களைக் கொண்டு, அனைத்து அரசு, உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளிகளிலும், அக்டோபர் 15-ம் நாளன்று பிற்பகல் 2 மணி முதல் 3 மணி வரை ஒரு மணி நேரம் அப்துல்கலாமின் முன்னேற்ற சிந்தனை சார்பான கருத்துக்களை எடுத்துரைக்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.
இவ்வாறு சுற்றறிக்கையில் ச.கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

Sunday 11 October 2015

தமிழகம் முழுவதும் வேலைநிறுத்தம் செய்தவர்கள் எவ்வளவு

தொடக்கக் கல்வித் துறையில் மொத்தம் 1 லட்சத்து 12 ஆயிரத்து 742 ஆசிரியர்கள் உள்ளனர். இவர்களில் 79,681 ஆசிரியர்கள் பணிக்கு வரவில்லை என்றும்   பள்ளிக் கல்வித் துறையில் உள்ள உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 1 லட்சத்து 7 ஆயிரத்து 473 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களில் 23,065 பேர் மட்டுமே பள்ளிகளுக்கு வரவில்லை மொத்தமாக அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 20 ஆயிரத்து 215 ஆகும். இதில் பள்ளிக்கு வராத ஆசிரியர்களின் எண்ணிக்கை 1,02,746 ஆகும். பள்ளிகளுக்கு 1 லட்சத்து 17 ஆயிரத்து 469 ஆசிரியர்கள் வருகை புரிந்தனர் என அதிகாரபூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவித்தன.


மதுரை மாவட்டத்தில் 1,800 பள் ளிகள் உள்ளன. இவற்றில் பணியாற்றும்
ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் 2,655 பேரும், பள்ளிக் கல்வித் துறையைச் சேர்ந்த 493 பேரும் என மொத்தம் 3,148 ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர்.