news

முதுகலை ஆசிரியர்க்காக போராடக்கூடிய ஒரே அமைப்பு TNHSPGTA ***** நமது சங்கத்தின் உறுப்பினர் ஆகுங்கள் ******சங்க செயல் பாடுகளை தெரிந்துகொள்ள மேல்நிலைக்குரல் படியுங்கள் ******தங்கள் பள்ளி நிகழ்வுகளை அமைப்போடு பகிர்ந்துகொள்ளுங்கள்*****அனைத்து முதுகலை ஆசிரியர்களின் பங்களிப்பே அமைப்பு வளர்ச்சிக்கு உதவும்

Thursday 26 January 2017


கருத்தியல் மற்றும் செய்முறைத் தேர்வுகளுக்கான உழைப்பூதியங்களை உயர்த்தி தரக்கோரி 3 கட்ட போராட்டம் - மாநிலத்தலைவர் அறிவிப்பு

மாவட்டப் பொறுப்பாளர்கள், தோழர்கள் மற்றும் தோழிகளுக்கு வணக்கம். 2011 முதல் விடைத்தாள் உழைப்பூதியம் மாற்றப்படவில்லை. அதனோடு கருத்தியல் மற்றும் செய்முறைத் தேர்வுகளுக்கான உழைப்பூதியங்களும் மாற்றப்படவில்லை... அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர்களோடு 2013 முதல் இரண்டு முறை மாநிலக் கழகம் பேச்சுவார்த்தை நடத்தியும் இந்நாள் வரை எவ்வித மாற்றமும் இல்லாமல் கடமையே கண்ணாக நாம் அரசுத் தேர்வுகளை எவ்வித குறைகளும் இன்றி முடித்துத் தருகிறோம். தேர்வு முறைகேடுகள் என்பது ஒரு சில மாவட்டங்களில் அம்மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராலே அரங்கேற்றப்படுகிறது.... ஒரு சில தவறுகளில் நமது முதுகலை ஆசிரியர்களின் பங்கு இருந்தாலும் அது முதன்மைக் கல்வி அலுவலர்களுக்குத் தெரிந்தே நடைபெறுகிறது. அதற்கு ஈரோடு ஓர் உதாரணம்.... நமைப் பொறுத்தவரையில் கடுமையாக உழைத்து பணப்பலன் என்று வரும்போது அது மிக மிகக் குறைவாகவே உள்ளது... எனவே, உழைப்பூதியங்களை உயர்த்தி தரக்கோரி 3 கட்ட போராட்டங்களை மாநிலப் பொதுக்குழுவின் ஒப்புதலோடு அறிவித்துள்ளோம்... அப் போராட்டங்களில் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகமும் இணைந்து போராட ஒப்புக்கொண்டுள்ளது.... அனைத்து மாவட்டப் பொறுப்பாளர்களும் தங்களது மாவட்டங்களில் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகப் பொறுப்பாளர்களைத் தொடர்பு கொண்டு பிப்ரவரி 3-ந் தேதி ஆர்ப்பாட்டத்தினை மாவட்டங்களில் சிறப்பாக நடத்துங்கள்.... மாநிலப் பொதுக்குழுவில் சென்னையில் உண்ணாவிரதம் என அறிவித்திருந்தோம் ... அதனை மண்டல அளவிலே நடத்தலாம் என முடிவு செய்துள்ளோம்... எந்தெந்த மண்டலங்கள் என நாளை அது உங்களுக்கு தெரிவிக்கப்படும்.... மாவட்ட ஆர்ப்பாட்டங்களை மிகச் சிறந்த அளவில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் குறைந்தது 200 முதுகலை ஆசிரியர்களை ஒன்று கூட்டி  நடத்திக் காட்டுங்கள்... தோழமைச் சங்க பொறுப்பாளர்களை வாழ்த்துரை வழங்க அழைத்துக் கொள்ளுங்கள்... தொய்வில்லாமல் பொறுப்பாளர்கள் கொண்ட குழுக்களை அமைத்துக் கொண்டு அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு சிறப்பாக நடத்துங்கள்.... ஒவ்வொரு கட் செவிக் குழுக்களிலே உள்ள முதுகலை ஆசிரியர்கள் அனைவரும் இச்செய்தியை அனைவருக்கும் அனுப்பி போராட்ட களத்தினை இப்போதிருந்தே செம்மைப் படுத்துங்கள்... மூன்றாவது கட்ட போராட்டம் அரசுத் தேர்வுகள் இயக்ககம் முற்றுகைப் போராட்டமாக உங்களின் ஒப்புதலைப் பெற்ற பிறகு அமைய உள்ளது என்பதனையும் நெஞ்சிலே நிறுத்துங்கள்.... அனைத்து பொறுப்பாளர்களும் முதுகலை ஆசிரியர்களும் வேகமாக - துணிவாக தெளிவோடு செயல்பட வேண்டுகிறேன். மாநிலத்தலைவர் மணிவாசகன்.

Friday 20 January 2017

19.1.17 அன்று நடைபெற்ற மதுரை மாவட்ட பொதுக்குழுக் கூட்டத் தீர்மானங்கள்

மதுரை  மாவட்ட பொதுக்குழுக்கூட்டம் நேற்று மாநிலப்பொதுச் செயலாளர் பிரபாகரன் முன்னிலையில் நடைபெற்றது . மாவட்டத் தலைவர் சரவணமுருகன் தலைமை தாங்கினார்
ஜாக்டோ  மற்றும்  மாவட்ட  பிரச்சனைகள் ,வழக்குநிதி ,ஜல்லிக்கட்டு  ஆகிய பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டன.
பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1.தமிழர் உணர்வை மதித்து  மத்திய ,மாநில அரசுகள் ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்துகிறது .
2. மாநிலத்தலைவர்  மற்றும்  ஜாக்டோ  அமைப்பின் வழிகாட்டுதலின் பேரில் ஜல்லிக்கட்டு  தொடர்பான  போராட்டங்களில்  களம் அமைப்பது எனவும் முடிவெடுக்கப்பட்டது.
3.நடைபெற உள்ள தமிழக பட்ஜெட் தொடரில்  ஊதிய குழு அமைக்கவேண்டும் , CPS தொடர்பான அறிக்கையினை  வெளியிட வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது .
4.செய்முறைத் தேர்வு, பொதுத்தேர்வு  ஆகியவற்றில்  பணிமூப்பு அடிப்படையிலும், 15கி.மி   உள்ளும்  ஆசிரியர்களை நியமிக்க  முதன்மைக்கல்வி அலுவலரை கேட்டுக் கொள்கிறது .
5.மாவட்டத் தலைவராக  நவநீதகிருஷ்ணன் (அய்யங்கோட்டை ), மாவட்டச் செயலாளராக  பிரபு (செக்கானூரணி ), மாவட்டப்  பொருளாளராக  வினோத்(வல்லாளபட்டி ) , அமைப்புச் செயலாளராக முரளி (பாரதிதாசன் மாநகராட்சி), செய்தித் தொடர்பாளராக சம்பத் (வெள்ளையம்பட்டி), மாவட்ட தணிக்கையாளராக சுதாகர்  (நாட்டாமங்கலம்),  மாவட்டத் துணை தலைவராக  ரவிச்சந்திரன் ,பாண்டியன்,   மதுரை கல்வி மாவட்ட செயலாளராக சதீஷ்குமார் (அய்யங்கோட்டை), உசிலை கல்வி மாவட்டத் தலைவராக பாலகிருஷ்ணன் ஆகியோர் ஒருமனதாக  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.


பொதுக்குழுவில் மூத்தோர் அணி மாநில பொறுப்பாளர் பார்த்திபன் ,மாநில துணைத்தலைவர் சிவ ராஜேந்திரன் ,வினோத் ,துரைராஜ்,ஆனந்த சகாயநாதன் ,சோலைராஜா ஆகியோர் கலந்துகொண்டனர்

இன்று மதுரையில் அரசுப்பள்ளிகள் உட்பட அனைத்துபள்ளிகளுக்கும் விடுமுறை

 கலெக்டர் உத்திரவின்படி மதுரை  அரசு பள்ளிகளுக்கும் இன்று 20.1.17 விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது                        
 இன்று நடைபெறுவதாக இருந்த  முதலாம் திருப்புதேர்வு (கணினி அறிவியல்) 24.1.17 க்கு  தள்ளிவைக்கப்பட்டுள்ளது                       
பத்தாம் வகுப்புகணிதத் தேர்வு  திங்கள்கிழமை(23.1.17)  நடைபெறும்

Wednesday 18 January 2017

முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சிறப்பு சிகிச்சை பெறுவதற்கான தொகை ரூ.2 லட்சமாக உயர்வு : தமிழக அரசு அறிவிப்பு

தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 1.58 கோடி குடும்பங்களுக்கு
மருத்துவ காப்பீட்டு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. 4 ஆண்டுகளுக்கு நான்கு லட்சம் ரூபாய் காப்பீடும் குறிப்பிட்ட 77 நோய்களுக்கு 1.5 லட்சம் ரூபாய் வரையிலும் காப்பீடு வழங்கப்பட்டது. ஐந்து ஆண்டுகளில் 17.60 லட்சத்திற்கும் அதிகமானோர் ரூ.3,615 கோடி காப்பீட்டு செலவில் பயனடைந்துள்ளனர்.
அரசு மருத்துவமனைகளில் 7.11 லட்சம் பொதுமக்களுக்கு 1,286 கோடி ரூபாய் காப்பீட்டு செலவில் சிகிச்சை அளிக்கப்பட்டு இந்த நிதியிலிருந்து, மருத்துவமனைகளுக்கு நவீன உபகரணங்கள் மற்றும் பிற வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. நவீன உயர் சிறப்பு சிகிச்சை மூலம் ஏழை மக்கள் பயன்பெற மாநில அரசு ரூ.35 கோடி தொகுப்பு நிதி ஒன்று உருவாக்கி எவ்வித செலவும் இல்லாமல் 4300 பேர் 318.42 கோடி ரூபாய் செலவில் சிறப்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. கடந்த 11ம் தேதி முதல் தொடர்ந்து செயல்படுத்தப்பட உள்ள முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில், சிறப்பு சிகிச்சை முறைகளுக்கு தற்போது வழங்கப்படும் 1.50 லட்சம் ரூபாய் காப்பீட்டு தொகை, இரண்டு லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
இத்திட்டத்தை மேலும் மேம்படுத்தும் வகையில் 312 சிகிச்சை முறைகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. ஆறு மாதத்திற்கு மேல் வசிக்கும் கட்டுமான தொழிலாளர்கள், புலம் பெயர்ந்தவர்கள் அதிகாரிகளால் சான்றளிக்கப்பட்டு தொழிலாளர் நலத் துறை மூலம் சேர்க்கப்படுவார்கள். மாநில அரசால் அனாதைகள் என வரையறுக்கப்பட்டவர்களுக்கு தனி காப்பீட்டு அட்டை வழங்கப்படும். தற்போதைய மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை முறை தொடரப்படும். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காப்பீட்டு அடையாள அட்டை வழங்கும் மையங்கள் தொடர்ந்து செயல்படும்.

தமிழ்நாடு மின் ஆளுமை நிறுவனத்துடன் இணைந்து பயனாளிகள் ஆதார் எண்ணுடன் இணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. தொடர்ந்து காப்பீட்டு அடையாள அட்டை மற்றும் மின்னணு அட்டையை பயன்படுத்தி அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் கட்டணமில்லாமல் அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சைக்கு முறையான சிகிச்சை பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Sunday 15 January 2017

XII வகுப்பு - முதலாம் திருப்பு தேர்வு தேதி மாற்றம்

 17/01/17 அரசு பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளதால் மதுரை மாவட்டத்தில் அன்று நடைபெற இருந்த XII வகுப்பு தேர்வுகள்    18/01/17 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது 

Friday 13 January 2017

எம்.ஜி.ஆரின் 100வது பிறந்த நாள்: ஜன.,17 அரசு விடுமுறை

எம்.ஜி.ஆரின் 100 வது பிறந்த நாளான ஜன.,17 ம் தேதியை அரசு பொது விடுமுறை நாளாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து, தமிழக அரசின் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் இன்று வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியுள்ளதாவது:
எம்.ஜி. ராமசந்திரனின் 100 வது பிறந்த நாள் நுாற்றாண்டு விழாவினை முன்னிட்டு, 17.01.2017 (செவ்வாய் கிழமை) மட்டும் செலவாணி முறிச்சட்டம் 1881- ன் கீழ் பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது.
இந்த பொது விடுமுறையானது தமிழ்நாட்டிலுள்ள அரசு அலுவலகங்கள், அரசினால் அமைக்கப்பட்டுள்ள வாரியங்கள் மற்றும் கழகங்கள், பொதுத் துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அதிகார அமைப்புகள், கூட்டுறவு வங்கிகள் உட்பட அனைத்து வங்கிகள், தொழிற்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லுாரிகள், மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்கள் முதலியவற்றிக்கும் பொருந்தும். பிற நிறுவனங்களும் இவ்விழாவின் சிறப்பினை கருத்தில் கொண்டு தங்களது அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கு பொது விடுமுறை நாளாக அறிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசின் சிறப்பு அரசிதழில் வெளிடப்படும்.

Wednesday 11 January 2017

தமிழக அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு சிறப்பு போனஸ் தமிழக அரசு அறிவிப்பு.


*எ&பி பிரிவு-₹1000,*
*சி&டி பிரிவு-₹3000.*
*அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு*

 ★ *AB பிரிவுக்கு ₹1000 சிறப்பு மிகை ஊதியம்*

 ★ *CD பிரிவுக்கு ₹3000 என்ற உச்ச வரம்புக்கு உட்பட்டு 30நாட்கள் ஊதியத்திற்கு இணையாக மிகை ஊதியம்*

★  *ஓய்வூதியம்,  குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.500 பொங்கல் பரிசு*

★ *உள்ளாட்சி அமைப்புகள், அரசு உதவி பெரும் கல்வி நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு சிறப்பு மிகை ஊதியம்.*

★ *பொங்கல் போனஸ் வழங்குவதன்மூலம் அரசுக்கு  ரூ.325.20 கோடி  செலவு ஏற்படும்.*

நமது அமைப்பு சார்பாக 10.1.17 அன்று முதன்மைக்கல்வி அலுவலரிடம் கொடுக்கப்பட்ட கோரிக்கைகள்



      2017ல் நடைபெறவுள்ள பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பான எமது அமைப்பின் பொதுக்குழுத் தீர்மானங்கள் தங்கள் பார்வைக்கு வைக்கப்படுகிறது

1.செய்முறைத்தேர்வில் கடந்த ஆண்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் ஆசிரியர்கள் பெரும்பாலானோர் பெயர் விடுதல் செய்யப்பட்டிருந்தது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களை செய்முறைத் தேர்வுக்கு அலுவலர்களாக நியமிக்கப்பட்ட பின்னரே பதின்மப் பள்ளி ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும்

2. அரசுப்பள்ளிகளுக்கு பதின்ம பள்ளி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டால் அவர்கள் தமிழ்வழி தேர்வுகளை நடத்த சிரமப்படுவதால் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி பணிபுரியும் ஆசிரியர்களேயே அரசுப்பள்ளிகளுக்கு புறத்தேர்வாளர்களாக நியமிக்கவேண்டும்.

3.செய்முறைத்தேர்வுக்கு முதுகலை ஆசிரியர்கள் நியமிக்கப்படும்போது அருகாமையில் உள்ள பள்ளிகளுக்கு நியமிக்கப்படவேண்டும். 

4.தாவரவியல், விலங்கியல் தனித்தனியாக உள்ள பள்ளிகளுக்கும் அதிக மாணவர்கள் உள்ள உயிரியல் பிரிவு உள்ள பள்ளிகளுக்கும் தாவரவியல், விலங்கியல் தனித்தனியாக முதுகலை ஆசிரியர்கள் புறத்தேர்வாளர்களாக நியமிக்கப்பட வேண்டும்.                                                                                                                 

5.அரசுப் பொதுத் தேர்வுக்கான பணிகளுக்கு முதுகலை ஆசிரியர்கள் நியமிக்கப்படும்போது 15 கி.மிக்குள் நியமிக்கப்பட வேண்டும்
            6.
துறை அலுவலர், பறக்கும் படை உறுப்பினர் நியமனத்தின் போது பதவிமூப்பு அடிப்படையில் நியமித்தல் வேண்டும்.          .
            7.
பறக்கும் படை உறுப்பினர்களாக முதுகலை ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநர்களையே நியமிக்க வேண்டும். உடற்கல்வி ஆசிரியர்களை நியமிக்கக்கூடாது.
 
           8. உடல் நலக்குறைவு போன்ற உரிய காரணங்கள் மருத்துவ சான்றிதழ் அடிப்படையில் ஆய்வு செய்யப்பட்டு அவர்களுக்கு விலக்கு அளிக்கப்படவேண்டும்.

                    மேல்நிலை பொதுத்தேர்வு சிறப்பாக நடைபெறவும் இடர்பாடுகளை களையவும் எமது அமைப்பு முழு ஒத்துழைப்பு வழங்கும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது .

தொடர் போராட்டங்கள் நடத்த தயாராகும் 'ஜாக்டோ - ஜியோ'

பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி, தொடர் போராட்டங்கள் நடத்த, 'ஜாக்டோ - ஜியோ' கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. 
 
          பள்ளி கல்வி, தொடக்க கல்வி துறையில் பணியாற்றும் ஆசிரியர்களின், 28 சங்கங்கள் இணைந்து, 'ஜாக்டோ' என்ற அமைப்பும், அரசு துறையின் பல ஊழியர் சங்கங்கள் இணைந்து, 'ஜியோ' என்ற அமைப்பும் செயல்பட்டு வருகின்றன.
இரு அமைப்புக்களும் இணைந்த கூட்டமைப்பு, 2003ல் நடத்திய போராட்டம், நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின், 2015, பிப்ரவரியில் மீண்டும், ஜாக்டோ - ஜியோ கூட்டுக்குழு உருவானது. 'பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்; காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்' எனக்கோரி, 2016ல், மார்ச் வரை, தொடர் போராட்டங்களை நடத்தியது. இந்நிலையில், ஜாக்டோ - ஜியோ ஆலோசனை கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது. வரும் பட்ஜெட்டில், தங்கள் கோரிக்கைகளை ஏற்று, அறிவிப்புகளை வெளியிட வலியுறுத்தி, தொடர் போராட்டங்கள் நடத்த முடிவு செய்யப் பட்டுள்ளது. போராட்டம் குறித்த அறிவிப்பு, விரைவில் வெளியாகும் என, கூட்டுக்குழு நிர்வாகிகள் கூறினர்.

Monday 2 January 2017

கல்வி குறித்த அடுத்தக்கட்ட நகர்வுக்கு யார் பொறுப்பேற்பது? -தினமணி நாளிதழில் இருந்து

புதிய கல்வி கொள்கை குறித்து விவாதம் நடைபெற்றுக்கொண்டிருக்கிற காலம் இது விவாதம் போதுமான அளவிற்கு கவனத்தை ஈர்க்கவில்லை என்ற  பொதுவான குற்றச்சாட்டைமுன்வைத்தாலும் கூட முன்னெடுத்து விவாதித்திருக்க வேண்டிய ஆசிரியர் சமூகம் இது குறித்து சற்றே பாராமுகமாகவே இருப்பது சற்று வேதனையானதே.

எந்த காலத்தில் சமூக பிரச்சனைகள் குறித்து நாட்டின் பெரும்பாலான மக்கள் கருத்து தெரிவித்து போராடியிருக்கின்றனர். இன்று மட்டும் கருத்து தெரிவிப்பார்கள் என்றும் எதிர்வினையாற்றுவார்கள் என்றும் எதிர்பார்க்க. கருத்து தெரிவிப்பதும் கருத்துக்காக பேராடுவதும் மிக சொற்ப மனிதர்கள் அல்லது இயக்கங்கள் மட்டுமே அப்படித்தான் வரலாறு சொல்கிறது.


 யார் உதறி தள்ளினாலும் ஆசிரியர் சமூகம் தனக்கான உரையாடலை தொடங்க வேண்டியிருக்கிறது. ஆசிரியர்களுக்கான உரையாடல் மற்றும் ஆசிரியர்களுக்கிடையேயான உரையாடல் தான் கல்விப்புலத்தின் மிக முக்கியமான இடமாகும். ஆசிரியர்களுக்கிடையேயான உரையாடல் தான் மாணவர்களுக்கான உரையாடலாக மறுவடிவம் பெற முடியும்.


கல்வியை வெறும் திறன்களாக பார்க்கிற ஒரு குறுகிய மனோபாவம் வளர்ந்திருக்கிறது. செறிவூட்டப்பட்ட அறிவின் அடையாளமாக கல்வியை ஈர்க்கிற பார்வை நம்மிடமிருந்தது. இடையில் எங்கோ அதை தொலைத்துவிட்டோம். எங்கு தொலைத்தோம் என்று தேடிப்போனால் வரலாறு நம்மை தண்டிக்ககாத்திருக்கிறது.

எது கற்றல்? கற்றலின் அடிப்படைதன்மை என்ன? அச்சடிக்கப்பட்ட காகிதத்திலிருக்கிற விஷயங்களை இம்மிபிசகாமல் எடுத்து சொல்வது தான் கல்வியா? பாடப்புத்தகத்தை பிரதி எடுத்து திரும்ப சொல்வதுதான் கல்வியா? என ஆயிரம் கேள்விகளை கல்வியாளர்கள் எழுப்புகிறார்கள். யார் கல்வியாளர்கள் என்றும் ஒரு குழப்பம் நிலவுகிறது. மகிழ்ச்சியாகவும் உணர்வுபூர்வமாகவும் ஒன்றை கற்றுத்தருகிற பொழுது அல்லது கற்றுக்கொள்கிற பொழுது கட்டமைக்கப்படவேண்டிய புற சூழல் பற்றியும் நாம் அதிகம் சிந்திக்கவேண்டியிருக்கிறது.

புறச்சூழலின் முக்கிய கதாபாத்திரம் ஆசிரியர். ஆசிரியரே கல்வியை கட்டமைக்கிற தலைமைப்பொறியாளன். பாடப்புத்தகம் என்பது ஒரு கையேடு பிரபஞ்சத்தின் எல்லா பொருள்களைப்பற்றியும் புத்தகமாக வகுப்பறைக்குள் எடுத்து செல்ல முடியாது. அந்த கனத்தை தூக்க முடியாத ஒரே காரணத்தினால் புத்தகங்கள் குறிப்புகளாக சுருக்கப்பட்டன.

பெரிய விஷயங்களின் சுருக்கப்பட்ட வடிவமே பாடபுத்தகம் சுருக்கப்பட்ட விஷயங்களின் விரிவாக்கப்பட்ட ஆடுகளமே வகுப்பறை. வகுப்பறைக்கான விஷயங்களை விவாதப்படுத்துகிற, ஜனநாயகவாதியே ஒரு மிகச்சிறந்த ஆசிரியன்.

உரையாடல் நடத்துகிற, வேடிக்கை காட்டுக்கிற, சிந்திக்க தூண்டுகிற, சிரிக்க வைக்கிற,ஒரு சிந்தனையாளனே ஆசிரியன். ஆசிரியன் பல வேடமிடுகிறான் பல வேஷங்களை கட்ட வேண்டும் அவன் ஒரு வேடிக்கை காட்டுகிற கோமாளி. நிகழ்த்து கலை காட்டுகிற ஒரு பொம்மலாட்டக்காரன், பல ஆச்சர்யங்களை நிகழ்த்துகிற ஒரு நடிகன், பல தேசத்து கதை சொல்லுகிற ஒரு கதைசொல்லி அவர் ஒரு கலைஞன் ஒரு ஓவியன் இப்படி சக பரிமானங்களுக்குள்ளும் தன்னை ஆட்படுத்தி அதிசயமாய் மீட்டெடுக்கிற மகா கலைஞனே ஒரு ஆசிரியன்.

மருத்துவருக்கு மருத்துவம் தெரிந்தால் போதும் பொறியாளனுக்கு என்ஜினீயரிங் தெரிந்தால் போதும். வணிகனுக்கு வியாபாரம் மட்டுமே போதும் அவரவர்களுக்கு அவரவர் அறிவு போதுமானது ஆசிரியர்கள் அப்படி அல்ல சமூகத்திற்கான பலரையும் உருவாக்குகிற ஒரு பல்கலைகழகமாக இருக்க வேண்டும்.அவன் ஒரு தனி மனித இயக்கம். அவன் ஒரு பன்முக திறமைசாலியாக இருக்க வேண்டியுள்ளது.

மருத்துவர்களையும், பொறியாளர்களையும், மென்பொருள் திறமையாளர்களையும், உருவாக்குகிற அதே நேரத்தில் எழுத்தாளனை அவன்தான்உருவாக்க வேண்டும். ஓவியனை உருவாக்க வேண்டும் கலைஞனை உருவாக்க வேண்டும் சிந்தனையாளனை உருவாக்க வேண்டும் ஏன் ஒரு நடிகனைக்கூட உருவாக்க வேண்டும்.

ஒரு வகுப்பறையில் 30 குழந்தைகளில் 30 விதமான மனிதர்கள் ஒளிந்துகிடக்கிறார்கள். 30 குழந்தைகளையும் ஒரே விதமாக வளர்த்தெடுக்க முடியாது ஒளிந்துகிடக்கிற ஓவியனை கலைஞனை எழுத்தாளனை உயிருட்டவேண்டும். வகுப்பறைக்குள் தினந்தோறும்பல நூறு பூக்கள் பூக்கின்றன ஒவ்வொரு பூவிற்கும் ஒவ்வொரு வாசம்.

பல திறமையானவர்களை கண்டுபிடித்து பல்வேறு மனிதர்களை படைப்பவனே ஆசிரியருக்கான முழு தகுதியையும் பெறுகிறான். ஆசிரியருக்கு தொழில்நுட்பமும் நவீன உபகரணங்களும் கைவரம் பெற வேண்டும். குழந்தைகளுக்குள்ளே ஒளிந்துகிடக்கின்ற ஆற்றல்களை அளவிடுகிற, புதிய மனிதர்களை இனம் காணுகிற அதே நேரத்தில் மற்றொரு மகத்தான பணி காத்திருக்கிறது.

 திறமைகளை காட்சிப்படுத்த வேண்டும். வகுப்பறையை ஜனநாயகப்படுத்த வேண்டும் அதற்கு இரண்டு முக்கியமான கருவிகளை கையாள தெரியவேண்டும் 1.கற்பனை 2.வாசிப்பு. கற்பனை உலகத்தை வாசிக்க தெரிந்த ஆசிரியர்கள் மட்டுமே கற்பனை உலகத்திற்குள் குழந்தைகளை அழைத்து செல்ல முடியும் அவர்களே புதிய உலகத்தை படைக்கிறார்கள். படைப்பாளிகளாக மாறுகிறார்கள்.