news

முதுகலை ஆசிரியர்க்காக போராடக்கூடிய ஒரே அமைப்பு TNHSPGTA ***** நமது சங்கத்தின் உறுப்பினர் ஆகுங்கள் ******சங்க செயல் பாடுகளை தெரிந்துகொள்ள மேல்நிலைக்குரல் படியுங்கள் ******தங்கள் பள்ளி நிகழ்வுகளை அமைப்போடு பகிர்ந்துகொள்ளுங்கள்*****அனைத்து முதுகலை ஆசிரியர்களின் பங்களிப்பே அமைப்பு வளர்ச்சிக்கு உதவும்

Thursday 30 April 2015

3 முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பதவி உயர்வு.

முதன்மை கல்வி அதிகாரி அந்தஸ்தில் நிதி அமைச்சரிடம் தனி அதிகாரியாக பணிபுரிந்த பாஸ்கர சேதுபதி இணை இயக்குனர் (தொழில்கல்வி) ஆக பதவி உயர்வு பெற்றார். சேலம் முதன்மை கல்வி அதிகாரி செல்வக்குமார், மதுரை பிற்பட்டோர் மற்றும் கள்ளர் சீரமைப்பு துறை இணை இயக்குனராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
திருவண்ணாமலை முதன்மை கல்வி அதிகாரி பொன்னையா பதவி உயர்வு பெற்று இணை இயக்குனர் (நாட்டு நலப்பணி திட்டம்) ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.
நாட்டு நலப்பணித்திட்ட இணை இயக்குனர் உஷாராணி அனைவருக்கும் கல்வி திட்ட இணை இயக்குனராக மாற்றப்பட்டார். 

அனைவருக்கும் கல்வி திட்ட இணை இயக்குனர் குப்புசாமி மாற்றப்பட்டு அரசு தேர்வுகள் இணை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். 

பள்ளிச்சாரா வயது வந்தோர் கல்வி இயக்க இணை இயக்குனர் சுகன்யா நூலக இணை இயக்குனர் கூடுதல் பொறுப்பையும் கவனிப்பார். 

இந்த தகவலை பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Sunday 26 April 2015

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் மதுரையில் 25.04.2015 அன்று சிறப்பாக நடைபெற்றது

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் மதுரை - சிவகங்கை ரோடு, அரசனுர் பாண்டியன் சரஸ்வதி யாதவ் பொறியியல் கல்லூரியில் 25.04.2015  அன்று மாநிலத் தலைவர் வே.மணிவாசகன் தலைமையிலும் மாநிலப் பொதுச் செயலாளர் இரா.பிரபாகரன், மாநிலப்  பொருளாளர் ஆ.கிருஷ்ணன், மாநில அமைப்புச் செயலாளர் இரா.புஷ்பராஜ், மாநில தலைமையிடச் செயலாளர் பொ.பாலசுப்பிரமணியன், மாநில மகளிர் அணிச் செயலாளர் க.முத்துக்குமாரி மற்றும் மதுரை மாவட்டச் செயலாளர் சி.இரவிச்சந்திரன் முன்னிலையிலும் நடைபெற்றது. மதுரை மாவட்டத் தலைவர் பெ.சரவணமுருகன் வரவேற்புரையாற்றினார் மாவட்டப் பொருளாளர் வினோத் நன்றி கூறினார்.
கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
  • ஆறாவது ஊதியக்குழுவினால் ஏற்பட்டுள்ள ஊதிய முரண்பாடுகளை நீக்கி நடுவண் அரசுக்கு இணையான ஊதியத்தினை வழங்கிட வேண்டும்
  •    1987-ல் ஒப்பந்த நியமன முதுகலை ஆசிரியர்களையும் 2004-முதல் 2006-வரை  தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட முதுகலை ஆசிரியர்களையும் அவர்கள் பணியேற்ற நாள் முதல்  பணிவரன்முறை செய்ய வேண்டும்
  • தன்பங்களிப்பு ஓய்வூதியத்திட்டம்  முறையினை இரத்து செய்து, பழைய ஓய்வூதியத்திட்டத்தினை நடைமுறைப்படுத்த வேண்டும்
  •     வரும் கல்வி ஆண்டு முதல் +1 மற்றும் +2 வகுப்புகளுக்கு நான்கு  பருவத் தேர்வு  நடைமுறையை கொண்டு வர வேண்டும்.
  •  12-ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வுகளின் கடுமையைக் கருதி தேர்வுப் பணிகளுக்கான உழைப்பூதியம் மற்றும் மதிப்பூதியத்தினை பின்வருமாறு உயர்த்தித் தர வேண்டும்
  •     நலத்துறைப் பள்ளிகள் மற்றும் இதர துறைகளின் கீழ் இயங்கும் பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறையுடன்  இணைக்க வேண்டும்
  • கடந்த ஆண்டு அனைத்து இடங்களும் மறைக்கப்பட்டு பணியிட மாறுதல் நடத்தப்பட்டது. வரும் கல்வியாண்டில் ஒளிவு மறைவற்ற பணியிட மாறுதல் நடத்தப்பட வேண்டும்
மேற்கண்ட தீர்மானங்கள் அனைத்தும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.










Friday 24 April 2015

மாநில பொதுக்குழுக் கூட்டம் மதுரையில் ஏப்ரல் 25 அன்று நடைபெறுகிறது


தலைமை ஆசிரியர் காலியிடங்களை நிரப்ப பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை

மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க நடப்பு கல்வியாண்டு துவக்கத்திலேயே அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் காலியிடங்களை நிரப்ப பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.


அரசு உயர்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் 2012 வரையிலும், முதுகலை ஆசிரியர்கள் 1999 வரையிலான ஆசிரியர்களுக்கு தகுதி அடிப்படையில் அரசு மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு அளிக்கப்பட உள்ளது. இதற்கான விபரங்களை பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே சேகரித்து அனுப்பியது.

இப்பதவி உயர்வு பட்டியலில் குளறுபடிகளை தவிர்க்க, இறுதிக்கட்ட ஆய்வு மேற்கொண்டு மீண்டும் பதவி உயர்வு பட்டியல் ஒன்றை அனுப்பி வைக்க, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்காக விடுபட்ட விபரங்களை நேரில் வரவழைத்து கல்வித்துறை ஊழியர்கள் சேகரிக்கின்றனர்.

அதிகாரி ஒருவர் கூறுகையில், "நடப்பு கல்வியாண்டில் ஜூனில் பள்ளிகள் திறக்கும் நிலையில், மே மாத இறுதிக்குள் பதவி உயர்வு பட்டியல் வெளியிடப்பட்டு, காலி பணியிடங்கள் நிரப்பும் திட்டம் உள்ளது. இதற்கான கவுன்சிலிங் 2015 மே இறுதியில் நடத்த கல்வித்துறை திட்டமிட்டுள்ளது" என்றார்.

பிளஸ்டூ தேர்வு முடிவுகள் மே 7ம் தேதி வெளியிடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் மே 21ம் தேதி வெளியாகிறது.

தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் சபீதா இதற்கான அறிவிப்பை இன்று மாலை வெளியிட்டார்.

இரு தேர்வு முடிவுகளும் அன்றைய தினம் காலை 10 மணிக்கு வெளியிடப்படும்.
தேர்வு முடிவுகளை அரசின் இணையதளங்களில் மட்டுமே காண முடியும். அதன்படி கீழ்க்கண்ட இணையதளங்களில் தேர்வு முடிவுகளை மாணவர்கள் பார்த்து மதிப்பெண் பட்டியலையும் பிரதி எடுத்துக் கொள்ளலாம்.
இணையதள முகவரிகள்:
www.tnresults.nic.in
www.dge1.tn.nic.in
www.dge2.tn.nic.in
www.dge3.tn.nic.in

Monday 20 April 2015

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினர்.

மத்திய அரசின் ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வேண்டும், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், மாணவர்களுக்கான நலத் திட்டங்களைச் செயல்படுத்த தனி அலுவலரை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (ஜேக்டோ) சார்பில் இந்தப் போராட்டம் நடைபெற்றது.



அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இந்த உண்ணா விரதம் நேற்று காலை தொடங்கியது. 27 ஆசிரியர் சங்கங்களை சேர்ந்த 1 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இந்த உண்ணா விரதத்தில் கலந்து கொண்டனர். அனைத்து ஆசிரியர் சங்கங்களை சேர்ந்த தலைவர்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் தலைமை தாங்கினர்.

. மாநில அரசு சார்பில் ஜேக்டோ நிர்வாகிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும். இல்லையெனில், அடுத்தகட்டமாக போராட்டத்தைத் தீவிரப்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்படும் என்று ஜேக்டோ உயர்நிலைக் குழு உறுப்பினர்கள் தெரிவித்தனர்.