news

முதுகலை ஆசிரியர்க்காக போராடக்கூடிய ஒரே அமைப்பு TNHSPGTA ***** நமது சங்கத்தின் உறுப்பினர் ஆகுங்கள் ******சங்க செயல் பாடுகளை தெரிந்துகொள்ள மேல்நிலைக்குரல் படியுங்கள் ******தங்கள் பள்ளி நிகழ்வுகளை அமைப்போடு பகிர்ந்துகொள்ளுங்கள்*****அனைத்து முதுகலை ஆசிரியர்களின் பங்களிப்பே அமைப்பு வளர்ச்சிக்கு உதவும்

Sunday 13 March 2016

பிளஸ்2 விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெறும் போது விடைத்தாள் திருத்தும் மையங்களில் போதிய அடிப்படை வசதிகள் செய்து தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.என தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் பொதுக்குழுவில் தீர்மானம்



 தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் மதுரை மாவட்ட பொதுக்குழு நேற்று (12.3.16) மாவட்டத் தலைவர் சரவணமுருகன் தலைமையில் நடைபெற்றது. மாநிலப் பொதுச் செயலாளர் திரு.பிரபாகரன் அவர்கள் கலந்துகொண்டார். மாவட்டச்  செயலாளர் ரவிச்சந்திரன் வரவேற்றார். அமைப்பு செயலாளர் முருகன் நன்றி கூறினார்.
கழகத்தின் சார்பில் கோரப்பட்டுள்ள கோரிக்கைகள் பின்வருமாறு,
*பள்ளி மேல்நிலைக் கல்வியில் பிளஸ்2 அரசு பொதுத்தேர்வில் சுமார் 65 லட்சம் விடைத்தாள்கள் ஆண்டுதோறும் திருத்தப்படுகின்றன.
இதில் மாணவர்களின் எதிர்காலம் அவ்விடைத்தாள்களை சார்ந்துள்ளதால் கூடுதல் கவனத்தோடு திருத்த, பிளஸ்2 விடைத்தாள் திருத்தும் மையத்தில் அடிப்படை வசதிகள் செய்துதரவேண்டும் என்று தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் கேட்டுகொள்கிறது . 
*தலைமைத் தேர்வாளர் மற்றும் கூர்ந்தாய்வாளர் நியமனம் பணிவரன் முறை செய்யப்பட்ட பணிமூப்பு அடிப்படையில் மட்டுமே நியமனம் செய்ய வேண்டும்.
*மேலும் தலைமைத் தேர்வாளர் மற்றும் கூர்ந்தாய்வாளர் நியமனம் எக்காரணம் கொண்டும் மெட்ரிக் மற்றும் சுயநிதி பிரிவில் பணியாற்றும் ஆசிரியர்களை நியமனம் செய்யக் கூடாது,
*உதவி தேர்வாளர்களாக பிளஸ்2 வகுப்பில் பாடம் கற்பிக்கும் முதுகலை ஆசிரியர்களை மட்டுமே நியமனம் செய்ய வேண்டும்,
* முதன்மை மதிப்பீட்டாளர், கூர்ந்தாய்வாளர் எண்ணிக்கை உயர்த்தப் பட வேண்டும்.
* விடைத்தாள் ஒன்றுக்கு ரூ 20/- என வழங்கப்படவேண்டும்
*மையங்கள் அதிக எண்ணிக்கையில் மாவட்டந்தோறும் அமைக்கப்படுவதால் தினப்படி ஒரு நாளைக்கு 180/- என (FLAT RATE) வழங்கப்படவேண்டும்
*தேர்வுத்துறை விதிகளின்படி விடைத்தாள் திருத்தும் பணிக்கு நாள் ஒன்றுக்கு நிர்ணயிக்கப்பட்ட விடைத்தாள்களை மொழிப்பாடம் உள்ளிட்ட இதர பாடங்களுக்கும் வழங்க வேண்டும்,
*தாள் திருத்தும் மையத்தில் இருக்கை வசதி, மின்விசிறி வசதி, குடிநீர்வசதி, சிற்றுண்டிச்சாலை வசதி, ஆண் மற்றும் பெண்களுக்கான தனித்தனி கழிப்பிடவசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
கூட்டத்தில் மாநிலத் துணைத்தலைவர் ராஜேந்திரன்,  மாநில மகளிரணி இணைச் செயலாளர் விமலா , மாவட்ட பொறுப்பாளர்கள் , வினோத், சுதாகர், துரைராஜா. ஆனந்தசகாயநாதன், பாண்டியன், பிரபாகரன் , மேரி கரோலின், சந்திரகலா , சம்பத், சௌந்தரபாண்டியன் பிரபு பாலகிருஷ்ணன் விஜயகுமார் சோலைராஜா, நந்தகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.