news

முதுகலை ஆசிரியர்க்காக போராடக்கூடிய ஒரே அமைப்பு TNHSPGTA ***** நமது சங்கத்தின் உறுப்பினர் ஆகுங்கள் ******சங்க செயல் பாடுகளை தெரிந்துகொள்ள மேல்நிலைக்குரல் படியுங்கள் ******தங்கள் பள்ளி நிகழ்வுகளை அமைப்போடு பகிர்ந்துகொள்ளுங்கள்*****அனைத்து முதுகலை ஆசிரியர்களின் பங்களிப்பே அமைப்பு வளர்ச்சிக்கு உதவும்

Sunday 30 August 2015

நம் மாநிலத் தலைவர் உயர்திரு. வே.மணிவாசகன் ஐயா அவர்களின் சேவையைப் பாராட்டி. முனைவர் விருது

தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும்   மேல்நிலைப் பள்ளிகளில் பணி புரியும்   முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்களின் நலனுக்காக ,தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநிலத் தலைவர் என்ற முறையில் அற வழியில்  குரல் கொடுத்தும்,தொடர்ந்து போராடி வரும்   நம் மாநிலத் தலைவர் உயர்திரு. வே.மணிவாசகன் ஐயா அவர்களின் சேவையைப் பாராட்டி. முனைவர் விருது அளித்து பாராட்டு தெரிவித்த தமிழ் செம்மொழிப்பல்கலைக்கழகத்திற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.விருது பெற்ற மாநிலத் தலைவருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.அன்னார் நல்ல ஆரோக்கியத்தையும்,நீடித்த வாழ்நாளையும் பெற்று வாழ்க வளமுடன் என மனமுவந்து வாழ்த்துகிறோம்.நல்ல நிகழ்வுகள் தொடரட்டும்

தேர்தலுக்கு தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை தயாரிப்பதற்காக டி.ஆர்.பாலு, கனிமொழி எம்.பி., சுப்புலெட்சுமி ஜெகதீசன், தங்கம் தென்னரசு, டி.கே.எஸ்.இளங்கோவன், வி.பி.துரைசாமி, பேராசிரியர் ராமசாமி, சண்முகசுந்தரம், இளங்கோ ஆகிய 9 பேர் கொண்ட தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது ஆசிரியர் அமைப்புகளை அழைத்து கோரிக்கைகளை கேட்டறிந்தனர். நமது அமைப்பின் சார்பில் முதுகலை ஆசிரியர்களின் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் கோரிக்கைகளை மதுரை மாவட்டத் தலைவர் சரவணமுருகன் ,மாநில துணைத்தலைவர் ராஜேந்திரன், மாவட்ட அமைப்பு செயலாளர் முருகன் மேலூர் கல்வி மாவட்டத் தலைவர் துரைராஜ் ஆகியோர் விளக்கிய போது

 

ஆகஸ்ட் 29ல் வேலூரில் நடந்த மாநில பொதுக்குழுக் கூட்டம்.செய்திகள்








Sunday 23 August 2015

மதுரை மாவட்டம் கலந்தாய்வு அனைத்து காலிப்பணியிடங்களும் காண்பிக்கப்பட்டன

மதுரை மாவட்டத்தில் முதுகலைஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு ஆகஸ்ட் 22ம் தேதி மற்றும் 23ம் தேதி  இளங்கோ மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. ஒய்வு மற்றும் பதவி உயர்வு காரணமாக  25க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள்  இருந்தன. 188 பேர் விண்ணப்பித்தனர் கலந்தாய்வில் அனைத்து காலிப்பணியிடங்களும் காண்பிக்கப்பட்டு நடத்தப்பட்டது. முதுகலை ஆசிரியர்கள் 31 பேருக்கு இடமாறுதல் ஆணை வழங்கப்பட்டது . இந்தாண்டு கலந்தாய்வு சிறப்பாக நடைபெற நடவடிக்கை எடுத்த பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் அவர்களுக்கும் முதன்மைக்கல்வி அதிகாரி ஆஞ்சலோ இருதயசாமி அவர்களுக்கும் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி  முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் தனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறது.

Saturday 15 August 2015

தமிழகம் முழுவதும் 431 பேர் தலைமையாசிரியர்களாக பதவி உயர்வு

தமிழகம் முழுவதும் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இணையவழி கலந்தாய்வில் 431 பேர் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களாக பதவி உயர்வு பெற்றனர்.
 பள்ளிக் கல்வித் துறையின் கீழ் காலியாக இருந்த 450 மேல்நிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியர் பணியிடங்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
 இந்தக் கலந்தாய்வில் பங்கேற்க முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள், உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களிலிருந்து பதவி உயர்வு முன்னுரிமைப் பட்டியலில் இடம்பெற்றிருந்தவர்கள் அழைக்கப்பட்டனர். கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டவர்களில் 19 பேர் பங்கேற்கவில்லை. இதையடுத்து 431 பேர் மேல்நிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியர்களாக பதவி உயர்வு பெற்றனர்.
 அடுத்ததாக, உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வும், சிறப்பாசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் மாறும் கலந்தாய்வு ஆகியவை ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளதாக பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் தெரிவித்தார்.
 பள்ளிக் கல்வி ஆசிரியர்கள், தலைமையாசிரியர்களுக்கான இடமாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு ஆகஸ்ட் 12-ஆம் தேதி தொடங்கியது.

மதுரையில் கலந்துகொண்ட  19 பேரில் 11முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் 2பேர் உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் மொத்தம் 13 பேர் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களாக பதவி உயர்வு பெற்றனர்.

Wednesday 12 August 2015

Sunday 2 August 2015

ஆகஸ்ட் 1 அன்று JACTTO அமைப்பின் சார்பில் நடைபெற்ற தொடர் முழக்க உண்ணாவிரதத்தின் போது நமது மாநிலத் தலைவர் ஆற்றிய உரை


புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆசிரியர்கள் நடத்திய போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் நேரில் ஆதரவு தெரிவித்தனர்.

சென்னையில் நேற்று ஆசிரியர்களின் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற எதிர்க்கட்சி தலைவர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததோடு இணைந்து போராட தயாராக இருப்பதாகவும் அறிவித்தனர்.
தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான 'ஜேக்டோ' சார்பில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே நடந்த உண்ணாவிரதத்தை தி.மு.க. பொருளாளர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். போராட்டத்தில் மாநிலம் முழுவதிலும் இருந்து வந்திருந்த ஆசிரியர்கள் பங்கேற்றனர்.ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலர் மல்லை சத்யா மாலையில் உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.
 


 

உண்ணாவிரத போராட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள் பேசியதாவது:
ஸ்டாலின் - தி.மு.க., இந்தப் போராட்டத்திற்கு என்னை அழைத்தால் உங்கள் கோரிக்கை சேரவேண்டிய இடத்தில் சேரும்; பரிகாரம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அழைத்துள்ளீர்கள்.இந்த ஆட்சியில் மக்கள் நலப் பணியாளர்கள் சாலைப் பணியாளர்கள் சத்துணவுப் பணியாளர்கள் மாற்றுத் திறனாளிகள் என பலரும் போராடி வருகின்றனர். எந்த போராட்டத்தையும் ஆட்சியாளர் கண்டு கொள்வதில்லை.உங்கள் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் அடுத்து வரும் தேர்தலில் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் உங்களின் போராட்டத்திற்கு உரிய மரியாதை மதிப்பு கிடைக்கும் என உறுதி அளிக்கிறேன்.

ரா.முத்தரசன் இந்திய கம்யூனிஸ்டு “ஆசிரியர்கள் யாருக்காகவும் காத்திருக்காமல் தங்கள் கோரிக்கைகளுக்காக ஒன்றாக இணைந்து தொடர்ந்து போராடவேண்டும்” என்றார்.

ஞானசேகரன் - த.மா.கா., ஆசிரியர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். ஆசிரியர்கள் கோரிக்கை நிறைவேற த.மா.கா. குரல் கொடுக்கும்.
ரங்கராஜன் - மா.கம்யூ., ஆசிரியர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நியாயமானவை; அவற்றை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். தற்போது ஆங்கில பள்ளி மோகம் உள்ளது. இதை தடுக்க அரசு அங்கன்வாடி மையங்களை முன் பருவ முதல் ஆண்டு முன் பருவ இரண்டாம் ஆண்டு என முதல் வகுப்புக்கு முந்தைய வகுப்புகள் நடத்தும் பள்ளிகளாக மாற்ற வேண்டும்.
ராமதாஸ் - பா.ம.க.,நாங்கள் ஆளுங்கட்சி அல்ல; ஆண்ட கட்சியும் அல்ல. ஆண்ட கட்சியாக இருந்தால் ஆட்சியில் இருந்த போது ஏன் செய்யவில்லை என கேட்பீர்கள். உங்கள் கோரிக்கையை ஆளுங்கட்சியும் ஆண்ட கட்சியும் நிறைவேற்றப் போவதில்லை.உங்கள் கோரிக்கை நிறைவேற வேண்டுமானால் மாற்றம் தேவை. நான் பிரசாரத்திற்காக இதை சொல்லவில்லை; உண்மையை சொல்கிறேன்.
மாற்றம் நடந்தால் உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் தீர்க்கப்படும். நீங்கள் நினைத்தால் மாற்றத்தை உருவாக்க முடியும். உங்கள் கோரிக்கைகள் நிறைவேற நீங்கள் எத்தகைய போராட்டத்தை தேர்வு செய்தாலும் எங்களுடைய முழு ஆதரவு உண்டு.
தொல்.திருமாவளவன் விடுதலை சிறுத்தைகள் : ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை தமிழக அரசு உடனடியாகக் களைய வேண்டும். மத்திய அரசின் பாடத்திட்டத்திலோ, ஆசிரியர்களுக்கான ஊதிய விகிதத்திலோ, எதிலும் முரண்பாடு இருக்கக் கூடாது. பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.
தமிழிசை - பா.ஜ.,அறிவுப் பசியை நீக்கும் ஆசிரியர்கள் பசியால் வாடக்கூடாது. நீங்கள் பசியால் வாடுவதை தமிழக அரசு வேண்டுமானால் பொறுத்துக் கொள்ளலாம்; எங்களால் பொறுத்துக் கொள்ள முடியாது.உங்கள் போராட்டம் அரசுக்கு ஒரு படிப்பினையை ஏற்படுத்தும். உங்கள் கோரிக்கை நிறைவேறும். அதற்கு உங்களுடன் சேர்ந்து குரல் கொடுக்க பா.ஜ. தயாராக உள்ளது.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க பொதுச் செயலர் தமிழ் செல்வி: 'ஜேக்டோ' அமைப்புடன் 'ஜியோ' அமைப்பும் இணைந்து விட்டது. அரசு ஊழியர்களும் போராட்டத்திற்கு தயாராகி வருகின்றனர். எனவே இதை பொது போராட்டமாக்க வேண்டுமா என முதல்வர் சிந்திக்க வேண்டும். உடனடியாக கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் ஊழியர்களின் ஊதியத்தில் இருந்து 10 சதவீதத் தொகையை பிடித்தனர்.அந்தத் தொகையுடன் மாநில அரசு 10 சதவீதத் தொகையை செலுத்த வேண்டும். ஆனால் அந்த பணத்தை தமிழக அரசு களவாடிக் கொண்டது. அந்த பணத்தை அரசு உடனடியாக திரும்பத் தரவேண்டும்.இவ்வாறு அவர்கள் பேசின
ர்.

MODEL OF ONLINE TRANSFER APPLICATION FORM



ஆசிரியர் பொது மாறுதல் :புதிய மாறுதல் விண்ணப்ப படிவம் 2015-16

ஆசிரியர்கள் மாறுதலுக்கு விண்ணப்பிக்க ஒரு வருடம் பணிபுரிந்திருந்தால் போதும் பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

பள்ளிக்கல்வி - 2015-16ஆம் கல்வியாண்டில் நகராட்சி / அரசு / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள்

பள்ளிக்கல்வி - தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிட மாறுதலுக்கான கால அட்டவணை வெளியீடு

மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணி மாறுதல் : 12.08.2015
மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு : 14.08.2015
உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணி மாறுதல் : 16.08.2015
உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு : 18.08.2015
முதுகலை ஆசிரியர் பணி மாறுதல் (மாவட்டத்திற்குள்) : 22.08.2015
முதுகலை ஆசிரியர் பணி மாறுதல் (மாவட்டம் விட்டு மாவட்டம்) : 23.08.2015
பட்டதாரி ஆசிரியர் பதவியிலிருந்து முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு : 24.08.2015
பட்டதாரி அசிரியர் பணி நிரவல் : 26.08.2015 முதல் 29.08.2015 வரை
இடைநிலை ஆசிரியர் / சிறப்பாசிரியர் பணி மாறுதல் (மாவட்டத்திற்குள்) : 12.08.2015
இடைநிலை ஆசிரியர் / சிறப்பாசிரியர் பணி மாறுதல் (மாவட்டம் விட்டு மாவட்டம்) : 16.08.2015