news

முதுகலை ஆசிரியர்க்காக போராடக்கூடிய ஒரே அமைப்பு TNHSPGTA ***** நமது சங்கத்தின் உறுப்பினர் ஆகுங்கள் ******சங்க செயல் பாடுகளை தெரிந்துகொள்ள மேல்நிலைக்குரல் படியுங்கள் ******தங்கள் பள்ளி நிகழ்வுகளை அமைப்போடு பகிர்ந்துகொள்ளுங்கள்*****அனைத்து முதுகலை ஆசிரியர்களின் பங்களிப்பே அமைப்பு வளர்ச்சிக்கு உதவும்

Tuesday 21 November 2017

அரசு பள்ளிகளில் 1 முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கான புதிய வரைவு பாடத்திட்டம்: முதல்வர் வெளியிட்டார்

 தமிழக அரசு பள்ளிகளில் ஒன்று முதல் பிளஸ் 2 வரை உள்ள வகுப்புகளுக்கான புதிய வரைவு பாடத்திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். தமிழக பள்ளி கல்வி துறையில் கடந்த 12 ஆண்டுகளாக பாடதிட்டம் மாற்றியமைக்கப்படவில்லை. இதையடுத்து புதிய பாடத்திட்டத்தை உருவாக்க முன்னாள் துணைவேந்தர் அனந்தகிருஷ்ணன் தலைமையில் வல்லுநர் குழு ஒன்றை அரசு அமைத்தது. அந்த குழு தமிழகத்தில் 5 இடங்களில் கருத்து கேட்பு கூட்டங்களை நடத்தியது. இதையடுத்து புதிய வரைவு பாடத்திட்டத்தை அக்குழு உருவாக்கி உள்ளது. வரைவு பாடத்திட்டம் 2 புத்தகங்களாக தயாரிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் இந்த புதிய வரைவு பாடதிட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டார். அப்போது, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், பள்ளிக் கல்வித்துறை செயலாளர் உதயசந்திரன், பள்ளிக் கல்வி துறை இயக்குநர் இளங்கோவன், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் அறிவொளி, பாடத்திட்ட தயாரிப்பு குழு தலைவரும் முன்னாள் துணைவேந்தருமான அனந்தகிருஷ்ணன், முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி, மற்றும் அந்த குழுவில் இடம் பெற்றுள்ள கல்வியாளர்கள் உடன் இருந்தனர். இதன் பின்னர் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டி:  பள்ளிக் கல்வியில் 1ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படுகிறது. அதற்காக அமைக்கப்பட்ட குழு கடந்த 4 மாதங்களில் இந்த பணியை முடித்துள்ளது.

 இக்குழுவினர் தமிழகத்தில் மதுரை, கோவை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், சென்னை ஆகிய இடங்களில் கருத்து கேட்பு கூட்டம் நடத்தினர். அங்கு தெரிவித்த கருத்துகளை பரிசீலித்து இப்போது புதிய வரைவு பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வரைவு பாடத்திட்டம் இணைய தளத்தில் வெளியிடப்படும். 15 நாட்களில் பொதுமக்கள், கல்வியாளர்கள் இது குறித்து கருத்து தெரிவிக்கலாம். அதற்கு பிறகு அந்த கருத்துகளை பரிசீலிக்க குழு அமைக்கப்பட்டு கருத்துகள் ஆய்வு செய்யப்படும். அதில் சிறந்த கருத்துகள் ஏற்கப்பட்டு தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் மூலம் சிறு புத்தக வடிவில் புதிய பாடத்திட்டம் உருவாக்கப்படும். அடுத்த  கல்வி ஆண்டில் 1, 2, 6, 9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் அமலுக்கு வரும்.

இந்த புதிய பாடத்திட்டத்தை உருவாக்க 3 ஆண்டுகள் இலக்கு வைக்கப்பட்டது. ஆனால் விரைவாக முடிக்க முடியும். மற்ற வகுப்புகளுக்கு 2019-2020 கல்வி ஆண்டில் அடுத்த பாடத்திட்டம் கொண்டு வரப்படும். மத்திய அரசு கொண்டுவரும் அனைத்து பொதுத் தேர்வுகளையும் மாணவர்கள் சந்திக்கும் வ கையில் பாடத்திட்டத்தில் கருத்துகள் சேர்க்கப்படும். அதை நடத்துகின்ற அளவுக்கு ஆசிரியர்களுக்கு பயிற்சியும் கையேடும் வழங்கப்படும்.  இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். 
புதிய பாடத்திட்டத்தைபார்வையிட கருத்துப்பதிவிட  இந்த இணைய முகவரிக்கு செல்லவும் 
http://tnscert.org/webapp2/tn17syllabus.aspx

Thursday 16 November 2017

JACTTO GEO கிராப் - CPS, இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு - உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு

இன்று காலை 10 மணியளவில் ஜாக்டோ-ஜியோ கிராப் மாநில உயர் மட்ட குழு கூட்டம் சென்னையில் உள்ள நமது மாஸ்டர் மாளிகையில் நடைபெற்றது.
அதில் இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு மற்றும் CPS களைதல் உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகள் பற்றி தீவிரமாக ஆலோசனை நடைபெற்று 6 முக்கிய தீர்மானங்களும், போராட்ட அறிவிப்புகளும் அறிவிக்கப்பட்டுள்ளது..

💪போராட்ட முடிவுகள்.
👉18.11.2017 ஜாக்டோ ஜியோ கிராப் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் 

👉 02.12.2017 மாவட்டத் தலைநகரங்களில் கோரிக்கை விளக்க கூட்டம்

👉 07.12.2017 மாவட்டத் தலைநகரங்களில் அடையாள உண்ணாவிரதம் 
👉 06.01.2018 சென்னையில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் 
உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன

Thursday 9 November 2017

மேல்நிலை முதலாம் ஆண்டு செய்முறைதேர்வு நடத்தத் அரசாணைகள்

பள்ளிக்கல்வி இணை இயக்குனர்கள் மாற்றம்

கள்ளர் சீரமைப்பு துறை இணை இயக்குனராக இருந்த குப்புசாமி, பள்ளிக்கல்வி பணியாளர் பிரிவு இணை இயக்குனராகவும், பள்ளிக்கல்வி, பணியாளர் பிரிவு இணை இயக்குனராக இருந்த சசிகலா, ஆசிரியர் தேர்வு வாரிய கூடுதல் உறுப்பினராகவும், ஆர்.எம்.எஸ்.ஏ. திட்ட இயக்கக இணை இயக்குனராக இருந்த குமார், கள்ளர் சீரமைப்பு துறை இணை இயக்குனராகவும்,  எஸ்.எஸ்.ஏ இயக்கக இணை இயக்குனராக இருந்த ஸ்ரீதேவி, தொடக்க கல்வி இயக்ககம், நிர்வாக பிரிவு இணை இயக்குனராகவும், ஆசிரியர் தேர்வு வாரிய கூடுதல் உறுப்பினராக இருந்த ஏ.எஸ்.ராதாகிருஷ்ணன், எஸ்.எஸ்.ஏ., இயக்கக இணை இயக்குனராகவும், தொடக்க கல்வி இயக்ககம், நிர்வாக பிரிவு இணை இயக்குனராக இருந்த நாகராஜ் முருகன், ஆர்.எம்.எஸ்.ஏ., திட்ட இயக்கக இணை இயக்குனராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Saturday 4 November 2017

 இன்று மதுரை மாவட்ட TNHSPGTA சார்பில் மாநில பொதுச்செயலாளர் பிரபாகரன் அவர்களின் தலைமையில் முதன்மைக்கல்வி அலுவலரை சந்தித்து மாவட்ட உள்ள பிரச்சினைகள் பற்றி 35 நிமிடம் பேசினோம்
1.தனியார்பள்ளிகளில் மாதம் முதல் தேதியில் சம்பளம் கிடைப்பதில்லை.பள்ளிகளில் சம்பள பில் தாமதமாக மாவட்டக்கல்வி அலுவலகத்தில் சமர்பிக்கப்படுவதும், சரியான நேரத்தில் சமர்பிக்கப்பட்டும் அலுவலகத்தில் தாமதப்படுவதும் விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது.  இனி பள்ளிகளில் ஒவ்வொரு மாதமும் 20 தேதிக்குள் பில் அனுப்பப்பட்டால் மாதம் முதல்தேதியில் சம்பளம் கிடைக்க உறுதி அளித்தார். இதில் ஏதேனும் குறைபாடுகள் வந்தால் எமது அமைப்பு கவனத்திற்கு கொண்டுவரவும்.
2. பதினொன்றாம் வகுப்புக்கு syllabus வருமுன் II இடைத்தேர்வு வினாத்தாள்  தயாரிக்கப்பட்டுவிட்டதால் syllabus ல் மாற்றம் உள்ளது.syllabus பள்ளிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டது. திங்கள்கிழமைக்குள் பள்ளிகளுக்கு அனுப்பப்படும் என உறுதி அளித்தார்.
3.பதினொன்றாம் வகுப்பு செய்முறைத்தேர்வுப் பற்றி விளக்கம் கேட்டபோது இணை இயக்குனர் தெரிவித்துள்ளபடி அடுத்தாண்டு 12வகுப்புடன் சேர்த்து நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.
4. பணிவரன்முறை ஆணை கிடைக்காமல் தகுதிகாண் பருவம் முடிக்க முடியாதவர்கள் ஆணைகளை CEO அலுவலகத்தில் கேட்டுப் பெற்றுக்கொள்ளலாம். இது சம்மந்தமாக பாதிப்பு இருந்தால்  எமது அமைப்பிடம் தெரிவிக்கவும்.
5. போட்டித்  தேர்வு சம்மந்தமாக பயிற்சி வகுப்புகள் அடுத்த மாதம் துவங்க உள்ளது. நமது அமைப்பு மாணவர்களுக்கு  சிறப்பாக கொண்டுசெல்ல உதவி செய்யும் என உறுதி அளிக்கப்பட்டது.


புதிய ஊதியம் சார்ந்து E pay roll பெறப்பட்டு விட்டது. Employe code (gpf )or (cps) கொடுத்தால் எல்லாம் வரும் அதில் நீங்கள் தயாராக உள்ள grade pay கொடுத்து option date கொடுத்தால் புதிய ஊதியம் வரும்.