news

முதுகலை ஆசிரியர்க்காக போராடக்கூடிய ஒரே அமைப்பு TNHSPGTA ***** நமது சங்கத்தின் உறுப்பினர் ஆகுங்கள் ******சங்க செயல் பாடுகளை தெரிந்துகொள்ள மேல்நிலைக்குரல் படியுங்கள் ******தங்கள் பள்ளி நிகழ்வுகளை அமைப்போடு பகிர்ந்துகொள்ளுங்கள்*****அனைத்து முதுகலை ஆசிரியர்களின் பங்களிப்பே அமைப்பு வளர்ச்சிக்கு உதவும்

Thursday 28 May 2015

பிளஸ்–2 விடைத்தாள் நகல் பெற பதிவிறக்கம் செய்யலாம் அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு

பிளஸ்–2 தேர்வில் இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் கணக்கு ஆகிய பாடங்களின் விடைத்தாள் நகல் பெற விண்ணப்பித்தவர்கள் இன்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்து உள்ளது.

விடைத்தாள் நகல்

அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–

மார்ச் 2015 மேல்நிலை தேர்வு எழுதி விடைத்தாள்களின் நகல்கோரி விண்ணப்பித்த தேர்வர்களில் இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் கணக்கு ஆகிய பாடங்களுக்கு விண்ணப்பித்த தேர்வர்களுக்கு இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணி முதல் scan.tndge.in என்ற இணையதளத்திற்கு சென்று தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியினை பதிவு செய்து தாங்கள் விண்ணப்பித்த பாடங்களுக்குரிய விடைத்தாள்களின் நகலினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

கடைசி தேதி

மற்ற பாடங்களுக்கான விடைத்தாள் நகலினை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டிய தேதி பின்னர் அறிவிக்கப்படும். விடைத்தாள்களின் நகலினை பதிவிறக்கம் செய்தபிறகு மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்பினால் இதே இணையதள முகவரியில் Application for retotalling, revaluation என்ற தலைப்பினை ‘கிளிக்’ செய்து விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

இந்த விண்ணப்ப படிவத்தினை பூர்த்திசெய்து 2 நகல்கள் எடுத்து அடுத்த மாதம் (ஜூன்) 1–ந் தேதி மாலை 5 மணிக்குள் உரிய முதன்மைக்கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டுக்கான கட்டணத்தினை முதன்மைக்கல்வி அலுவலகத்தில் பணமாக செலுத்த வேண்டும்.

விடைத்தாள் நகல், மறுமதிப்பீடு தொடர்பாக தெளிவுபடுத்திக்கொள்ள 8012594109, 119, 124, 126 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்.
பதிலிறக்கம் செய்ய இங்கே அழுத்தவும்

Tuesday 26 May 2015

திட்டமிட்டபடி ஜுன் 1-ம் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என சென்னையில் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர் சபீதா தகவல்

திட்டமிட்டபடி ஜுன் 1-ம் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என சென்னையில் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர் சபீதா தெரிவித்துள்ளார். கொளுத்தும் வெயிலால் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதில் மாற்றமில்லை என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் சென்னை உள்பட 10 மாவட்டத்தில் 100 டிகிரிக்கு மேல் வெயில் வறுத்தெடுக்கிறது மேலும் சென்னையில் நேற்று மட்டும் 108.3 டிகிரி வெயில் கொளுத்தியதால் மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

வறுத்தெடுக்கம் வெயிலால் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகும் என பெற்றோர்கள் எதிர்பார்த்தனர். புதுச்சேரியில் சுட்டெரிக்கும் வெயிலை அடுத்து பள்ளிதிறப்பு ஜுன் 12-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Thursday 21 May 2015

அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் ஜூன் 15 முதல் 11-ம் வகுப்புகள் தொடங்கப்பட வேண்டும். அரசு உத்தரவு

அரசுப் பள்ளிகளில் 11-ம் வகுப்பில் அதிகளவு மாணவர் களைச் சேர்க்க நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
2015-16-ம் கல்வி ஆண்டில் 11-ம் வகுப்பு மாணவர் சேர்க்கை தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும், மாவட்ட கல்வி அதிகாரி களுக்கும் அனுப்பியுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் விவரம் வருமாறு:-
10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவ, மாணவிகளையும் உடனடியாக பள்ளியில் சேர்க்க வேண்டும். அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் ஜூன் 15 முதல் 11-ம் வகுப்புகள் தொடங்கப்பட வேண்டும்.
தங்கள் பள்ளிக்கு அருகில் உள்ள உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுடன் தொடர்பு கொண்டு அந்த பள்ளியில் 10-ம் வகுப்பு முடித்த அனைத்து மாணவர்களையும் 11-ம் வகுப்பில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிக அளவில் மாணவர்கள் சேர விருப்பம் தெரிவிக்கும் பாடப் பிரிவினை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

துறைத் தேர்வுகள் மே 2015 நுழைவுச்சீட்டு வெளியீடு

மாநில அளவில் சாதனை புரிந்த அரசு பள்ளி மாணவ மாணவியர்,பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்கள்

அரசு பள்ளி மாணவ மாணவியர் 19பேர் மாநில அளவில் முதல் 3இடங்களை பிடித்துள்ளனர்.
மாநில அளவில்
முதல் இடம்-3பேர்
2-ம் இடம்-6பேர்
3-ம் இடம்-10பேர்.
இவர்களுக்கு வாழ்த்துக்கள்.
மாநிலத்தில் இரண்டாவது இடம்: (498/500)

1.மானசா.டி, மதுரை மாவட்டம்- - மேலூர் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி
மாணவிக்கும் பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்கள்

10ம் வகுப்பு தேர்வு: 92.9 சதவீத தேர்ச்சி

10ம் வகுப்பு தேர்வு முடிகளை வௌியிட்டு தேர்வுத்துறை இயக்குனர் தேவராஜன் கூறியதாதவது: இந்த ஆண்டு மொத்தம் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளில் 92.9 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கடந்த ஆண்டு இந்த தேர்ச்சி விகிதம் 90.7 என்ற அளவில் இருந்தது. தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியருக்கு பாராட்டுக்கள்,' என்றார்
.

Tuesday 19 May 2015

2015-2016ஆம் கல்வி ஆண்டில் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த பள்ளிகல்வி இயக்குநரின் வழிகாட்டு நெறிமுறைகள்

பள்ளிக் கல்வித் துறையில் 2015-2016ஆம் கல்வி ஆண்டில் கீழ்க் கண்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
1.01.06.2015 அன்று பள்ளிகள் திறக்கப்படுவதற்கு முன்பாகவே ஆசிரியர்களின் பாட வேளை  தயார் செய்து வைக்க வேண்டும்.
2.பள்ளித் திறக்கும் நாள் முதல் அன்றாடம் அனைத்து ஆசிரியர்களும் காலந்தவறாமல் பள்ளிக்கு வருவதை உறுதி செய்தல் வேண்டும்.
3.ஆங்கில மொழிப் பாடத்திற்கான குறுந்தகடு பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது,  இதனை மாணவர்கள் முழுமையாக பயன்படுத்தும் வகையில் ஆசிரியர்கட்கு உரிய அறிவுரை வழங்க வேண்டும்.
4.குறைந்த பட்ச கற்றல் அளவின் (Minimum Level of Learning)  அடைவிற்காக வழங்கப்பட்டுள்ள புத்தகங்களை பயன்படுத்தி அதன் அடிப்படையில் பாட போதனை மேற்கொள்ள தலைமை ஆசிரியர்கள் முனைப்புடன் செயல்பட வேண்டும்.
5.பாடவாரியாக வழங்கப்பட்டுள்ள குறுந்தகடுகளை அந்தந்த பாடங்கள் நடத்தும்போது முறையாக பயன்படுத்தி, மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும்

18.5.15 அன்று திருச்சியில் நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் தலைமை ஆசிரியர்கள் பங்கேற்ற நிகழ்வு



Friday 15 May 2015

தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்துப் பள்ளிக்கூடங்களும் எந்த வித புகாருக்கும் இடம் அளிக்காமல் சிறப்பாக நடத்தவேண்டும்; முதன்மை செயலாளர் த.சபீதா

தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்துப் பள்ளிக்கூடங்களும் எந்த வித புகாருக்கும் இடம் அளிக்காமல் சிறப்பாக நடத்தவேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா அறிவுரை வழங்கினார்.
கல்வி அதிகாரிகள் கூட்டம்
வருகிற ஜூன் 1-ந்தேதி தமிழ்நாடு முழுவதும் அனைத்து பள்ளிக்கூடங்களும் திறக்கப்பட உள்ளன. பள்ளிக்கூடங்கள் திறக்கும் முன்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளையும், அனைத்து மாவட்ட மெட்ரிகுலேசன் ஆய்வாளர்களையும் அழைத்து சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் நேற்று கூட்டம் நடத்தப்பட்டது.
கூட்டம் முடிந்ததும் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா நிருபர்களிடம் கூறியதாவது:-
ஆய்வு நடத்தவேண்டும்
2015-2016-ம் கல்வி ஆண்டு ஜூன் 1-ந்தேதி தொடங்க உள்ளது. அன்று அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு விலை இல்லா பாடப்புத்தகங்கள், விலை இல்லா நோட்டுபுத்தகங்கள், விலை இல்லா சீருடைகள் 2 செட், விலையில்லா அட்லஸ் ஆகியவை வழங்கப்பட உள்ளன. இவை வழங்கப்படும்போது சரியாக வழங்கவேண்டும். வழங்குவதில் எந்தவித குறையும் இருக்கக்கூடாது.
பள்ளிக்கூடங்களில் பாழடைந்த கிணறு, பழைய பள்ளிக்கட்டிடம், பழுதடைந்த கழிவறை ஆகியவை இருக்கக்கூடாது. அவை பழுதுபார்த்து பயன் உள்ள வகையில் இருக்க அனைத்து ஏற்பாடும் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளன.
இருப்பினும் அவை சரியாக இருக்கின்றனவா என்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளும் அந்தந்த மாவட்டங்களில் உள்ள பள்ளிக்கூடங்களை அவை திறக்கும் முன்பாக ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கவேண்டும். பெரும்பாலான பள்ளிகளில் அனைத்தும் சரி செய்யப்பட்டு இருக்கும் என்று நினைக்கிறேன். மேலும் மாணவர் சேர்க்கையும் சிறப்பாக இருக்க ஏற்பாடு செய்யவேண்டும்.
புகாருக்கு இடம் அளிக்காமல்...
கடந்த வருடத்தை விட பள்ளிக்கூடங்களில் பிளஸ்-2 தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளது. இருப்பினும் தேர்ச்சி சதவீதம் குறைந்த பள்ளிகளில் ஏன், எப்படி குறைந்தது என்று ஆராய்ந்து அதற்கான காரணத்தை கண்டுபிடித்து வரும் கல்வி ஆண்டில் தேர்ச்சியை அதிகரிக்க முதன்மை கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும். இதற்காக மாவட்ட அளவில் கூட்டம் நடத்தி பள்ளித்தலைமை ஆசிரியர்களை அழைத்து குறைகள் இருந்தால் அவற்றை போக்கவேண்டும். மொத்தத்தில் எந்தவித புகாருக்கும் இடம் அளிக்காமல் பள்ளிக்கூடங்களை தலைமை ஆசிரியர்கள் சிறப்பாக நடத்தவேண்டும்.
இவ்வாறு த.சபீதா கூறினார்.

ஆய்வக உதவியாளர் தேர்வு

முன்னதாக கூட்டத்தில் அரசு தேர்வுகள் இயக்குனர் கு.தேவராஜன் கலந்துகொண்டு பேசினார். அவர் பேசுகையில் ‘பள்ளிக்கூட ஆய்வக உதவியாளர் தேர்வு மே 31-ந்தேதி தமிழ்நாடு முழுவதும் நடைபெற உள்ளது. அந்த தேர்வை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளும் அந்தந்த மாவட்ட கலெக்டர்களின் ஆலோசனையை பெற்று சிறப்பாக தேர்வை நடத்த அனைத்து ஏற்பாடுகளையும் செய்யுங்கள்’ என்றார்.

Thursday 14 May 2015

இன்று முதல் தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்

பிளஸ் 2 மாணவர்கள் வியாழக்கிழமை (மே 14) முதல் தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை அந்தந்தப் பள்ளிகளில் பெற்றுக் கொள்ளலாம்.
 உயர் கல்வி நிறுவனங்களில் சேர விரும்பும் மாணவர்களுக்காக இந்த ஆண்டு முதல் முறையாக தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுகிறது.
 இந்த மதிப்பெண் சான்றிதழ் 90 நாள்களுக்குச் செல்லத்தக்கதாக இருக்கும்.
 பள்ளி தலைமை ஆசிரியர்களால் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டு இந்த தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
 தனித் தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மையத்தின் தலைமை ஆசிரியர்களிடம் இருந்து தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
 இணையதளத்தில் இருந்து நேரடி பதிவிறக்கம்: அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் www.tndge.in  என்ற இணையதளத்தில் பிறந்த தேதி, பதிவு எண் ஆகியவற்றைப் பதிவு செய்து மாணவர்களே நேரடியாக தங்களது தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்தும் கொள்ளலாம்.

Sunday 10 May 2015

நமது அமைப்பின் சார்பில் வாழ்த்துகள்


நமது மாநில மகிளிரணி இணைச் செயலர் திருமதி வி.விமலாவிடம் பயின்ற மாணவி பி.சங்கீதா அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி திருமங்கலம்  மதுரை வரலாறு பாடத்தில் 200/200 மதிப்பெண் பெற்று சாதனை புரிந்துள்ளார் அவருக்கு நமது அமைப்பின் சார்பில் வாழ்த்துகள்

Saturday 9 May 2015

196 அரசு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி: 3 மாணவியர் 1,172 மதிப்பெண்

          பிளஸ் 2 தேர்வில், அரசு பள்ளிகளில், 196 பள்ளிகள், 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. மூன்று மாணவியர், 1,172 மதிப்பெண் பெற்று, அரசு பள்ளிகள் பிரிவில், மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளனர்.

          பிளஸ் 2 தேர்வில் தமிழகம் முழுவதும், 90.6 சதவீத மாணவ, மாணவியர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில், அரசு பள்ளிகள் மெட்ரிக் பள்ளிகளை விட, 6 சதவீதம் குறைவாக, 84.26 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. பள்ளிக் கல்வித்துறை நேரடி கட்டுப்பாட்டில், 2,700 பள்ளிகள் உள்ளன. 3 லட்சத்து, 44 ஆயிரத்து, 189 மாணவ, மாணவியர் தேர்வு எழுதினர். இதில், 79.11 சதவீத மாணவர்; 88.30 சதவீத மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். சென்னை, செங்குன்றம் பெண்கள் பள்ளி மாணவி ராதா, சென்னை, அசோக் நகர் மகளிர் பள்ளி மாணவி ஏஞ்சல் மற்றும் கோவை அனையூர் அரசுப் பள்ளி மாணவி மல்லிகா அர்ஜுனன் ஆகியோர், 1,172 மதிப்பெண் பெற்று, அரசுப் பள்ளிகள் பிரிவில், மாநிலத்தில் முதலிடத்தை பெற்றுள்ளனர். 
 2012ல், 41 பள்ளிகள்; 
2013ல் 100 பள்ளிகள்; 
2014ல், 113 பள்ளிகள், 
இந்த ஆண்டு, 196 பள்ளிகள், 100 சதவீத தேர்ச்சி அடைந்துள்ளதாக, பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Friday 8 May 2015

பிளஸ் 2 பொதுத் தேர்வில் மதுரை மாவட்டம் 92.87 சதவீதம் தேர்ச்சியைப் பெற்றுள்ளது. ஆறு அரசுப் பள்ளிகள் உள்பட 69 பள்ளிகள் நூறு சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளன.

மாவட்டத்தில் 276 மேல்நிலைப் பள்ளிகளில் 37 ஆயிரத்து 143 மாணவர்கள் பிளஸ் 2 தேர்வு எழுதினர். இவர்களில் 34 ஆயிரத்து 495 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 92.87 சதவீதமாகும். இது கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதத்தைவிட 0.53 சதவீதம் அதிகம். மதுரை கல்வி மாவட்டம் 92.99 சதவீத தேர்ச்சி, மேலூர் கல்வி மாவட்டம் 91.69 சதவீத தேர்ச்சி, உசிலம்பட்டி கல்வி மாவட்டம் 94.52 சதவீத தேர்ச்சியைப் பெற்றுள்ளன.

 நூறு சதவீத தேர்ச்சி: மதுரை மாவட்டத்தில் 6 அரசு மேல்நிலைப் பள்ளிகள் (மதுரை ஒத்தக்கடைபெண்கள் மேல்நிலைப்பள்ளி , இ.மலம்பட்டி, எழுமலை(ஆண்கள்), பி.அம்மாபட்டி, செங்கப்படை, தனியாமங்கலம் )நூறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.

 7 அரசு உதவிபெறும் பள்ளிகள்: டி.கல்லுப்பட்டி காந்திநிகேதன், தெற்குவாசல் நாடார் மேல்நிலைப்பள்ளி, திருமங்கலம் பி.கே.என் மெட்ரிக் பள்ளி, நாகமலைபுதுக்கோட்டை சிறுமலர் பள்ளி, பாப்பநாயக்கன்பட்டி கந்தசாமி வித்யாலயா பள்ளி, செயின்ட் ஜோசப் பெண்கள் பள்ளி, தெப்பக்குளம் தியாகராசர் பள்ளி., மற்றும் சுந்தர்ராஜன்பட்டி பார்வையற்றோர் பள்ளி உள்பட மொத்தம் 69 பள்ளிகள் நூறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.

 சி.இ.ஓ.ஏ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் ஆர்.சந்தோஷ் மாவட்ட அளவில் முதலிடத்தையும், செயின்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி எஸ்.அட்சயா இரண்டாம் இடத்தையும், சி.இ.ஓ.ஏ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் மற்றொரு மாணவர் வி.ஜோதிசரண் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.

Wednesday 6 May 2015

மே 14ம் தேதி முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்

தேர்வுத் துறை இயக்குனர் தேவராஜன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:தேர்வர்கள் தங்கள் பதிவெண், பிறந்த தேதி, மாதம், ஆண்டு விவரத்தை பதிவு செய்து, தேர்வு முடிவுகளை பாட வாரியாக மதிப்பெண்களுடன், குறிப்பிட்ட இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம். மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் இயங்கும், தேசிய தகவல் மையங்கள், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும், கட்டணம் இன்றி, தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்கள், தங்கள் பள்ளிகள் மூலமும் மதிப்பெண்களுடன் முடிவுகளை அறியலாம்.இந்த ஆண்டு, தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் முதன்முறையாக அறிமுகமாகிறது. தலைமை ஆசிரியரால் பதிவிறக்கம் செய்யப்பட்ட தற்காலிக மதிப்பெண் சான்றிதழை, தங்கள் பள்ளிகளில், வரும் 14ம் தேதி முதல், மாணவர்கள் பெற்றுக் கொள்ளலாம
தனித்தேர்வர்கள், தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையத்தின், தலைமை ஆசிரியர் மூலம் பதிவிறக்கம் செய்து பெறலாம். மேலும், பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்களுக்கு, தற்காலிக மதிப்பெண் தேவைப்பட்டால், வரும் 18ம் தேதி முதல், www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில், தங்கள் பிறந்த தேதி, பதிவெண் ஆகிய விவரங்களை அளித்து, தாங்களே பதிவிறக்கம் செய்யலாம்.இவ்வாறு, தேர்வுத் துறை இயக்குனர் அறிவித்து உள்ளார்.
இணையதள முகவரி 
www.tnresults.nic. in
www.dge1.tn.nic.in
www.dge2.tn.nic.in
www.dge3.tn.nic.in

விடைத்தாள் நகல், மறுகூட்டலுக்குமே 8ம் தேதி முதல் விண்ணப்பம்

தேர்வுத் துறை இயக்குனர் தேவராஜன் வெளியிட்ட அறிவிப்பு: விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு, மாணவர்கள், தாங்கள் பயின்ற பள்ளிகள் மூலமும், தனித்தேர்வர்கள், தேர்வு மையங்கள் மூலமும் விண்ணப்பிக்கலாம்.
*வரும் 8ம் தேதி முதல், மே 14 வரை (ஞாயிற்றுக் கிழமை தவிர) விண்ணப்பிக்கலாம்.
*விடைத்தாள் நகல் பெற்றவர்கள் மட்டுமே, விடைத்தாள் மறுமதிப்பீடு கோரி விண்ணப்பிக்க முடியும்.
*விடைத்தாள் நகல் கேட்போர், அதே பாடத்துக்கு, மதிப்பெண் மறுகூட்டலுக்கு தற்போது விண்ணப்பிக்கக் கூடாது; விடைத்தாள் நகல் பெற்ற பின், அவர்கள் மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீடுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு தரப்படும்.
*விடைத்தாள் நகல் பெற, மொழிப்பாடங்களுக்கு தலா, 550 ரூபாய்; மற்ற பாடங்களுக்கு தலா, 275 ரூபாய் கட்டணம்.
*மறுகூட்டலுக்கு மொழிப்பாடங்கள் மற்றும் உயிரியலுக்கு தலா, 305 ரூபாய்; மற்ற பாடங்களுக்கு, தலா, 205 ரூபாய் கட்டணம்.
இந்த கட்டணத்தை, விண்ணப்பிக்க உள்ள பள்ளியிலேயே ரொக்கமாக செலுத்த வேண்டும்.
விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும்போது வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டை, தேர்வர்கள் பத்திரமாக வைத்து இருக்க வேண்டும்; அதில் உள்ள விண்ணப்ப எண்ணை பயன்படுத்தியே, விடைத்தாள் நகலை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்யவும், மறுகூட்டல் முடிவுகளை அறிந்து கொள்ளவும் முடியும்.
விடைத்தாள் நகலை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளும் தேதி மற்றும் இணையதள முகவரி பின் வெளியிடப்படும்.
பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெறாதோருக்கான, சிறப்புத் துணைத் தேர்வு, ஜூன் இறுதியில் நடக்கும். இதற்கு, மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலும், தனித்தேர்வர்கள் தேர்வெழுதிய மையங்களிலும், மே 15 முதல் 20ம் தேதி வரை, தங்கள் பெயரை பதிவு செய்யலாம்.
தேர்வு எழுத விரும்பும் பாடங்களுக்கு, உரிய தேர்வுக் கட்டணத்தை செலுத்தி, தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளலாம்; இதற்கு தனி விண்ணப்பம் கிடையாது. பிளஸ் 2 தேர்வில், ஒவ்வொரு பாடத்துக்கும், 50 ரூபாய் தேர்வுக் கட்டணம்; 35 ரூபாய் இதரக் கட்டணத்தை, சம்பந்தப்பட்ட பள்ளிகளில் ரொக்கமாக செலுத்த வேண்டும்.
தேர்வுக் கட்டணம் தவிர, பதிவுக் கட்ட ணமாக, 50 ரூபாய் செலுத்த வேண்டும்.இவ்வாறு, தேர்வுத் துறை அறிவித்து உள்ளது.

பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை வெளியீடு

தமிழகம், புதுவையில் 8 லட்சத்து 86 ஆயிரம் பேர் எழுதிய பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை (மே 7) காலை 10 மணிக்கு வெளியிடப்படுகின்றன.
 பிளஸ் 2 தேர்வு மார்ச் 5 முதல் 31-ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. மாணவர்கள் தங்களது பதிவு எண், பிறந்த தேதியைப் பதிவு செய்து தேர்வு முடிவுகளை மதிப்பெண்ணுடன் இணையதளங்களில் அறிந்து கொள்ளலாம்.
 தேர்வு முடிவுகளை அறிவதற்கான இணையதளங்கள்:

www.tnresults.nic.in, 

www.dge1.tn.nic.in,

www.dge2.tn.nic.in, 

www.dge3.tn.nic.in

 ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
 ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் உள்ள தேசிய தகவலியல் மையங்களிலும், அனைத்து மைய, கிளை நூலகங்களிலும் கட்டணம் இன்றி முடிவுகளை அறிந்துகொள்ளலாம். மாணவர்கள் தங்களது பள்ளிகளிலேயே தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது
.