news

முதுகலை ஆசிரியர்க்காக போராடக்கூடிய ஒரே அமைப்பு TNHSPGTA ***** நமது சங்கத்தின் உறுப்பினர் ஆகுங்கள் ******சங்க செயல் பாடுகளை தெரிந்துகொள்ள மேல்நிலைக்குரல் படியுங்கள் ******தங்கள் பள்ளி நிகழ்வுகளை அமைப்போடு பகிர்ந்துகொள்ளுங்கள்*****அனைத்து முதுகலை ஆசிரியர்களின் பங்களிப்பே அமைப்பு வளர்ச்சிக்கு உதவும்

Wednesday 21 October 2015

ஜேக்டோ போராட்டத்தின் தற்போதைய நிலை

ஆசிரியர்களுக்கு சம்பளம் 'கட்- தினமலர் செய்தி
 
ஆசிரியர் சங்கங்களின் கூட்டுக்குழுவான, 'ஜாக்டோ' சார்பில், 8ம் தேதி, வேலைநிறுத்த போராட்டம் நடந்தது; 1.5 லட்சம் ஆசிரியர்கள் பங்கேற்றனர்; 50 ஆயிரம் பள்ளிகளில், வகுப்புகள் நடக்கவில்லை.போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள், விடுப்பு எடுத்தனர். சில ஆசிரியர்கள், அனுமதி பெற்று போராட்டத்தில் பங்கேற்றனர். 

பெரும்பாலானோர் விடுப்பு கடிதமும் அளிக்காமல், பள்ளிக்கும் செல்லாமல் போராட்டத்தில் பங்கேற்றனர்.இதில், விடுப்பு கடிதம் கொடுக்காத ஆசிரியர்களுக்கு மட்டும், ஒருநாள் சம்பளம் பிடித்தம் செய்ய, கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது.
நமது சிந்தனைக்கு .....

ஜேக்டோ போராட்டத்தின் தற்போதைய நிலை:


ஆசிரியர்களின் அக்டோபர்- 8 , போராட்டத்தினால் அதிர்ந்து போயிருக்கும் அரசுவேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ஆசிரியர்களின் ஊதியம் பிடித்தம் செய்யப்பட வேண்டும் என்ற அரசு விதியின் படி,

ஊதியத்தை பிடித்தம் செய்வதற்குக் கூட யோசனையில் உள்ளது.இதுவே நமக்கு ஒரு வெற்றிதான்.

வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள், ஊதியத்தை இழப்பதும் பிறகு பெற்றுக் கொள்வதும் போராட்ட வரலாறு.
தற்போதைய சூழ்நிலையில் அரசு , ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்தில்(அதாவது ஆசிரியர்களின் பலத்தை அறிந்ததால்) இருப்பதால்,
நமது பிரதானமான நிதி சார்ந்த கோரிக்கைகளை நிறைவேற்ற முனைப்பு காட்டி வருகிறது.

நிதி சார்ந்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் நிதிச்சுமையும் நிதிப்பற்றாக்குறையும் அதிகமாக உள்ளதாகத் தெரிகிறது.
ஆனால் நமது கோரிக்கைகள் நியாயமானதாக இருப்பதால் நாம் பின் வாங்கத் தேவையில்லை.
ஆசிரியர்கள் எவரும் நமது கோரிக்கைகள் நிறைவேற்றப் படுமா என்று குழப்பம் அடையத் தேவையில்லை.போராடாமல் எதுவும் கிடைக்காது.தொடர்ந்து போராடினால் தான் நமது கோரிக்கைகளில் ஓரளவேனும் பெற்றுக் கொள்ள முடியும்.
குறிப்பாக .நி.ஆசிரியர்கள் இதில் தங்களை முழுவதுமாக அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும்.ஏனெனில் பெரும்பாலான நிதி சார்ந்த கோரிக்கைகள் அவர்களுடையதாகவே உள்ளது.

ஆகவே ஜேக்டோ எடுக்கும் எந்த ஒரு முடிவுக்கும் ஒத்துழைப்பு நல்க வேண்டியது நம் ஒவ்வொருவருடைய கடமையாகும்.