news

முதுகலை ஆசிரியர்க்காக போராடக்கூடிய ஒரே அமைப்பு TNHSPGTA ***** நமது சங்கத்தின் உறுப்பினர் ஆகுங்கள் ******சங்க செயல் பாடுகளை தெரிந்துகொள்ள மேல்நிலைக்குரல் படியுங்கள் ******தங்கள் பள்ளி நிகழ்வுகளை அமைப்போடு பகிர்ந்துகொள்ளுங்கள்*****அனைத்து முதுகலை ஆசிரியர்களின் பங்களிப்பே அமைப்பு வளர்ச்சிக்கு உதவும்

Tuesday 27 October 2015

மாண்புமிகு.தமிழக முதல்வர் அவர்களின் கவனத்தினை ஈர்த்திட - துறைமாறுதல் உள்ளிட்ட கள்ளர் சீரமைப்பு பள்ளிகளின் ஏழு அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டி மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்



            தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் கள்ளர் சீரமைப்பு கூட்டு நடவடிக்கைக் குழுவின் சார்பில் கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் நீண்ட காலமாக நிறைவேற்றப்படாத  ஏழு  அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டி மாண்புமிகு.தமிழக முதல்வர் அவர்களின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் கீழ்க்காணும் விபரப்படி நடைபெற உள்ளது என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம். அனைவரும் தவறாது கலந்து கொள்ளும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

நாள்:    04.11.2015 (புதன்கிழமை)                             
நேரம்:  மாலை 05.00 மணி
இடம்: பழங்காநத்தம் நடராஜ் திரையரங்கம் அருகில் , மதுரை.
ஏழு  அம்ச கோரிக்கைகள் :
1.            கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் பணிபுரியும் முதுகலைப் பட்டதாரி மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு நீண்ட காலமாக இருந்து வரும் துறைமாறுதல் பிரச்சினைக்குரியத் தீர்வாக பள்ளிக் கல்வித் துறையின் கீழ் உள்ள பள்ளிகளுக்கு (ஆண்டுதோறும் பணிமாறுதல் பெறும் வகையில்)  ஆண்டுதோறும் துறைமாறுதல் பெறும் வகையில் ஒரு நிரந்தர தீர்வு ஏற்படுத்தித் தர வேண்டுதல்  . . .
2.            பள்ளிக் கல்வித் துறையால், துறைமாறுதல் அரசாணை எண்.86, நாள் 02.03.2011-ல் வெளியிடப்பட்டு அனைவருக்கும் பணிமாறுதல் உத்தரவு வழங்கப்பட்டு, விடுவிக்கப்பட்ட நிலையில் துறைமாறுதலில் இன்று வரை கள்ளர் சீரமைப்பில் பணிமாறுதல் உத்தரவு வழங்கப்படாத, விடுவிக்கப்படாத 8 ஆசிரியர்களை முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களாகவே துறைமாறுதல் வழங்கிட வேண்டுதல் . . .
3.            மாண்புமிகு.தமிழக முதல்வர் அவர்களால் காணொளிக் காட்சி மூலம் திறந்து வைத்து 5 மாதங்களாக நிரந்தர ஆசிரியர்கள் இன்றிச் செயல்பட்டு வரும் மதுரை மாவட்டம், செக்கானுhரணி, அரசு கள்ளர் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு நிரந்தர ஆசிரியர் பணியிடங்களுக்கான அரசாணையினை விரைவில் வெளியிட்டு அனைத்து பணியிடங்களையும்  கலந்தாய்வு முறைப்படி  நிரப்பிட வேண்டுதல் . . .
4.            கள்ளர் சீரமைப்பு பள்ளிகளுக்கு இரவு நேரக் காவலர், பகல் நேரக் காவலர், உடற்கல்வி ஆசிரியர், கணிணி பயிற்றுநர், கைத்தொழில் ஆசிரியர், ஓவிய ஆசிரியர், யோகா ஆசிரியர், தையல் ஆசிரியர், துப்புரவாளர், இளநிலை உதவியாளர், பதிவுறு எழுத்தர், அலுவலக உதவியாளர், தோட்டக்காரர் போன்ற அனைத்து பணியிடங்களையும் உருவாக்கி, நிரந்தமாக நியமித்திட வேண்டுதல் . . .
5.            கள்ளர் சீரமைப்பில் உள்ள அனைத்து மேல்நிலைப் பள்ளிகளுக்கும் 9 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள், 11, 12-ஆம் வகுப்பினைச் சேர்த்து மாணவர்களின் எண்ணிக்கை மொத்தம் 160-க்கு மேல் இருந்தால் பாட வாரியாக கூடுதல் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பிட வேண்டுதல் . . .
6.            பிப்ரவரி 2013-ல் புதிதாகப் பணியேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவுற்ற முதுகலை ஆசிரியர்களுக்கும், 06.08.2014-ல் பதவி உயர்வில் பணியேற்று ஓராண்டு நிறைவுற்ற முதுகலை ஆசிரியர்களுக்கும் பணிவரன்முறை/தகுதிகாண் பருவம் முடித்த உத்தரவுகளை வழங்கிட வேண்டுதல் . . .
7.            ஆசிரியர்களுக்கு பணிப்பாதுகாப்பு வழங்கிட ஒரு குழு, மாணவர்களை நல்வழிப்படுத்த ஒரு குழு, மீண்டும் மீண்டும் தவறு செய்யும் மாணவர்களை கண்டிக்க மற்றும் தண்டிக்க ஒரு குழு, நுhறு சதவிகித தேர்ச்சிக்கு ஒரு குழு, அதிக மதிப்பெண் பெற வைக்க ஒரு குழு ஆகியன ஏற்படுத்தி தர வேண்டுதல்