news

முதுகலை ஆசிரியர்க்காக போராடக்கூடிய ஒரே அமைப்பு TNHSPGTA ***** நமது சங்கத்தின் உறுப்பினர் ஆகுங்கள் ******சங்க செயல் பாடுகளை தெரிந்துகொள்ள மேல்நிலைக்குரல் படியுங்கள் ******தங்கள் பள்ளி நிகழ்வுகளை அமைப்போடு பகிர்ந்துகொள்ளுங்கள்*****அனைத்து முதுகலை ஆசிரியர்களின் பங்களிப்பே அமைப்பு வளர்ச்சிக்கு உதவும்

Thursday 15 October 2015

வி.ஐ.பி., வரவேற்பில் மாணவர்களை ஈடுபடுத்த மாட்டோம்: அரசு உறுதி

'வி.ஐ.பி.,க்கள் வரவேற்பில் மாணவர்களை ஈடுபடுத்தக்கூடாது,' என, அனைத்துப் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியதை பதிவு செய்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, வழக்கை முடித்தது.மதுரை விஜயகுமார் தாக்கல் செய்த பொதுநல மனுமதுரை காமராஜ் பல்கலை துணைவேந்தராக இருந்த கல்யாணி பணி நியமனம் செல்லாது என, உயர்
நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு, உச்சநீதிமன்றம் தடை விதித்தது. கல்யாணிக்கு 2014 ஜூலை 7 ல் பல்கலை வளாகத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பல்கலை பள்ளி மாணவர்களை வெயிலில் காத்திருக்க வைத்தனர். அவர்கள் மலர்துாவி, கல்யாணியை வரவேற்றனர்.
அனைத்துப் பள்ளிகளைச் சேர்ந்த 14 வயதிற்குட்பட்ட குழந்தைகள், பொது நிகழ்ச்சிகள் மற்றும் மிக முக்கிய பிரமுகர்கள் (வி.வி.ஐ.பி.,) வரவேற்பில் பங்கேற்க தடை விதிக்க வேண்டும். இவ்வாறு, 

விஜயகுமார் மனு செய்திருந்தார்.நீதிபதிகள்,'வி.ஐ.பி.,க்கள் வரவேற்பில் மாணவர்களை ஈடுபடுத்தக்கூடாது என, மதுரை முதன்மைக் கல்வி அலுவலர், அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி, அந்நகலை சமர்ப்பிக்க வேண்டும்,' என்றனர்.
நீதிபதிகள் ஆர்.சுதாகர், வி.எம்.வேலுமணி கொண்ட அமர்வு நேற்று விசாரித்தது. மனுதாரர் வழக்கறிஞர் லஜபதிராய், அரசு சிறப்பு வழக்கறிஞர் சண்முகநாதன், பல்கலை வழக்கறிஞர் சக்திகுமரன் ஆஜராயினர்.
பல்கலை பதிவாளர் ராஜசேகர்,'வரும்காலங்களில், துவக்கப் பள்ளி மாணவர்களை இதுபோன்ற நிகழ்ச்சிகளில் ஈடுபடுத்தக்கூடாது என, பல்கலை பொது நர்சரி மற்றும் துவக்கப் பள்ளி தலைமை ஆசிரியருக்கு அறிவுறுத்தியுள்ளோம்,' என அறிக்கை சமர்ப்பித்தார்.
மதுரை முதன்மைக் கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி தாக்கல் செய்த அறிக்கைதுவக்கநிலை படிக்கும் மாணவர்களை எவ்வித வரவேற்பு நிகழ்ச்சியிலும் ஈடுபடுத்தக்கூடாது. தவிர்க்க முடியாத நிகழ்வுகளில் சிறப்பு விருந்தினர்களை வரவேற்க, கலை நிகழ்ச்சிகளில் பள்ளியில் செயல்படும் குழு சார்பான மாணவர்களை (சாரண-சாரணீயர், செஞ்சிலுவை சங்கம், தேசிய மாணவர் படை, பசுமைப் படை மற்றும் இதர அமைப்புகள்) ஈடுபடுத்தலாம்.
அத்தகைய நிகழ்வுகளில் மாணவர்கள் பங்கேற்கும் பட்சத்தில் போதிய பாதுகாப்பு, குடிநீர், கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டுள்ளதா? என்பதை தலைமை ஆசிரியர் உறுதி செய்ய வேண்டும்.
சிறப்பு விருந்தினர்களின் நிகழ்ச்சியில் மாணவர்கள் பங்கேற்பதால், அவர்களின் கல்வி பாதிக்கும். பங்கேற்பதை தவிர்க்க வேண்டும். இதை பதிவு செய்த நீதிபதிகள் வழக்கை முடித்தனர்.