news

முதுகலை ஆசிரியர்க்காக போராடக்கூடிய ஒரே அமைப்பு TNHSPGTA ***** நமது சங்கத்தின் உறுப்பினர் ஆகுங்கள் ******சங்க செயல் பாடுகளை தெரிந்துகொள்ள மேல்நிலைக்குரல் படியுங்கள் ******தங்கள் பள்ளி நிகழ்வுகளை அமைப்போடு பகிர்ந்துகொள்ளுங்கள்*****அனைத்து முதுகலை ஆசிரியர்களின் பங்களிப்பே அமைப்பு வளர்ச்சிக்கு உதவும்

Sunday 28 June 2015

தமிழக அரசு ஊழியர்களுக்கு ஆன்லைனில் ஜிபிஎப் வருடாந்திர கணக்கு அறிக்கை ஜூலையில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்

தமிழக அரசு ஊழியர்களுக்கு பொது வருங்கால வைப்புநிதி (ஜிபிஎப்) வருடாந்திர கணக்கு அறிக்கை ஆன்லைனில் வழங் கப்பட உள்ளது. இந்த கணக்கு அறிக்கையை ஜூலை முதல் வாரத்தில் ஆன்லைனில் பதிவிறக் கம் செய்துகொள்ளலாம். இதுதொடர்பாக மாநில முதன்மை கணக்காயர் அலுவல கம் நேற்று வெளியிட்ட செய் திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:- தமிழக அரசு ஊழியர்களின் 2014-15-ம் நிதி ஆண்டுக்கான பொது வருங்கால வைப்புநிதி (ஜிபிஎப்) வருடாந்திர கணக்கு அறிக்கை (அக்கவுண்ட் சிலிப்) மாநில முதன்மை கணக்காயரின் நிர்வாக இணையதளத்தில் (www.agae.tn.nic.in) ஜூலை முதல் வாரத்தில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளது. ஜிபிஎப் கணக்கு இருப்பை அறிந்துகொள்வதைப் போன்று சந்தாதாரர்கள் மேற்கண்ட இணையதளத்தில் இருந்து தங்களின் 2014-15 வருடாந்திர கணக்கு அறிக் கையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் சந்தாதாரர்கள் தங்கள் செல்போன் எண்ணை இந்த இணையதளத்தில் பதிவுசெய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படு கிறார்கள். தகவல் பெற.. இந்த ஆண்டுமுதல் வரு டாந்திர கணக்கு அறிக்கை சீட்டு மாநில முதன்மை கணக்கா யர் அலுவலகத்தில் இருந்து விநியோகிக்கப்பட மாட்டாது. கணக்கு அறிக்கையில் கொடுக் கப்பட்டுள்ள விவரங்களில் ஏதேனும் மாறுபாடுகள் இருந் தாலோ அல்லது விடுபட்ட சந்தா தொகை அல்லது விடுபட்ட கடன்தொகை ஆகியவற்றுக்கு விவரங்கள் இருந்தால் தொலை பேசியிலோ, மின்னஞ்சலிலோ, தபால் மூலமாகவோ தொடர்பு கொண்டு நிவர்த்தி செய்துகொள் ளலாம். தொலைபேசி எண்: 044-24314477 (ஐவிஆர்எஸ் மூலம்), 24342812. மின்னஞ்சல்: aggpf@tn.nic.in முகவரி: துணை மாநில கணக்காயர் (நிதி-1), தமிழ்நாடு முதன்மை கணக்காயர் அலு வலகம் (கணக்கு மற்றும் பணி வரவு), 361, அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை 600 018. இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.