news

முதுகலை ஆசிரியர்க்காக போராடக்கூடிய ஒரே அமைப்பு TNHSPGTA ***** நமது சங்கத்தின் உறுப்பினர் ஆகுங்கள் ******சங்க செயல் பாடுகளை தெரிந்துகொள்ள மேல்நிலைக்குரல் படியுங்கள் ******தங்கள் பள்ளி நிகழ்வுகளை அமைப்போடு பகிர்ந்துகொள்ளுங்கள்*****அனைத்து முதுகலை ஆசிரியர்களின் பங்களிப்பே அமைப்பு வளர்ச்சிக்கு உதவும்

Thursday 11 June 2015

இந்த ஆண்டு பிளஸ் 1 வகுப்பில், 'காமர்ஸ்' பிரிவில் சேர மாணவர்கள் ஆர்வம்

பிளஸ் 1 வகுப்பில், காமர்ஸ் பிரிவில் சேர, மாணவர்கள் தீவிர ஆர்வம் காட்டி வருகின்றனர்.

பிளஸ் 2 முடித்த மாணவர்கள், இன்ஜினியரிங், மருத்துவ படிப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது வழக்கம். இவற்றில் சேர முடியாதவர்களால், இயற்பியல், கணிதம், வேதியியல்
பட்டப்படிப்பில் சேர, கலை, அறிவியல் கல்லுாரிகளில் போட்டி இருக்கும்.ஆனால், இந்த ஆண்டு, பிளஸ் 2 பொது தேர்வில், பொருளியல் மற்றும் வணிகவியல் பிரிவு மாணவர்களே, மாநில, மாவட்ட, 'ரேங்க்' பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் மற்றும் மதிப்பெண்ணும்,
'கிடுகிடு'வென உயர்ந்து விட்டது.
பத்தாம் வகுப்பு முடித்தவர்களிலும், 400 முதல், 490 மதிப்பெண் வரை பெற்ற பெரும்பாலான மாணவ, மாணவியர், இந்த ஆண்டு பிளஸ் 1 வகுப்பில், 'காமர்ஸ்' பிரிவுக்கே முன்னுரிமை கொடுத்துள்ளனர். வங்கி, காப்பீடு, நிதி நிர்வாகம், பங்குச்சந்தை துறைகள் மற்றும் பன்னாட்டு நிறுவன நிர்வாகங்களுக்கு கடும் ஆள் பற்றாக்குறை உள்ளதால், சி.ஏ., - ஐ.சி.டபிள்யூ.ஏ., பேங்கிங் போன்ற படிப்புகளுக்காக, 'காமர்ஸ்' மீது அதிக ஆர்வம் வந்துள்ளதாக, கல்வி மற்றும் நிதி நிர்வாகத் துறையினர் தெரிவித்துள்ளனர்.