news

முதுகலை ஆசிரியர்க்காக போராடக்கூடிய ஒரே அமைப்பு TNHSPGTA ***** நமது சங்கத்தின் உறுப்பினர் ஆகுங்கள் ******சங்க செயல் பாடுகளை தெரிந்துகொள்ள மேல்நிலைக்குரல் படியுங்கள் ******தங்கள் பள்ளி நிகழ்வுகளை அமைப்போடு பகிர்ந்துகொள்ளுங்கள்*****அனைத்து முதுகலை ஆசிரியர்களின் பங்களிப்பே அமைப்பு வளர்ச்சிக்கு உதவும்

Saturday 20 June 2015

புதிய ஓய்வூதிய திட்டத்தில் தொடர் தாக்குதல்கள்


ஓய்வூதிய ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணைய வரையறைகள் 2015 (ஓய்வூதியதிட்டத்தில்\ இருந்து வெளியேறுதல் மற்றும் திரும்பப்பெறுதல்) குறித்து 11.05.2015 அன்று மத்திய அரசிதழில் வெளியிட்டுள்ளது. அதில் பங்கேற்பு ஓய்வூதியதிட்டத்தில் உள்ள சந்தாதாரர்கள் ஓய்வூதிய திட்டத்திலிருந்து வெளியேறும் நிகழ்வின் போதும் ஊழியரின் பங்களிப்பு தொகையில் 25%தொகையினைத் திரும்பபெறுதலில் உள்ள நடைமுறைகள் குறித்தும் கீழ்கண்ட விபரங்களை ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையசட்டம் பிரிவு 52ன்படி தெரிவித்துள்ளது.

திட்டத்தில் இருந்து வெளியேறுவோர்

1. ஓய்வின் போது உள்ள மொத்த தொகையில் 40% ஓய்வூதியத்திற்கு முதலீடு செய்யப்படும்.

2. 40% ஓய்வூதியத்திற்கு முதலீடு செய்யப்பட்ட தொகையினை 70 வயது

நிறைவடையும் வரை திரும்பப் பெற இயலாது.

3. சந்தாதாரர் கணக்கிணைப் பராமரிப்பதற்காக மத்திய கணக்கு பதிவு முகமை(CRA), ஓய்வூதியநிதி அறங்காவலர்  வங்கி மற்றும் பிற அமைப்புகளுக்காக PFRDA அறிவிக்கும் கட்டணத்தினைச் செலுத்தவேண்டும்.

4. ஓய்வூதிய கணக்கில் ரூபாய் இரண்டு லட்சமோ அல்லது அதற்குக் குறைவான தொகையோ இருப்பின் முழுவதுமாக சந்தாதாரரிடம் வழங்கப்படும் . மேலும்,மாதாந்திர ஓய்வூதியம் ஏதும் வழங்கப்படமாட்டாது.

5. விருப்ப ஓய்வின் போது உள்ள மொத்ததொகையில் 80% ஓய்வூதியத்திற்கு

முதலீடு செய்யப்படும். மீதம் உள்ள 20% தொகை மட்டுமே வழங்கப்படும்.

முதலீட்டில் 25% திரும்பப்பெற: புதிய ஓய்வூதிய திட்டத்தில் ஓய்வூதியம் வழங்குவதற்காக, அரசு ஊழியரான சந்தாதாரர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட தொகையில் இருப்பில் உள்ள 25%தொகையினை திரும்பப் பெற கீழ்கண்ட நிபந்தனைகளின் பேரில் அனுமதித்துள்ளது.

அ) நோக்கம்:

i. சந்தாதாரரின் குழந்தைகள் மற்றும் தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளின் உயர;கல்விபயில.

ii.சந்தாதாரரின் குழந்தைகள் மற்றும் தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளின்

திருமணத்திற்காக.

iii.புதிதாக வீடுகட்ட மற்றும் வீட்டடி மனை வாங்க. (ஏற்கனவே சொந்தவீடு உள்ளவர்களுக்கு இது பொருந்தாது.)

iv.. குறிப்பிட்ட நோய்களின் சிகிச்சையின் பொருட்டு சந்தாதாரர் வாழ்க்கைத்துணை மற்றும் குழந்தைகளின் மருத்துவ சிகிச்கைக்காக கீழ்கண்டநோய்களுக்கு

1.      Cancer
2. Kidney Failure(End Stage Renal Failure)
3. Primary Pulmonary Arterial Hypertension
4. Multiple Sclerosis
5. Major Organ Transplant
6. Coronary Artery Bypass Graft
7. Aorta Graft Surgery
8. Heart Valve Surgery
9. Stroke
10. Myocardial Infarction (First Heart Attack)
11. Coma
12. Total blindness
13. Paralysis
14. Accident of serious/ life threatening nature
15. any other critical illness of a life threatening nature as stipulated in the

Circulars, guidelines or notification issued by the Authority from time to time.

ஆ) வரையறைகள்:

தகுதியான அளவில் கீழ்கண்ட வரையறைகளுக்கு உட்பட்டு ஒவ்வொரு முறையும் அனுமதிக்கப்படும்.

1. சந்தாதார்கள் புதிய ஓய்வூதிய திட்டத்தில் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் தங்கள் பங்களிப்பை வழங்கியிருக்க வேண்டும்.

2. சந்தாதாரர்கள் விண்ணப்பிக்கும் நாளில் கணக்கில் உள்ள தங்கள் பங்களிப்பு செய்த தொகையில் 25%ற்கு அதிகமில்லாத தொகையினை மட்டுமே திரும்ப பெறமுடியும்.

இ). அடிக்கடிநிகழும் நேர்வின்போது:

இப்பரிந்துரையானது சந்தாதாரருக்கு தொகையினைத் திரும்பப் பெற தங்கள் பணிக்காலத்தில் மூன்று முறை மட்டுமே அனுமதி அளிக்கப்படும். ஒரு முறை திரும்பப் பெற்றபிறகு மீண்டும் பெற குறைந்தபட்ச இடைவெளி ஐந்து ஆண்டுகள் ஆகும்.

இருப்பினும் மருத்துவச் செலவின் பொருட்டு சந்தாதொகையை திரும்பப் பெறும் நிகழ்வில் மட்டும் ஐந்து ஆண்டு கால இடைவெளி பொருந்தாது.

நம் முன்னே உள்ள கேள்விகள்:

இன்னும் எத்தனைகாலம் தான் ஏமாற்றுவார்கள்?

1. பணியில் சேர்ந்த 10 ஆண்டுகளுக்கு அவசர தேவை ஏற்படின் தன்னுடைய பங்களிப்பினைக்கூட திரும்பப் பெற இத்தனை நிபந்தனைகள் விதிப்பதன் காரணம் என்ன?

2. மொத்தபணிக்காலத்தில் 3 முறை மட்டுமே பணத்தேவை ஏற்படுமா? பிறநேர்வுகளின் போது தன்னுடைய பணம் அரசிடம் இருக்கும்போது

யாரிடம் கையேந்துவது?;

2.       நம் பணம் யார் கையில் இப்பொழுதாவது விழித்துக்கொள்வோமா?   
                                                                         -திண்டுக்கல் பி. பிரெடெரிக் எங்கெல்ஸ்