news

முதுகலை ஆசிரியர்க்காக போராடக்கூடிய ஒரே அமைப்பு TNHSPGTA ***** நமது சங்கத்தின் உறுப்பினர் ஆகுங்கள் ******சங்க செயல் பாடுகளை தெரிந்துகொள்ள மேல்நிலைக்குரல் படியுங்கள் ******தங்கள் பள்ளி நிகழ்வுகளை அமைப்போடு பகிர்ந்துகொள்ளுங்கள்*****அனைத்து முதுகலை ஆசிரியர்களின் பங்களிப்பே அமைப்பு வளர்ச்சிக்கு உதவும்

Tuesday 23 June 2015

மதுரை மாவட்ட கழகம் முதன்மைக் கல்வி அலுவலருடன் சந்திப்பு


12.6.15 அன்று தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் பிரபாகரன் மற்றும் மாவட்டத் தலைவர் சரவணமுருகன் தலைமையில் மதுரை மாவட்ட பொறுப்பாளர்கள் சந்தித்தனர் மாவட்டத்தில் உள்ள கோரிக்கைகளை தெரிவித்தனர்
1.மார்ச் 2015 நடைபெற்ற போது தேர்வில் நிலையான படையில் பணியாற்றிய முதுகலைஆசிரியர்களுக்கு உழைப்பூதியம் வழங்கப்படவில்லை
2.செய்முறைத் தேர்வுக்கான உழைப்பூதியம்  3 மாதத்திற்கு பிறகும் இன்னும் வழங்கப்படவில்லை
3.பள்ளி ஆய்வக உதவியாளர் பணிப்பதிவில் பணியாற்றிய முதுகலைஆசிரியர்களுக்கு உழைப்பூதியம் வழங்கப்படவில்லை
4.பதினோராம் வகுப்பு பொதுத்தேர்வு மற்றும் வினாத்தாள் தயாரிப்புக்கு வழங்கப்படும் உழைப்பூதியம் வழங்க நடவடிக்கை எடுப்பதுடன் வரும் கல்வியாண்டில் உயர்த்தி தரவேண்டும்
5.வரும் கல்வியாண்டில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க தமிழ் ஆங்கிலம் உட்பட தேவைப்பட்டியல் பெற்று கூடுதல் பணியிடம் பெறவேண்டும்
6.பள்ளிகளில் விலையில்லா பொருள்களை மையங்களிருந்து பெறுவது மாதக்கணக்கில் நடைபெறுகிறது அதில் ஆசிரியர்களை பயன்படுத்துவதால் கற்பித்தல் பணி பாதிப்படைகிறது. பொருள்களை நேரடியாக பள்ளிகளிலே கொடுத்திட நடவடிக்கை எடுக்கவேண்டும்    
             என கோரிக்கை விடுத்தனர். முதன்மைக் கல்வி அலுவலர் திரு.ஆஞ்சலோ இருதயசாமி ஆவன செய்வதாக உறுதி அளித்தார். நிலுவையில் உள்ள பணபலன்கள் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது
மாநிலத் துணைத்தலைவர் ராஜேந்திரன்,  மாநில மகளிரணி இணைச் செயலாளர் விமலா , மாவட்ட பொறுப்பாளர்கள் ரவிச்சந்திரன், வினோத், முருகன், சுதாகர், துரைராஜா. ஆனந்தசகாயநாதன், பாண்டியன், பிரபாகரன் ,  சம்பத் சௌந்தரபாண்டியன் பிரபு பாலகிருஷ்ணன் விஜயகுமார் சோலைராஜா கரோலின் ஆகியோர் உடனிருந்தனர்.