news

முதுகலை ஆசிரியர்க்காக போராடக்கூடிய ஒரே அமைப்பு TNHSPGTA ***** நமது சங்கத்தின் உறுப்பினர் ஆகுங்கள் ******சங்க செயல் பாடுகளை தெரிந்துகொள்ள மேல்நிலைக்குரல் படியுங்கள் ******தங்கள் பள்ளி நிகழ்வுகளை அமைப்போடு பகிர்ந்துகொள்ளுங்கள்*****அனைத்து முதுகலை ஆசிரியர்களின் பங்களிப்பே அமைப்பு வளர்ச்சிக்கு உதவும்

Monday 15 June 2015

பள்ளிகளுக்கு சிஇஓ டோஸ் 100 சதவீத தேர்ச்சிக்காக 9ம் வகுப்பு மாணவர்களை பெயில் ஆக்குவதா?

100 சதவீத தேர்ச்சிக்காக படிப்பில் திறன் குறைந்த 9ம் வகுப்பு மாணவர் களை பெயில் ஆக்கினால் கடும் நட வடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளி களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் தேர்வில் தோல்வியடையும் மாணவர்களுக்கு நடத்தப்படும் உட னடி தேர்வின் அறிக்கையை தெரிவிக்க வேண்டுமெனவும் கூறினார்.
பள்ளிக் கல்வித் துறை சார்பில் ஆண்டு இறுதித் தேர்வில் தோல்வியடையும் மாணவர்களுக்கு உடனடி தேர்வு நடத் தப் படுகிறது. மாணவர்களின் ஓராண்டு காலம் படிப்பு வீணாவதை கருத்தில் கொண்டு இந்த தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகேயுள்ள ஒரு பள்ளியில் 9ம் வகுப்பு மாணவர்கள் 2 பேர் உட னடி தேர்விலும் தோல்வியடைந்தனர். இதனால் மன வேதனையடைந்த 2 மாணவர்களும் ரயில் தண்டவாளத்தில் படுத்து தற்கொலை செய்து கொண் டனர். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ, சம்பந்தப்பட்ட பள்ளியிடம் விசாரணை நடத்தினார். பின்னர் அவரது தலைமையில் அனைத்து பள்ளி தலைமை யாசிரியர்களையும் அழைத்து அவசரகூட்டம் நடத்தப்பட்டது.
அப்போது அவர் பேசுகையில், தேர்வு தோல்வியினால் மாணவர்கள் தற்கொலை செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. மாணவர்கள் தற்கொலை செய்யும் அளவுக்கு மனவேதனை அடைந்ததற்கு ஆசிரியர்களும் ஒரு காரணம்தான். மாணவர்களுக்கு உரிய முறையில், பாடங்களை கற்பித்து கவுன்சிலிங் கொடுத்திருந்தால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது. மதுரை மாவட்டத்தில் சில பள்ளிகள், 10 மற்றும் 12ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற வேண்டு மென்பதற்காக பள்ளியில் பின்தங்கிய மாணவர்களை புறக்கணிப்பதும், அவர்களை தேர்வு எழுதும் போது தோல்வியடையச் செய்வதும் அல்லது பள்ளியை விட்டே வெளியறச் செய்வது போன்ற செயல்களில் ஈடு படுவது வேதனையளிக்கிறது. இது அப்பள்ளியின் முழுமையான வளர்ச்சியாக கருத முடியாது.
கல்வியில் பின்தங்கிய மாணவர் களை வெற்றியடைய செய்வதுதான் ஒரு ஆசிரியருடைய திறமையான பணியாகும். ஆகையால் இது போன்ற நிலைமை பிற மாணவர்களுக்கு வராத அளவில் தற்போது உடனடி தேர்வு முடிவுகளை மறு ஆய்வு செய்து, அது குறித்த அறிக்கையை தெரிவிக்க வேண்டும் என்றார்.