news

முதுகலை ஆசிரியர்க்காக போராடக்கூடிய ஒரே அமைப்பு TNHSPGTA ***** நமது சங்கத்தின் உறுப்பினர் ஆகுங்கள் ******சங்க செயல் பாடுகளை தெரிந்துகொள்ள மேல்நிலைக்குரல் படியுங்கள் ******தங்கள் பள்ளி நிகழ்வுகளை அமைப்போடு பகிர்ந்துகொள்ளுங்கள்*****அனைத்து முதுகலை ஆசிரியர்களின் பங்களிப்பே அமைப்பு வளர்ச்சிக்கு உதவும்

Tuesday 5 January 2016

மேல்நிலைப் பொதுத்தேர்வுகள் 2016 மதுரை முதன்மைக்கல்வி அலுவலருடன் சந்திப்பு விவரம்

 நமது அமைப்பின் சார்பில் மதுரை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரை 5.1.16 அன்று மாநில பொதுச்செயலாளர் திரு இரா.பிரபாகரன் தலைமையில் சந்தித்தோம் கடந்த ஆண்டு பொதுத்தேர்வில் காணப்பட்ட குறைபாடுகள்  விவாதிக்கப்பட்டது  அதன் விவரம்
 31.12.15  அன்று நடைபெற்ற எமது அமைப்பின் பொதுக்குழுவின் தீர்மானங்கள் தங்கள் பார்வைக்கு வைக்கப்படுகிறது
1.செய்முறைத்தேர்வில் கடந்த ஆண்டு இரு பகுதிகளாக நடத்தப்பட்டது. பள்ளிகள் தங்களுக்குள்ளாகவே அட்டவணை தீர்மானித்து கொள்ளவேண்டும் என அறிவுறுத்தப்பட்டதால் குழப்பம் ஏற்பட்டது. அதை தவிர்த்து முதன்மைக்கல்வி அலுவலகமே அட்டவணை தயாரித்து அனுப்பப்படவேண்டும்
2. செய்முறைத்தேர்வுக்கு முதுகலை ஆசிரியர்கள் நியமிக்கப்படும்போது பயணப்படி இல்லாதால் 8 கீ.மீக்குள் நியமிக்கப்படவேண்டும்.
3. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களை செய்முறைத் தேர்வுக்கு அலுவலர்களாக நியமிக்கப்பட்ட பின்னரே பதின்மப் பள்ளி ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும்
4. அரசுப் பொதுத் தேர்வுக்கான பணிகளுக்கு முதுகலை ஆசிரியர்கள் நியமிக்கப்படும்போது 15 கி.மி க்குள் நியமிக்கப்பட வேண்டும்
5. துறை அலுவலர், பறக்கும் படை உறுப்பினர் நியமனத்தின் போது பதவிமூப்பு
அடிப்படையில் நியமித்தல் வேண்டும்
6. பறக்கும் படை உறுப்பினர்களாக முதுகலை ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி
இயக்குநர்களையே நியமிக்க வேண்டும். உடற்கல்வி ஆசிரியர்களை நியமிக்கக்கூடாது.
7. கடந்த ஆண்டு மேலூர் கல்வி மாவட்டத்தில் பறக்கும்படை பதின்ம பள்ளி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டது. எமது அமைப்பு சுட்டிக்காட்டியது அது தவிர்க்கப்பட வேண்டும்
8. உடல் நலக்குறைவு போன்ற உரிய காரணங்கள் மருத்துவ சான்றிதழ் அடிப்படையில் ஆய்வு செய்யப்பட்டு அவர்களுக்கு விலக்கு அளிக்கப்படவேண்டும்.

9. XIம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான உழைப்புதியம் பலவருடங்களாக உயர்த்தப்படவில்லை உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும்

10. செய்முறைத்தேர்வுக்கான உழைப்புதியம் முதன்மைக்கல்வி அலுவலகத்திலிருந்து பள்ளிகளில் இருந்து வழங்கிவிட்டு பின்னர் பெற்றுகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.ஆனால் அரசுப்பள்ளிகளில் நிதி இல்லை என்று காரணம் காட்டி வழங்கப்படுவதில்லை. தேர்வு முடிந்தவுடனே வழங்கப்பட நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்

11. உசிலம்பட்டி கல்வி மாவட்டத்தில் பறக்கும்படை உறுப்பினர்களுக்கான உழைப்புதியம் ஒவ்வொரு ஆண்டும் தாமதமாக வழங்கப்படுகிறது அது தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்

மேல்நிலை பொதுத்தேர்வு சிறப்பாக நடைபெறவும் இடர்பாடுகளை களையவும் நமது மாவட்டம் மாநில அளவில் முன்னிலை பெறவும் எமது அமைப்பு முழு ஒத்துழைப்பு வழங்கும் என்பதை இந்த பொதுக்குழு தெரிவித்துக்கொள்கிறது