news

முதுகலை ஆசிரியர்க்காக போராடக்கூடிய ஒரே அமைப்பு TNHSPGTA ***** நமது சங்கத்தின் உறுப்பினர் ஆகுங்கள் ******சங்க செயல் பாடுகளை தெரிந்துகொள்ள மேல்நிலைக்குரல் படியுங்கள் ******தங்கள் பள்ளி நிகழ்வுகளை அமைப்போடு பகிர்ந்துகொள்ளுங்கள்*****அனைத்து முதுகலை ஆசிரியர்களின் பங்களிப்பே அமைப்பு வளர்ச்சிக்கு உதவும்

Saturday 30 January 2016

ஊதிய முரண்பாடு நீக்கவேண்டும், தன் பங்களிப்புத் ஓய்வுதியம் கைவிடவேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி ஜாக்டோ போராட்டம் தொடக்கம்

பல்வேறு ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ அமைப்பில் உள்ள பல்வேறு ஆசிரியர் சங் கங்கள், கடந்த நான்கரை ஆண்டு களாக இடை நிலை ஆசிரியர் உட்பட அனைத்து நிலை ஆசிரியர்கள் ஊதியம் மற்றும் படிகள் உட்பட மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையாக தமிழக ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. மேலும், தன் பங்களிப்பு ஓய்வு ஊதிய திட்டத்தை நீக்கி விட்டு, பழைய ஓய்வு ஊதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட 15 கோரிக்கைகளை வலியுறுத்தி பல கட்ட போராட்டங்களை நடத்தியும் அரசு அதை கண்டு கொள்ளவில்லை, நிறைவேற்ற வில்லை.
இதையடுத்து, ஜாக்டோ அமைப்பு ஏற்கனவே அறிவித்தபடி, 30, 31, பிப்ரவரி 1ம் தேதி களில் தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு தொடர் மறியல் போராட்டத்தை இன்று தொடங்குகிறது. இதற்காக 27, 28, 29ம் தேதிகளில் ஆசிரியர் சந்திப்பு இயக்கத்தை ஆசிரியர் சங்கங்கள் நடத்தின.
அதில் ஒவ்வொரு ஒன்றிய வாரியாக போராட்டத்தில் கலந்து கொள்ள உள்ள ஆசிரியர்கள் பட்டியல் தயார் செய்துள்ளனர். அந்த பட்டியலில் உள்ளபடி பிப்ரவரி 1ம் தேதி வரை தொடர் மறியல் போராட்டத்தில் 2 லட்சம் ஆசிரியர்கள் ஈடுபடுவார்கள். சென்னையில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே போராட்டம் நடக்கிறது. மற்ற மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலங்கள் முன்பு நடக்கிறது.
இதை தொடர்ந்து, பிப்ரவரி 1ம் தேதி பெரும்பாலான பள்ளிகள் இயங்காது என்று ஜாக்டோ அமைப்பு தெரி வித்துள்ளது
.