news

முதுகலை ஆசிரியர்க்காக போராடக்கூடிய ஒரே அமைப்பு TNHSPGTA ***** நமது சங்கத்தின் உறுப்பினர் ஆகுங்கள் ******சங்க செயல் பாடுகளை தெரிந்துகொள்ள மேல்நிலைக்குரல் படியுங்கள் ******தங்கள் பள்ளி நிகழ்வுகளை அமைப்போடு பகிர்ந்துகொள்ளுங்கள்*****அனைத்து முதுகலை ஆசிரியர்களின் பங்களிப்பே அமைப்பு வளர்ச்சிக்கு உதவும்

Wednesday 18 May 2016

248 அரசு பள்ளிகள் 100% தேர்ச்சி


பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியாயின. அதில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், கடந்த ஆண்டை விட, இம்முறை மாணவ, மாணவியரின் தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளது. அதே நேரம், தனியார், மெட்ரிக் மற்றும் ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளில் தேர்ச்சி குறைந்துள்ளது.
நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவுகளின் படி, தனியார் பள்ளிகளில் படித்த மாணவர்களில், 97.89 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

எனினும், கடந்த ஆண்டை ஒப்புடுகையில், இந்த ஆண்டு தனியார், மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் உள்ளிட்ட பள்ளிகளின் மாணவர் தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது. அதே நேரம், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், மாணவர் தேர்ச்சி சதவீதம் கடந்த ஆண்டை விட சற்று அதிகரித்துள்ளது.

248
அரசு பள்ளிகளில் 100 சதவீத தேர்ச்சி: பிளஸ் 2
தேர்வில், தமிழகம் முழுவதும், 248 அரசு பள்ளிகள், 100 சதவீத தேர்ச்சியை பெற்று உள்ளன. தமிழகம் முழுவதும், 2,704 அரசு பள்ளிகளைச் சேர்ந்த, 3 லட்சத்து, 47 ஆயிரத்து, 478 பேர் பிளஸ் 2 தேர்வு எழுதினர். அவர்களின், இரண்டு லட்சத்து, 97 ஆயிரத்து, 641 பேர் தேர்ச்சி பெற்றுஉள்ளனர்.

இதுகுறித்து, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் கூறியதாவது:பிளஸ் 2 தேர்வில், அரசு பள்ளிகள், கடந்த ஆண்டை விட அதிக தேர்ச்சி பெற்றுள்ளன.

இந்த ஆண்டு, 85.71 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 248 அரசு பள்ளிகள், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுஉள்ளன. கடந்த ஆண்டு, 196 பள்ளிகள் தேர்ச்சி பெற்ற நிலையில், இந்த ஆண்டு, பள்ளிக்கல்வித் துறையின் முயற்சியால், கூடுதலாக, 52 பள்ளிகள், 100 சதவீத தேர்ச்சி பெற்று உள்ளன.

வளர்ச்சி பாதையில்...:கடந்த, 2012ல், 41 அரசு பள்ளிகள் மட்டுமே, 100 சதவீத தேர்ச்சி பெற்ற நிலையில், ஒவ்வொரு ஆண்டும் இந்த எண்ணிக்கை அதிகரித்து, இந்த ஆண்டு, 248 அரசு பள்ளிகள், 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன
ஜொலிக்கும் நட்சத்திரம் சரண்யா...

இப்போது எல்லோர் வாயிலும் புகுந்து வெளிவரும் ஊரின் பெயர் ஏகானம்பேட்டை.

இப்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஏகானம்பேட்டைக்கு தன் படிப்பால் பெருமை தேடித்தந்திருக்கிறார் மாணவி சரண்யா.
காஞ்சிபுரத்தில் இருந்து எட்டாவது கிலோமீட்டரில் உள்ள ஏகானம்பேட்டை அரசு பெண்கள் பள்ளியில் படித்த சரண்யா நடந்து முடிந்த பிளஸ் டூ தேர்வில் 1179/1200 மார்க்குகள் எடுத்து அரசுப் பள்ளி மாணவிகளில் முதல் இடத்தை பிடித்திருக்கிறார்.