news

முதுகலை ஆசிரியர்க்காக போராடக்கூடிய ஒரே அமைப்பு TNHSPGTA ***** நமது சங்கத்தின் உறுப்பினர் ஆகுங்கள் ******சங்க செயல் பாடுகளை தெரிந்துகொள்ள மேல்நிலைக்குரல் படியுங்கள் ******தங்கள் பள்ளி நிகழ்வுகளை அமைப்போடு பகிர்ந்துகொள்ளுங்கள்*****அனைத்து முதுகலை ஆசிரியர்களின் பங்களிப்பே அமைப்பு வளர்ச்சிக்கு உதவும்

Tuesday 17 May 2016

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள்

 பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலையில் வெளியிடப்பட்டது. 



தமிழகத்தில், பிளஸ் 2 பொதுத் தேர்வு, மார்ச், 4ல் துவங்கி, ஏப்., 1ல் முடிந்தது; 8.72 லட்சம் பேர் தேர்வு எழுதினர். இன்று காலை, 10:31 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. 
பிளஸ் 2 தேர்வில் மாணவிகள் அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். 94.4 சதவீத மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு எழுதிய மாணவிகளில் 4,19,794 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 87.9 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு எழுதிய மாணவர்களில் 3,41,931 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை சேர்ந்த மாணவியும், மாணவனும் 1,195 மார்க்குகள் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளனர். இருவரும் ஒரே பள்ளியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.தேர்ச்சி விகிதத்தில் வழக்கம்போல் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அரசு தேர்வு இயக்ககம் வெளியிட்ட ரிசல்ட்டில் ;
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை சேர்ந்த வித்தியாமந்திர் மெட்ரிக் பள்ளியை சேர்ந்த மாணவன் ஜஸ்வந்த், மாணவி ஆர்த்தி , 1, 195 மார்க்குகள் பெற்று முதலிடத்தை பிடித்தனர்.
1,194 மார்க்குகள் பெற்று திருவள்ளூர் மாவட்டத்தை ஸ்ரீ நிகேதன் பள்ளியை சேர்ந்தவர்கள் பவித்ரா இரண்டாமிடத்தை பிடித்தார்.
நாமக்கல்எஸ்கேவி மேல்நிலைப்பள்ளியை வேணுபிரித்தா 1,193 மார்க்குகள் பெற்று 3 வது இடத்தை பிடித்தார்.

 தேர்வு முடிவுகளை, மதிப்பெண்ணுடன் இணையதளத்தில் காணலாம். தேர்வர்கள் மே, 19ல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை, இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம்; மே, 21 முதல், தாங்கள் படித்த அல்லது தேர்வு எழுதிய பள்ளியில், தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பெறலாம். விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு பள்ளிகள் மூலம், இன்றும், நாளையும் மட்டுமே விண்ணப்பிக்கலாம். தேர்வு முடிவுகளை, மதிப்பெண்ணுடன் இணையதளத்தில் காணலாம்.
இணையதள முகவரி:தேர்வர்களின் பிறந்த தேதி மற்றும் பதிவு எண் மூலம்,

http://www.tnresults.nic.in
http:// www.dge1.tn.nic.in
http://www.dge2.tn.nic.in
பள்ளிகள், மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் உள்ள தேசிய தகவலியல் மையங்கள், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களில் தேர்வு முடிவுகளை கட்டணமின்றி தெரிந்து கொள்ளலாம்.