news

முதுகலை ஆசிரியர்க்காக போராடக்கூடிய ஒரே அமைப்பு TNHSPGTA ***** நமது சங்கத்தின் உறுப்பினர் ஆகுங்கள் ******சங்க செயல் பாடுகளை தெரிந்துகொள்ள மேல்நிலைக்குரல் படியுங்கள் ******தங்கள் பள்ளி நிகழ்வுகளை அமைப்போடு பகிர்ந்துகொள்ளுங்கள்*****அனைத்து முதுகலை ஆசிரியர்களின் பங்களிப்பே அமைப்பு வளர்ச்சிக்கு உதவும்

Wednesday 18 May 2016

மதுரை மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வு தேர்ச்சி வீதம் கடந்த ஆண்டை விட 0.32 சதவீதம் அதிகரித்துள்ளது.



மதுரை மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வு தேர்ச்சி வீதம் கடந்த ஆண்டை விட 0.32 சதவீதம் அதிகரித்துள்ளது. முதல் மூன்று இடங்களை மாணவிகளே கைப்பற்றி சாதனை படைத்துள்ளனர்.

மாவட்டத்தில் 286 பள்ளிகளை சேர்ந்த 37,437 பேர் தேர்வு எழுதியதில், 34,887 பேர் தேர்ச்சி பெற்றனர். இதன் தேர்ச்சி விகிதம் 93.19 சதவீதம். இதில், மாணவிகள் தேர்ச்சி 95.82 சதவீதம். மாணவர்கள் தேர்ச்சி 90.36 சதவீதம். மாவட்டத்தின் மொத்த தேர்ச்சி விகிதம் கடந்தாண்டை (92.87) விட 0.32 சதவீதம் அதிகரித்துள்ளது.

அதேநேரம், ஆறு அரசு பள்ளிகள் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்றிருந்தாலும் அதன் மொத்த தேர்ச்சி விகிதம் 86.81 சதவீதத்தில் இருந்து 86.58 சதவீதமாக சற்றே குறைந்துள்ளது. ஆனால், பாடங்கள் வாரியாக மாணவர்கள் பெற்ற 'சென்டம்' எண்ணிக்கை கடந்தாண்டை (597) விட இந்தாண்டு (715) அதிகரித்துள்ளது.

உற்சாகத்தில் மாணவிகள்:
 

மாவட்ட அளவில் ரேங்க் பெற்ற மாணவிகள் விவரம்:

* வேலம்மாள் மெட்ரிக் பள்ளி மாணவி ஸ்ரீபிரியா 1190 மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்றார். இவர், தமிழ்- 195, ஆங்கிலம்- 196, வணிகவியல் - 199 பொருளியல், கணக்கு பதிவியல், வணிக கணிதம் ஆகிய பாடங்களில் தலா 200 மதிப்பெண் பெற்றார்.

அவர் கூறுகையில், "பள்ளியில் ஆசிரியர்கள் அடிக்கடி தேர்வு எழுத வைத்தனர். வீட்டிலும் படிக்கும் சூழ்நிலையை என் அம்மா உருவாக்கி கொடுத்ததால் சாதிக்க முடிந்தது," என்றார்.

* செயின்ட் ஜான்ஸ் மெட்ரிக் பள்ளி மாணவி ஸ்ரீநிதி கார்த்திகா 1189 மதிப்பெண் பெற்று 2ம் இடத்தை பிடித்தார். தமிழ்- 195, ஆங்கிலம்- 194 மற்றும் பிற நான்கு பாடங்களில் தலா 200 மதிப்பெண் பெற்றார். இவர், "மாவட்ட ரேங்க் பெறுவேன் என எதிர்பார்க்கவில்லை. ஆனால் தினமும் நான்கு மணிநேரம் படித்தேன். அதனால் மாவட்ட அளவில் சாதிக்க முடிந்தது," என்றார்.

* ெசயின்ட் ஜோசப் பெண்கள் மெட்ரிக் பள்ளி மாணவி நாகநந்தினி 1187 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடம் பெற்றார். இவர், தமிழ்- 195, ஆங்கிலம்- 192 பிற பாடங்களில் தலா 200 மதிப்பெண் பெற்றார். இவர் கூறுகையில், "ஆசிரியர்கள் தினமும் நடத்தும் பாடங்களை வீட்டில் தினமும் படித்தேன். மனப்பாடம் செய்யாமல் புரிந்து படித்தேன்.

அடிக்கடி பள்ளியில் தேர்வு நடத்தப்பட்டதால் ரேங்க் பெற முடிந்தது," என்றார்.சாதனை மாணவிகளை கலெக்டர் வீரராகவராவ், தேர்வுத் துறை இணை இயக்குனர் அமுதவல்லி, முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி ஆகியோர் பாராட்டினர்.

மதுரை: மதுரை மாவட்டத்தில் தேர்ச்சி விகிதம் அடிப்படையில் உசிலம்பட்டி கல்வி மாவட்டம் முதலிடம் பெற்றது.

இக்கல்வி மாவட்டத்தில், திருமங்கலம் பி.கே.என். பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி யமுனா 1179 மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்றார். வணிகவியல் மற்றும் கணக்கு பதிவியில் பாடங்களில் 'சென்டம்' பெற்றார்.

இப்பள்ளி மாணவி ரோஹிணி, 1169 மதிப்பெண் பெற்று 2ம் இடம் பெற்றார். இவர், தமிழ்- 195, ஆங்கிலம்- 189, இயற்பியல்- 191, வேதியியல்- 200, விலங்கியல்- 195, கணிதம்- 199 மதிப்பெண் பெற்றார்.

டி.கல்லுப்பட்டி எம்.எஸ்.ஆர்., மெட்ரிக் பள்ளி மாணவி ரேணுஸ்ரீ 1161 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடத்தை பிடித்தார். இவர் தமிழ் - 194, ஆங்கிலம்- 191, இயற்பியல் - 186, வேதியியல் - 197, விலங்கியல் - 195, கணிதம் - 198 மதிப்பெண் பெற்றார்.

மூன்றும் ஒரே பள்ளி: மேலுார் கல்வி மாவட்டத்தில் முதல் மூன்று இடங்களையும் சி.இ.ஓ.ஏ., மெட்ரிக் பள்ளி மாணவர்களே பிடித்தனர்.

மாணவர் முத்துவிக்னேஷ்வரன் 1185 மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்றார். விலங்கியல், கணிதத்தில் 'சென்டம்' பெற்றார். பாலமுரளிக்குமார் 1184 மதிப்பெண் பெற்று 2ம் இடம் வென்றார். இவர் வேதியியல், விலங்கியல் பாடங்களில் 'சென்டம்' பெற்றார். கிருத்திகா பார்வதி 1181 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடம் பிடித்தார். இவர், வேதியியல் மற்றும் கணிதத்தில் 'சென்டம்' பெற்றார்.

முதலிடம்: மூன்று கல்வி மாவட்டங்களில் மொத்த தேர்ச்சி விகிதத்தில் 94.67 சதவீதம் பெற்று உசிலம்பட்டி முதலிடமும், 94.08 சதவீதம் பெற்று மதுரை 2ம் இடமும், 90.78 சதவீதம் பெற்று மேலுார் மூன்றாம் இடமும் பெற்றன.

மதுரை: மதுரை மாவட்டத்தில் ஆறு அரசு பள்ளிகள் உட்பட 81 பள்ளிகள் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்றன.

ஒத்தக்கடை அரசு பெண்கள் பள்ளி.எஸ்.புளியங்குளம், மங்களம்பட்டி, பி.அம்மாபட்டி, செங்கப்படை, மேலக்கோட்டை அரசு பள்ளிகள், பாப்பாபட்டி, கப்பலுார் அரசு கள்ளர் பள்ளிகள், மாநகராட்சி நாவலர் சோமசுந்தர பாரதியார் பள்ளி.பழங்காநத்தம்

மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் முதல் 3 இடங்களைப் பிடித்த விவரம்:

முதலிடம்- செல்வகணபதி 1151 மதிப்பெண், வாடிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி.

இரண்டாமிடம்- பிரீத்தி.  1146. திருமங்கலம். அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி. 

3ம் இடம்- சங்கீதா 1143  எம்.புளியங்குளம்அரசுமேல்நிலைப்பள்ளி 

பிளஸ் 2 தேர்வு: மதுரை மாநகராட்சிப் பள்ளிகள் 91 சதவீதம் தேர்ச்சி

 கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 தேர்வில், மதுரை மாநகராட்சிக்குள்பட்ட 15 பள்ளிகளைச் சேர்ந்த 587 மாணவர்கள், 1900 மாணவியர் என 2487 பேர் எழுதினர். தேர்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டன.

இதில் 499 மாணவர்கள், மாணவிகள் 1782 என  2281 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 91.72 சதவீதமாகும்.

 15 மாநகராட்சிப் பள்ளிகளில் நாவலர் சோமசுந்தர பாரதியார் மேல்நிலைப்பள்ளி 100 சதவீத தேர்ச்சிப் பெற்று முதலிடத்தை பெற்றது. வெள்ளி வீதியார் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி 98.84 சதவீதத் தேர்ச்சியுடன் இரண்டாம் இடத்தையும், திருவிக மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி 97.79 சதவீதத் தேர்ச்சியுடன் மூன்றாம் இடத்தையும் பெற்றன. 9 பள்ளிகள் 90 சதவீதத்துக்கும் அதிகமாக தேர்ச்சிப் பெற்றுள்ளன. 4 பள்ளிகள் 80 சதவீதத்துக்கும் மேல் தேர்ச்சிப் பெற்றுள்ளன.

 15 மாநகராட்சிப் பள்ளிகளில் தேர்வு எழுதிய 2487 பேரில் 13 பள்ளிகளைச் சேர்ந்த 139 மாணவ, மாணவியர் ஆயிரத்துக்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இதில் அதிகபட்சமாக ஈ.வே.ரா. நாகம்மையார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் 38 பேர், ஆயிரத்துக்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். குறைந்தபட்சமாக சேதுபதி பாண்டித்துரை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் 1 மாணவர் மட்டுமே ஆயிரத்துக்கும் மேல் மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.


இதில் கஸ்தூரிபாய் காந்தி மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி எஸ்.அனிதா 1156 மதிப்பெண்கள் பெற்று மாநகராட்சிப் பள்ளிகளில் முதலிடம் பெற்றுள்ளார். இவர் தமிழ் 192, ஆங்கிலம் 188, இயற்பியல் 192, வேதியியல் 198, உயிரியல் 192, கணிதம் 194 என மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
 ஈ.வே.ரா. நாகம்மையார் மாநகராட்சிப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி பி.நிலோபர் 1141 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடம் பெற்றார். தமிழ் 191, ஆங்கிலம் 163, கணினி அறிவியல் 192, பொருளியல் 200, வணிகவியல் 197, கணக்குப்பதிவியல் 198 என மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

 பொன்முடியார் மாநகராட்சிப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி எம்.இந்து 1140 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடம் பெற்றுள்ளார். தமிழ் 183, ஆங்கிலம் 166, வணிகவியல் 191, கருத்தியல் 200, இருமுறை செய்முறைத் தேர்வுகளிலும் தலா 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். 

ஆதிதிராவிட பள்ளிகளில் இளமனூர் ஆதிதிராவிடர் பள்ளி மாணவி சாஸ்தினி 1102மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்றுள்ளார்

நாச்சிகுளம் ஆதிதிராவிட பள்ளியை சேர்ந்த மாணவி ஏ.ரேணுகா 950 மதிப்பெண்கள், அதே பள்ளியைச் சேர்ந்த மாணவர் ஆர்.பாலாவிஜய் 950 மதிப்பெண்களுடன் இருவரும்
இரண்டாமிடத்தையும் பெற்றனர். மாணவர் பி.அன்பரசன் 913 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடத்தையும் பெற்றனர்.

 கள்ளர் பள்ளிகள்: அரசு கள்ளர் பள்ளிகளில், பாப்பாபட்டி  அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி மாணவி அபர்ணா 1099 மதிப்பெண்களுடன் முதலிடத்தையும், வே.கள்ளப்பட்டி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி மாணவி செல்வி 1072 மதிப்பெண்களுடன் இரண்டாம் இடத்தையும். கப்பலூர்  அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி மாணவர் மணிகண்டன்  1068 மதிப்பெண்களுடன்  மூன்றாமிடத்தையும் பெற்றனர்.