news

முதுகலை ஆசிரியர்க்காக போராடக்கூடிய ஒரே அமைப்பு TNHSPGTA ***** நமது சங்கத்தின் உறுப்பினர் ஆகுங்கள் ******சங்க செயல் பாடுகளை தெரிந்துகொள்ள மேல்நிலைக்குரல் படியுங்கள் ******தங்கள் பள்ளி நிகழ்வுகளை அமைப்போடு பகிர்ந்துகொள்ளுங்கள்*****அனைத்து முதுகலை ஆசிரியர்களின் பங்களிப்பே அமைப்பு வளர்ச்சிக்கு உதவும்

Wednesday 20 April 2016

முழு பணத்தை எடுப்பதை தடுக்கும் பிஎப் புது விதிமுறை ரத்து

பிஎப் பணத்தை முழுமையாக எடுக்க தடை விதிக்கும் புதிய விதிமுறை ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. தனியார் நிறுவனங்கள், பள்ளிகள், தொழிற்சாலைகள் ஆகியவற்றில் பணிபுரியும் ஊழியர்களின் சம்பளத்தில் 12 சதவீதம் வருங்கால வைப்பு நிதிக்காக பிடித்தம் செய்யப்பட்டது. இதே அளவு தொகையை ஊழியர்களின் கணக்கில் முதலாளிகளின் பங்காக நிறுவனங்கள் செலுத்த வேண்டும். இதில் 8.3 சதவீதம் பென்ஷன் திட்டத்துக்காக எடுத்துக் கொள்ளப்படுகிறது. எஞ்சிய தொகை தொழிலாளர்களின் கணக்கில் சேர்க்கப்பட்டு ஆண்டுதோறும் வட்டி சேர்க்கப்பட்டு வருகிறது. 58 வயது பூர்த்தியானவுடன் வைப்பு நிதியில் சேர்ந்த தொகை மொத்தமாக ஊழியர்களுக்கு தரப்படும். பணிக்காலத்தில் இந்த வைப்பு நிதியிலிருந்து குழந்தைகளின் படிப்பு, மருத்துவ செலவு, திருமண செலவுகளுக்கு பணம் திருப்பிக் கொள்ளலாம்.

54 வயதை கடக்கும் போது வைப்பு நிதியில் இருந்து 90 சதவீத தொகையை எடுத்துக் கொள்ளலாம் என விதிமுறை இருந்தது. இந்த விதிமுறை கடந்த பிப்ரவரியில் திருத்தப்பட்டது. இனிமேல் 57 வயது எட்டினால் மட்டுமே 90 சதவீத நிதியை திரும்ப பெற முடியும். 58 வயது பூர்த்தியானவுடன் எஞ்சிய தொகை ெசட்டில் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த புதிய விதிமுறை மே 1ம் தேதி அமலுக்கு வருவதாக மத்திய அரசு அறிவித்திருந்தது. பணிக்காலத்திலேயே பணம் எடுத்துவிட்டால் ஊழியர் ஓய்வுபெற்ற பிறகு அவருக்கு சமூக பாதுகாப்பு இருக்காது என்பதால், இதை கருத்தில் கொண்ேட புதிய விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது என தொழிலாளர் அமைச்சகம் கூறியது.

ஆனால், இதற்கு தொழிலாளர் சங்கங்களில் இருந்து கடும் எதிர்ப்பு வந்தது. இதையடுத்து புதிய விதிமுறையை அமல்படுத்தும் முடிவை மேலும் மூன்று மாதங்களுக்கு தள்ளி வைப்பதாகவும், ஆகஸ்ட் 1ம் தேதிதான் இது அமல்படுத்தப்படும் என்பதால் அதுவரை ஊழியர்கள் வீடு வாங்குதல், ஊழியருக்கோ அவரது குடும்பத்தினருக்கோ பெரிய அளவிலான மருத்துவ  சிகிச்சைகள், குழந்தைகள் உயர் கல்வி, திருமண செலவு போன்றவற்றுக்கு பணம்  எடுத்துக்கொள்ளலாம்’’ என்று தொழிலாளர் அமைச்சகம் தெரிவித்திருந்தது. ஆனால், பெங்களூருவில் தொழிலாளர்களின் போராட்டம் தீவிரம் அடைந்தது. பஸ் மற்றும் வாகனங்களுக்கு தீவைத்து தொழிலாளர்கள் வன்முறையில் இறங்கினர். இதை தொடர்ந்து நேற்று மாலையில், புதிய விதிமுறை அறிவிப்பையே ரத்து செய்வதாக மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா அறிவித்தார்.