news

முதுகலை ஆசிரியர்க்காக போராடக்கூடிய ஒரே அமைப்பு TNHSPGTA ***** நமது சங்கத்தின் உறுப்பினர் ஆகுங்கள் ******சங்க செயல் பாடுகளை தெரிந்துகொள்ள மேல்நிலைக்குரல் படியுங்கள் ******தங்கள் பள்ளி நிகழ்வுகளை அமைப்போடு பகிர்ந்துகொள்ளுங்கள்*****அனைத்து முதுகலை ஆசிரியர்களின் பங்களிப்பே அமைப்பு வளர்ச்சிக்கு உதவும்

Wednesday 4 March 2015

தேர்வுப் பணிகளில் ஈடுபடும் முதுகலை ஆசிரியர்கள் சிறப்பாக பணியாற்ற வேண்டும் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் வேண்டுகோள்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில், நாளை, பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்குகிறது. 8.5 லட்சம் மாணவ, மாணவியர் பங்கேற்கின்றனர்  பிளஸ் 2 பொதுத்தேர்வு நாளை துவங்கி, வரும் 31ம் தேதி முடிகிறது.
 
 மொத்தம், 6,256 பள்ளிகளில், 2,377 மையங்களில், 3.91 லட்சம் மாணவர்களும், 4.52 லட்சம் மாணவியரும் தேர்வு எழுதுகின்றனர்; தனித் தேர்வர்கள், 43,000 பேர். புதுச்சேரியில், 14,000க்கும் மேற்பட்டோர் தேர்வெழுதுகின்றனர்
 இது முதுகலை ஆசிரியர்களின்  உழைப்பையும் மாணவர்களின் எதிர்காலத்தையும் நிர்ணயிக்கும் தேர்வாகும்  எனவே தேர்வுப் பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்கள் சிறப்பாகவும் கவனத்துடனும் பணியாற்ற நமது அமைப்பின் மாநிலத் தலைவர் வே.மணிவாசகன் கேட்டுக் கொண்டுள்ளார். மதுரை மாவட்டக் கழகமும்  கேட்டுக் கொள்கிறது.