news

முதுகலை ஆசிரியர்க்காக போராடக்கூடிய ஒரே அமைப்பு TNHSPGTA ***** நமது சங்கத்தின் உறுப்பினர் ஆகுங்கள் ******சங்க செயல் பாடுகளை தெரிந்துகொள்ள மேல்நிலைக்குரல் படியுங்கள் ******தங்கள் பள்ளி நிகழ்வுகளை அமைப்போடு பகிர்ந்துகொள்ளுங்கள்*****அனைத்து முதுகலை ஆசிரியர்களின் பங்களிப்பே அமைப்பு வளர்ச்சிக்கு உதவும்

Friday 26 May 2017

கோடை விடுமுறைக்கு பின் ஜூன் 7ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளி கல்வி துறை தெரிவித்துள்ளது.


      கோடை விடுமுறைக்கு பின், திட்டமிட்டபடி ஜூன் 7ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளி கல்வி துறை தெரிவித்துள்ளது. 

      கடந்த மார்ச், ஏப்ரல் மாதம் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஆண்டு பொதுத் தேர்வுகள் நடந்தன. பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் மாதம் நடந்து முடிந்தது. இதையடுத்து, 10ம் வகுப்பு மற்றும் கீழ்வகுப்புகளுக்கான அனைத்து பொதுத் தேர்வுகளும் ஏப்ரல் மாத இறுதியில் நடந்து முடிந்தது. 

        பின்னர், மே 1ம் தேதி முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டு, ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளி கல்வி துறை அறிவித்தது. இதற்கிடையே, தமிழகத்தில் கத்தரி வெயில் தாக்கத்தின் காரணமாக சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் 110 டிகிரி வரை வெயில் கொளுத்தியது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், பள்ளிகளை ஜூன் 7  தேதி அனைத்து பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளி கல்வி துறை தெரிவித்துள்ளது.