news

முதுகலை ஆசிரியர்க்காக போராடக்கூடிய ஒரே அமைப்பு TNHSPGTA ***** நமது சங்கத்தின் உறுப்பினர் ஆகுங்கள் ******சங்க செயல் பாடுகளை தெரிந்துகொள்ள மேல்நிலைக்குரல் படியுங்கள் ******தங்கள் பள்ளி நிகழ்வுகளை அமைப்போடு பகிர்ந்துகொள்ளுங்கள்*****அனைத்து முதுகலை ஆசிரியர்களின் பங்களிப்பே அமைப்பு வளர்ச்சிக்கு உதவும்

Thursday 11 May 2017

பிளஸ் 2 தேர்வு முடிவுகள், நாளை வெளியிடப்படுகின்றன

பிளஸ் 2 தேர்வு முடிவுகள், நாளை வெளியிடப்படுகின்றன. முதல்முறையாக, மதிப்பெண் விபரங்கள், மாணவர் அல்லது பெற்றோர் மொபைல் போன் எண்ணுக்கு, எஸ்.எம்.எஸ்., என்ற, குறுஞ்செய்தி வாயிலாக அனுப்பப்பட உள்ளன.
மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழிலும், புதிய மாற்றம் கொண்டு வரப்பட்டு உள்ளது. நாளை வெளியாகும் முடிவுகளை அறிய, தேர்வு எழுதிய, 9.3 லட்சம் மாணவர், மாணவி யர் காத்திருக்கின்றனர்.மார்ச் மாதத்தில் நடந்த, பிளஸ் 2 பொதுத் தேர்வின் முடிவுகள், சென்னை, நுங்கம்பாக்கம், பள்ளிக் கல்வி வளாகத்தில், நாளை காலை, 10:00 மணிக்கு வெளியிடப்படுகின்றன.
இந்த முறை, தேர்வு முடிவுகளை, மொபைல்
போனிலேயே தெரிந்து கொள்ளலாம். முடிவு கள் வெளியிடப்பட்ட, 10 நிமிடங்களில், எஸ்.எம். எஸ்., வரும் என, பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

பிளஸ் 2 தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது, உறுதிமொழி படிவத்தில், மாணவர் குறிப்பிட்ட மொபைல் போன் எண்ணுக்கும், தனித் தேர்வர் கள் வழங்கிய மொபைல் போன் எண்ணுக்கும், எஸ்.எம்.எஸ்., அனுப்பப்படும். மேலும், www.tnresults.nic.in/, www.dge1.tn.nic.in/, www.dge2.tn.nic.in/ ஆகிய இணையதளங்களிலும், காலை, 10:00 மணிக்கு பின், தேர்வு முடிவுகளை பார்க்கலாம்.

மாணவரின் பதிவு எண், பிறந்த தேதி, மாதம், ஆண்டை பதிவு செய்தால்,மதிப்பெண் தெரியும்.பிளஸ் 2 தேர்வு, தற்காலிக மதிப்பெண் சான்றிதழை, www.dge.tn.nic.in என்ற இணைய தளத்தில், 15ம் தேதி முதல், மாணவர்களும், தனித்தேர்வரும் பதிவிறக்கம் செய்யலாம். வரும், 17 முதல், தாங்கள் படித்த பள்ளியில், தேர்வு எழுதிய மையத்தில், தற்காலிக சான்றி தழை பதிவிறக்கம் செய்யலாம்.

மேலும், இந்த ஆண்டு,மதிப்பெண் சான்றிதழில்,

மாணவர், பள்ளியின் பெயர், ஆங்கிலம் மற்றும் தமிழில் இடம்பெறும். வரும், 19ல், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும்.
'சென்டம்' குறையும்!
இந்த ஆண்டு, 9.34 லட்சம் மாணவ, மாணவியர் தேர்வில் பங்கேற்றுள்ளனர். உயிரியலில் மட்டும், ஒரு மதிப்பெண் கேள்வியில், தவறான விடைக்குறிப்பு இடம் பெற்றிருந்தது. அதனால், 'சென்டம்' கிடைப்பதில் பிரச்னை ஏற்பட்டுள் ளது. வினாத்தாளில், தவறான விடையை இடம் பெறச் செய்ததேர்வுத்துறை, அந்த கேள் வியை எழுத முயற்சித்த, அனைத்து மாணவர் களுக்கும், ஒரு மதிப்பெண் வழங்க வேண்டும் என, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதற்கு, தேர்வுத்துறை தடை உத்தரவு பெற்றதால், மதிப்பெண் வழங்கப்படவில்லை.
மறுகூட்டல், மறுமதிப்பீடு

தேர்வு முடிவுகள் வெளியான பின், விடைத் தாளை மறுகூட்டல் செய்யவும், விடைத்தாள் நகல் பெறவும், நாளை முதல், 15 வரை விண் ணப் பிக்கலாம்; ஞாயிற்று கிழமை விண்ணப் பம் பெறப்படாது.

மாணவர்கள், தாங்கள் படித்த பள்ளியிலும்; தனித்தேர்வர்கள், தேர்வு மையத்திலும் கட்டணம் செலுத்தி, விண்ணப்பிக்க வேண்டும். விடைத்தாள் நகல் கேட்போர், அதே பாடத் துக்கு மறுகூட்டல் கேட்கக் கூடாது. விடைத் தாள் நகல் பெற்றவர்களுக்கு, மறு கூட்டலுக் கும், மறுமதிப்பீடுக்கும் விண்ணப்பிக்க, தனியே வாய்ப்பு தரப்படும்.

மறுகூட்டல், மறுமதிப்பீடுக்கான ஒப்புகை சீட்டை பத்திரமாக வைக்க வேண்டும். அதி லுள்ள எண்ணை பயன்படுத்தியே, மறுமதிப்பீடு முடிவுகளை தெரிந்து கொள்ள முடியும். ஜூன் இறுதியில், உடனடி துணைத் தேர்வு நடக்கும்; அதற்கான தேதி, பின்னர் அறிவிக்கப்படும்.