news

முதுகலை ஆசிரியர்க்காக போராடக்கூடிய ஒரே அமைப்பு TNHSPGTA ***** நமது சங்கத்தின் உறுப்பினர் ஆகுங்கள் ******சங்க செயல் பாடுகளை தெரிந்துகொள்ள மேல்நிலைக்குரல் படியுங்கள் ******தங்கள் பள்ளி நிகழ்வுகளை அமைப்போடு பகிர்ந்துகொள்ளுங்கள்*****அனைத்து முதுகலை ஆசிரியர்களின் பங்களிப்பே அமைப்பு வளர்ச்சிக்கு உதவும்

Tuesday 21 February 2017

தேர்வுத்துறை இயக்குனரோடு பேச்சுவார்த்தைக்கு பின் மாநிலத்தலைவர் அறிக்கை

அனைத்து நிலை பொறுப்பாளர்களுக்கும் தோழர்களுக்கும் தோழிகளுக்கும் வணக்கம். இன்று தேர்வுகள் துறை இயக்குநரோடு நல்ல முறையில் கூட்டம் நடந்து முடிந்தது.மாலை 3.00  மணிக்கு தொடங்கி 5.15 வரை நடைபெற்றது. வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளில் 60% வெற்றி அடைந்துள்ளது.. விடைத்தாள் ஒன்றுக்கு ரூ.10/- என்றார்கள். இது போதாது என்று பேசி உள்ளோம்... ரூ 15 / - அய்ப் பெற்றுத் தர முயற்சி. செய்யுங்கள் என கேட்டுள்ளோம். கட்டாயம் மாற்றம் கூடுதலாகவே இருக்கும்... உழைப்பூதியங்களை பொறுத்த வரையில் நாம் கேட்டுள்ள மாற்றம் இல்லை. கொஞ்சமே கூடுதலாக சென்றுள்ளது...  நிதித்துறை 15% க்கு மேல் ஏற்ற முடியாது என்று மறுத்து கோப்பை திருப்பி அனுப்பி உள்ளது... மீண்டும் கோப்பு அனுப்பப்பட்டுள்ளது...         8 கி.மீ. தூரத்திற்கு கட்டாயம் உயர்த்தப்பட்ட உழைப்பூதியம் விடைத்தாள் திருத்தும் போது கிடைக்கும்.... விடைத்தாள் எண்ணிக்கை என்று வரும்போது அதனைப் பற்றியே 45 நிமிடங்கள் பேசி உள்ளேன். வெற்றி நிச்சயம்.... மு.க.அலுவலர் மாற்றம் என்று வரும் போது எவர் சரியில்லையோ அவரை மட்டும் மாற்றலாம் என உறுதியளித்துள்ளார்கள்... முகாம் அலுவலராக மாவட்டக் கல்வி அலுவலர் நியமனம் என்று வருகின்ற போது எங்கு தேவையோ அங்கு மாற்றிக் கொள்ளலாம் என உறுதி அளித்துள்ளார்கள்... உடனடியாக யார் யார் முகாம் அலுவலர் அவர் DE0 வாக இருந்தால் எந்த பணித் தொகுதியிலிருந்து  வந்தவர் என எனக்கு உடனடியாக தெரியப்படுத்துங்கள்.. நமக்கு கீழே இருந்து வந்தவர்கள் நம்மை அதிகாரம் செய்ய விட வேண்டாம்.முழுத் தோல்வி என்றால் உயிரியல் விடைத்தாள் விவகாரம் தான்... அருள்கூர்ந்து இந்த ஆண்டு பொறுத்துக் கொள்ளுங்கள்... சில மாவட்டங்களில் உள்ள விடைத்தாள் திருத்தும் பணி இடர்பாடுகள் சரி செய்யப்படும்... நிதி உதவி பெறும் தனியார் பள்ளிகளில் பணியாற்றும் மூத்த முதுகலை ஆசிரியர்களுக்கு கூடுதல் துறை அலுவலர் நியமனத்திற்கு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது... 400 க்கு மேல் உள்ள நடுவங்கள் வரும் கல்வி ஆண்டில் பிரிக்கப்படும்... இந்த ஆண்டு இவ்வாறான நடுவங்களில் கூடுதல் முதன்மைக் கண்காணிப்பாளரும்  அனைத்து படிவங்களிலும் கையொப்பம் இட வேண்டும்... விடைத்தாள் திருத்தும் நடுவங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், மின்விசிறி மற்றும் அகண்ட நீள்பலகைகள் ( bench) கட்டாயம் செய்து தரப்படும்... தொகை வழங்கவில்லை என்று காரணம் சொல்லக் கூடாது. எவ்வளவு தொகை கூடுதலாக செலவாகிறதோ அதனை தேர்வுகள் துறை கொடுத்து விடும்.... தேர்வு மற்றும் விடைத்தாள் திருத்தும் நேரங்களில் உள்ள இடர்பாடுகளை என்னிடம் தெரிவித்தால் அதனை தேர்வுகள் துறை இயக்குநர் அம்மாவிடம் தெரிவித்து சரி செய்யப்படும்... 9.45 to 1.00 என தேர்வு நேரம் அடுத்த ஆண்டு எடுத்துக் கொள்ளப்படும்.... கூடுதலான ஒரு வெற்றி அதனை நேரில் சொல்கிறேன்... பேச்சுவார்த்தையின் போது என்னோடு பிரபாகரன், கிருஷ்ணன், பாலு மற்றும் சீனிவாசன் உடனிருந்தனர்.... பிப்ரவரி 26 திருச்சியில் மாநில செயற்குழு.மாநிலப் பொறுப்பாளர்கள், மாவட்டத் தலைவர் மற்றும் செயலர் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும். மணிவாசகன்.