news

முதுகலை ஆசிரியர்க்காக போராடக்கூடிய ஒரே அமைப்பு TNHSPGTA ***** நமது சங்கத்தின் உறுப்பினர் ஆகுங்கள் ******சங்க செயல் பாடுகளை தெரிந்துகொள்ள மேல்நிலைக்குரல் படியுங்கள் ******தங்கள் பள்ளி நிகழ்வுகளை அமைப்போடு பகிர்ந்துகொள்ளுங்கள்*****அனைத்து முதுகலை ஆசிரியர்களின் பங்களிப்பே அமைப்பு வளர்ச்சிக்கு உதவும்

Thursday 26 January 2017

கருத்தியல் மற்றும் செய்முறைத் தேர்வுகளுக்கான உழைப்பூதியங்களை உயர்த்தி தரக்கோரி 3 கட்ட போராட்டம் - மாநிலத்தலைவர் அறிவிப்பு

மாவட்டப் பொறுப்பாளர்கள், தோழர்கள் மற்றும் தோழிகளுக்கு வணக்கம். 2011 முதல் விடைத்தாள் உழைப்பூதியம் மாற்றப்படவில்லை. அதனோடு கருத்தியல் மற்றும் செய்முறைத் தேர்வுகளுக்கான உழைப்பூதியங்களும் மாற்றப்படவில்லை... அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர்களோடு 2013 முதல் இரண்டு முறை மாநிலக் கழகம் பேச்சுவார்த்தை நடத்தியும் இந்நாள் வரை எவ்வித மாற்றமும் இல்லாமல் கடமையே கண்ணாக நாம் அரசுத் தேர்வுகளை எவ்வித குறைகளும் இன்றி முடித்துத் தருகிறோம். தேர்வு முறைகேடுகள் என்பது ஒரு சில மாவட்டங்களில் அம்மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராலே அரங்கேற்றப்படுகிறது.... ஒரு சில தவறுகளில் நமது முதுகலை ஆசிரியர்களின் பங்கு இருந்தாலும் அது முதன்மைக் கல்வி அலுவலர்களுக்குத் தெரிந்தே நடைபெறுகிறது. அதற்கு ஈரோடு ஓர் உதாரணம்.... நமைப் பொறுத்தவரையில் கடுமையாக உழைத்து பணப்பலன் என்று வரும்போது அது மிக மிகக் குறைவாகவே உள்ளது... எனவே, உழைப்பூதியங்களை உயர்த்தி தரக்கோரி 3 கட்ட போராட்டங்களை மாநிலப் பொதுக்குழுவின் ஒப்புதலோடு அறிவித்துள்ளோம்... அப் போராட்டங்களில் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகமும் இணைந்து போராட ஒப்புக்கொண்டுள்ளது.... அனைத்து மாவட்டப் பொறுப்பாளர்களும் தங்களது மாவட்டங்களில் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகப் பொறுப்பாளர்களைத் தொடர்பு கொண்டு பிப்ரவரி 3-ந் தேதி ஆர்ப்பாட்டத்தினை மாவட்டங்களில் சிறப்பாக நடத்துங்கள்.... மாநிலப் பொதுக்குழுவில் சென்னையில் உண்ணாவிரதம் என அறிவித்திருந்தோம் ... அதனை மண்டல அளவிலே நடத்தலாம் என முடிவு செய்துள்ளோம்... எந்தெந்த மண்டலங்கள் என நாளை அது உங்களுக்கு தெரிவிக்கப்படும்.... மாவட்ட ஆர்ப்பாட்டங்களை மிகச் சிறந்த அளவில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் குறைந்தது 200 முதுகலை ஆசிரியர்களை ஒன்று கூட்டி  நடத்திக் காட்டுங்கள்... தோழமைச் சங்க பொறுப்பாளர்களை வாழ்த்துரை வழங்க அழைத்துக் கொள்ளுங்கள்... தொய்வில்லாமல் பொறுப்பாளர்கள் கொண்ட குழுக்களை அமைத்துக் கொண்டு அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு சிறப்பாக நடத்துங்கள்.... ஒவ்வொரு கட் செவிக் குழுக்களிலே உள்ள முதுகலை ஆசிரியர்கள் அனைவரும் இச்செய்தியை அனைவருக்கும் அனுப்பி போராட்ட களத்தினை இப்போதிருந்தே செம்மைப் படுத்துங்கள்... மூன்றாவது கட்ட போராட்டம் அரசுத் தேர்வுகள் இயக்ககம் முற்றுகைப் போராட்டமாக உங்களின் ஒப்புதலைப் பெற்ற பிறகு அமைய உள்ளது என்பதனையும் நெஞ்சிலே நிறுத்துங்கள்.... அனைத்து பொறுப்பாளர்களும் முதுகலை ஆசிரியர்களும் வேகமாக - துணிவாக தெளிவோடு செயல்பட வேண்டுகிறேன். மாநிலத்தலைவர் மணிவாசகன்.